Advertisements

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில் Continue reading

Advertisements

ந‌வம்பர் 8 ஆம் தேதி தமிழக சட்ட‍சபை குளிர்கால கூட்டத்தொடர். அவசர சட்ட‍ங்களுக்கான மசோதா தாக்க‍ல்

தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது. தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களுக்காக துணை மதிப்பீடும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19ம் தேதி துவங்கி, மே மாதம் 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மரபுப்படி, சட்டசபை கூட்டம் முடிந்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட வேண்டும் என்பதால், நவம்பர் 10 தேதிக்குப்பின், சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நவம்பர் 8ம் தேதியே புதிய சட்டசபையில் சட்டசபை கூட்டம் கூடும் என, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று அறிவித்தார். குளிர்கால கூட்டத் தொடராக, ஒரு வாரம் வரை சட்டசபை நடைபெறும். இதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.கடந்த ஜூன் மாதம், கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் பேசும்போது, “தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தரப்படும்’ என, அறிவித்தார். இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பணி நியமனங்களும் செய்யப்பட்டன. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா, இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். டிஜிட்டல் பேனர் வைப்பதை முறைப்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கூட்டத்தொடரின் முதல் நாள், மறைந்த சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ., ஜெயபால் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சபை ஒத்தி வைக்கப்படும். மறுநாள் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நான்கு நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.இத்தொடரில், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, நூல் விலை உயர்வு, பன்றிக் காய்ச்சலால் மக்கள் பாதிப்பு, தனியார் பள்ளி கட்டண விவகாரம், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு, இலவச மின் மோட்டார் வழங்கப்படும் என, முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதற்கான நிதி ஒதுக்கீடு உட்பட கூடுதல் செலவினங்களுக்கு நிதியை ஒதுக்க வழிவகை செய்யும் வகையில், அதற்கான துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்வார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டசபை கூடுவதால், இந்தத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: