Advertisements

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் Continue reading

Advertisements

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் . . . .!

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது . ஆஸ்திரேலியா நாட்டவர்கள் தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேர ழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களு க்கு Continue reading

காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டது – நாசா விஞ்ஞானி எச்சரிக்கை

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொ ண்டிருப்பதாகவும், இது செயற்கை கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் எனவும், இதன்மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக Continue reading

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு – வீடியோ

( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

தற்போது பெய்துவரும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் வட கிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து,  முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.  பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன.  இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து;  நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 548 குடிசைகள் முழுமையாகவும்,  1438 குடிசைகள் பகுதியாகவும், ஆக மொத்தம் 1,986 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளைப் பொறுத்த வரை, மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.  மழையின் காரணமாக உயிரிழந்த 179 கால்நடைகளுக்கும் உரிய நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கி வருகிறார்கள்.  40 ஆண்கள், 27 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 88 பேர் மழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-மும், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ ஒரு லட்சமும் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2,00,000/- நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks dinamani

கொடை மனம் இல்லாதோரே!, குடையையாவது கொண்டு செல்லுங்கள்!! புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை!!!

கொடையுள்ள‍ம் கொண்டவர்களால் இப்பூமி மீண்டும் குளிர போகிறது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.இரமணன் அவர்களின் அறிக்கை

 

புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்’.

 

அன்பு வேண்டுகோள்:

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மழை நேரத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை யாரும் மிதிக்க‍ வேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு முக்கிய‌ அறிவிப்பு: புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க‍ . . .

இன்று காலை நிலவரப்படி, வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் 800 கிலோமீட்டர் தொலைவில் “ஜல்” எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் மையம் கொண்டிருப்பதாகவும்; அப்புயல் தமிழகத்திற்கும், ஆந்திராவில் உள்ள ஓங்கோலுக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

அதன் காரணமாக, தமிழகத்தில் அதிவேகமான காற்றுடன் கூடிய பெருமழை பெய்யக்கூடும் என்றும்; மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்றும் அறிவித்துள்ளது. புயலை யொட்டி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அவரவர் படகுகளை பாதுகாப்பா கரையில் நிறுத்தி வைத்துள்ள‍தாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

வட தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை: வங்க கடலில் புயல் சின்னம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
தென்மேற்கு வங்க கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்- புதுச் சேரியில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடாவில் இருந்த மத்திய மேற்கு வங்க கடலை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அளவு குறைந்தது. சில பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வங்க கடலில் அந்தமான் தெற்கு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
வரும் 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும். இதன் காரணமாக தமிழகம்- புதுவையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.
இந்த சூப்பர் புயல் சென்னை-மசூலிபட்டினம் இடையே 2 நாளில் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கிறோம். புயல் காரணமாக சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.இவ்வாறு வானிலை மைய அதிகாரி கூறினார்.
%d bloggers like this: