Advertisements

பஞ்சபூத தியானம் குறித்த ஊரறியா ஓரரிய தகவல்

பஞ்சபூத தியானம் குறித்த ஊரறியா ஓரரிய தகவல்

பஞ்சபூத தியானம் குறித்த ஊரறியா ஓரரிய தகவல்

அண்டத்தையும் பிண்டத்தையும் இணைப்பது தொண்டம் என்று ஶ்ரீவித்யையில் Continue reading

Advertisements

தியானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.

எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம்.

நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.

தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில்

Continue reading

“எது உண்மையான தியானம்?” – வீரத்துறவி

ஒருமுறை சுவாமி விவேகானந்தரைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். சுவாமி, எனக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது, ஆனால் மன அமைதிதான் இல்லை. படுக்கையில் படுத்தால் தூக்கம் வரமாட் டேன் என்கிறது. கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. தினமும் எனக்குப் பிரிய மான கடவுளை நீண்ட நேரம் வழிபடுகி றேன்.

ஆனாலும் என் மனம் அமைதியின்றித் Continue reading

தியான நிலையும், பிரபஞ்ச சக்தியும் – அசையா உருவம்~ வீடியோ

தியான நிலை என்றால் என்ன‍? பிரபஞ்ச சக்தி என்றால் என்ன‍? என்பன போன்ற கேள்விகளுக்கு Continue reading

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வேண்டும் என்பது இல்லை

ஒருவர் ஓஷோவிடம் கேட்டார். ”என்னுடைய நேரத்தைச்செலவு செ ய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?”

”தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழ லை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவி ட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட் டு விடும். சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தை த் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கை வசம் இருக்கும் விதை Continue reading

நீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மனிதராக வேண்டுமா?

 

ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வை த்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்றுவிநாடி கழித்து இழுத்த மூச்சை மெது வாக வெளியேவிடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்த க் கை மேலே உயருகிறது? அடி வயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதா ன். இதுதான் உண்மையாக மூச் சை இழுத் Continue reading

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading

தியானம் செய்வது எப்படி ? –

தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக்கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும்.  தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வர். ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். அமர்ந்த மான் தோல், புள்ளி இல்லாத மான் தோலாக இருக்க வேண்டும்.  மான் தானாக இறந்திருக்க வேண்டும். அதனுடைய தோல் தான் ஜெபத்துக்கு உகந்தது; வேட்டையில் கொல்லப்பட்ட மான் தோல், ஜெபத்துக்கு உதவாது. புள்ளி இல்லாத மான் தோலை, கிருஷ்ணா ஜனம் என்பர். இதுதான் உகந்தது. ஜெபம் செய்ய நதிக்கரை, தேவாலயம், புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. ஜெபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரைக் கொட்டை மாலை, பவழம் போன்ற மாலைகளும், பவுன், முத்து மாலைகளும் உபயோகிக்கலாம்.  முக்கியமாக, மனம் பகவானிடம் இருக்க வேண்டும். சும்மா ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டு, திண்ணையில் உட்கார்ந்தபடி தெருவில் போவோர், வருவோரை எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. ஜெபம் செய்வது என்றால், இத்தனை விஷயங்களை கவனிக்க வேண்டும். முடியுமா? முயன்று பாருங்கள்!

{கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்}

முக்கியமான 3 சக்திகள்!

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த மனிதரும் உடல், உயிர், உள்ளம் இந்த மூன்றுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் தந்துவிட்டால் அவர்களது வாழ்வில் எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வார்கள். இந்த மூன்றுக்கும் தேவையான 3 முக்கியமான சக்திகளைப் பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்!
யோகக்கலை: புதிதாக ஒரு தையல் மெஷின் வாங்குகிறோம். அது சில ஆண்டுகள் மட்டும் நன்றாக இருந்த பின்னர், அதன் பாகங்கள் தேய்மானம் அடைந்து விடுகின்றன. தினசரி அதனை எண்ணெய் போட்டு சுத்தம் செய்வது அந்த மெஷினுக்கு அவசியமாகிறது. அதேபோலத்தான் மனித உடலும் தேய்மானம் அடையும் போது மெஷினைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியுள்ளது.
நமது உடலை எப்போதும் இளமையோடும், முகப் பொலிவோடும் வைத்திருக்க யோகக் கலை முக்கியமாகும். இருக்கிற அத்தனை யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. தினசரி 10 நிமிடம் செய்தாலும் கூட போதுமானது. சர்க்கரை நோய், மூலநோய், மூட்டு வலிகள் இருப்பவர்கள் கூட இக் கலையினைத் தொடர்ந்து செய்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதை உணர முடியும்.
எனவே, எந்த மனிதரது உடல் ஆரோக்கியத்திற்கும் யோகக் கலை முக்கியமான சக்திகளில் ஒன்றாகும்.
பிராணாயாமக் கலை: உடல் நன்றாக இருந்தால்தானே உயிர் இருக்கும். உயிர் போய்விட்டால் எப்போது தூக்குவார்கள் என்கிறார்கள்? சாலையின் ஓரத்தில் அதிக சுமை ஏற்றி நின்று கொண்டிருக்கும் லாரி அதில் இருக்கும் டயரால்தான் நிற்கிறது என்றாலும், உண்மையில் லாரியின் டயருக்குள் இருக்கும் காற்றால் தான் நிற்கிறது.
டயரில் நிரம்பி இருக்கும் காற்று இல்லையென்றால், லாரி சாய்ந்து விடும்.

உயிர்

அதுபோலவே மனித உடலும் மூச்சு என்று கூறப்படும் காற்றால் அதாவது உயிர் சக்தியால்தான் நிற்கிறது. அந்த உயிர் சக்தியை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும் கலைக்கு பிராணாயாமக் கலை என்கின்றனர். நமது உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு நோய் வாய்ப்பட்டிருந்தாலும், நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து அந்த இடத்தில் சிறிது நேரம் நிறுத்திவைத்து பழுதான நம் உறுப்பையும் சரிசெய்து விடலாம் என்கிறார்கள் இக்கலையை கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.
எனவே, எந்த மனிதருக்கும் உயிர்சக்தியை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள பிராணாயாமம் என்ற சக்தியும் முக்கியமான சக்திகளில் ஒன்றாகிறது. பிராணன் போயிருச்சு என்று சொல்லாமல் இருக்கவும் நலமோடும், நீண்ட ஆயுளோடும் இருக்கவும் பிராணாயாமம் அவசியம்.
தியானம்: நமது உடலில் உள்ளம் என்ற ஓர் உறுப்பு இருக்கிறதா? அது கறுப்பா, சிவப்பா, வெள்ளையா, சிறியதா, பெரியதா என்றால் எதுவும் இல்லை. நமது உடலிலேயே இல்லாத ஓர் உறுப்பை “உள்ளம்’ என்றும் “மனசு’ என்றும் சொல்கிறோம். கண்போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் கூட நமக்கு நினைவுக்கு வரலாம்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் எல்லா இடத்திலும் பரவி இருக்கின்றன. அக் கதிர்களை ஒரு லென்ஸ் மூலம் குவிக்கிற போது அது ஒரு காகிதத்தை கூட எரித்து விடும் சக்தி பெறுகிறது. இதுபோலவே மனதை அலைபாய விடாமல் நமது சொல்படி நடக்க மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. மனதை ஒருமுகப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டால் மேம்பட்ட ஆற்றல்களை நம்மால் பெற முடியும்.
எனவே, உள்ளத்தை அதாவது மனதை ஒருமுகப்படுத்திட, மேம்படுத்திட தியானம் என்கிற சக்தியும் முக்கியமானதாகிறது.
டிரைவர் இருந்தால் தான் காரை ஓட்ட முடியும். காரும் இருந்து டிரைவரும் இருந்து பெட்ரோல் இல்லையேல் கார் ஓடாது. எனவே, கார் ஓட டிரைவரும், பெட்ரோலும் எப்படி முக்கியமோ, அதுபோல உடல் என்கிற காருக்கு மூச்சுக் காற்றான டிரைவரும், மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியான தியானம் என்கிற பெட்ரோலும் இருந்தால் தான் உடல் என்கிற கார் நன்றாக, வேகமாக ஓடும்.
யோகக் கலை, பிராணாயாமக் கலை, தியானம் இந்த மூன்று சக்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொண்டு அதனை தினசரி செய்யத் துவங்கி விட்டால் உடலில் நோய்களே வர வாய்ப்பில்லை.
எப்போதும் புத்துணர்வுடனும் இருக்க முடியும். எந்தச் செயலாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதைச் சிறப்பாகச் செய்துவிட முடியும். சாதனைகள் பலவும் நிகழ்த்த முடியும்.
சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம், உயர்ந்த சிந்தனைகள், சிறப்பான செயல்பாடுகளுக்கு இவை மூன்றும்தான் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. இந்த மூன்றையும் முறையாகப் பயன்படுத்தியதால்தான் சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.
நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே ஆகி விட்ட செல்போன் தினசரி சார்ஜ் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதைப்போலவே இந்த 3 சக்திகளையும் நமது உடலில் தினசரி சார்ஜ் செய்யக் கற்றுக் கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும். இல்லையேல் சார்ஜ் ஏற்றப்படாத செல்போனாகி விடுவோம்.
ஆரோக்கியத்துக்காக தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்க வில்லையெனில், நோய்க்காக தினசரி பலமணி நேரங்களை ஒதுக்க வேண்டிய நிலை வந்துவிடும்!

(படித்த்தை படைத்தேன்)

தியான முறைகள்

தியான முறைகள்

தியானம், உடல் நலத்தையும், மன அமைதி யையும் தருகிறது. “ஆழ்நிலை தியானம்‘ பதட்டத்தை குறைக்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு நினைவு திறனைக் கூட்டுகிறது. புத்த சமயத்தில் புத்தரே வடிவமைத்த விபாசனா தியானம், முதன்மையாக உள்ளது. சமண சமயத்தில் ஆழ்காட்சி தியானம் எனப்படும் பிரேக்ஷா தியானம் சிறப்பாக பேசப் படுகிறது. இது மனதில் உள்ள வன்முறை எண்ணங் களை நீக்க உதவுகிறது. உலகில் உள்ள இது போன்ற அனைத்து வகை தியான முறைகளையும், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கண்டறிய, yahoo groupsல் “meditation’ என ஒரு வெப்சைட்குழு உள்ளது.

%d bloggers like this: