Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

நடிகை ரஞ்சிதாவைத்தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் நடிகைகள் . . . .!

நடிகைகள் ஆன்மீகத்துக்கு மாறி வருகிறார்கள். தியானம், யோகா பயிற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றன ர். சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவ ங்களில் இருந்து விடுபட ஆன்மீகத்தை நாடுவதாக கூறப்படுகிறது.

நயன்தாரா காதலுக்காக இந்து மதத்துக்கு மாறினார். தற்போது காதல் தோல்வி அடைந்துள்ளதால் முக்கிய இந்துக்கோவி ல் ஸ்தலங்களை தேடிச் சென்று வழிபட்டு வருகிறார். திருப்பதி, குருவாயூர் கோவில் களில் அவரை அடிக்கடி காண முடிகிறதா ம். தியானமும் கற்கிறார். இப்போது அவரி டம் Continue reading

வாகனம் விபத்தில் சிக்கினால் தானாகவே தகவல் அனுப்பும் கருவி கண்டுபிடிப்பு

வாகனம் விபத்தில் சிக்கினால் தானாகவே தகவல் அனுப்பும் கருவி: கோவை கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு

கார் விபத்துக்குள்ளானால், பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களுக்கு தானியங்கி எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கருவியை, கோவை எஸ்.என்.ஆர்., கல்லூரி மா ணவர் வடிவமைத்துள்ளார். விபத்து நடந்த இடத்தையும் குறிப் பிட்டு தகவல் அனுப்பும் இக்கருவி, “சின்க ரானிக்ஸ் 2kb’ கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி மின் னணுவியல் துறை சார்பில், “சின்கரானிக்ஸ்2kb’ கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியில், மின்ன ணுவியல் மாணவர்கள் பங்கேற்று, தங்கள் கண்டு பிடிப்புகளை பார்வைக்கு வைத்தி ருந்தனர். விபத்து நடந்த Continue reading

க‌டத்திக்கொலை செய்யப்பட்ட சிறுவன் சிறுமி வீட்டில் மு.க• ஸ்டாலின் நேரில் ஆறுதல்

முஸ்கின், ரித்திக்

கண்ணீர் அஞ்சலி

துணை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் கடந்த மாதம் 29ம் தேதியன்று கடத்திக் கொலை செய்யப்பட்ட சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் வீட்டுக்கு  சென்று, குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குழுந்தைகளின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் உடன் சென்றிருந்தார்.

பாம்புகள்தான் ​என் ​ செல்லங்கள்!

என் செல்லத்தை வீட்டில் வைத்துத்தான் வளர்க்க முடியவில்லை.​ சீக்கிரம் போய் பார்த்து விட்டாவது வரலாம் வாங்க’ என அப்பாவைத் தொந்தரவு செய்தாள் அந்தச் சிறுமி.​ கிளி,​​ மயில்,​​ புறா என ஏதோ ஒரு பறவையைத்தான் பார்க்கக் கூப்பிடுகிறாள் என சிறுமிக்காகச் “சீக்கிரம் போகச் சொல்லி’ சிபாரிசு செய்தோம்.​ சிறுமியின் அப்பா நம் பக்கம் திரும்பி,​​ ‘செல்லம்னு அவ யாரைச் சொன்னான்னு நினைச்சீங்க.​ 11 அடி சாரைப் பாம்பு.​ அடிபட்ட அந்தப் பாம்புக்குச் சிகிச்சை முடிஞ்சு காட்டில் விடுகிற நேரம் நெருங்கிடுச்சி.​ அதனால்தான் வீட்டில் வைத்து வளர்க்க முடியலைன்னு வருத்தப்படுறா’ என்றார்.​ நமக்குத் தூக்கி வாரிப்போட்டது.​ பதற்றத்தோடு மேலும் விவரம் கேட்டோம்.கோவை லாலிரோடு,​​ ராஜாத்தியம்மாள் லே-அவுட்டில் வசித்து வருபவரான பா.சாந்தகுமார்.​ திருமணங்களுக்கு மணப்பந்தல் அமைத்தல்,​​ அலங்காரம் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.​ ‘பொதுவாக வீட்டில் குழந்தைகள் டான்ஸ் கிளாஸ்,​​ பாட்டு கிளாஸ்,​​ நீச்சல் கிளாஸ்,​​ கிரிக்கெட்,​​ கால்பந்து,​​ சிலம்பம்,​​ குத்துச்சண்டை எனப் பயிற்சிக்காக பல கிளாஸ்களுக்கு செல்வார்கள் எனது குழந்தைகள் சா.தமிழ்ஈழமும் ​(12) சா.ஓவியா(6)வும் பாம்பு கிளாஸýக்குத்தான் போகிறார்கள்’ என்றார்.’ அது என்ன பாம்பு கிளாஸ்?”எனது குழந்தைகள் எப்போதும் ​ டிஸ்கவரி,​​ அனிமல்பிளானட் சேனல்கள்தான் பார்ப்பார்கள்.​ அதுவும் சேனலில் பாம்பைக் காண்பித்தால் அன்றைக்குச் சோறு தண்ணீர்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதிலேயே மூழ்கி விடுவார்கள்.​ அப்போதுதான் ரத்தீஷைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.​ அடிபட்ட பாம்புகளுக்குச் சிகிச்சை கொடுப்பதற்காகவே விழிப்புணர்வு மையம் நடத்தி வருகிறார்.​ அவரைச் சென்று பார்த்தேன்.​ குழந்தைகளின் ஆர்வத்தைச் சொன்னதும் உடனே பயிற்சி அளிக்க ஒத்துக்கொண்டார்.​ இப்போது ஓவியாவுக்கு அங்குள்ள அடிபட்ட பாம்புகள்தான் செல்லங்கள்.​ இப்போது அங்குதான் போகிறோம்’ என்றார்.​ நாமும் அவர்களுடன் ​சென்றோம். இடையர் பாளையத்தில் உள்ள ஓர் ஓட்டு வீடு அது.​ நெருங்கியதும் வீட்டை நோக்கி ஓடிய ஓவியா அங்கிருந்த நான்கைந்து மஞ்சள் சாரை,​​ மர நாகம் போன்ற கொம்பேரிமூக்கனைத் தோளில் தூக்கிபோட்டுக் கொண்டு முத்தம் கொடுக்கத் தொடங்கினாள்.​ அவளிடம் வந்த ரத்தீஷ் ‘ஹோம் ஒர்க் முடிச்சிட்டியா ஓவியா’ என்றார்.​ ‘ஓ…’என்றபடி பாம்புக்கு முத்தம் மழை பொழிந்தார் ஓவியா.

 

சா.ஓவியாவுடன் ரித்திஷ்

பாம்புகளை வைத்து இங்கு என்ன செய்கிறீர்கள்?​ என்று ரத்தீஷிடம் கேட்டோம்.’பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதெல்லாம் பழைய பழமொழி.​ அவற்றை மாற்றி அமைக்கத்தான் இந்த பாம்பு கிளாஸ் ​(விழிப்புணர்வு வகுப்பு).​ பாம்பு நம்மைக் கடித்துவிடுமோ என்ற பயத்தில் கம்பை எடுக்கிறார்கள்.​ அடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பாம்பு சீறுகிறது.​ எந்தப் பிராணியையும் நாம் சீண்டாதவரை அது நம்மைத் தீண்டாது.​ வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டால் உடனே அடித்துவிடுகிறார்கள்.​ அப்படிச் செய்யாதீர்கள். என்னைக் கூப்பிடுங்கள் நான் பிடித்து வேறு இடத்தில் விட்டுவிடுகிறேன்.​ கோவையில் பெரும்பாலான இடங்களில் எனது விசிட்டிங் கார்டை கொடுத்து வருவேன்.​ சிலர் என்னை அழைக்கின்றனர்.​ சிலர் அடித்துவிடுகின்றனர்.​ பெரும்பாலும் பாம்பை அடிக்கும்போது பதற்றத்துடன் அடிப்பார்கள்.​ இதனால் சிறு காயத்துடன் பாம்பு அருகில் உள்ள சிறிய சந்து பொந்துகளில் நுழைந்துவிடும்.​ அதற்குள் நான் சென்று அவற்றை மீட்டுக் கொண்டு வந்து சிகிச்சை அளித்து உணவு வழங்கி நான்கைந்து வாரத்தில் அவற்றைப் பாதுகாப்பான இடங்களில் விட்டுவிடுவேன்’ என்றார் ரத்தீஷ்.இதற்கிடையே ஓவியா கையிலிருந்து இறங்கிய மஞ்சள் சாரை தரையில் அமர்ந்திருந்த நம் காலுக்கடியில் சுருண்டுகொண்டது.​ அண்ணாமலை படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஏற்பட்ட அதே நிலைக்கு நாமும் தள்ளப்பட்டு நெளிந்தோம்.​ ‘பயப்படாதீங்க அங்கிள், ஒண்ணும் செய்யாது சாரைபாம்புக்கு விஷம் கிடையாது.​ என் செல்லம்…​ என்றபடி அதைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள் ஓவியா.​ சற்றே நடுக்கம் குறைந்தது.​ ‘மாஸ்டர் இந்தாங்க ஹோம்​ ஒர்க் நோட்டு’ என்று ரத்தீஷிடம் நீட்​டினாள்.​ ‘அது என்ன மாஸ்டர் ஹோம்ஒர்க்.​ பாம்புகளை பற்றியா?’ என்றோம்.’ஆம்…பாம்புகள் என்றால் என்ன?​ அதன் குணம்,​​ பால் குடிக்குமா?​ முட்டை சாப்பிடுமா? நல்ல பாம்புகள் கரம்கட்டி பழிவாங்குமா?​ எந்தப் பாம்புகள் விஷத்தன்மை அற்றது?​ பாம்புகளை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?​ பாம்புகளை வீட்டில் வளர்க்கலாமா?​ கூடாதா?​ அவற்றை எப்படிப் பாதுகாப்பது?​ என வாரத்திற்கு 6 மணி நேரம் ​ நான்கு வாரங்கள் படிக்க வேண்டும்.​ அதில் தேர்ச்சி பெற்றால்தான் பாம்பை நெருங்கவிடுவேன்’ என்றார் ரத்தீஷ்.​ ​ ​விடைபெறும் முன் ஓவியா போன்ற சிறுகுழந்தைகள் கையில் பிடிக்கும்போது நாம் இப்படி பயப்படுவது வெட்கக்கேடு என்று நினைத்து,​​ அரை மனதுடன் ‘மாஸ்டர் நாங்கள் கொஞ்ச நேரம் பாம்பைத் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்றோம்.​ அடுத்தநொடியே நம் தோளில் ஓரு சாரை ஊர்ந்தது.​ கையில் சிறிய கொம்பேரி மூக்கனையும் விட்டார்.

எம். ஆனந்த், dinamani

ஆனைமலையில் 9 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் . . .

ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பள்ளிவாசல் வீதியில் வசித்து வருபவர் அழகு. இவரது மகள் புவனேஸ்வரி (9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் அதே பகுதியில் வசிக்கும் கவிதா என்பவரிடம் டியூசன் படித்து வந்தாள். கவிதாவின் கணவர் மைக்கேல் எழில் நிர்மல் (வயது 30) கட்டிட தொழிலாளி,

நேற்று முன்தினம் சிறுமி தனது அண்ணனுடன் கவிதாவின் வீட்டிற்கு டியூசன் படிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மைக்கேல் எழில் நிர்மல் சிறுமியை நைசாக புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். அவளை கற்பழித்தார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் திடீரென அவளுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவள் கற்பழிக்கப்பட்டது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை அழகு கோட்டூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அஜித் துணையுடன் போலீசில் புகார் செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த மைக்கேலை போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகளை கொன்ற கொலையாளி, என்கவுன்‌டர்: கமிஷனர் பேட்டி

போலீசார் நடத்தி முடித்த என்கவுன்டர் குறித்து கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரையும் தனித்தனி வேனில் நேரிடை விசாரணைக்காக காலை 5. 30 மணி அளவில் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றோம். இந்த வழியில் ஈச்சனாரி ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போத்தனூர் வழியாக மாற்று வழியில் செல்ல அழைத்து சென்றோம்.

மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே சென்றபோது சப்.இன்ஸ்பெக்டர் ஜோதியின் பிஸ்டலை பிடுங்கி சுட்டு விடுவதாக மிரட்டி கேரளா நோக்கி செல்லுமாறு மிரட்டினான். இதனையடுத்து எஸ்.ஐ.,க்கள் ஜோதி, முத்துமாலை ஆகிய இருவரையும் நோக்கி சுட்டான். ஜோதிக்கு இடது கையிலும், முத்துமாலைக்கு வயிற்றுப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை கையில் இருந்த பிஸ்டல் துப்பாக்கி கொண்டு மோகனகிருஷ்ணனை சுட்டார். இதில் இவனுக்கு தலை யில் நெற்றிப்பகுதி மற்றும் மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டான். தற்‌காப்புக்காகவே இநத என்கவுன்டர் நடத்தி முடிக்கப்பட்டது .  இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை

கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன்  என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் ‌கருத்து தெரிவித்துள்ளனர்.

சாதனை : சைலேந்திரபாபு பேச்சு

கோவை : “வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க, அதற்கான வெறிதான் முக்கியம். படிக்கும் பள்ளி முக்கியமல்ல. அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தாலும் பெரிதாக சாதிக்க முடியும்,” என, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார்.

கோவை அரசு கலைக் கல்லூரியும் கோவை மாநகராட்சியும் இணைந்து நடத்தும் உயர்கல்வி மன்றத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவியருக்கு இலவச வேலை மற்றும் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி நடத்தப்பட்டது.

போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசியதாவது: பிளஸ் 2 படிப்பை முடித்த பின் தொழிற் கல்வி படிப்புகளில் சேர பல லட்ச ரூபாய்கள் செலவிட வேண்டியதுள்ளது. மாணவர்கள் திட்டமிட்டு நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்றால் பெற்றோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை சேமித்து தரலாம். படிக்கும் வயதில் பாடங்களை மட்டுமே நேசிக்க வேண்டும். பாடங்களை விரும்பி படித்தால் கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெற முடியும். ஒவ்வொரு ஏழை பெற்றோரும் பெரிய கனவுகளுடன் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். கனவை நிறைவேற்ற வேண்டியது மாணவர்களின் பொறுப்பு. மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பதால் சாதிக்க முடியாது என கருதி விடக்கூடாது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். சாதிக்க வேண்டும் என்ற வெறிதான் முக்கியம்; படிக்கும் பள்ளி அல்ல. பாடங்களை புரிந்து, சிந்தித்து படித்தால் மட்டுமே நினைவில் நிற்கும். புரிந்து படிப்பது மட்டும் முக்கியமல்ல, படித்ததை மறந்து விடாமல் இருப்பதும் முக்கியம். படித்ததை மீண்டும் நினைவு படுத்தும் நிகழ்வுதான் தேர்வு. படிக்கும் பாடத்தில் ஆர்வம் இருந்தால் மறக்காது. இவ்வாறு, கமிஷனர் சைலேந்திரபாபு பேசினார்.

உயர்கல்வி மைய தலைவர் மற்றும் முதன்மை நிபுணர் கனகராஜ், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். கோவை மருத்துவக் கல்லூரி மாணவர் சதீஷ் மருத்துவ உயர்படிப்புகளை குறித்தும், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் தேவராஜ் ஐ.ஐ.டி.,தேர்வுகள் குறித்தும், நேரு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் தீபிகா மென்திறன்கள் குறித்தும் விளக்கினார். பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாதம் இருமுறை இந்த இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

%d bloggers like this: