Advertisements

கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

எனக்கு கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

என்ன இது ஒரு வித்தியாசமான தலைப்பு என்றால் படியங்கள் புரியும் என்ன Continue reading

Advertisements

நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்!

1740 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதா ன் இருந்ததாம். இங்கிலாந்தில் இருந்து தான் அங்கு புத்தகங்கள் வந்து கொண் டிருந்தன. நூலகம் என்றால் என்ன என் றே அறியாத காலம்.! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு நூலகம் இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனதில் தோன்றியது.
 
அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து,2 ஆண்டுகளில் பெரிய நூலகமாக மாற்றினார்கள். அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள். அத ன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன. நூலகம் தோன்றக்காரணமாக இருந்த அச்சிறுவன்தான் பின்னாளி ல் Continue reading

பேஸ்புக்: கூகுளை அழிக்க. . .

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

கூகுளை அழிக்க வேண்டும் என்ற தீராத இலட்சியம் கொண்டுள்ளதோ என்னவோ தெரியவில்லை. கூகுளை அழிப்பதற்கு பேஸ்புக் என்ற சமூக வலைதளம் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. இந்த கட்டுரையை படியுங்கள்.

இன்றை காலக்கட்டத்தில் எப்படி கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டதோ அதே போல் இ-மெயில் எதிர்காலத்தில்  குறைந்து விடும் எனக் கூறியுள்ளார்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க். அனைத்து இ-மெயில்களையும் உள்ளடக்கிய தகவல் அனுப்பும் வசதி ஒன்றினை பேஸ்புக் புதிதாக உருவாக்கியுள்ளது.

கூகுளின் ஜிமெயில் வசதியை அழிப்பதற்காகவே பேஸ்புக் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பரவலாக அனைவராலும் பேசப்படுவதால் பேஸ்புக்கின் இந்த புதிய வசதிக்கு கூகிள் தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகிறது.   தற்போது பேஸ்புக்கை 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களுக்கு உதவும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.   இனி இ-மெயில், குறுந்தகவல், பேஸ்புக் தகவல் எதுவாக வேண்டுமானாலும் பேஸ்புக்கை  பயன்படுத்தி அனுப்பிக் கொள்ள  முடியும். மிகவும் முக்கியமான விடயம் இதில் ஸ்பாம் மெயில்களும் வடிகட்டிவிடும். அனைத்தும் ஒரே இடத்தில்

அவரவர் வசதிக்கேற்றவாறு கிடைப்பதால் இது  இ-மெயில் அழிப்பான் என்றே கூறப்படுகிறது.  பல இ-மெயில்களையும் பயன்படுத்துவோர் இனி பேஸ் புக்கில் வந்தது குவிந்து விடுவார்கள் என கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.   இந்த வசதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று விட்டால் தரமான இ-மெயில் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் குறைந்து விடுவர்.  காலங்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இ-மெயில் வசதி இல்லாமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் ஜிமெயில் தங்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும், ஜிமெயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவை உருவாக்கப்படவில்லை என புதிய விரைவுத் தகவல் அனுப்பும் வசதியை தொடக்கி வைத்துப் பேசிய 26 வயதாகும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க் இவ்வாறு கூறினார்.

இணையத்தில் நூல்கள் இலவசம்

கல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் “அண்மையில்” என்ற முகவரியில் தளம் ஒன்றைப்  பார்க்க நேர்ந்தது.  அதன் முகவரி: http://sciencebooksonline.info.  . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம்  உள்ள பிரிவில்  Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine மற்றும்  Physics என்ற பிரிவுகள் காணப்படுகின்றன.

எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடலாம். அந்த பிரிவில் உள்ள நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இதில் நமக்கு வேண்டிய நூலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். சில நூல்கள், ஆன் லைனிலேயே படிக்கக் கிடைக்கின்றன.  பெரும்பாலான நூல்கள் பி.டி.எப். பைலாகக் கிடைக்கின்றன. இவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நூல்களை கம்ப்யூட்டரில் சேவ் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். சேவ் செய்து பின்னர் படிக்கலாம். தேவைப்பட்ட பக்கங்களை அச்செடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

(படித்ததை படைத்தேன்)

%d bloggers like this: