Advertisements

கனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை

கனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை

அதிமுக வேட்பாளரே கனிமொழிக்கு ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை

2019 பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் Continue reading

Advertisements

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் Continue reading

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

நாடாளுமன்றத் தேர்தல் – 2019 – தேர்தல் நடத்தை விதிமுறைகள் – உடனடி அமல்

மோடி தலைமையிலான நடப்பு பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் Continue reading

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் புத்தாண்டுக்கான பேட்டியை ஒரு Continue reading

இலங்கை பிரச்சனை – பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் – வீடியோ

இலங்கை பிரச்சனை – பாராளுமன்றத்தில் Continue reading

2g ஸ்பெக்ட்ரம்: கூட்டுக்குழு விசாரணை: பாராளுமன்றத்தில்…

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தகவல் வெளியிட்டது. இந்த இழப்பின் பின்னணியில் யார் -யார் உள்ளார்கள் என்பதை அறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரித்து வருவதால் கூட்டுக்குழு விசாரணை தேவை இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த Continue reading

பாராளுமன்றம் முடக்கத்துக்கு கா‌ங்கிரஸ் தான் காரணம் : அத்வானி

டில்லியில் நிருபர்கள் மத்தியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்றம் முடக்கத்துக்கு காரணமே இந்த‌ காங்கிரஸ்தான் என்று காரசாரமாக கொடுத்துள்ள புகாரில், மேலும் கடந்த 9 ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர் முழு அளவில் நடைபெறவில்லை என்றும் சில நேரங்களில் பாராளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பது கூட நல்லது என அத்வானி கூறிய‌ நிலையில்,  அத்வானி இவ்வாறு கூறினார். கடந்த மாதம் 9ம் தேதி கூடிய பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நேற்றுடன் முடிந்தது. ஒரு நாள் கூட கூட்டத்‌தொடர் முழுமையாக நடைபெறவில்‌லை. சில நேரங்களில் Continue reading

900 கோடி ரூபாய்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக . . .

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரம் முழுமையாக மாறிவிட்டது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடி ரூபாய்.

அமெரிக்காவில் இந்தியபெண்மணி வரலாற்று சாதனை

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கவாழ் பெண் ஒருவர் தெற்கு கரோலினாவில் நடைபெற்ற கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கவர்னர் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண்மணி என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு: அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தில் கவர்னர் பதவிக்காக குடியரசுகட்சிக்கும் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கும் இடையே தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சிசார்பில் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலே போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் வின்சென்ட் சென்கான் என்பவரும் போட்டியிட்டனர். போட்டியில் நிக்கிஹேலே 52 சதவீதமும், வின்சென்ட் 46 சதவீதமும் வாக்குகளை வென்றுள்ளனர். இதன் மூலம் நிக்கியின் வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவில் கவர்னர் பதவிக்காக நடந்த தேர்தல்களில் இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே லூயிசியானா மகாணத்தில் பாபி ஜிந்தால் என்ற இந்தியர் கவர்னராக பதவி வகித்துள்ளார். இருப்பினும் தெற்கு கரோலினா மாகாணத்தில் நிக்கி வெற்றிபெற்றுள்ளதன் மூலம் முதல் பெண் கவர்னர் என்ற பெருமை ஒரு பக்கம், தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண்கவர்னர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இதுவரை பென்சில்வேனியா, கலிபோர்னியா, கன்ஸாஸ்,லூயிசியானா, ஓகியோ ஆகிய மாகாணங்களில்நடைபெற்ற தேர்தல்களில் ஐந்து இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அஸ்வின் லாட் என்ற இந்தியர் மட்டும் பெனிசில் வேனியாவில்நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார்.

 

thanks dinamalar

 

 

அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வி

அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளில், அமெரிக்கர்கள் அதிருப்தி அடைந்ததே தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.

அமெரிக்க பார்லிமென்ட், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என, இரு சபைகளைக் கொண்டது. இதில், செனட் சபையே உயரிய அமைப்பாகும். 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 37 இடத்திற்கும், மொத்தம் உள்ள 50ல் 37 மாகாண கவர்னர்களை தேர்ந்தெடுக்கவும் நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர், 230 இடங்களைப் பிடித்தனர். 164 இடங்களை அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினர் பிடித்தனர். மீதமுள்ள இடங்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. குடியரசு கட்சியினர் முந்தைய தேர்தலில் பெற்றதை விட, 57 இடங்களைக் கூடுதலாக பெற்றுள்ளனர். அதேநேரத்தில், செனட் சபைக்கான தேர்தலில், மொத்தமுள்ள 100 இடங்களில், 51 இடங்களை ஒபாமாவின் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினர், 46 இடங்களையும் பிடித்துள்ளனர். இதில், ஒபாமா கட்சி மெஜாரிட்டி பெற்றுப் பிழைத்தது. குடியரசு கட்சியினர் முந்தைய தேர்தலில் பெற்றதை விட, கூடுதலாக ஆறு இடங்களைப் பெற்றுள்ளனர்.

 

அதேநேரத்தில், மாகாண கவர்னர்களுக்கான தேர்தலில், தேர்தல் நடந்த 37 இடங்களில், ஜனநாயக கட்சியினர், 14 மாகாணங்களையும், குடியரசு கட்சியினர் மீதமுள்ள 23 மாகாணங்களையும் பிடித்துள்ளனர். இதில் ஜனநாயக கட்சியினருக்கு ஒன்பது கவர்னர்கள் எண்ணிக்கை குறைந்தது. தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட, 38 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். லூசியானா மாகாண கவர்னராக முன்னர், இந்திய வம்சாவளியைச் பாபி ஜிண்டால் தேர்வு பெற்றார். அவருக்குப் பின், இப்போது ஹாலே வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கி ஹாலே, 52 சதவீத ஓட்டுகளைப் பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வின்சென்ட் ஷீகன், 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.  அதேநேரத்தில், அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற ஆறு இந்தியர்கள் தோல்வி அடைந்தனர். பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்ததற்கு, அவரின் பொருளாதார கொள்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது. ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளால் அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள், எதிர்க்கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர்.

 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் எதிர்க்கட்சியான குடியரசு கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார். அமெரிக்க மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதித்தார். ஒபாமா பேசியவர்களில் குறிப்பிடத்தக்கவர் செனட் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானல். அமெரிக்க பார்லிமென்டின் ஒரு சபை எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்திருப்பது, அதிபர் ஒபாமாவுக்கு பல வகையிலும் சிக்கலை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மசோதாக்களை நிறைவேற்றுவதும், சலுகைகளை அறிவிப்பதும் அவருக்கு சிரமமாகவே இருக்கும். பல எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

அதிகளவு மக்கள் வரிப்பணத்தைச் செலவழிக்கும் அரசு என்று குறைகூறி குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆனால், அதிபர் ஒபாமா தன், “வீட்டோ’ அதிகாரங்களால் சட்டங்களை செனட்டில் அமல்படுத்த வேண்டிய நிலை இனி வரலாம். தவிரவும், எது அமெரிக்க நலனுக்கு உகந்தது என்று இரு கட்சிகளும் கருதுகின்றதோ அது மட்டும் சட்டமாகும் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் ஒபாமா இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, இத்தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. இதனால் அவர் சுற்றுப் பயணம் பாதிக்கப்படமாட்டாது என்றாலும், அவருக்கு முன்பிருந்த மக்கள் செல்வாக்கு அமெரிக்காவில் இல்லை என்பதைக் காட்டும் விதத்தில் இந்த முடிவுகள் அமைந்திருக்கின்றன.

 

அமெரிக்க இடைத்தேர்தலில் மொத்தம் நிக்கிஹாலே உட்பட மொத்தம் ஏழு அமெரிக்க இந்தியர்கள் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சி சார்பில் பென்சில்வேனியா மாகாணத்தில் மனன் திரிவேதி என்பவரும், கலிபோர்னியா மாகாணத்தில் அமி பெரா என்பவரும், கன்சாஸ் மாகாணத்தில் ராஜ் கோயல் என்பவரும், லூசியானா மாகாணத்தில் ரவி சங்கிஷெட்டி என்பவரும், ஓகியோவில் சூர்யா எலமாஞ்சிலி என்பவரும் போட்டியிட்டனர். இல்லினாய்ஸ் மாகாணத்தில், குடியரசுக் கட்சி சார்பில் அஸ்வின் லாட் என்பவர் போட்டியிட்டார். இவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

 

thanks dinamalar

%d bloggers like this: