Advertisements

அந்த 100 நிமிடங்கள்! உங்களது ஆளுமைத் திறனை வளர்ப்ப‍து நிச்ச‍யம் – வாழ்வியல் குறிப்புகள்

அந்த 100 நிமிடங்கள்! உங்களது ஆளுமைத் திறனை வளர்ப்ப‍து நிச்ச‍யம் – வாழ்வியல் குறிப்புகள்

வாழ்க்கையில் நிச்சயம் கடை பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதா ரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் Continue reading

Advertisements

“அப்துல் கலாம்” எழுதிய “அக்னி சிறகுகள்” (தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்க‍. . .)

நமது தாயகத்தின் பெருமையை உலகறியச்செய்து நம்மை தலை நிமிர வைத்த‍ மாமேதை இவர். இந்திய நாட்டின் பாது காப்பிற்கு ப‌லப்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். நம் பாரத தாயின் ரத்னம் இவர். அவர் வேறு யாரும ல்ல‍ நமது முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தான்! அவர் எழுதி ய அக்னி சிறகுகள் என்ற நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும்

Continue reading

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமா?

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமா?

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழ வேண்டுமா னால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்து விடுவோமே என்றுதானே நினைக்கிறீ ர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இப் பு த்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப் பார்க்க வைப் Continue reading

இணையதளத்தில் புத்தகத்தின் விமர்சன. . .

நாம் ஒரு புத்தக விற்பனை கடைக்கு சென்று, புத்தகம்  வாங்கும்முன் அதன் ஆசிரியர் யார்?, தொடக்கவுரை, மற்றும் நூல்களின் தரம் ஆகிய வற்றை படித்து, பயனுள்ளதா என்று பார்த்து பார்த்து வாங்குகிறோம்.

இனி நாம் ஒவ்வொரு கடையாக சென்று, தேடிப்பார்க்க வேண்டிய தில்லை.  என்ன? ஆச்சரியமாக உள்ளதா?

ஆம்! உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவரும் நாவல்களை, கட்டுரைகள், நூல்கள், தகவல் தொகுப்பு நூல்கள் போன்றவற்றை அறிமுகம் செய்து, அதன் நிறைகுறைகளை தீர Continue reading

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க ! – ஒரு பார்வை


நீயா நானா புகழ் திரு. கோபிநாத்
தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்  பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்.  ஒரு நல்ல நண்பனிடம் யதார்த்தமாய் உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனசுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது.
நம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கை எல்லாவற்றிற்கும் பின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும்   தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு.
இது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே.
நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம்.
“சந்தோஷம் எதில் இருக்கிறது?
ரொம்ப சுலபம்.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது”
“உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும் “
இது போன்ற பாசிடிவ் எனர்ஜி  எல்லா பக்கங்களிலும் பரவி கிடப்பதால் இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு பாட்டில் குளுகோஸ் குடிப்பது போல.. படித்து பாருங்கள்.. உங்களுக்குள்ளும் ஒரு உற்சாகம் தொற்றிகொள்வதை உணர்வீர்கள்.
ஆசிரியர் பற்றி..
நீயா நானா புகழ் திரு. கோபிநாத்
விஜய் டிவியில், கோபிநாத், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் எல்லோருடைய கவனம் ஈர்த்தவர். கணீர் பேச்சும், தோழமையான அணுகுமுறையும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் வட்டத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றன.
2004 ம் ஆண்டு – இந்தியாவின் மிக சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டவர்.
2007  ம் ஆண்டில்  சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 2008 ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பத்து நபர்களுள் ஒருவராகவும் ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2008 – சிறந்த இளம் இந்தியர் – ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்
பதிப்பகம் பற்றி.
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சென்னை.
விலை : RS 60 /-
-By  Mano
%d bloggers like this: