Advertisements

அர்த்த‍ங்கள் அனர்த்த‍ங்களாகும் விபரீதம் – வீடியோ

எந்த மொழியாக இருந்தாலும் சரி, எந்த பாடமாக இருந்தாலும் சரி, பேசினாலோ அல்ல‍து படித்தா லோ அதன் உண்மையான அர்த் த‍ம் என்ன‍ வென்று தெரிந்து கொண்டு பேச அல்ல‍து படிக்க‍ வேண்டும் என்பதை உணர்த்து ம் விதமாகவும் அப்ப‍டி அர்த்த‍ம் தெரியாமல் பேசினாலோ படித் தாலோ ஏற்படும் விபரீதத்தையும் Continue reading

Advertisements

வரதட்சனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பெண் – வீடியோ

த‌னக்கு வரன் பார்த்த‍ தனது தாயாருக்கும், வ‌ரதட்சனை கேட்கும் மாப்பிள்ளைக்கும் “பாரதி கண்ட Continue reading

கௌரவம் – அழகு

உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவரிடம் செல்ல மகளிடம் அவள் வேலை செய்யும் இடத்தில் முன்தொகையாக பணம் வாங்கிக்கொடு எனக் கேட்கும் தந்தையிடம், தனது காதுகளில் அணிந்திருக்கும் காதணிகளை கழட்டிக் கொடுத்துக் கொண்டே மகள் சொல்லும் பதில் . . .

நகை எனக்கு மட்டும்தான் அழகு – ஆனால்
கௌரவம் நம்ம குடும்பத்துக்கே அழகு

ப‌ணம், நகை ஆடம்பர வாழ்க்கைதான் முக்கியம் என்று குடும்ப கௌரவத்தை காற்றில் பறக்கவிடும் பெண்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வசனம் இது.

(பாரிஜாதம் திரைப்படத்தில் இடம்பெற்றது)

வறுமையின் கொடுமை

படம்: நன்றி தினமலர்

இந்தியா சுதந்திரம் பெற்று 63ஆண்டுகளாகியும் இந்த பசி, பட்டினியை ஒழிக்க முடியவில்லை என்பதை நினைத்து நாம் எல்லாம் வெட்கப்படவேண்டும். மேலே இந்த படத்தைப் பார்க்கும் போது உள்ளம் பதைபதைக்கிறது.

. . . . . . . . .
வீதிக்கொரு கட்சி உண்டு
சாதிக்கொரு சங்கம் உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
சன நிம்மதியா வாழ ஒரு நாதியில்லை
இது நாடா இல்ல வெறுங் காடா
இத கேட்க யாருமில்ல தோழா
. . . .  .

என்ற வரிகள் உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் மட்டுமா? வெளிநாட்டில் கூடத்தான் லஞ்சம் வாங்குறாங்க. . .

லஞ்சம் கொடுக்காத‌தால் சொந்த வாழ்க்கையில் நடந்த துயரசம்பவம் இனி எங்கும் நடைபெறாதிருக்க ஒரு இந்தியனின் உணர்ச்சிப்பூர்வமான முடிவு

இந்தியாவில் மட்டுமா? வெளிநாட்டில் கூடத்தான் லஞ்சம் வாங்குறாங்க. அதெல்லாம் விட்டுட்டு என்னை மட்டும் ஏன் என்று அழுதபடி கெஞ்சும் ஒரு லஞ்சப்பேர்வழி டாக்டரிடம்

இந்தியன்; வெளிநாடுகளில் எல்லாம் கடமையை மீறுவதற்குத் தான் லஞ்சம் கேட்குறாங்க, வாங்குறாங்க ஆனால், இந்த இந்தியாவில மட்டும்தான்டா, கடமையை செய்வதுக்கே லஞ்சம் கேட்குறீங்க• உங்கள மாதிரி ஆளுங்காளாலதான்டா இந்தியா இன்னும் ஏழை நாடாவே இருக்கு.

லஞ்சத்தை ஊக்குவிப்பவர்களுக்கும், அதை வாங்குபவர்களுக்கும் கொடுத்த செருப்படி வசனம். இந்தியன் திரைப்படத்தில் இடம் பெற்றது.

மனவேதனையுடன் சொன்ன‍ வார்த்தைகள்

தம்பிக்கு உதவி செய்வதற்காக தனது நன்பனிடம் அண்ண‍ன் மனவேதனையுடன் சொன்ன‍ வார்த்தைகள்

கள்ள‍க்காதலைக்கூட 4 பேருக்கு தெரிஞ்சு பண்ணிடலாம் – ஆனா, தம்பிக்கு உதவி செய்றதுக்கு திருட்டுத்தனமாத் தானே செய்ய ‍வேண்டியிருக்கு.

சுயநலம் கொண்ட மனைவிகளுக்கு‍ சாட்டையடி கொடுத்த,‍ மாயாண்டிக் குடும்பத்தார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற‍ வசனம் இது.

மௌனம்

சின்ன‍ச்சின்ன‍ வார்த்தைகள் கூட உறவுகளை பிரிக்கும். ஆனால்
சின்ன‍ச்சின்ன‍ மௌனங்கள் கூட உறவுகளை பலப்படுத்தும்

வெள்ளித்திரை திரைப்படத்தில் இடம்பெற்ற‍ வசனம்

சகுனம்

நாம் எங்காவது வெளியில் செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லை என்றும் கழுதையை பார்த்தால் யோகம் வரும் என்றும் கூறுவார்கள்.

கழுதையை பார்த்தால் யோகம் வரும் என்றால் கழுதையை ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க‍வேண்டியதுதானே

பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லை என்கிறார்களே அப்போது ஏன் எல்லோரது வீட்டிலும் வளர்க்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்ப‍வர்களுக்கு சாட்டையடி கொடுத்த‍ வானத்தைப் போல திரைப்படத்தில் இடம்பெற்ற‍ வசனம்

%d bloggers like this: