Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

திருவண்ணாமலை – மலை மீது லிங்கம் வைத்து பூஜை – பெரும்பரபரப்பு

திருவண்ணாமலையில் மலை மீது யாரோ சில மர்ம ஆசாமிகள் சிவ லிங்கத்தை வைத்து பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்புக்கு காரணமாகி இருக்கிறது.

திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவனாக நினைத்து பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக‌வழிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றன நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த குருஜி என்ற வாலிபர் தலைமையில்20பேர் கொண்ட Continue reading

ஞாலமெங்கும் ஞான தீபம்!- வீடியோ

கார்த்திகை மாதத்தில், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போது தீபமேற்றி வழிபடும் பண்டிகையே “கார்த்திகை தீபப் பெருவிழா’ ஆகும். நெருப்புக் கோளமான செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளமான சூரியன் சஞ்சரிக்கும் கார்த்திகை மாதத்தின் சிறப்பை ரிக்வேதம் விவரிக்கிறது.    கார்த்திகை மாதத்தின் சிறப்பு அளவிடற்கரியது. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், இம்மாதத்தில் நம் வீட்டிலுள்ள நீரில் ஆவிர்பவிக்கிறான். ஆதலால் ஸ்ரீசாளக்கிராமங்களுக்கு இம்மாதத்தில் செய்யப்படும் பூஜை, ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது.     “விரதமிருந்து உமாதேவி சிவ பெருமானின் இடப்பாகத்தைப் பெற்றதும், திருமால் துளசியை மணந்து தனது திருமார்பில் அணிந்து கொண்டதும் கார்த்திகை மாதத்தில்தான்’ எனப் புராணங்கள் கூறுகின்றன.    சிவபெருமான், பார்வதிக்கு தனது உடலில் பாதியை அளித்ததை நினைவுறுத்தும் வகையில், திருவண்ணாமலையில்-கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கு முன்னர், “அர்த்தநாரீஸ்வரர்’ புறப்பாடு நடைபெறுகிறது.   வடக்கே, இமயமலைச் சாரலில் உள்ள “கேதாரம்’ என்ற திருத்தலத்தில்தான் தேவியும், மகாதேவனும் “ஏக சரீரம்’ (ஓருடல், ஈருயிர்) என்றாயினர். தெற்கே திருச்செங்கோட்டிலும் “சுயம்பு அர்த்த நாரீஸ்வரர்’ காட்சியளிக்கிறார். இதனால் திருச்செங்கோடுக்கு “தட்சிண கேதாரம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இங்கே “செங்கோட்டு வேலராக’ காட்சி தரும் முருகப் பெருமானும் சுயம்பு வடிவமே! “இத்தலத்தை தரிசித்தால் பெரிய கொடிய வினைகள்கூட நசிந்துவிடும்’ என்கின்றனர் பெரியோர்கள்.   கார்த்திகை நட்சத்திரம் கார்த்திகை என்பது, “கிருத்தி’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. அத்திரி, காசிபர், கெüதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், சமதக்கினி என்னும் மாமுனிவர்களது தேவியரைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகவும், “கிருத்தி’ என்பதனைக் குறிப்பிடுகின்றனர் ஆன்றோர்கள்.    ஒரு சமயம் இந்த ஆறு முனிவர்களும் தங்கள் மனைவியருடன்,  ஒரு திருவிளையாடல் போல், “ஊடல்’ கொண்டனர். அப்போது அந்தத் தேவியர் அனைவரும்

இலட்ச தீபம்

நட்சத்திரங்களாகி விரதம் மேற்கொண்டனர். அவர்களே “கார்த்திகைப் பெண்கள்’ எனப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விரதத்தின் பலனாகவே முருகப் பெருமானுக்கு பாலூட்டும் பேறு பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. முருகப் பெருமானை வளர்க்கும் பேற்றினை தங்கள் மனைவியர் பெற வேண்டும் என்பதற்காகவே அந்த ஆறு முனிவர்களும் ஆடிய நாடகம், அகிலத்துக்குத் தெரிய வந்தது.   கார்த்திகை என்பது மேஷத்தில் 1/4 பகுதியும், ரிஷபத்தில் 3/4 பகுதியும் அமைந்துள்ள 6 நட்சத்திரங்கள் கொண்ட ஓர் மண்டலம். இது, ஒரு விளக்குபோல் காட்சி அளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம். மாதமொரு முறை சந்திரன் இந்த நட்சத்திரக் கூட்டத்திற்குப் பக்கத்தில் வரும் நாள் கார்த்திகை எனக் குறிப்பிடப்படுகிறது.சரவணப் பொய்கை முருகப் பெருமான், சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தபோது அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் கார்த்திகைப் பெண்களே என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். இதில் முக்கிய விஷயம், ஆதி பராசக்தியே, “சரவணப் பொய்கை ஆக அமைந்திருந்தாள்’ என்பதே! தாயே பொய்கையாகி, தாமரை மலர்களில் தான் பெற்ற குழந்தைகளைத் தாங்க, முனி பத்தினிகளிடம் ஞானப் பாலுண்டு, மழலைப் பருவத்திலேயே வீரமும், ஞானமும் பெற்று வளர்ந்தவர் முருகப் பெருமான். இறைவனின் லீலையில் என்னென்ன அற்புதங்கள்! அழல் உருவினன்! இறைவன் மண், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன், ஆன்மா என அனைத்துமாக  விளங்குகிறார்.

கார்த்திகையின் அதிதேவதை அக்னி. சிவபெருமானின் சக்திகளுள் ஒன்றாகவும், அவரது நெற்றிக் கண்ணாகவும் “அக்னி’ விளங்குகிறது. ஆகவேதான் கார்த்திகை நாளோடு தீபம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.   நெருப்பு, தன்னை அடைந்த பொருள்களைச் சுட்டெரித்து தன்மயமாக்குவது போல், இறைவனும் தன்னை நாடிய ஆன்மாக்களின் “மாயா’ மலங்களைப் பொசுக்கி நீக்குகிறான்.   சிவபெருமான் ஜோதி வடிவில் திருவண்ணாமலையில் வீற்றிருப்பது போலவே ஸ்ரீமகாவிஷ்ணு ஜோதி வடிவமாகக் காஞ்சிபுரத்தில் “தீபப் பிரகாசர்’ என்ற பெயரோடு தனிக் கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இவரை, “விளக்கொளிப் பெருமாள்’ என்று போற்றுகின்றனர். வைணவர்கள் கார்த்திகை தீபத்தன்று விளக்கொளிப் பெருமாளை வழிபடும் விதமாக தீபங்களேற்றி கொண்டாடுகிறார்கள். இதற்குப் “பெருமாள் கார்த்திகை’ என்று பெயர்.   தேடி வரும் திருமகள் மங்கல தீபச்சுடர், திருமகளின் வடிவமாகக் கருதப்படுகிறது. ராவணனால் கடத்தப்பட்ட அன்னை சீதா பிராட்டியார், “எப்போது நம் கணவர் வருவார்? எப்போது ராவண சம்ஹாரம் நடைபெறும்? என்று நம் கணவரை மீண்டும் தரிசிக்கும் பேறு பெறுவோம்?’ என்றெல்லாம் அசோக வனத்தில், சோகவனமாய்த் திகைத்தபோது, திரிசடை என்பாள், தான் கண்ட கனவினை பிராட்டியாருக்கு தெரிவித்தாள். “”ஆயிரம் சுடர்கள் கொண்ட தீபத்தைத் தாங்கியபடி, ராவணன் இல்லத்திலிருந்து திருமகள் வெளியேறி, வீபிஷணர் மாளிகையில் புகுவதாகக் கனவு கண்டேன்” எனக் கூறி, அன்னையை சமாதானப்படுத்தினாள். தானே திருமகளின் அவதாரமாக இருந்தபோதும், பெண் வடிவில் தோன்றியிருந்ததால்- தனது மகிமையை வெளிப்படுத்தாமல் தாயார் சீதாதேவி, அக்கனவின் குறிப்பால் அகம் மகிழ்ந்தாள். எனவே வைணவப் பெரியோர்கள், தீபத்திருநாளில் விளக்குகள் ஏற்றி மகிழும்போது, அந்த அக்னியில் அன்னை சீதையையே தரிசிக்கும் பேறு பெறுகின்றனர். தீபங்களால் ஒளிரும் அவர்களுடைய இல்லங்கள், வீபிஷண ஆழ்வாரின் திருமாளிகையாகவே ஆகிவிடுகிறது. அங்கே ராமனின் திருவருள் ஒளி, நிரம்பித் ததும்புகிறது. திருமகள் அவர்கள் இல்லத்தைத் தேடி வந்து குடி புகுந்து, நிரந்தரமாக அங்கே வசிக்கின்றாள்.        கார்த்திகை தீபத்தன்று சிவபக்தர்கள் கார்த்திகை தீபமேற்றி சிவபெருமானையும், வைஷ்ணவர்கள் விஷ்ணு தீபமேற்றி விஷ்ணு பகவானையும், முருக பக்தர்கள் பரணி தீபமேற்றி முருகப் பெருமானையும் வழிபடுகிறார்கள். தெய்வக் குமரன் சிவபெருமானின் “அக்னி நேத்ரம்’ எனப்படும் நெற்றிக் கண்ணிலிருந்து தீச்சுடர்கள் போன்ற தெய்வீகப் பொலிவோடு அவதரித்தவர் ஆறுமுகக் கடவுள்! கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்! இதனால் தீபத்திருவிழாவுக்கும், தெய்வக் குமரனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.    சிவபெருமானோ, “ஆதியும், அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி’யாக – எவராலும் அடி, முடி காணா வண்ணம் நின்றவர். எனவே அவரும் கார்த்திகை தீபவிழாவின் முக்கியத் தெய்வமாகிறார். மொத்தத்தில் சிவபெருமான், பராசக்தி, முருகப் பெருமான், திருமால், திருமகள் ஆகிய அன்புத் தெய்வங்களுடன் அருள் தொடர்புடைய பண்டிகையாக “தீபத் திருநாள்’ விளங்குகிறது.   அருட்பெருஞ் ஜோதி! ஆலயங்களில் கார்த்திகை தீபத்தன்று “சொக்கப்பனை’ கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். கழிகளை வைத்து பனை மட்டைகளைக் கொண்டு கூடாரம் போல் அமைப்பார்கள். சுவாமி புறப்பாட்டின்போது, இக்கூடாரமாகிய “சொக்கப்பனை’ கொளுத்தப்படும். “சிவபெருமானை ஜோதி வடிவமாகப் பார்த்தல்’ என்பதுதான் சொக்கப்பனை கொளுத்துவதன் தத்துவம்.  வள்ளலார் பெருமான், “அருட் பெரும் ஜோதி! தனிப் பெருங்கருணை’ என்பதை அனுபூதியில் அறிந்த அருளாளர் என்பதை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.      “சொக்கன்’ என்பது சிவபெருமானை குறிக்கின்ற திருப்பெயர். அந்த அப்பனையே எரி நெருப்பின் சுவாலையில் தரிசிப்பதுதான்  “சொக்கப்பனை’.    திருமால் வாமனாவதாரம் எடுத்து மாவலியைக் கொன்றது கார்த்திகை பெüர்ணமி நாளில் என்பதால் அதன் அடையாளமாக சொக்கப்பனை கொளுத்தல், மாவலி சுற்றல் போன்றவை வைஷ்ணவ ஆலயங்களில் நடத்தப்படுகின்றன.நிவேதனப் பொருட்கள் கார்த்திகையன்று முக்கிய நிவேதனப் பொருள்கள் அவல், பொரி உருண்டை, அப்பம், பாயசம் ஆகியன. இவற்றை அவரவர் குல மரபுக்கேற்பச் செய்து, ஆண்டவனுக்கு நிவேதிப்பது மரபு.      பொரி, நெல்லிலிருந்து கிடைக்கிறது. நெல், முளைக்கும் தன்மை உடையது. ஆனால் அதைப் பொரிக்கும்போது அது வேறொரு நிலையை அடைவதால், முளைக்கும் தன்மையை இழந்துவிடுகிறது. அது போல மனதை ஒரு நிலைப்படுத்தி, மாயையை எரித்துவிட்டால் பிறவித் துன்பம் நீங்கும் என்பதையே பொரி உருண்டை நிவேதனம் உணர்த்துகிறது.  நிவேதனப் பொருள்களில் ஒன்றாகிய அப்பம் ஒரு தத்துவத்தை உள்ளடக்கியது. அப்பம் செய்யும்போது கொதிக்கும் எண்ணெயில் போட்டதும் சிறிது நேரம் குதிக்கும். பிறகு மாவிலுள்ள நீர் வற்றியதும் குதிப்பது அடங்கிப் பதமாக வெந்திருக்கும். நம் மனதில் இருக்கும் ஆசாபாசங்கள் என்ற நீர் வற்றினால் மனம் பக்குவமடையும் என்பதையே இது குறிக்கிறது. பக்குவமடைந்த ஆத்மா, “பிரம்ம ரஸம்’ என்ற பேரின்ப நிலையைப் பருகி, நித்திய ஆனந்தத்தில் திளைக்கும். இதுவே “பாயச’ நிவேதனத்தின் அடிப்படை. மெய்ஞான ஒளி பெறுவோம் ஆணவம், சுயநலம், மயக்கம், ஆசை போன்ற மாசுகளை, “விவேகம்‘ என்னும் தீயில் பொசுக்கி, மெய்ஞானம் பெற்று, அண்டம் அனைத்தையும் ஒளிர்விக்கும் பரஞ்ஜோதியை தரிசனம் செய்வதே கார்த்திகை தீபவிழாவின் அடிப்படை நோக்கம்.    ஞான தீபம் ஏற்றி எங்கும் நாம கீதம் பாடுவோம்! தர்ம சக்தி வாழ்கவென்று சந்ததம் கொண்டாடுவோம்! ஞாலம் முழுவதிலும் ஞான ஒளி பரவுக!

(படித்ததை படைத்தேன்)

 

மூன்று ஆசைகளை மனிதன் வென்றாக வேண்டும்: வினோபாஜி

தர்ம சாஸ்திரங்களில் மனிதமனங்களை புத்திரபாசமுள்ள மனது, பொருளால் பெருமைப்படும் மனது, புகழை விரும்பும் மனது என பிரித்துள்ளனர். இவற்றை வென்றவர்கள் மனதை வென்றவர்கள் ஆவார்கள்.

புத்திரபாசத்திற்காகத்தான் திருமணம் செய்கிறோம். குழந்தைகளைப் பெறுகிறோம். சிற்றின்பத்திலேயே மூழ்கிவிடக் கூடாது.

இரண்டாவது பொருளாசை. பொருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது. எனவே, பிறரைக் கெடுக்காமலும், யாரையும் வஞ்சிக்காமலும் நல்லவழியில் பொருள் தேட வேண்டும்.

மூன்றாவதாக புகழ் வாசனை, புகழ் நாட்டம் மிதமாக இருந்தால் யாருக்கும் தீங்கில்லை. தன்னலம் கருதாமல் பிறருக்கு தொண்டு செய்வதால் உண்டாகும் புகழ் ஒரு மனிதனுக்கு அவசியமானதே. பிறரைக் கெடுப்பதற்காக தன்னைத்தானே உயர்த்தி புகழ்ந்து கொள்ளுதல் கொடுமையானதாகும். இந்த மூன்றும் மனிதனின் செயல்பாடுகளுக்கு தூண்டுகோலாகவும், அவனை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கும் மட்டுமே பயன்பட வேண்டும்.

– வினோபாஜி

(படித்ததை படைத்தேன்)

கவர்ச்சி பேச்சில் ஏமாறாதீர்!?

உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.

மனம் சலிக்காமல் இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.  நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும்.

பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்ல நீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.

– தாயுமானவர்

(படித்ததை படைத்தேன்)

திருட்டுப் பொருளை மீட்க மிளகாய்ப் பொடி அபிஷேகம் – திருத்தல உலா

அம்பாளுடன் கூடிய சக்தி  தட்சிணாமூர்த்தியை திருவள்ளூர் மாவட்டம் கண்டலத்திலுள்ள சிவாநந்தீஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். திருட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்க, இங்குள்ள பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்கின்றனர். தல வரலாறு: கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. பூமியைச் சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார் சிவன். திருப்பாலைவனம் என்ற தலத்துக்கு வந்த அகத்தியரிடம், கண்டலம் என்னும் தலத்துக்கு செல்லும்படி சிவன் அறிவுறுத்தினார். அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளினார். தனக்கு காட்சி தந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி “சிவாநந்தீஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார். சக்தி தட்சிணாமூர்த்தி: பிருகு முனிவர் சிவனை வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க வந்த அவர், பார்வதியை வணங்காமல் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். தன்னை வணங்காமல், தன் கணவரை மட்டும் வணங்கிய பிருகுவிடம் பார்வதி கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டி அமர்ந்தாள். உடனே, பிருகு வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றினார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு சக்தியை வணங்கும் எண்ணமில்லை. கள்ளி மலர்களால் சுவாமி பகுதியை மட்டும் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன், சக்தியை மடியில் வைத்து, தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து, “”சக்தியின்றி சிவமில்லை” என்று உபதேசித்தார். பிருகுவும் உண்மையை உணர்ந்து இருவரையும் வழிபட்டார். இந்த “சக்தி தட்சிணாமூர்த்தி’ தனி சன்னதியில் இருக்கிறார். இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.

ஆனந்தவல்லி அம்பாள்: சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டாள். எனவே அவளுக்கு “ஆனந்தவல்லி’ என்ற பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு “திருக்கள்ளீஸ்வரர்’ என்ற பெயரும், தலத்திற்கு “திருக்கள்ளில்’ என்ற புராணப்பெயரும் இருக்கிறது. சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் சன்னதி உள்ளதால், இது சோமாஸ்கந்த வடிவ கோயிலாக உள்ளது. பாலசுப்பிரமணியரின் கைகளில் ஜெபமாலை, தீர்த்தக் கலசம் ஆகியவை உள்ளதால், பிரம்மாவின் அம்சமாக காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் நம் தீவினைகளை மாற்றி நல்லருள் புரிவார் என்பது ஐதீகம்.இங்குள்ள நந்தி மிகவும் விசேஷமானது. இவரது பெயரிலேயே சிவனை “சிவா நந்தீஸ்வரர்’ என்றும், தீர்த்தத்தை “நந்தி தீர்த்தம்’ என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நாகர், நவக்கிரகங்கள், பைரவர் உள்ளனர். பொருள்களை திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால், திருடியவர்களுக்கு துன்பம் ஏற்படும் என்றும், அவர்கள் சட்டத்திடம் சிக்கிக்கொள்வர் என்பதும் நம்பிக்கை. பொருள்கள் கிடைத்துவிட்டால் இவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
இருப்பிடம்: சென்னை- பெரிய பாளையம் ரோட்டில் (36 கி.மீ.,) கன்னிகைப்பேர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ., ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம். திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் சென்று அங்கிருந்தும் கன்னிகைப்பேர் வழியே கோயிலுக்குச் செல்லலாம்.
போன்: 99412 22814, 044 – 2762 9144.

(படித்ததை படைத்தேன்)

மனைவியிடம் கோபிக்காதீர்கள்: கிருபானந்த வாரியார் சுவாமிகள்

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

கிருபானந்த வாரியார் சுவாமிகள்

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.

மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.

ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.

இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும்.

தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.

எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.

எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

கிருபானந்த வாரியார் சுவாமிகள்,

(படித்த்தை படைத்தேன்)

கோபம் அறவே கூடாது

 

கிருபானந்த வாரியார் சுவாமிகள்

மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை. அது போல் ஞானிகளும் தமக்காக ஒரு போதும் வாழாமல் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள். * மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல, நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ் என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும். * கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று வாழ முழுமையாக அருள்புரிவாள். * நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும் மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும், பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன. * செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே உணவினை ஏற்று மகிழ்கிறார். * மனம் ஒரு நல்ல சேவகன். அதே சமயத்தில் கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால், அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம் உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும்.

– கிருபானந்த வாரியார் சுவாமிகள்,

(படித்த்தை படைத்தேன்)

திருவண்ணாமலை: கிளி கோபுரம் பெயர்க்காரணம்

அருணகிரிநாதர்  தன் இளமை காலத்தில் வாழ்க்கையை வெறுத்து வள்ளாள மகாராஜா கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.  ஆனால் முருகப்பெருமான் அங்கு தோன்றி அருணகிரிநாதரை காப்பாற்றி அவருக்கு அருள் புரிந்தார். பின்பு அவர் முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி வைத்து பல பாடல்களை இயற்றினார். இதனால் இவர் மேல் பொறாமை கொண்ட அரசவைப் புலவரான சம்பந்தன் நீ அழைத்தால் உனது முருகன் வருகிறானா அல்லது நான் அழைத்தால் எனது காளி தேவி வருகிறாளா? என்று அகந்தையோடு பேசினான்.  பிறகு அருணகிரிநாதர் தன் நிலைமையை முருகனிடம் கூறி மன வேதனை அடைந்தார்.  இதனால் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்தருளினார்.  அகந்தையாக பேசியதால் காளி தேவி சம்பந்தனுக்கு காட்சி கொடுக்கவில்லை.  இதனால் பெரும் கோபம் கொண்ட சம்பந்தன், அருணகிரிநாதனின் புகழை அழிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தார்.

ஒரு  சமயம் விஜயநகர் மன்னரான பிரபுவிட தேவராயர் தன்னுடைய கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாகிக்கொள்ள சம்பந்தன்,  பிரபுவிட மன்னரைப் பார்த்து தங்களுக்கு கண் பார்வை கிடைக்க ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்னவென்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வைத்தியம் செய்தால் இழந்த கண்களை திரும்ப பெற முடியும் என்றும்,  ஆனால் இதை அருணகிரிநாதரால் தான் கொண்டு வர முடியும் என்றார்.  இதனால் மன்னரும் அருணகிரிநாதரிடம் தனக்கு இச்செயலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  அருணகிரிநாதரும் அதற்கிணங்க தன்னுடைய பூத உடலோடு சொர்க்கத்திற்கு செல்ல முடியாததால் ஒரு இறந்த கிளியிடம் தன் உயிரை வைத்து கூடுவிட்டு கூடு பாய்ந்து சொர்க்கத்திற்கு சென்றார்.  ஆனால் சம்பந்தரின் சூழ்ச்சியால் அருணகிரினாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.  இதனால் அங்கு அருணகிரிநாதர் கிளி ரூபத்திலேயே இருந்து முருகனின் பாடல்களை இயற்றினார்.  அங்கு கிளி வடிவமாக ஒரு கோபுரத்தில் அருணகிரிநாதர் தங்கியதால் அது கிளி கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.

(படித்ததை படைத்தேன்)

அறியவேண்டியவை

திருவண்ணாமலை

1. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….
திருவண்ணாமலை

 

2. கார்த்திகை தீபத்திருநாளில் அவதரித்த  ஆழ்வார்….
திருமங்கையாழ்வார்

 

3. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)

4. அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை

5. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

6. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

7. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு 1997, டிசம்பர் 12

8. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

9. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

10 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

(படித்ததை படைத்தேன்)

%d bloggers like this: