Advertisements

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

நேற்று இரவு இணையத்தில் காணொலி ஒன்றை கண்டேன். அற்புதமாக இருந்த Continue reading

Advertisements

நாயும் குரங்கும் “நண்பேன்டா”

நாளேடு ஒன்றில் வெளியான புகைப்படம்

ஜல்லிக்கட்டு : பிராணிகள் நலவாரியம் வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று இந்திய பிராணிகள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் கர்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ள உத்தரவுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :

“1960-ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய பிராணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, Continue reading

நாய்களுக்கு 1000 வார்த்தைகளுக்குமேல் புரிந்து . . . .

 

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் நாயும் ஒன்று. சில நாய்கள் எஜமானர்கள் இடும் கட்டளையை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன. பொதுவாக நாய்கள் 1000-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்கும் தன்மை உடையவை என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
லண்டனை சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆலிஸ்டன் ரெய்டு, ஜான் பில்லி ஆகியோர் பார்டர் கர்லஸி என்ற இனத்தைச் சேர்ந்த ஷாசெர் வகை நாயிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த நாய் 1022 பொம்மைகளின் Continue reading

நாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .


Labrador dog

 

 

 

 

 

 

 

 

நாயுடன் திருமணம்  செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஜோசப் கைஸோ. இவர் லாப்ரடார் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அவர் நாயைவிட்டு பிரியாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு வினோத ஆசை ஒன்று வந்துள்ளது. அதாவது தனக்கு பிரியமான நாயையே திருமணம் செய்து கொள்வது என்று .அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். திருமணவிழா ஆஸ்திரேலியாவின் லாரல் பேங்க் பார்க் என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற்றது. விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றனர்.

செய்தி – தினமலர், / படத்தொகுப்பு விதை2விருட்சம்

பாம்புகள்தான் ​என் ​ செல்லங்கள்!

என் செல்லத்தை வீட்டில் வைத்துத்தான் வளர்க்க முடியவில்லை.​ சீக்கிரம் போய் பார்த்து விட்டாவது வரலாம் வாங்க’ என அப்பாவைத் தொந்தரவு செய்தாள் அந்தச் சிறுமி.​ கிளி,​​ மயில்,​​ புறா என ஏதோ ஒரு பறவையைத்தான் பார்க்கக் கூப்பிடுகிறாள் என சிறுமிக்காகச் “சீக்கிரம் போகச் சொல்லி’ சிபாரிசு செய்தோம்.​ சிறுமியின் அப்பா நம் பக்கம் திரும்பி,​​ ‘செல்லம்னு அவ யாரைச் சொன்னான்னு நினைச்சீங்க.​ 11 அடி சாரைப் பாம்பு.​ அடிபட்ட அந்தப் பாம்புக்குச் சிகிச்சை முடிஞ்சு காட்டில் விடுகிற நேரம் நெருங்கிடுச்சி.​ அதனால்தான் வீட்டில் வைத்து வளர்க்க முடியலைன்னு வருத்தப்படுறா’ என்றார்.​ நமக்குத் தூக்கி வாரிப்போட்டது.​ பதற்றத்தோடு மேலும் விவரம் கேட்டோம்.கோவை லாலிரோடு,​​ ராஜாத்தியம்மாள் லே-அவுட்டில் வசித்து வருபவரான பா.சாந்தகுமார்.​ திருமணங்களுக்கு மணப்பந்தல் அமைத்தல்,​​ அலங்காரம் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.​ ‘பொதுவாக வீட்டில் குழந்தைகள் டான்ஸ் கிளாஸ்,​​ பாட்டு கிளாஸ்,​​ நீச்சல் கிளாஸ்,​​ கிரிக்கெட்,​​ கால்பந்து,​​ சிலம்பம்,​​ குத்துச்சண்டை எனப் பயிற்சிக்காக பல கிளாஸ்களுக்கு செல்வார்கள் எனது குழந்தைகள் சா.தமிழ்ஈழமும் ​(12) சா.ஓவியா(6)வும் பாம்பு கிளாஸýக்குத்தான் போகிறார்கள்’ என்றார்.’ அது என்ன பாம்பு கிளாஸ்?”எனது குழந்தைகள் எப்போதும் ​ டிஸ்கவரி,​​ அனிமல்பிளானட் சேனல்கள்தான் பார்ப்பார்கள்.​ அதுவும் சேனலில் பாம்பைக் காண்பித்தால் அன்றைக்குச் சோறு தண்ணீர்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு அதிலேயே மூழ்கி விடுவார்கள்.​ அப்போதுதான் ரத்தீஷைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.​ அடிபட்ட பாம்புகளுக்குச் சிகிச்சை கொடுப்பதற்காகவே விழிப்புணர்வு மையம் நடத்தி வருகிறார்.​ அவரைச் சென்று பார்த்தேன்.​ குழந்தைகளின் ஆர்வத்தைச் சொன்னதும் உடனே பயிற்சி அளிக்க ஒத்துக்கொண்டார்.​ இப்போது ஓவியாவுக்கு அங்குள்ள அடிபட்ட பாம்புகள்தான் செல்லங்கள்.​ இப்போது அங்குதான் போகிறோம்’ என்றார்.​ நாமும் அவர்களுடன் ​சென்றோம். இடையர் பாளையத்தில் உள்ள ஓர் ஓட்டு வீடு அது.​ நெருங்கியதும் வீட்டை நோக்கி ஓடிய ஓவியா அங்கிருந்த நான்கைந்து மஞ்சள் சாரை,​​ மர நாகம் போன்ற கொம்பேரிமூக்கனைத் தோளில் தூக்கிபோட்டுக் கொண்டு முத்தம் கொடுக்கத் தொடங்கினாள்.​ அவளிடம் வந்த ரத்தீஷ் ‘ஹோம் ஒர்க் முடிச்சிட்டியா ஓவியா’ என்றார்.​ ‘ஓ…’என்றபடி பாம்புக்கு முத்தம் மழை பொழிந்தார் ஓவியா.

 

சா.ஓவியாவுடன் ரித்திஷ்

பாம்புகளை வைத்து இங்கு என்ன செய்கிறீர்கள்?​ என்று ரத்தீஷிடம் கேட்டோம்.’பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதெல்லாம் பழைய பழமொழி.​ அவற்றை மாற்றி அமைக்கத்தான் இந்த பாம்பு கிளாஸ் ​(விழிப்புணர்வு வகுப்பு).​ பாம்பு நம்மைக் கடித்துவிடுமோ என்ற பயத்தில் கம்பை எடுக்கிறார்கள்.​ அடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பாம்பு சீறுகிறது.​ எந்தப் பிராணியையும் நாம் சீண்டாதவரை அது நம்மைத் தீண்டாது.​ வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டால் உடனே அடித்துவிடுகிறார்கள்.​ அப்படிச் செய்யாதீர்கள். என்னைக் கூப்பிடுங்கள் நான் பிடித்து வேறு இடத்தில் விட்டுவிடுகிறேன்.​ கோவையில் பெரும்பாலான இடங்களில் எனது விசிட்டிங் கார்டை கொடுத்து வருவேன்.​ சிலர் என்னை அழைக்கின்றனர்.​ சிலர் அடித்துவிடுகின்றனர்.​ பெரும்பாலும் பாம்பை அடிக்கும்போது பதற்றத்துடன் அடிப்பார்கள்.​ இதனால் சிறு காயத்துடன் பாம்பு அருகில் உள்ள சிறிய சந்து பொந்துகளில் நுழைந்துவிடும்.​ அதற்குள் நான் சென்று அவற்றை மீட்டுக் கொண்டு வந்து சிகிச்சை அளித்து உணவு வழங்கி நான்கைந்து வாரத்தில் அவற்றைப் பாதுகாப்பான இடங்களில் விட்டுவிடுவேன்’ என்றார் ரத்தீஷ்.இதற்கிடையே ஓவியா கையிலிருந்து இறங்கிய மஞ்சள் சாரை தரையில் அமர்ந்திருந்த நம் காலுக்கடியில் சுருண்டுகொண்டது.​ அண்ணாமலை படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஏற்பட்ட அதே நிலைக்கு நாமும் தள்ளப்பட்டு நெளிந்தோம்.​ ‘பயப்படாதீங்க அங்கிள், ஒண்ணும் செய்யாது சாரைபாம்புக்கு விஷம் கிடையாது.​ என் செல்லம்…​ என்றபடி அதைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள் ஓவியா.​ சற்றே நடுக்கம் குறைந்தது.​ ‘மாஸ்டர் இந்தாங்க ஹோம்​ ஒர்க் நோட்டு’ என்று ரத்தீஷிடம் நீட்​டினாள்.​ ‘அது என்ன மாஸ்டர் ஹோம்ஒர்க்.​ பாம்புகளை பற்றியா?’ என்றோம்.’ஆம்…பாம்புகள் என்றால் என்ன?​ அதன் குணம்,​​ பால் குடிக்குமா?​ முட்டை சாப்பிடுமா? நல்ல பாம்புகள் கரம்கட்டி பழிவாங்குமா?​ எந்தப் பாம்புகள் விஷத்தன்மை அற்றது?​ பாம்புகளை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?​ பாம்புகளை வீட்டில் வளர்க்கலாமா?​ கூடாதா?​ அவற்றை எப்படிப் பாதுகாப்பது?​ என வாரத்திற்கு 6 மணி நேரம் ​ நான்கு வாரங்கள் படிக்க வேண்டும்.​ அதில் தேர்ச்சி பெற்றால்தான் பாம்பை நெருங்கவிடுவேன்’ என்றார் ரத்தீஷ்.​ ​ ​விடைபெறும் முன் ஓவியா போன்ற சிறுகுழந்தைகள் கையில் பிடிக்கும்போது நாம் இப்படி பயப்படுவது வெட்கக்கேடு என்று நினைத்து,​​ அரை மனதுடன் ‘மாஸ்டர் நாங்கள் கொஞ்ச நேரம் பாம்பைத் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்றோம்.​ அடுத்தநொடியே நம் தோளில் ஓரு சாரை ஊர்ந்தது.​ கையில் சிறிய கொம்பேரி மூக்கனையும் விட்டார்.

எம். ஆனந்த், dinamani

மனிதனைக் காக்கும் புலிகள்!

பல லட்சம் ஆண்டுகளாக இந்தப் பூமி விலங்குகளுக்குச் சொந்தமானதாக இருந்தது. கடைசியில் வந்து இடம் பிடித்த மனிதன் ஒரேயடியாக பூமி தனக்கு மட்டுமே சொந்தமானதாகச் சொல்வது அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட” என்கிறார் சேகர் தத்தாரி.அமெரிக்கா, சுவீடன் போன்ற பல்வேறு நாடுகளின் சுற்றுச் சூழல் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் இவருக்கு இப்போது வயது 47. சென்னையைச் சேர்ந்த இவர், நேஷனல் ஜியாகரபிக், டிஸ்கவரி போன்ற சினிமாவின் கறைபடியாத இயற்கைக்கான சானல்களில் பணிபுரிந்தவர். இப்போது இந்திய இயற்கைச் சூழலைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் சேவையாற்றி வருகிறார். “திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் எப்போதுமே பணம் ஒரு பொருட்டாக இருந்ததில்லை’ என்கிறார் புன்னகை மாறாமல். இவருடைய சமீபத்திய ஆவணப்படம் “தி ட்ரூத் அபவுட் டைகர்ஸ்’.ஒளிப்பதிவாளராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆவணப் படத் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். பல லட்சம்  சம்பாதிக்கும் துறையைவிட்டுவிட்டு, சுற்றுச் சூழல் விழிப்புணர்ச்சி பிரசாரம் செய்வதையே தன் முழு நேர வேலையாக்கிக் கொண்டார் இப்போது. “புலிகளைக் காப்போம்’ என்று தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவரிடம் வெகுஜனத்தின் கேள்வியாக முதல்கேள்வியை முன்வைத்தோம்.

புலிகளைக் காப்பாற்ற அரசு கோடி கோடியாக பணம் செலவழிக்கிறது. புலிகளைக் காப்போம் என்று நிறைய அமைப்புகள் செயல்படுகின்றன. புலிகள் எதற்காகக் காப்பாற்றப்பட வேண்டும்? புலிகள் இந்த உலகுக்கு அவ்வளவு அவசியமா?

நிறைய பேர் கேட்கிற கேள்விதான். அவர்களிடம் நான் கேட்கிற கேள்வி இதுதான்: மனிதன் இந்த உலகுக்கு அவசியமா? மனிதனால்தான் இந்த உலகம் மாசுபட்டுப் போனது. புவிக்கோளம் சூடாகிப் போனது மனிதனால்தான். அடுத்தது மனிதனைவிட புலிகள் இந்த உலகுக்கு அவசியம்தான். புலிகள் மட்டுமல்ல, புழு, பூச்சி, பறவைகள், மான்கள் எல்லாமே தேவை.ஏனென்றால் ஒரு விலங்கு இல்லாமல் இன்னொரு விலங்கு இல்லை. பறவைகள் இல்லாமல் மரங்கள் இல்லை. மரங்கள் இருந்தால்தான் மழை. மழை இல்லையென்றால் உலகமே இல்லை. எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்தவை. அதில் ஒரு கண்ணியை அழித்துவிட்டாலும் எல்லாமே ஸ்தம்பித்துவிடும். சில பறவைகளின் எச்சத்தின் மூலம் விழும் விதைகளால்தான் சில பயிர்கள் முளைக்கும். இதேபோல யானைகள், மான்கள் போன்றவற்றின் எச்சங்களாலும் மரங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் பயிராவதற்கு வாய்ப்பாக அமைகிறது. அமெரிக்காவில் கடந்த 5-6 ஆண்டுகளில் தேனீக்கள் பெருமளவு காணாமற் போய்விட்டன. தேனீ தானே போனால் போகிறது என்று விட்டுவிட முடியுமா? தேனீக்களால் கிடைப்பது தேன் மட்டும்தான் என்று நினைத்தால் நம் அறியாமை. தேனீக்கள்தான் மகரந்த சேர்க்கை செய்கின்றன. காய்கறிகளும் பழங்களும் மூலிகைகளும் கிடைப்பது தேனீக்களின் மகரந்த சேர்க்கைகளினால்தான். தேனீக்கள் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் உதவிக்கு 25 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டார்கள். நானும் நீங்களும் போய் மகரந்த சேர்க்கை உருவாக்கிவிட முடியுமா சொல்லுங்கள்? பிறகுதான் தேனீக்களைப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள்.

உலகில் எந்தெந்த காடுகளுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள்?

மத்திய அமெரிக்கா, ஆப்ரிக்கா, இத்தாலி, ஃபிரான்ஸ், நியூஸிலாந்து, சீனா, ஜப்பான் எனப் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன்.

எந்த நாட்டின் காடுகளுக்கு முதல் மதிப்பெண் கொடுப்பீர்கள்?

சந்தேகமே இல்லாமல் இந்தியக் காடுகளுக்குத்தான். இதை தேசப்பற்று காரணமாக சொல்லவில்லை. இங்குதான் இமயமலைப் போன்ற பனிக்காடுகள், சதுப்புநிலக் காடுகள், மழைக்காடுகள், பாலைவனங்கள் எனப் பல வகையான நில அமைப்புகள் இருக்கின்றன. இத்தனை அம்சங்களும் நிறைந்த பகுதிகள் உலகில் வேறெங்கும் இல்லை. இங்கிருக்கும் தாவரங்களும் விலங்குகளும்கூட அபூர்வமானவைதான்.

இந்தியாவில் எந்தெந்தக் காடுகளில் பயணித்திருக்கிறீர்கள்? இந்தியாவில் புலிகள் எந்தெந்த காடுகளில் உள்ளன?

லடாக் காடுகளில் இருந்து கிரேட் நிகோபார்க் தீவுகள் வரை இந்தியாவில் உள்ள அனைத்துக் காடுகளிலும் பயணித்திருக்கிறேன். இந்தியக் காடுகளில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் இருப்பவை புலிகள்தான். சிங்கங்கள்கூட தென்னிந்தியாவில் எங்கும் காணக்கிடைக்கவில்லை. குஜராத்தோடு சரி. ஆனால் புலிகள் இந்தியாவில் 17 மாநிலங்களில் இருக்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், ஒரிசா என எல்லா மாநிலத்திலும் இருக்கின்றன.

இத்தனை மாநிலத்திலும் இருந்துமா புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்? புலிகளின் எண்ணிக்கையை எப்படி கணக்கிடுகிறார்கள்?

எல்லா இடத்திலும் இருந்ததாலேயே எல்லோரும் வேட்டையாடினர். புலிகளைக் கால்தடங்களை வைத்து கணிக்கிடும் முறை இருந்தது. அப்போது ஒரு புலியின் தடத்தையே வெவ்வேறு இடங்களில் கணக்கெடுத்துவிட வாய்ப்பிருந்தது. அதே போல புலியின் கால் தடங்கள் மணல் வெளியில் ஒரு மாதிரியாகவும் களிமண் பகுதியில் வேறுமாதிரியும் பதியும். அதனால் எல்லாம் கணக்கெடுப்பில் பிழை நேர்ந்தது. இப்போது தானியங்கி காமிரா டிராப்பிங் மூலம் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். இது புலியின் உடம்பில் இருக்கும் வரிகளை வைத்து அடையாளம் காணும் முறையாகும். அந்த அடையாளத்தை வைத்து கணக்கிடுகிறார்கள். புலியின் வரிகள் மனிதனின் கைரேகை போல. ஒவ்வொரு புலிக்கும் மாறுபடும். 2007இல் இந்திய அரசு எடுத்திருக்கும் கணக்கெடுப்பின்படி 1100 லிருந்து 1600-க்குள் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். புலிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக கணக்கிட முடியாது. தோராயமாகத்தான் சொல்ல முடியும். அதனால் ஏர்செல் செல்போன் நிறுவனம் 1411 புலிகள் இருப்பதாக தோராய மதிப்பிட்டு புலிகளைக் காப்பாற்றுமாறு விளம்பரப் பலகைகள் வைத்தன.

தமிழகத்தில் களக்காடு, முண்டந்துறை காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் புலிகளின் நிலைமை எப்படி இருக்கிறது?

இந்தியாவில் 39 புலிகள் சரணாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் பல சரணாலயங்கள் புலிகள் அதிகமாக இருப்பதனால் புலிகள் சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டவை அல்ல. களக்காடு, முண்டந்துறை காடுகளும் புலிகள் அதிகம் இருப்பதற்கான காடுகள் அல்ல. காரணம் அது சோலைக் காடாகவும் சமவெளி காடாகவும் இருக்கிறது. அவை மரங்கள் உயர்ந்து வளரும் தன்மையுள்ள காடுகள். மரங்களில் வசிக்கும் குரங்குகள், அணில்கள் போன்றவை அதிகமாக இருக்கும். அதனால் அங்கு புலிகளுக்கான ஆகாரங்களான மான்கள், காட்டுப்பன்றிகள் குறைவாக இருக்கின்றன. புலிகள் வாழ்வதற்கான சூழ்நிலையே குறைவுதான். தனக்கான தீனி இல்லாத இடத்தில் புலிகள் இருப்பதில்லை. ஒரு புலிக்கு ஆண்டுக்கு 50 மான்கள் தேவை. 100 புலிகள் இருக்க வேண்டுமானால் எவ்வளவு மான்கள் இருக்க வேண்டும் என்று பாருங்கள். அங்கே அந்த அளவுக்கு மான்கள் இல்லை.ஆனால் பின் எதற்காக புலிகள் சரணாலயம் என்று கேட்கலாம். புலிகள் சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்குக் காரணம், அங்கிருக்கிற மான்கள், மயில்கள், மரங்கள், காட்டுப்பன்றிகள், நீராதாரங்கள், வண்ணத்துப் பூச்சிகள் என எவ்வளவோ காக்கப்படுகின்றன. புலிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஒட்டுமொத்த இயற்கை சூழலே காக்கப்படுகிறது. ஏன், மனிதனே காப்பாற்றப்படுகிறான்.பட்டாம்பூச்சியைக் காப்பாற்றப் போகிறேன் என்றாலோ, மரங்களைக் காப்பாற்றப் போகிறேன் என்றாலோ யாராவது அக்கறை செலுத்துவார்களா? புலிகள் என்ற வசீகர விலங்குதான் இப்போது பெரும்பாலான வனத்தைப் பாதுகாக்க வாய்ப்பை ஏற்படுத்தி, மனித இனத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

புலிகளைப் போலவே எல்லா விலங்குகளும் இயற்கைச் சூழலுக்கு முக்கியம்தான். புலியின் மீது மட்டும் அதிக அக்கறை ஏன்?

உலகிலேயே அதிகம் பேரால் விரும்பப்படும் விலங்கு எது என்று கருத்துக் கணிப்பு நடத்தினர். உலக மக்களிடம் முதலிடம் பிடித்தது புலி. புலி கம்பீரமான விலங்கு. வண்ணமயமானது. அனைவருக்கும் பிடித்த விலங்கு அது. புலிகளுக்காக காடுகள் காக்கப்படும்போது தானாகவே பிற விலங்குகளும் காப்பாற்றப்பட்டுவிடுகின்றன.

புலிகளை மனிதர்கள் எதற்காக வேட்டையாடுகிறார்கள்?

வீரத்தைக் காட்டுவதற்காக. சீனாவில் இருக்கும் மூடநம்பிக்கைகள் புலிகள் சார்ந்தவை. புலிகளின் எலும்பை அரைத்துக் குடித்தால் வீரம் வரும் என்றும் அதன் ரத்தத்தைக் குடித்தால் நீடித்து வாழலாம் என்றும் அதன் மீசையை அரைத்துச் சாப்பிட்டால் பல்வலி போகும் என்றும் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அதன் தோல்மீது அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைகளும் இதில் அடக்கம். இந்த மூட நம்பிக்கைகளை நாம் ஒரு நாளில் மாற்றிவிட முடியாது.

புலிகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியக் காடுகள் போதிய பாதுகாப்பில்லாமல் இருக்கின்றன. காட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நல்ல சம்பளமும் அது குறித்த நேரத்தில் சென்று சேர்வதும் அவசியம். வெறும் தடிகளை வைத்துக் கொண்டு வேட்டைக்காரர்களைத்தடுத்துவிட முடியாது. நல்ல பயிற்சியும் உபகரணங்களும் அவசியம். மக்களும் புலிகள் நம் தேசிய விலங்கு என்று பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவில் அவர்களுடைய தேசிய விலங்கையே காப்பாற்றிக் கொள்ள முடிவில்லை என்பது அவமானம் என்பதை உணரவேண்டும். காடுகள் என்றாலே நமக்குத் தேவையற்ற உயிரினங்கள் நிறைந்திருக்கும் இடம் என்று கருதுவதைத் தவிர்த்து அவையும் புவியின் அங்கம் என்ற விழிப்புணர்வு வேண்டும்.

எங்கேயோ படித்த‍து

முட்டையிட்டு பால் கொடுக்கும் ஆஸ்திரேலிய விசித்திர பிராணி

தண்ணீரில் நீந்திச் செல்லும்; வாத்தைப் போன்று கால்களும், அலகும் கொண்டது;

ஊர்வன வகைகளின் விசித்திர குணங்களும் உண்டு; முட்டை போடும்;

பாலூட்டி இனத்தைப் போல, குட்டிகளுக்கு பால் கொடுக்கும்; ஆனால், மடி காம்பு இருக்காது – இப்படி ஒரு விசித்திர பிராணி,

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதி மற்றும் தாஸ்மேனியாவில் உள்ளது.

`பிளாடிபஸ் என்ற நீர்வாழ் விலங்குதான், இத்தனை விசித்திர குணங்களைக் கொண்டுள்ளது. இந்த விலங்கின் பெண் இனத்துக்கு பால் சுரக்கும்; அடர்த்தியான முடிகள் உடையதோலைக் கொண்டது.

எனவே இந்த அரிய வகை விலங்கை, பாலூட்டி இனத்தில் சேர்த்துள்ளனர். `பிளாடி பஸ் விலங்கு, 17 ஆண்டுகள் வரை உயிர் வாழும். புழுக்கள், பூச்சிகள், இறால், நண்டு ஆகியவற்றை உட்கொள்ளும், தனது உடலின் எடையில் 20 சதவீதம் அளவுக்கு, தினமும் உணவு உட்கொள்ளும்.

ஆண் விலங்கு 50 செ.மீ., நீளம் வரை வளரும்; இரண்டு கிலோ எடை கொண்டிருக்கும். நீளத்திலும் எடையிலும் 20 சதவீதம் குறைந்து பெண் விலங்கு காணப்படும்.

இந்த வகை விலங்கு குறித்து, 18-ம் நூற்றாண்டில் தான், ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்தது. அப்போது முதல், இதன் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நீரிலும், நிலத்திலும் வாழும் எலி உருவம் கொண்ட பிராணிக்கு மென்மையான, மிகவும் விலை உயர்ந்த முடிகள் இருக்கும்.

அதே போன்ற தோற்றத்தில் தான் `பிளாடிபஸ் விலங்கு காணப்படுகிறது. ஆனால், வாத்தைப் போன்று அலகு மற்றும் கால்களைக் கொண்டுள்ளது. பெண் விலங்குக்கு மடி காம்பு கிடையாது.

எனினும், வயிற்றின் அடிப்பகுதியை மூடியிருக்கும் தோலின் மூலம் பால் சுரக்கிறது. பெண் விலங்கு, ஊர்வன வகைகள் போல முட்டைகள் இடும். ஆண் விலங்கு, பின் பக்க காலின் குதிகால் பகுதியில், பாம்பை போன்று விஷத்தை அடக்கி வைத்துள்ளது. எதிரி பிராணிகள் தாக்க வரும் போது, இந்த விஷத்தை வீசி, ஆண் விலங்கு எதிர் தாக்குதல் நடத்தும்.

கண்கள், காதுகள், மூக்கு மூடப்பட்டு இருந்தாலும், இரையாக வரும் பிராணிகளின் உடலில் இருந்து வெளிப்படும் மின் அலைகளை உணரும் சக்தி, இந்த விலங்கின் அலகின்கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அரிய வகை விலங்கின் டி.என்.ஏ.வை லண்டனில் உள்ள ஆகஸ்போர்டு பல்கலைக் கழகம், கேம்பிரிட் ஜில் உள்ள ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அவர்கள் `பறவை, ஊர்வன வகை மற்றும் பாலூட்டி இனம் ஆகியவற்றின் மரபணுக்களின் தொகுப்பை, இந்த விலங்கு கொண்டுள்ளது. மனிதர்களுக்கு, இரண்டு குரோமோசோம்கள் தான் இருக்கும். ஆனால், இந்த விலங்குக்கு, 10 குரோமோசோம்கள் உள்ளன. 17 கோடி ஆண்டுகளுக்கு முன், தனது மூதாதையரிடமிருந்து இந்த விலங்கு தனித்து பிரிந்து இருக்கலாம் என்றனர்.

நன்றி- வஜ்ஜூர்

செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகள்

நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும்.

* நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும் தாய்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம்.

* ஒருவேளை நாய்க்குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுபால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.

* குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம்.

* நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித் தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்புறபடுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அனுமதி பெற்று கழுத்தில் `டை’ கட்டி, வீட்டில் கட்டிபோட்டு வளர்க்க வேண்டும்.

* நாய்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இறைச்சி கொடுத்தால் நாய்கள் கொழுகொழுவென்று வளரும்.

* நாய்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு கால்நடை டாக்டரிடம் காண்பிக்கலாம்.

* நாய்களுக்கும் முடி கொட்டும். பொமேரியன் போன்ற முடி அதிகம் உள்ள நாய்களுக்கு முடி உதிர்வதை நாம் பார்க்க முடியும். இரும்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி இருப்பது போன்ற காரணங்களால் முடி உதிரும். வைட்டமின், தாதுஉப்புக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் முடிஉதிர்வதை தடுக்கலாம்.

* எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களை படுக்கை அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* ஏ.சி. அறைக்குள்ளும் நாய்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம். இதனால் அவற்றுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

* நாய் பிறந்து 4 மாதத்தில் இருந்து 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒரு முறையும், 8 மாதத்தில் இருந்து உயிரோடு இருக்கும் வரைம் நாயின் எடையை பார்த்து அதற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கொண்டால் அவைகளும் விளையாடத் தொடங்கி விடும். அப்போது ஒன்றையொன்று கடித்துக் கொள்வதும் உண்டு. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

* நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடுப்பு ஊசி போட வேண்டும். எல்லாவிதமான தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாதுகாப்பாக நாய்களை வளருங்கள்.

Senthilvayal

ஆரூடம் கூறிய ஆக்டோபஸ் பால் இறந்தது

உலககோப்பை கால்பந்து போட்டியின் போது முக்கிய ஆட்டங்களில் வெற்றி தோல்வி யாருக்கு என துல்லியமான கணிப்புகளை தெரிவித்த ஆக்டோபஸ் பால் இறந்தது. ஜெர்மனியின் ஒபர்ஹசன் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பால் இறந்தது குறித்து தெரிந்து பலர் அதன் உடலை பார்க்க வந்தனர்.

%d bloggers like this: