Advertisements

கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

எனக்கு கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

என்ன இது ஒரு வித்தியாசமான தலைப்பு என்றால் படியங்கள் புரியும் என்ன Continue reading

Advertisements

வெங்காய தோசைக்கு நோ சொல்லும் ஓட்டல்கள்.

பருவமழை காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் காய்கறி விளைச்சல் பாதித்தது. இதனால் தக்காளி, பீன்ஸ், அவரை, உருளைக் கிழங்கு, கேரட் உள்ளிட்ட அனைத்து காய் கறிகளும் ஒரு மாதமாக உயர்ந்தன.

பெரிய வெங்காயத்தின் விலை மட்டும் கிலோ ரூ.40, ரூ.50 என்று உயர்ந்தது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் Continue reading

சுத்தம் என்றால கிலோ எவ்வளவு – ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்

Australia

அனைத்தும்  தங்குவதகோ அல்லது இருப்பதற்கோ எந்த வகையிலும் ஏற்றதாக‌ இல்லை என்றே  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் கைரேகை நிபுணருமான பீட்டர் குரியன் ஆய்வு மேற்கொள்வதற்காக  ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன ஆனால்.பெரும்பாலான பாத்ரூம் மற்றும் படுக்கைகள் போன்றவற்றின் பராமரிப்பு உரிய அளவில் இன்றி இருப்பதாக‌ தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஓட்டல்களும் பார்ப்பதற்கு பளபளப்பாக தெரிந்தாலும், சுத்தம் என்றால கிலோ எவ்வளவு என்று கேட்கும் அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மோடியை கொல்ல லஷ்கர் திட்டம் ;தமிழகம் – கேரளாவில் கால் ஊன்றவும் பிளான் போட்டனர்

சமீப காலமாக விக்கிலீக் இணைய தளம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் தங்களது தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மற்றும் ஆவணங்கள் மூலம் அனுப்பி தகவல்கள் பகிர்ந்து கொண்ட ஏறக்குறைய 2 லட்சத்திற்கும் அதிகமான டாக்மென்ட்கள் வெளியே லீக் செய்யப்பட்டுள்ளது. விக்கி லீக் வெளியிட்டுள்ள தகவல்கள் அமெரிக்காவுக்கு பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் தகவல்கள் அமெரிக்காவுக்கு சென்ற விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தற்போது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்ட சதி விவரம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிய விவரம் வெளி வந்திருக்கிறது. இதில் மோடியை கார் மூலம் குண்டு வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த விவரம் இந்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாள், இலங்கையில் இந்த அமைப்புகள் ஏற்கனவே கால்ஊன்றி விட்டன.இது பெரும் ஆபத்தானது என்றும் குறிப்பிடப்பட்டிருககிறது.

இது போல தென் இந்தியாவில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பு தனது பலத்தை நிலைநாட்டிட கர்நாடகா, தமிழகம் கேரளாவில் பயங்கரவாத முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஒரு பயங்கரவாதி ஷாபீக்கபாவுடன் தொடர்பு கொண்டு செல்போனில் பேசப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில் தென்கத்தில் பயங்கரவாத மையம் அமைப்பது தொடர்பாக இது அமைப்பதில் எந்த அளவிற்கு சாத்தியம் என கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் , கேரளா , கர்நாடகாவில் மையம் அமைப்பது மூலம் சதிச்செயல்கள் திட்டமிட பெரும் வசதியாக இருக்கும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

(இணையதளம் ஒன்றில் வெளிவந்த செய்தி)

%d bloggers like this: