Advertisements

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

பெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ

இந்த‌ சமுதாயத்தில் வாழ்ந்து வரும் மனிதர்கள் இடையே Continue reading

Advertisements

விபச்சாரத்திற்குக் காரணம், ஆண்களின் ஆணவமே !

‘விபச்சாரம்’ என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது “பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்’ என்று உலக மக்கள் எல் லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக் கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களை யெல்லா ம் காதலிக்கும் ஆண்களின் செய்கை யையும் பெண்களின் Continue reading

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?”

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?
சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?

கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சி Continue reading

யார் கடவுள்? (Yaar Kadavul?) – ஞானத்தின் உச்ச‍ம்.

கோவிலில் சாமி கும்பிட வந்தவனைப் பார்த்து கும்பிட்டான் பிச்சைக்காரன். —

யார் கடவுள்?

தந்தை பெரியார்.

ஞானத்தின் உச்ச‍ம்.

ஒரு ஞான‌குருவும், சிஷ்யனும் பிச்சை எடுத்து தங்களுக்கான உணவு தேவையை போக்கி கொண்டிருந்தனர்.  ஒருநாள், வழக்கம்போல், சிஷ்யன் பிச்சை எடுத்து உணவை கொண்டு வந்து நிஷ்டையில் இருந்த குருவின் முன் வைத்து விட்டு நீராட சென்று விட்டான்.  அந்நேரம், நாய் ஒன்று அவ்வுணவை சாப்பிட ஆரம்பித்த‍து.  இதை ஊர் மக்க‍ள் பார்த்து கொண்டிருந்தனர்.  சப்தம் கேட்டு நிஷ்டை கலைந்த குரு உணவை சாப்பிட்ட‍ நாயின் மேல் உட்கார்ந்தார்.  இதை பார்த்த‍ சிஷ்யன் குருவிடம் என்னவாயிற்று? என்று கேட்டான்.

அதற்கு, “பிரம்ம‍த்தில் ஒரு பிரம்ம‍த்தை சாப்பிட்ட‍ பிரம்மத்தின் மேல் ஒரு பிரம்ம‍ம் உட்கார்ந்திருக்க‍, மற்ற‍ பிரம்மங்கள் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க‍, ஒரு பிரம்ம‍ம் நடந்தது என்ன‍ என்று கேட்டுக்கொண்டிருக்கிறது“என்றார்.

தந்தை பெரியார் : நீதிக்கட்சித் தலைவராக (1938-1944)

முதன்மைக் கட்டுரை: நீதிக்கட்சி 

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி என பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிரமணரல்லாதாரை அல்லது பார்ப்பனரால்லாதவர்களை ஒடுக்க, பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.

1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராஸ் மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, பெரியார் தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939], இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியார் விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் பெரியாரின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்

இந்தி எதிர்ப்பு போராட்டம்

1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்த்து போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பல்ர் கைது செய்யப்பட்டு சிறையில் இராஜாஜி அரசால்

அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது . இதை முதன்முதலில் முழக்கமிட்டவர் பெரியார், பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொளவது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களை பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்று பெரியார் வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன

தந்தை பெரியார் அவர்களின் அயல்நாடு சுற்றுப்பயணம் (1929-1932)

பெரியார் ரஷ்யசுற்றுபயணத்தின்பொழுது

1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியாத் திரும்பினார்

இச்சுற்றுபயணங்கள் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் பெரியாரின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை. பெரியார் திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம்.சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் பெரியாரின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று

thanks wikkypedia

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்

முதன்மைக் கட்டுரை: சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்தின துவக்க காலத்தின் பொழுது பெரியார்

பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.

சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாக பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.

* சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.
* ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
* கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
* அளவில்லா குழந்தைகள் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுபாட்டை 1920 களிலேயே இதை வலியுறுத்தியது.
* கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களை கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தை திருமணத்தையும் தடை செய்தது.
* இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையை கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928லேயே வலியுறுத்தியது.

இந்த பரப்புரை மற்றும் தத்துவங்கள் முழுநேர செயல்பாடுகளாக பெரியார் 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதை பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கி அதுமுதல் பரப்பி வந்தார். ஆங்கிலத்தில் ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையை வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாட்டை பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.ஆழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றது. இதற்கான பயிற்சி பட்டறையாக, பயிற்சி களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வழி செய்தது

thanks wikkypedia

பெரியாரின் வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டம் (1924-1925)

கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். பல சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியாருக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடத்தது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர்.

thanks wikky

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பெரியார்

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925)

பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவிகளான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டதுமட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமை அடியொடு ஒழித்தார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையார் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்ததினால் கைது செய்யபட்டார். 1922 இல் பெரியார் சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராக (தற்பொழுது -தமிழநாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்றத் திருப்பூர் கூட்டத்தில் அரசு பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிருத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றுது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

thanks wikky

%d bloggers like this: