Advertisements

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா

விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் Continue reading

Advertisements

மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா ? இல்லையா?

மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா ? இல்லையா?

அண்ணன், தம்பிகளான விடிவி கணேஷும், சிம்புவும் ஒருநாள் இரவில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது, ஆபத்தில் இருக்கும் மீரா ஜாஸ்மினை காப்பாற்றுகிறார்கள். இதனால் ஏற்பட்ட Continue reading

“நவீன சரஸ்வதி சபதம்” – திரை விமர்சனம் – வீடியோ

ஜெய் நடித்த‍ நவீன சரஸ்வதி சபதம் என்கிற முழு நீள நகைச் சுவைத் திரைப்பட

Continue reading

“சில்லுன்னு ஒரு சந்திப்பு” திரைவிமர்சனம் – வீடியோ

சில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்படத்தில் விமல், ஓவியா மற்றும் தீபா ஷா ஆகியோர் நடித்துள்ள‍னர் அத்திரைப்படத்தின் Continue reading

விஸ்வரூபம் படத்தின் முதல் விமர்சனம்! (முகநூலில்)

படம் பார்த்துவிட்டேன் நான். நான் எழுதுவது எல்லோருக்கும் உடன் பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை த் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என் னை திட்டுங்கள் .

துப்பாக்கி படத்தைப் பார்த்து விட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான். ஆனா ல் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு எந்த இடத்தி லும் அது போன்ற உணர்வு வரவில்லை. அதிக படியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போ ன்ற ஆப்கான் தீவிர வாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த் தாச்சு. இன்னும் வந்துகொண் டே இருக்கு ஒவ்வொருவர் பார்வை யில்.

கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது. நடனம் சொல்லி கொடுப் பவராக இருக்கிறார் கமல். அவருடைய மனைவியை Continue reading

“அழகன்” பட பாடலின் காப்பிதான் நீர்பறவை திரைப்படமா? – வீடியோ

இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் சுடப்பட்டு பலி யாவதை அன்றே கே. பாலசந்தர், தனது அழகன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் அற்புதமாக சித்தரித்தி ருப்பார்.

அழகன் படத்தில் வரும் அந்த பாடலைத்தான் காப்பியடித்து திரைக் கதையாக பின்ன‍ப் பட்ட‍து தான் நீர் பறவை திரைப்படம் விதை 2விருட்சம் இணையம் மூலமாக பகிர்கிறேன். 

முதலில் நீர்ப்ப‍றவையின் கதைச்சுருக்க‍த் தை பார் ப்போம். 

பெரியகுடிகாரனாக இருக்கும் ஒரு இளைஞன் (விஷ்ணு), சுனைனா மீது கொண்ட Continue reading

நான் தமிழ்த்திரைப்படம் – திரை விமர்சனம் – வீடியோ

 

இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியான நான் திரைப்படத்தை ஜீவா சங்கர் இயக்கத்திலும் முரளி ராமன், ஃபாத்திமா  ஆன்டனி ஆகி யோர் தயாரிப்பிலும் தயாராகி ரசிகர்களின்  பார்வைக்கு வந்துள்ள‍ து. இத்திரைப்படத்தில்   Continue reading

திரை விமர்சனம்: காதலில் சொதப்புவது எப்படி? -வீடியோ

காதலில் சொதப்புவது எப்படி? – இளமை துள்ளும் குதூகலமான படம். ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற தனது குறும் படத்தை அப்படியே விரிவாக்கி திரைப் படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார்.

 அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறு ப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மை யால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலு Continue reading

தெய்வ திருமகள்(ன்) – திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வரு டும் இசை, எந்த இடத்திலும் இய ல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கை யோடு கட்டிப் போடும் திரைக் கதை, மனதின் நெகிழ்ச்சியை கண் களில் வழிய வைக்கும் உயிர்ப் பான இயக்கம்…

-நாம் பார்ப்பது தமிழ் சினிமா தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் Continue reading

திரை விமர்சனம்: “பாலா”வின் அவன் இவன்

இயக்குநர் பாலா தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் முடிக்க கிட்டதட்ட மூன் று ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அப்படி ஆண் டு கணக்கில் பாலா எடு த்த படம் அவரையும், அந்த படத்தையும் பற்றி பல ஆண்டுகள் புகழ்ந்து பேசும் அளவுக்கு இருக் கும். அப்படி பட்ட பாலா ஒரே வருடத்திற்குள் எடு த்து முடித்து வெளியான படம்தான் ‘அவன் இவன்’. பாலா இவ்வளவு சீக்கிரமா பட த்தை முடித்துவிட்டாரே! ஆச்சரியப்படும் அத்தனை ரசிகர் களும் இந்த படமும், இது பாலா படமா! என்ற Continue reading

பொன்னர்-சங்கர் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான். ஆனால், அந்த ஷங்கரே இது வரை சரித்தி ரத்தின் பக்கம் ஒதுங்க வில்லை யென்றா லும், சர்வ சாதாரண மாக ஒரு சரித் திரக்கதையை படமா க்கியி ருக்கும் தியா கராஜன் ஷங்க ரையே மிஞ்சும் அளவு க்கு தனது இயக்குநர் முகத் தை அழுத்தமாக பதிய வைத் திருக்கும் படம். ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கை வண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே Continue reading

திரை விமர்சனம்: தூங்கா நகரம்

நட்பின் வலிமை சொல்லும் நான்கு நண்பர்கள் கதை…
மதுரையில் வெவ்வேறு பகுதியில் வேலை பார்க்கும் விமல், பரணி, நிசாந்த், கவுரவ் நால்வரும் மதுக் கடையில் பழக்கமா கின்றனர். தினம் குடி, கொண்டாட்டம் என திரிகிறார்கள். ஜவுளிக் கடையில் உடை மாற்றும் பெண்களை உள்ளூர் தாதா மகனும், அவன் நண்பனும் செல்போனில் படம் பிடித்து அவற்றை அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டி பலாத்காரம் செய்கி ன்றனர்.
திருமணமாகப் போகும் கோவில் அர்ச் சகர் மகள் மொபை லுக்கும அவளது ஆபாச படம் வருகிறது. அர்ச்சகர் பதறுகிறார். அவர் நிலைமை கண்டு விமல் கலங்குகிறார். தாதா மகனை அடித்து நொறுக் குகிறார். அவன் கண் பார்வை போகிறது.
விமலை தீர்த்து கட்ட தாதா கோஷ்டி தேடி அலைகிறது. அவர் ஊருக்கு ஓடுகிறார். நண்பர்கள் மூவரையும் பிடித்து Continue reading

நெல்லு: திரைவிமர்சனம்

தஞ்சாவூரில் உள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்ட தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படு கொலை செய்த உண்மை சம்பவம் தான் படத்தின் மையக்கரு.
.
கிராமத்து பண்ணையார், தனது வயலில் வேலை செய்யும் தொழிலாள ர்கள் அத்தனைபேரையும் அடிமையைவிட கேவலமாக பிழிந் தெடுக்கிறார். அந்த  ஊர்த் தலைவரும் இப்படத்தின் நாயகன் சத்யாவும் சேர்ந்து அந்த பண்ணை யாரை எதிர்க்கிறார்கள். கிராமத் தில் பிழைப்புக்காக‌ வரும் பாக்யா ஞ்சிலி என்ற பெண்ணுக்கும் படத்தின் கதாநாயகனான சத்யாவுக்கும் இடையே காதல் துளிர்விடுகிறது.  தொழி லாளர்கள் கூலி உயர்வுக்காக செய்யும் போராட்டத்தை கண்டு அரசு அதை Continue reading

ஆட்ட நாயகன் திரை விமர்சனம்

கிராமத்து பெரிய மனிதர் நாசரின் மூத்த மகன் ஆதித்யா. ஐதராபாத்தில் ஐ.டி. கம்பெனி நடத்துகிறார். இளைய மகன் ஷக்தி. உள்ளூரிலேயே வேலை இல்லாமல் வெட்டியாக சுற்றி பெற்றோருக்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கிறார்.

ஷக்திக்கும் ரம்யா நம்பீசனுக்கும் காதல் மலர்கிறது. திருமண Continue reading

சித்து பிளஸ் 2 : திரை விமர்சனம்

பிளஸ்-2 தேர்வில் தோல்வியுற்று,  வீட்டை விட்டே வெளியேறும் ஒரு மாணவன் மாணவியின் கதையம்சத்துடன் கே. பாக்யராஜ் இயக்கி யிருக்கும் படம்தான் இந்த சித்து பிளஸ் 2. இந்த படத்தில் கே. பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்து . காதல், நையாண்டி, நகைச்சுவையில் தனது தந்தையையே மிஞ்சும் அளவிற்கு Continue reading

‘வ’ திரை விமர்சனம்

துபாய் வேலைக்கு செல்ல கோவையில் இருந்து சென்னை வருகிறார் சிவா. மறுநாள் காலையில்தான் விமானம். அன்று இரவு தனது அக்காளின் வருங்கால கணவர் எஸ்.பி. சரண் வீட்டில் தங்குகிறார். அப்போது மது குடிக்க ஆசை வருகிறது. கடைக்கு போகிறார்கள். பூட்டி கிடக்கிறது. நட்சத்திர ஓட்டல், சீட்டாட்ட கிளப் என அலைகின்றனர். எங்கும் மது கிடைக்கவில்லை. இந்த அலைச்சலில் ஒருநாள் ராத்திரி அவர்கள் சந்திக்கும் சம்பவங்களின் தொகுப்பே கதை.

 

வா திரைப்படம்: நகைச்சுவைக்கு பஞ்சமில்லை ஆனால் கதைக்குத்தான் பஞ்சம்

திரை விமர்சனம்: தொட்டுப்பார்

முன்பின் தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா என்ன வெல்லாம் விபரீதம் நேரிடும் என்பதை சொல்லும் கதை.

மதுபானக் கடையில் பணிபுரியும் நாயகன் வித்யார்த், ஒரு கைகலப்பில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்குள்ள காவல்துறை அதிகாரியான கொச்சின் ஹனீபா அவருக்கு வேறொரு தொழிலை கற்றுக் கொடுக்கிறார். போலி ரேஷன் கார்டு மூலம் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதுதான் அந்த தொழில். வசூல் பணத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இப்படி போகிற பொழப்புல விழுகிறது மண். போலீஸ் சந்தேகத்தின் பேரில் பிடிக்கும் ஒருவனையும், தனக்குத் தெரிந்தவன் என சொல்லி காசு வாங்கி வெளியே விட வைக்கிறார் வித்யார்த். அவனோ மந்திரியை தீர்த்து கட்டி விட்டு தப்புகிறான். கொலையாளியுடன் வித்யார்த்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீஸ் தேடுகிறது. ஹனீபா அவரை ரகசியமாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னை வரும் வித்யார்த் மதுக்கடையில் வேலைக்கு சேருகிறார். மதுக்கடை பாரில் போதையில் விழுந்து கிடக்கும் அழகம் பெருமாளை வீட்டில் கொண்டு சேர்த்து அவர் குடும்பத்தாருடனும் நெருக்கமாகிறார். அப்போது வித்யார்த்தை கொல்ல ரவுடி கும்பல் முயற்சிக்கிறது. இதில் ஹனீபா கொல்லப்படுகிறார். போலீசும் வித்யார்த்தை துரத்துகிறது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வித்யார்த் எப்படி தப்புகிறார் என்பது மீதிக்கதை.

படத்தின் டைட்டில் டிசைனில் பீர் பாட்டில்கள் டிசைன் வரும்போதே தெரிந்து விடுகிறது கதைக்களம் டாஸ்மாக்தான் என்று. கதாநாயகன் பாரில் வேலை செய்பவராகக்காட்டியதில் இயக்குநருக்கு எவ்வளவு சவுகரியம். குத்தாட்டம், மப்புக்காட்சிகள் என படம் ஒரே போதை மயம்தான்.

தொட்டுப்பார் – ஒரப்பில்லாத ஊறுகா!

திரை விமர்சனம்: காதல் சொல்ல வந்தேன்

கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் பாலாஜி அவர் இல்லாமல் வாழ முடியாது என்கிறார். மேக்னாவே காதலை ஏற்க மறுக்கிறார்.

அவரை வசியப்படுத்த தற்கொலை நாடகம் ஆடுகிறார் பாலாஜி. காதல் நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்…

காதல் கதையை கலகலப்பு விறுப்பு என காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன். புதுமுகம் பாலாஜி, கேரக்டரில் பொருந்துகிறார். மேக்னா சுந்தரை பார்த்த மாத்திரத்திலேயே ஓடோடி போய் பள்ளியில் தனது காதலை ஒதுக்கிய பெண்ணுக்கு போன் போட்டு நீ சம்மதிச்சிருந்தா இப்படி அழகான பெண் கிடைச்சிருக்காது. ஒத்துக் காததுக்கு நன்றி என்று சொல்லும் ஆரம்பமே அமர்க்களம்…

மேக்னாவுடன் நட்பாக பழகி மனதில் இடம் பிடிப்பது அழகு… மேக்னாவை காதலிக்கும் சீக்கிய மாணவனுக்கு உதவுவது போல் நடித்து காதலியை வளைக்கும் சீன்கள் உச்சக்கட்ட காமெடி.

ஊருக்கு புறப்படும் மேக்னாவிடம் காதலை வெளிப்படுத்த முயற்சிக்கையில் தன்னை அக்கா என்று அழைக்ககுமாறு அவர் சொல்வது திருப்பம்….

காதல் தோல்வியில் சோகமாவதில் மனதில் இறங்குகிறார். கிளைமாக்ஸ் இதயங்களை உலுக்குகிறது.

மேக்னா சுந்தர் அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். பாலாஜியின் காதலை ஏற்க முடியாமலும் வெறுக்க முடியாமலும் தவிக்கையில் தேர்ந்த நடிப்பை பிழிகிறார்.

பாலாஜி நண்பனாக கனத்த உடலில் வரும் சபேஷ் கார்த்திக் சிரிக்க வைக்கிறார். அவ்வப்போது முறைத்து பார்க்கும் சீனியர் மாணவரிடம் நடுங்குவதும் ஒரு கட்டத்தில் அந்த மாணவன் பெண் குரலில் பேச பயம் போய் எதிர்ப்பதும் வயிறு வலிக்கும் காமெடி.

யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் மனதை வருடுகிறது. ராணாவின் ஒளிப்பதிவு கல்லூரி வாழ்வியலை கண்ணுக்குள் பதிக்கிறது.

பொருந்தாத காதலை கையில் எடுத்த இயக்குனர் அதில் ஜீவன் வைக்க முயன்று வென்றுள்ளார். கதை கல்லூரிக்குள்ளேயே சுற்றுவதை தவிர்த்து இருக்கலாம். thanks tamil wire

பஞ்சமுகி – விமர்சனம்

பஞ்சமுகி கோவிலில் பிறந்து வளரும் அனுஷ்காவுக்கு அம்மன் அருள் கிடைக்கிறது. நடப்பவைகளை முன் கூட்டி சொல்கிறார். அவரை பஞ்சமுகி தெய்வமாகவே கிராமத்தினர் வழிபடுகின்றனர்.

அவ் ஊருக்கு வரும் இளைஞன் பஞ்சமுகி அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

பஞ்சமுகி சிலைக்கு அடியில் புதையல் இருப்பதாக ஊர் தாதாவுக்கு தகவல் கிடைக்கிறது. அதனை எடுக்க அனுஷ்கா தடையாக இருப்பதால் உயிரோடு எரித்து கொல்கிறான். இதை நேரில் பார்க்கும் அனுஷ்கா குழந்தை மனநிலை பாதிக்கிறது. அதை குணப்படுத்த அனுஷ்கா கணவன் பட்டணம் வருகிறான்.

அங்கு அனுஷ்கா மாதிரியே இன்னொரு பெண்ணை பார்த்து அதிர்கிறான். பட்டணத்து அனுஷ்காவிடம் நடந்த விஷயங்களை சொல்லி கிராமத்துக்கு அழைத்து வருகிறான். வந்த இடத்தில் அனுஷ்கா உடலில் இறந்து போன பஞ்சமுகி பக்தையான அனுஷ்கா ஆவி புகுந்து கொள்கிறது. தன்னை கொன்றவர்களையும் கோவிலுக்குள் புதையல் எடுப்பவர்களையும் அந்த ஆவி பழி வாங்குவது கிளைமாக்ஸ்…
அனுஷ்கா சாமி பக்தை, நாகரீக மங்கை என இரு வேடத்தில் வருகிறார். பக்தையாக கோவிலில் குறி சொல்லி சாமியாடுகிறார். தந்தையை அழைத்து தான் சாகப்போகும் தகவலை சொல்லி தீக்குள் எரிவது எதிர்பாராத அதிர்ச்சி.

மாடர்னாக வரும் அனுஷ்கா திருமணத்தை நிறுத்த ஸ்டூடியோவில் திருடிய போட்டோவை காதலன் என பெற்றோரிடம் காட்டி அவன் ரவுடியாக வந்து நிற்பதை பார்த்து அதிர்வது பரபர…. உடலுக்குள் ஆவி புகுந்த பின் எதிரிகளை சம்காரம் செய்வது விறுவிறு. ஆவி உடலுக்குள் புகுந்த பின்னும் தாதாவை கொல்லாமல் நாள் குறித்து போவது ஒட்டவில்லை. நாசர், குடும்பத் தினரிடம் உண்மைகளை கறக்கும் யுக்தி ஜோர்.

எந்திரன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என எல்லா பிரம்மாண்டங்களும் இணைந்துள்ளதால் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் எந்திரன்.

எந்திரன் படத்தின் கதையை அப்படத்தின் ஹிந்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரஜினி 10 வருடங்கள் கடுமையாக உழைத்து, ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். அதற்கு 'சிட்டி' என்று பெயரிடுகிறார். 'சிட்டி'யை வைத்து நாட்டில் பல நல்ல காரியங்களை செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

'சிட்டி' ஒரு சுவாரஸ்யன். மனிதனைப் போலவே வடிவமைக்கப்பட்ட எந்திரன். 'சிட்டி'க்கு தண்ணீராலோ தீயினாலோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 'சிட்டி' டான்ஸ் ஆடுகிறது, பாட்டு பாடுகிறது, சண்டை போடுகிறது.. எல்லாம் செய்கிறது. மனிதர்களால் செய்யக் கூடியது மட்டுமல்ல, செய்ய முடியாததையும் 'சிட்டி'யால் செய்ய முடியும். 'சிட்டி' இயங்குவதற்கு தேவை மின்சாரம் மட்டுமே.

ரஜினி என்ன சொன்னாலும் ஏன் எதற்கு என கேட்காமல் அதை அப்படியே செய்து முடிப்பான் 'சிட்டி'. அது விளையாட்டாக சொல்லப்பட்டதா இல்லை நிஜமாகவே செய்வதற்காக சொல்லப்பட்டதா என்பது பற்றி ஆராயும் திறன் 'சிட்டி'க்கு கிடையாது. சொன்னதை செய்து முடிப்பான். எல்லாம் வல்ல 'சிட்டி'யால் செய்ய முடியாத ஒன்று – பொய் சொல்வது.

ஒரு டெலிபோன் டைரக்டரியை ஒரு முறை புரட்டிப் பார்த்தால் போதும், அதிலுள்ள எல்லா தகவல்களையும் அப்படியே ஞாபகத்தில் ஏற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்த 'சிட்டி'க்கு மனித உணர்வுகளை மட்டும் புரிந்து கொள்ள முடியாது.

ரஜினி பின் விளைவுகளை அறியாமல், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும்படி 'சிட்டி'யை மெருகேற்ற, 'சிட்டி'க்கு வரும் முதல் உணர்வு.. காதல்..! இரும்பிலே ஒரு இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது.

'சிட்டி'யின் காதலால் ரஜினிக்கு என்ன பாதிப்புகள் வருகின்றன? ரஜினி எதற்காக 'சிட்டி'யை உருவாக்கினாரோ, அந்த திட்டம் நிறைவேறியதா? தன் படைப்பான 'சிட்டி'யை ரஜினியே அழித்துவிடுவாரா..? ரஜினியா.. 'சிட்டி'யா..? செப்டம்பர் மாதம் தான் தெரியும்.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

OMR Enterprises பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’. சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்தக்கண்ணன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். “அவள் பெயர் தமிழரசி’ படத்தில் நடித்த நந்தகி கதாநாயகியாக நடிக்கிறார்.
ருசேந்திரகுமார், சுஜிபாலா, மலேசியா வாசுதேவன், தாமு, கலைராணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். “காலமெல்லாம் காதல் வாழ்க’, “உன்னுடன்’, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். பாலு, நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார். படத்தை பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, “”வழக்கம் போல் என் படங்களில் இருக்கும் காதல்தான் களம். நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குவதால் அதிக சிரத்தை எடுத்திருக்கிறேன். திருமணம் நின்று போன நிலையில் காதல் வயப்படும் ஜோடிகளை பற்றி சொல்லியிருக்கிறேன். காஞ்சிபுரத்தில் வாழும் நெசவாளர்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளுடன் கூடிய, காதல் கதையாக இது உருவாகியிருக்கிறது. தீனா இசையமைக்கிறார். “காலமெல்லாம் காதல் வாழ்க’, “உன்னுடன்’ படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதைப் போல் இதிலும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. சென்னை, காஞ்சிபுரம், கேரளம், ஆந்திரம், கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது”

கவசம்

ஸ்ரீ நந்திஸ்வரர் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கவசம்’. கதாநாயகனாக சாய் என்பவர் அறிமுகமாகிறார். லட்சனா, பிருந்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பி.வாசுவின் மாணவர் மணிமாறன் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் கதைக் களம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, “”இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் முரளி நடிக்கிறார். “பாணா காத்தாடி’ படத்துக்கு முன் முரளி நடித்த படம் இது. இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திராத முரளி இப்படத்துக்காக அதிக சிரத்தை எடுத்து நடித்தார். அவரது கேரக்டர் நன்றாக வந்திருக்கிறது. முக்கிய வேடத்தில் சரவணன் நடித்திருக்கிறார். காதல், செண்டிமென்ட், ஆக்ஷன் ஆகிய கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகியிருக்கிறது. அண்ணன் தன் தம்பி மீது வைக்கும் அளவு கடந்த பாசத்தில் ஏற்படும் விளைவுகள்தான் கதைக் கரு. முரளியின் கேரக்டர் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். இந்தப் படம் வெற்றி பெற்றால் அதற்கு முரளியின் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும். அதிரபள்ளி, ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இசை – மரியா மனோகர். பாடல்கள் – விவேகா, சம்பத்குமார், ஒளிப்பதிவு – முகமது நசீர்.

இரண்டு முகம்

காலம் தப்பி வந்திருக்கிற அரசியல் படம் இந்த இரண்டு முகம். ஊமை விழிகள், உழவன் மகன் காலத்தில் தயார் செய்த கதை போலிருக்கிறது. அதையும் கட்டுக்கோப்பாகச் சொல்ல முடியாமல் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறோம். வழக்கமான அரசியல்வாதி கதையில் மரபணு மாற்ற பயிர், நவீன பூச்சிக் கொல்லிகளின் தாக்கம், இயற்கை விவசாயம் என இன்றைய பிரச்சனையைக் கையாண்டு பார்த்திருக்கிறார். ஆனால், அதை மனதில் தைக்கும்படி சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குனர் அரவிந்தராஜ். தனது வாழ்க்கையின் ஒரே லட்சியம் எப்படியாவது அமைச்சராகிவிடுவதுதான் என்ற ‘லட்சியத்தோடு’ திரிகிறார் சமையல்காரர் சண்முகராஜனின் மகன் கரண். அதற்கேற்ப அவ்வப்போது அவருக்கு சந்தர்ப்பங்கள் வர, இளைஞர் அணி தலைவராகி, அடுத்த காட்சியிலேயே எம்எல்ஏவாகி, அதற்கும் அடுத்த காட்சியிலேயே மந்திரியாகி உடனே ஊழலும் செய்ய ஆரம்பித்து விடுகிறார்!. இதைப் பார்த்து மனம் பொறுக்காத சத்யராஜ், அவரை நேர்மையான வழிக்குக் கொண்டுவர ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார். கரண் திருந்தும் நேரத்தில், அதை எதிர்த்து மோசமான அரசியல்வாதிகள் அரசையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து கரணும் சத்யராஜும் எப்படி அரசைக் காக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ். இடையில் கரணுக்கு ஒரு காதல், அந்தக் காதல் நிறைவேறுவதில் திடீர் சிக்கல், நவீன பூச்சி மருந்தால் நண்பன் சாதல்… என கிளைக் கதைகள் வேறு. கிட்டத்தட்ட கெளரவ வேடம் மாதிரிதான் சத்யராஜுக்கு. பெரிதாக வேலையும் இல்லை. இடைவேளைக்கு முன், அவர் கையில் கல்லெடுக்கும் போதே, படத்தின் மிச்சக் காட்சிகளை ரொம்ப எளிதாக யூகிக்க முடிகிறது. சுஹானி எனும் புதுமுக ஹீரோயின் (தமிழில் தான்.. ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் நடித்தவர்) ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. வஞ்சக அரசியல்வாதி வேடம் நாசருக்கு. கேட்க வேண்டுமா… ஊதித் தள்ளுகிறார். பசுநேசனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் செம கிச்சு கிச்சு. கஞ்சா கருப்பு இருந்தும் நகைச்சுவை ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை. பரத்வாஜ் இசையில் ஒரு பாடல் ஓகே மற்றபடி மகா மட்டமான பின்னணி இசை. தேவையில்லாத இடங்களிலெல்லாம் சம்பந்தமில்லாமல் பாடல்கள் வந்து இம்சிக்கின்றன.

மரபணு மாற்ற பயிர்கள், நவீன பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயங்கர விளைவுகள் போன்றவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி அழுத்தமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தால், அரவிந்தராஜின் இந்த மறுபிரவேசம் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்!

சிந்து சமவெளி

ராணுவத்தில் பணிபுரியும் கஜனி மகன் ஹரிஸ் கல்யாண். பிளஸ்-2 மாணவர். சக மாணவி அனகாவை விரும்புகிறார். எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கஜினி காயம்படுகிறார். விருப்ப ஓய்வு பெற்று கிராமத்துக்கு திரும்புகிறார். அப்போது மனைவி விபத்தில் சாகிறாள். தன்னையும் மகனையும் கவனித்துக் கொள்ள பெண் வேண்டும் என கருதி மகன் காதலிக்கும் அனகாவையே திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்துக்கு பின் ஹரிஸ் கல்யாண் ஆசிரியர் பயிற்சிக்காக வெளியூரில் தங்கி படிக்க செல்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை கஜினி, அனகாவை உடல்ரீதியாக இணைய வைக்கிறது. இருவரும் கணவன்-மனைவியாக தங்களை ஆக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். படிப்பு முடிந்து திரும்பும் ஹரிஸை தன்னை நெருங்க விடாமல் தவிர்க்கிறார். இருவருக்கும் உள்ள கள்ள உறவு ஹரிசுக்கு தெரிய நொறுங்குகிறார். மூவரின் நிலைமை என்னவாகிறது என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

கதையில் விரசம் இருந்தாலும் ஹரிஸ் கல்யாண், அனகா, கஜினி மூவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உயிர் கொடுக்கிறார்கள். தாய் பாசத்திலும், காதலிலும் நேர்த்தியாக வருகிறார் ஹரிஸ். தந்தை, மனைவி நெருக்கத்தை கண்டு முகம் சுழிப்பதிலும், இருவரும் தப்பானவர்களா இல்லையா என இனம்காண முடியாமல் தடுமாறுவதிலும் “ஸ்கோர்” பண்ணுகிறார். கிளைமாக்ஸ்சில் தந்தையை கடலுக்கு அழைத்து போய் ஜலசமாதி ஆக்குவதில் உஷ்ணம் காட்டுகிறார். அனகாவிடம் தேர்ந்த நடிப்பு. மாணவியாக துறுதுறு என வரும் அவர் மாமனாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு கிறங்கடிக்கிறார். கடலில் விழுந்த தன்னை மாமனார் காப்பாற்றி படகில் ஏற்றியதும் அலங்கோலமாக உள்ள ஆடையை அவசர மாக சரி செய்யும் அவர் அலையில் தடுமாறும் மாமனார் மீது விழுந்து அவரது பலாத்காரத்துக்கு உடன்பட்டு அனல் மூட்டுகிறார். தப்பு செய்த வருத்தத்தில் புலம்பி கிடக்கும் மாமனாரை காமவெறியில் ஒவ்வொரு கதவாய் தாழிட்டு அவரது படுக்கையறைக்கு வலியபோய் நெஞ்சில் கைவைக்கையில் தேகமெங்கும் காம கொள்ளி வைக்கிறார். ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்து ரெயிலில் விழுந்து சாவது பரிதாபம். ராணுவ வீரராக மிடுக்கு காட்டுகிறார் கஜினி. குழி தோண்டும்போது தவறி தன் மேல் விழும் மருமகள் மேல் காமஇச்சை எழுவதும் அதிலிருந்து விடுபட நினைத்து முடியால் தவிப்பதும் நேர்த்தி. மருமகளை விதவிதமாய் ஆடைகள் அணிய வைத்து அழகு பார்ப்பது, அவருக்கு பிடிக்காத குடிப்பழக்கத்தை நிறுத்துவது என கள்ள உறவுக்கு வலு சேர்க்கிறார்.

கிளைமாக்சில் மகனிடம் பதினெட்டு வருசம் நான் ராணுவத்தில் இருந்தபோது உங்கம்மா நேர்மையாவா இருந்திருப்பா என்று தனது தவறுக்கு நியாயம் பேசும் வசனம் பொருத்தமாய் இல்லை.

பாஸ் என்கிற பாஸ்கரன்

படிப்பு ஏறாமல் வெட்டியாக திரிபவர் ஆர்யா. அவர் அண்ணன் சுப்பு பஞ்சு, கால்நடை டாக்டர். ஒரு தங்கை. வீட்டில் அம்மாவை தவிர எல்லோரும் ஒன்றுக் கும் உதவாதவன் என அர்ச்சிக் கின்றனர். சலூன் கடை நடத்தும் நண்பன் சந்தானத்துடன் குடி கொண்டாட்டம் என சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் அரியர் தேர்வு எழுத போய் பரீட்சை ஹாலுக்கு வரும் ஆசிரியை நயன்தாராவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஏதேச்சையாக நயன்தாரா அக்காவே அண்ணன் மனைவியாக காதலை தீவிர மாக்குகிறார்.

அண்ணியிடம் தங்கையை தனக்கு கட்டி வைக்குமாறு கேட்கிறார். வேலை இல்லாதவருக்கு பெண் தர முடியாது என அவர் மறுக்கிறார். நயன்தாரா பெற்றோரும் ஒதுக்குகின்றனர். இதனால் ரோஷமாகி பணத்தோடு வருகிறேன் என சவால் விட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாஸ் ஆகா விட்டால் பணம் வாபஸ் என்ற உத்தர வாதத்தோடு டூட்டோரியல் ஆரம்பிக்கிறார். அங்கு சேரும் மாணவர்கள் படிக்காமல் ரவுடித்தனம் செய்கின்றனர். தொழில் நசுங்கும் சூழலில் இடிந்து போய் உட்காருகிறார். அதன் பிறகு அவர் எடுத்த முயற்சி என்ன? பணம்சம் பாதித்து நயன்தாராவை கை பிடித்தாரா? என்பது கிளை மாக்ஸ்…

வந்தே மாதரம்

90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய ‘ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்’ கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது. இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை.

தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வாழ்க்கை. ஒரு நாள், திடீரென்று மம்முட்டியை அழைக்கும் உளவுத் துறைத் தலைவர், பாகிஸ்தான் தீவிரவாதி தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும், அதை மம்முட்டிதான் முறியடிக்க வேண்டும் என்றும் (?!) கேட்டுக் கொள்கிறார்.

தென்னிந்தியாவில் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமரை (நாசர்) குண்டு வைத்துக் கொள்வதுதான் அந்தத் தீவிரவாதியின் திட்டம். இந்தத் திட்டத்தை உள்ளூர் போலீஸ் அதிகாரியான அர்ஜுடன் கை கோர்த்து எப்படி முறியடிக்கிறார் மம்முட்டி என்பதுதான், ஏகப்பட்ட கொட்டாவிகளையும் கடுப்பையும் வரவழைக்கும் க்ளைமாக்ஸ்!

இதுபோன்ற எத்தனையோ கதைகளில் மம்முட்டி அநாயாசமாக ஊதித் தள்ளிய வேடம் இது. அதனாலேயே அவர் ஒரு வித சலிப்புடன் நடித்திருப்பதாக நமக்குத் தெரிகிறது. சினேகாவுக்கு பெரிதாக வேலையில்லை. கொஞ்சம் கிளு கிளு உடைகளில் வருகிறார். டான்ஸ் போடுகிறார்… போய் விடுகிறார்.

சண்டைக் காட்சிகளில் தோன்றுவதற்காகவே அர்ஜுனிடம் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் குறை வைக்கவில்லை. கண்ணிவெடியில் கால் வைக்காமல் இருக்க மரத்துக்கு மரம் தாவித் தாவி அவர் போகையில் சிரிக்காமல் இருக்க முடியல போங்க!

பாடல்கள், ஒளிப்பதிவு என எதிலும் ரசிகர்கள் கவனம் செலுத்தாமல் இருக்கையில் நெளியாய் நெளிவதைப் உணர முடிந்தது! பாரத மாதாவின் பெருமை சொல்லும் வந்தே மாதரம் என்ற மந்திரச் சொல்லை இப்படி வீணடித்திருக்க வேண்டாமே!

நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர்
இசை: டி இமான்
தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ்
இயக்கும்: அரவிந்த் டி

Review – Vilai Movie

Director Kamaraj has tried his hand at serving a strong message in ‘Vilai’, which is about innocent women being exploited and pushed to flesh trade. Thankfully the film maker doesn’t stretch for effort here showing the dark sides, but he has tried to narrate a sequence of events to convey the theme.

The movie has some familiar names like Saravanan, Udhayathara and ‘Nadodigal’ fame Barani. What begins as a docu-drama suddenly changes gears to become a routine clichéd affair. The intention of the director seems to be right, but he falters at its execution. Events unfold at quick pace and at places defy logic, taking away all sheen.

Nandhu (Barani) and his sister Vandhana (Reethu Soni) live at Melur village with their parents. They quarrel with each other. Unable to tolerate it, their father arranges for Vandhana’s wedding. Her brother however wants her to continue studies as she is a topper.

Vandhana comes with Nandhu to Chennai. She gets kidnapped by a call taxi driver and Nandhu begins his search only to come to know that she has been kidnapped by a gang running flesh trade. Now Nandhu takes the help of Assistant Commissioner of Police Shanmugavel (Saravanan), who had a bad past and had his young daughter kidnapped a few years ago.

He along with Nandhu goes on search and succeeds in finding her in the custody of a Mirchi Maya (Fathima), a dreaded woman don who runs prostitution houses in Andhra Pradesh. But there awaits a surprise for Shanmugavel. Also how Vandhana is saved is the rest.

Saravanan reminds one of Vijayakanth. He replicates the ‘Captain’ in his walk and mannerisms. Barani plays a desperate brother, while Reethu Soni as Vandhana is cute. The rest of the cast includes ‘Yogi’ Devaraj, Chandru and Amarasigamani among others.

The content was there to give a riveting film. But Kamaraj seems to have achieved only in parts. On the whole, the movie doesn’t work wonders. However the director deserves pat for taking a relevant issue and discussing it.

Production: SB Film Productions
Star Cast: Bharani, Saravanan, Bhanuchandar, Gemini Balaji, Chanthru, Udhayathara, Reethu, Madhumitha, Fathima
Direction: G. Kamaraj
Music: D.Imman

நீயும் நானும் விமர்சனம்


இரு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் டான்ஸ் போட்டியை (பரிசு பத்து லட்சம் ரூபாய்) மையமாக இளைஞர்களை குறியாக வைத்து இயக்குனர் எஸ்.வி.சோலைராஜா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் வித்தியாசமான படம் நீயும் நானும். காதல், காமெடி, தாய் சென்டிமெண்ட் இவற்றுடன் கலந்து சுவையான படமாக அளித்திருக்கிறார்.படத்தில் மூன்று அறிமுக காட்சிகள். மூன்றுமே வித்தியாசமாக மனதில் பதியும்படி படமாக்கியிருக்கிறார்கள். இளைஞர் பட்டாளத்துடன் பெங்களூர் நகர வீதிகளில் மாடர்ன் டான்ஸ் ஆடி உற்சாகத்துடன் படத்தின் ஹீரோ சஞ்சீவ் நல்ல பாடல் காட்சியுடன் அறிமுகமாகிறார்.எம்.பி.,யின் மகனுக்கு தன் கல்லூரியில் சீட் தர மறுக்கிறார் கல்லூரி அதிபர் சம்பத்குமார். பல டிவி சேனல்கள், மீடியா பார்வையில் கோபமடைந்த எம்.பி.,  சம்பத்குமாரை கன்னத்தில் அடிக்கிறார். ஒரு கோடி ரூபாய் ‌கொடுத்தாலும் இந்த பப்ளிசிட்டி கிடைக்காது. எல்லா சேனல்களிலும் இதை திரும்பி திரும்பி போடுவாங்க. கல்லூரி நிறுவனம் நேர்மையானது என நமக்கு பெயர் கிடைக்கும், என்று பார்க்கும் சம்பத்குமார், கல்லூரி சேர்மனாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் அறிமுகமாகியிருக்கிறார் சம்பத்குமார் பள்ளிக்கு புது டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகும் ஹீரோ சஞ்சீவ் ‌வீட்டிற்கு பேப்பர், உணவு விடுதி, சலவைக்காரர் என்று பலர் வருகிறார்கள். அனுப்பியவர் கார்த்திக் என்கிறார்கள். கார்த்திக் பத்து வயது ஏழை சிறுவன். ஸ்மார்ட்டாக இருக்கும் பலருக்கும் உதவிகள் செய்யும் கார்த்திக், அட்டகாச அறிமுகம். கல்குவாரியில் கல் உடைக்கும் பெண்ணின் மகனான கார்த்திக்கின் மீது அக்கரை கொண்டு, தான் பணிபுரியும் பள்ளியில் சேர்க்கிறார் ஹீரோ சஞ்சீவ். கல்லூரி அதிபர் சம்பத்தின் மகன் சித்தார்த் (மாஸ்டர் சச்சின்) டான்ஸ் போட்டிக்கு தயாராகிறான். தன் தாயின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் கார்த்திக், டான்ஸ் போட்டியில் சேர விரும்புகிறான். முறைப்படி பயிற்சி இல்லாமல் இருந்தும், யதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களின் ரிதம், அசைவுகளை வைத்து டான்ஸ் மூவ்மெண்ட்களாக ஆக்கி, டான்ஸ் மாஸ்டரை இம்ப்ரஸ் செய்கிறான் கார்த்திக். இதனால் சித்தார்த்துக்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்கிறார் சஞ்சீவ். தன் மகன் சித்தார்த்திற்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்தது கல்லூரி அதிபருக்கு பிடிக்கவில்லை. டான்ஸ் மாஸ்டர் பதவியில் இருந்து சஞ்சீவ் விலக நேரிடுகிறது. இருந்தாலும் கார்த்திக்கிற்கு உதவி செய்ய நொச்சிக்குப்பத்தி்ல உள்ள சாதாரண பள்ளியில் இருந்து 8 சிறுவர் சிறுமியரை சேர்த்து (நிறைய சிரமப்பட்டு) அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். பல தடங்கல்களுக்கு பிறகு இறுதிபோட்டியில் நொச்சிக்குப்பம் அணி, எஸ்.எம்.ஆர். பள்ளி அணியை வெற்றி கொள்கிறது. தன் பள்ளி அணி தோற்றாலும், கல்லூரி அதிபர் நொச்சிகுப்பம் பள்ளிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறார். சஞ்சீவ் நடனக் காட்சிகளில் புயலாக ஆடுகிறார். கல்லூரி அதிபர் வீட்டில் வளரும் டான்ஸ் கலைஞர் தியாவை (நடிகை சேதனா) துடிப்போடு காதலிக்கிறார். ரொம்ப ரொம்ப ரொம்ப காதல் என்று இருவர் சொல்லுவதும், கொஞ்சுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. சஞ்சீவ் குப்பத்தில் பல வீடுகளுக்கு சென்று டான்ஸ் ஆட அழைத்து வருவதும், அவர்களுக்கு டான்ஸ் ஒத்திகை நடத்துவதும் கல கல. ஒரே காட்சியில் வரும் பஸ் கண்டக்டராக வந்து முத்துக்காளை அசத்துகிறார். நெல்லை சிவா, சிங்கமுத்து ஆகியோரின் புதுமையான நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ப்ளஸ்.  கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியான கார்த்திக்கின் அம்மா, கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் போல க்ரே கலரில் முழுக்கை ரவிக்கையும், புதிய சேலையும் எதற்காக அணிகிறார் என்பதும், டான்ஸ் மாஸ்டராக இருந்த சஞ்சீவ் பள்ளியை விட்டுச் சென்றதற்காக ஆப்ரிக்கர் ஒருவரை டான்ஸ் மாஸ்டராக அவசரமாக பணியில் சேர்ப்பதும் ஏன் என்பது புரியவில்லை.
சிறுவன் கார்த்திக் மீது மிகுந்த அக்கரை எடுத்து, அவனுக்கு நல்ல ஊக்கம், பயிற்சி அளிக்கும் உடலில் குறைபாடு உள்ள டான்ஸர் பாத்திரத்தில் வருபவர் நன்றாக டான்ஸ் ஆடி, நடத்து, நம்மை வியக்க வைக்கிறார். வாழ்க்கையில் உங்களுக்கு எது வருத்தம் அளிக்கிறது? என்பதற்கு, நமது தேசியகீதம் ஒலிக்கப்படும்போது என்னால் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செய்ய முடியவில்லையே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம் என்று சொல்வது… நம் மனதை தொடுகிறது. கைத்தட்டல் பெறுகிறது. கார்த்தி‌க்காக வரும் மாஸ்டர் ரின்சன் படம் முழுவதும் சிறப்பாக செய்கிறார். குட் டேலண்ட். சம்பத்குமாரின் ‌மனைவியாக நீண்ட நாள் கழித்து நடிகை அஞ்சு வருகிறார். டான்ஸ், இசை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்திருக்கும் ஸ்ரீராம் விஜய், நடனம் அமைத்திருக்கும் ராஜ்கமல், கங்காதர் பற்றி ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். சின்மயி பாடியிருக்கும் அழகனே என் அழகனே பாடல், பிற‌ை சூடனின் தொடுவது கொடு, மடைதிறப்பது இசையே பாடல்களும், பாடல் காட்சிகளும் ஓ.கே.!

பிரேம் சங்கரின் ஒளிப்பதிவு பல இடங்களில் பாராட்டு பெறுகிறது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் பொறுப்பேற்றுள்ள எஸ்.வி.சோலைராஜாவின் நீயும் நானும் இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் பிடிக்கும்!

நைட் அன்ட் டே விமர்சனம்

அமெரிக்கா, ஜெர்மனி,ஆஸ்திரியா,ஜமைகா,ஸ்பெயின் என்று பல நாடுகளில் எடுக்கப்பட்ட த்ரில்லர் படம், நைட் அன்ட் டே. (இரவு அல்ல, வீரத்தை குறிக்கம் சொல் நைட்).பல காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வரச் செய்து, அடுத்து என்ன ஆகுமோ என்று மனதை லயிக்க வைக்கும் படம். இவ்வளவு ஆக்ஷனுக்கும் இடையே மெல்லிய நகைச்சுவை இணைந்து இருப்பது போனஸ் பாயின்ட்.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ருஸ், நடிகை காமரான் டயஸ் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை அசத்துகிறார்கள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களில், போஸ்டன் நகருக்கு செல்லும் பறக்கும் விமானத்தில் டாம் க்ருஸ், தனி ஆளாக, எதிரி கும்பலை த்வம்சம் செய்தும், விமானம் ஓட்டத் தெரியாத அவர் விமானத்தை ஒரு வயலில் (ஒரு தளத்தில் அல்ல) இறக்கி, விபத்தாகி காமரானுடன் வெளியே வருவதும் யதார்த்தமான காட்சிகள்.

போஸ்டன் நகரி்ல், காமரானை அமெரிக்க உளவு நிறுவனம், விசாரணைக்காக காரில் அழைத்துச் செல்கிறார்கள். ஓடும் காரை, எதிரிகள் சுடுகிறார்கள். காரில் உள்ள மற்றவர்கள் குண்டடிபட்டுவிட, பின் ஸீட்டிலிருந்து பதட்டத்தில் காமரான் காரை ஓட்டுகிறார். சில விநாடிகளில், டாம் க்ருஸ் அந்த காரின் மீது குதித்து, கார் பானெட்டிலிருந்தே துப்பாக்கி சண்டை போடுவது த்ரில்லிங்காக இருக்கிறது.

ஸைமன் என்பவர் (விஞ்ஞானி) உருவாக்கும் மிகவும் சக்தி வாய்ந்த பேட்டரியை ஆன்டோனியோ க்வின்டானா என்ற ஸ்பானிஷ் ஸ்பெயின் நாட்டு ஆயுதங்கள் விற்பனை செய்யும் தாதா, எப்படியாவது அந்த பேட்டரியை தான் அடை விரும்புகிறான். ரகசிய ஏஜண்ட் டாம் க்ருஸூம் அவருடன் எதேச்சையாக சேரும் காமரானும் அவனது முயற்சிகளை தடுக்கிறார்கள்.பறக்கும் விமானம், கார்சேஸிங், காரில் துப்பாக்கி சண்டை, தவிர மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட்களும் நிறைய வருகின்றன. ஸ்பெயினில் காளை மாடுகள் கும்பலாக துரத்த மோட்டார் பைக்கில் டாம் க்ருஸூம், காமரானும் தப்பிக்கும் காட்சி, மிகவும் அபாயகரமாக படமாக்கப் பட்டிருக்கிறது. வில்லன் ஆன்டோனியோ காரை துரத்தி வரும் காளைகள் தாக்குவதில் அவர் எதிர்பாராத வகையில் இறக்கிறார்.

“நான் நீச்சல் உடையில் எப்படி இருக்கிறேன்?” என்று டாம்மை காமரான் கேட்பார்.” ஒரு வெடி குண்டையே லாவகமாக பிரித்து, சேர்க்க எனக்குத் தெரியும். உன் உடைகளை கழற்றி, இந்த தீவு சூழ்நிலைக்கு ஏற்ப, நீச்சல் உடையை உனக்கு நான் தான் அணிவித்தேன். கண்ணால் எதையும் பார்க்கவில்லை” என்பார். மெல்லிய நகைச்சுவை. அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரியே, அரசுக்கு எதிராக செயல்பட்டு அந்த ஸ்பெஷல் பேட்டரியை கைப்பற்ற செயல்படுகிறார். அவரையும் சமாளித்து, டாம் க்ருஸ் அந்த பேட்டரியை காப்பாற்றி, தன் பாஸான பெண் அதிகாரி இஸ்பெல்லிடம் பாராட்டு பெறுகிறார். ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டில் தயாரித்து, வெளியிடப்பட்ட வெற்றிப் படம், நைட் அன்ட் டே.

வம்சம் விமர்சனம்


தனது முதல் படைப்பான பசங்க படத்தின் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதி கூறிய இயக்குநர் பாண்டியராஜ், தனது இரண்டாவது படைப்பான வம்சம் மூலம் பெரியவங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததுமான ஜாதியை படமாக்கி இருக்கிறார்.

கதைப்படி மது, சூது என அலைந்து திரிந்து மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் நாயகன் அன்பரசு எனும் அருள்நிதிக்கு ஊரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால் பக்கத்து ஊர் மலர்க்கொடி சுனைனா மீது அருளுக்கு பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது. இவர்களது காதல் பூத்து காய்த்து கனியாகும் தருவாயில் அன்பரசு என்ற அருள்நிதியின் ஊர் பெரியவர் சீனிக்கண்ணு ஜெயப்பிரகாஷிக்கும் சுனைனாவின் அப்பாவிற்குமிடையில் ஒரு குத்து வெட்டு கேஸ் பஞ்சாயத்து. அதில் ஜெயபிரகாஷின் மானம் மரியாதை எல்லாம் பறிபோக, கோவில் திருவிழா நாளில் அதற்கு பழிக்கு பழியாக சுனைனாவின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார் ஜெயப்பிரகாஷ். பொட்ட புள்ள என்றாலும் ஒத்த புள்ள என்பதால் ஆண் பிள்ளையாக வளர்ந்திருக்கும் சுனைனா, தன் அப்பாவை தீர்த்து கட்டிய ஜெயப்பிரகாஷை முச்சந்தியில் வைத்து சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடிக்க, அருள்நிதி சுனைனாவின் காதலுக்கு எமனாகிறார்கள் ஜெ.பி.,யும், அவரது வாரிசும். ஊர் பெரிய மனிதரை பகைத்துக் கொண்டு அருள்நிதியும் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதற்கு மட்டுமல்ல நாயகரின் அப்பா ரவுடி ரத்தினத்தின் சாவிற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்க முயற்சிக்கிறது வம்சம் படத்தின் மீதிக்கதை.

எப்பாடுபட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தில் வாரிசாக பிறந்த அன்பரசாக அருள்நிதி. அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலாக நடித்து ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த பெருமை உடைய முதல்வர் தாத்தா கருணாநிதியின் பெயரை காபந்து செய்து விடுகிறார். நல்ல உயரம், வாட்டசாட்டமான உருவம் சாந்தமான முகம் என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அருள்நிதிக்கு கொட்டி கிடக்கிறதென்றால் மிகையல்ல.

கிளாமர் ஹீரோயின் சுனைனா இதில் கிராமத்து ஹீரோயினாக மலர்கொடியாக பாவாடை தாவணியில் பளிச்சென்று நடித்திருக்கிறார். அதுவும் பசுமாட்டிற்கு அசின் என்று பெயர் வைத்து அதன் மூலம் அவரும், அருளும் வளர்க்கும் காதல் செம காமெடி! பத்தாததற்கு அருளின் காதலுக்கு உதவும் கஞ்சா கருப்பு வளர்க்கும் பூனைக்கு த்ரிஷா எனப்பெயர் சூட்டி தனக்கேற்ற எள்ளுருண்டையுடன் காதல் வளர்க்கும் கலகலப்பு வேறு.

வில்லன் சீனிக்கண்ணூக ஜெயப்பிரகாஷ், மருதமுத்துவாக வரும் ராஜ்குமார், அருள்நிதியின் அம்மாவாக வரும் அனுபம்குமார், சொம்புமணி கஞ்சாகருப்பு, உள்ளிட்ட எல்லாரையும் விட கொஞ்ச காட்சிகளே வந்து மடிந்து போகும் ரவுடி ரத்னம் கிஷோர்குமாரின் நடிப்பு பிரமாதம்.

படம் முழுக்க செல்போனை சிக்னலுக்காக மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லோரும் மரத்தின் மீது ஏறி பேசுவது, பசுவுக்கு அசின் என்றும், பூனைக்கு த்ரிஷா என்றும் பெயர் சூட்டி தங்கள் காதலை வளர்ப்பது என காட்சிகளுடன் ஒட்டியே காமெடி காட்சிகளை நிறைவே இருந்தும் ஆரம்பம் முதல் கோவில் திருவிழா, அதை ஒட்டிய நீண்டநெடிய பாடல்காட்சி முதல் நாள், இரண்டாவது நாள் என பத்து பதினைந்து நாட்களும் மண்டகப்படி செய்வோரின் பெயர் பட்டியலை மைக்கில் வாசிப்பது… என நிறையாவே இழுவையாக இருப்பதை தவிர்த்திருந்தால் வம்சம் மேலும் அம்சமாக இருந்திருக்கும்.

%d bloggers like this: