Advertisements

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இதை படித்துவிட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இதை படித்து விட்டு பீதி அடையுங்க இல்ல‍ பீதி அடையாம போங்க! எனக்கென்ன‍?

இப்ப‍டி ஒரு தலைப்பில் எனக்குவாட்ஸ் அப்பில் வந்த தகவல்தான் இது. இதனை Continue reading

Advertisements

எரிமலை குமுறி வெடிக்கும்போது . . .

சுனாமி, பூகம்பம் ஆகியவற்றின் வரிசையில் உலகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற, சந்திக்கப் போகும் ஆபத்து நிறைந்த இயற்கைச்சீற்றம் என்று சொன்னால் அது எரிமலை வெடிப்பாகத் தான் இருக்க முடியும்.
பெரிய பெரிய நிலப்பகுதிகள் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வரை ஏராளமானவற்றை அ Continue reading

நம்ம‍ மெரினாவில் நிலம் புயல் – வீடியோ

நீலம் புயல் கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது.

நீலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்து வந்துள்ள‍து.  புயல் கடந்தபோது Continue reading

வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் பரவலான மழை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத் த மண்டலமாக புயல் சின்னம் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களி ல் பலத்த மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்த கம், செய்யூர், செங்கல் பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று அதி காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரத்தில் காலையி ல் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. திருவள் ளுர் மாவட்டத்தில் அனைத்து Continue reading

உலகில் நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் இயற்கை பேரழிவுகளை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டும் தளம்

உலகின் பல்வேறு நாடுகள் இயற்கையின் சீற்ற‍த்தால் பல உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டு, பெரும் அழிவை சந்தித்திருக்கின்றன • புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற‌ அத் த‍னை இயற்கை பேரழிவுகளையும் தேதி, நேரம், பேரழிவு ஏற்பட்ட‍ நாடு, பலி விவ ரம், சேதமான விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களை யும் நமக்கு அளிக்கும் ஓர் உன்ன‍த தளமே ! மேலும் தற்போதைய வானிலை அறி  Continue reading

உயர்ந்து வரும் பசிபிக் கடல் நீர் மட்டம் – அபாயத்தின் எச்ச‍ரிக்கை – அதிர்ச்சிகரத் தகவல் – வீடியோ

 

பசிபிக் பெருங்கடலின் தென் மே ற்குப் பகுதியில் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அஸ்தி ரேலியாவின் தெற்குப் பகுதி யும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என குவின்ஸ்லாந்து பல் கலை கழகம் கேட்டுக் கொண்டு ள்ளது. 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியி ல் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது Continue reading

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் . . . .!

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது . ஆஸ்திரேலியா நாட்டவர்கள் தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேர ழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களு க்கு Continue reading

விண்ணில் இருந்து தரைக்கு வந்த மேகம் – அதிசய அரிய‌ வீடியோ

 

விண்ணில் இருந்து தரைக்கு வந்த Continue reading

சுனாமி போன்று தோன்றிய மேகக் கூட்டங்கள் – வீடியோ

மேகம் என்பது அதிகமான அழ கைக் கொண்டு நம் கண்களுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. அவ்வகையா ன மேகங்கள் மிகவும் வித்தி யாசமான தோற்றத்தில் காணப் பட்டால் மிக வும் ஆச்சரியமாக காணப்படும். சமீபத்தில் பிரிட் டானியா Birmingham என்ற இட த்தில் காணப்பட்ட மேகக் கூட்டங்கள் சற்று வித்தியாசமாக சுனாமி போன்று தோன்றியுள்ளது. அந்த Continue reading

எதிர்பாராத வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்புகளால் ஏற்படும் ரசாயன வெளியேற்றம் பருவ நிலையில் இதுவரை எதிர் பார்த்திராத புதிய மாற்றங் களை விளைவிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவி த்துள்ளது.

மார்ச் 20, 2010-இல் ஐஸ்லா ந்தில் வெடித்த மிகப்பெரிய எரிமலையின் தாக்கம் குறி த்து Continue reading

சென்னையில் இரவில் பலத்த மழை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது.

இதுதொடர்பாக வானி லை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள தகவலில்,

தென் தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஆந்திரா மாநிலத்தை யொட் டிய வங்கக் கடலில் குறைந் த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகு திகள் சிலவற்றிலும், வடக்கு கடலோர பகுதிகளில் ஒன்றிரண்டு இடங்களிலும் இடியோ, இடியுடன் கூடிய Continue reading

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் – வீடியோ

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந் தன.

பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணர முடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அத ற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச் சலைப் பதிவு செய்துள்ளனர்.

வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல் கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள Continue reading

வரும் பிப்ரவரி 16 பலத்த நிலநடுக்கம் ஏற்படும் – மழைராஜ்

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட் டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழை ராஜ் கூறியு ள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பி யுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :

கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் தமிழகத்தில் வறண்ட வானி  லை யே நிலவுகிறது. இந்நிலையில், Continue reading

24 மணி நேரத்தில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

 

வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையின் வான்வழி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாராக மழை பெய்துள்ளது. பொன்னேரியில் அதிக அளவாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. காஞ்சீ புரம்,  மதுராந்தகம்,  கடலூரில் 3 செ.மீ., திண்டுக்கல், கடலாடியில் 2 செ.மீ., சிவகங்கை, பவானி, கரூரில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை படிப்படியாக குறையும்.
சென்னையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிறகு மழை குறைய வாய்ப்புள்ளது.

(மாலை இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி)

 

மழையால் தத்தளிக்கும் சென்னை

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென் மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்து வங்கியிருக்கிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த காரணத்தினால் முக்கிய வீதிகள் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. வட சென்னையில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. அலையின் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.

Merina

கடல் அரிப்பை தடுக்க வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. குடிசைப்பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. கøயோர மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு சென்றனர். மணலி தரைப்பாலம் மூழ்கியது.வியாசர்பாடி, கணேசபுரம் பாலத்தில் துண்டிப்பு ஏற்பட்டது. வியாசர்பாடி சுரங்கப்பாலத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் ரயில்போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. அடையாறில் உள்ள இசைக்கல்லூரியின் ஒரு பகுதி அறை இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

Puzhal

புழல் ஏரி திறப்பு: சென்னையில் பெரிய ஏரியான புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து திறந்து விடப்பட்டது. 2 ஷெட்டர் திறக்கப்பட்டதாõல் 700 கன அடி நீர் வெளியேறும். கொற்றாலை ஆறு வழியாக செல்லும் வெள்ள நீர் வடகரை, கிராண்ட்லைன், வட பெரும் பள்ளம், மணலி, ஆமுல்லைவாய், காடன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதி மக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் மழை காரணமாக கடந்த 2008 ல் புழல் ஏரி திறக்கப்பட்டது.

(நாளேடு ஒன்றில்வெளியான செய்தி) / (படத்தொகுப்பு விதை2விருட்சம்)

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை : தமிழக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டும்

வங்கக் கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அதிக பட்சமாக பரங்கிப் பேட்டையில் 22 செ.மீ., மழை கொட்டியது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மூலம், பல கட்டங்களாக மழை கிடைத்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது.

Thunder

இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை – ஆந்திராவை ஒட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக, பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ., சோழவரத்தில் 13 செ.மீ., மழை கொட்டியது. சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் ஒட்டியுள்ள இலங்கை – தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரத்தில் நேற்று நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்யும். நகரின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். வடகிழக்கிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்றார்.

(செய்தி – தினமலர், படத்தொகுப்பு விதை2விருட்சம்)

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

தற்போது பெய்துவரும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் வட கிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து,  முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.  பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன.  இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து;  நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 548 குடிசைகள் முழுமையாகவும்,  1438 குடிசைகள் பகுதியாகவும், ஆக மொத்தம் 1,986 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டுள்ள குடிசைகளைப் பொறுத்த வரை, மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.  மழையின் காரணமாக உயிரிழந்த 179 கால்நடைகளுக்கும் உரிய நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கி வருகிறார்கள்.  40 ஆண்கள், 27 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 88 பேர் மழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-மும், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ ஒரு லட்சமும் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2,00,000/- நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks dinamani

கொடை மனம் இல்லாதோரே!, குடையையாவது கொண்டு செல்லுங்கள்!! புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை!!!

கொடையுள்ள‍ம் கொண்டவர்களால் இப்பூமி மீண்டும் குளிர போகிறது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.இரமணன் அவர்களின் அறிக்கை

 

புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்’.

 

அன்பு வேண்டுகோள்:

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மழை நேரத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை யாரும் மிதிக்க‍ வேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு முக்கிய‌ அறிவிப்பு: புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க‍ . . .

இன்று காலை நிலவரப்படி, வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் 800 கிலோமீட்டர் தொலைவில் “ஜல்” எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் மையம் கொண்டிருப்பதாகவும்; அப்புயல் தமிழகத்திற்கும், ஆந்திராவில் உள்ள ஓங்கோலுக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

அதன் காரணமாக, தமிழகத்தில் அதிவேகமான காற்றுடன் கூடிய பெருமழை பெய்யக்கூடும் என்றும்; மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்றும் அறிவித்துள்ளது. புயலை யொட்டி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அவரவர் படகுகளை பாதுகாப்பா கரையில் நிறுத்தி வைத்துள்ள‍தாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

வட தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை: வங்க கடலில் புயல் சின்னம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
தென்மேற்கு வங்க கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்- புதுச் சேரியில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடாவில் இருந்த மத்திய மேற்கு வங்க கடலை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அளவு குறைந்தது. சில பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-
வங்க கடலில் அந்தமான் தெற்கு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தற்போது தமிழ்நாட்டில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மெதுவாக வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
வரும் 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும். இதன் காரணமாக தமிழகம்- புதுவையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.
இந்த சூப்பர் புயல் சென்னை-மசூலிபட்டினம் இடையே 2 நாளில் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கிறோம். புயல் காரணமாக சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.இவ்வாறு வானிலை மைய அதிகாரி கூறினார்.
%d bloggers like this: