Advertisements

ஸ்ரீராமருக்கு, துறவி உரைத்த‍ உண்மை இது! – அரியதொரு ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமருக்கு துறவி உரைத்த‍ உண்மை இது ! அரிய தொரு ஆன்மீகத் தகவல்

அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலை யை அறிய எண்ணினார். சாதாரண Continue reading

Advertisements

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை! ஒரு காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன். அவன் கடுமையான Continue reading

உங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவேன்! ஆனால் . . .

உங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவேன் ஆனால் . . .

300 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் Continue reading

மகாபாரதப்போரில் ‘பீஷ்மர்’ வகுத்த போர் விதிமுறைகள்

மகாபாரதப்போரின்போது பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்:

மகாபாரதபோரில் கௌரவப்படைகளுக்கு தலைமைத்தாங்கியவர், பீஷ்மர் ஆவார். இவரேதான் மகாபாரப்போரில் விதிகளை வகுத்தார் . இதற்கு Continue reading

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே Continue reading

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍து!

உனது லட்சியப் பயணத்தின்போது நீ செவிடாக இருப்பதே நல்ல‍ து! – சிறுகதை

சிறிய தவளைகள் சேர்ந்து தங் களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந் தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளி ன் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட் டப் பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டு ம். அது தான் போட்டி விதி. முதலில் Continue reading

பூனையும் பாலும் (சிறுகதை)

பூனையும் பாலும்  (சிறுகதை)

விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி 

பூனையும் பாலும் என்ற தலைப்பில் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய‌ நான் எழுதிய சிறுகதை உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டு மலரில் இடம் பெற்றுள்ள‍து. இதோ அந்த சிறுகதை 

ஒரு ஊரில் இரண்டு பூனை கள் இருந்தன• அவை இர ண்டும் நட்புக்கு இலக்க‍ண மாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளு க்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு Continue reading

“உன் வாயை மூடிக் கொண்டிரு!” – ஓஷோ

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலை யுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை யை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர் Continue reading

வ‌ரம் (சிறுகதை) – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 உரத்த சிந்தனையின் 29 ஆவது ஆண்டு விழாவின் போது, வெளி வந்த ஆண்டு மலரில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய “வரம்” என்ற சிறுகதை இடம் பெற்று உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வரம் சிறுகதையை இங்கு பகிர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவர் வாய்பேச முடியாத மாற்று த்திறனாளி ஆவார். அவரது எளிமையான தோற்ற‍மும், அவர் அப் ப‍குதி மக்க‍ளிடம் பழகும் முறையாலும் கவரப்பட்ட‍ அப்பகுதி மக்க‍ள் இவரை அன்போடு தன் வீட்டு உறவாக எண்ணி அன்றாடம் வணங்கி வந்தனர். இந்த வாய் பேச முடியாத முனிவருக்கும் இவரது சிஷ்ய கோடிகளுக்கு தினமும் ஒரு வீடு என்றமுறை வைத்து இருந்து உணவு அளித்து உபசரித்து, அவரது ஆசியும் பெற்று வந்தனர். மேலும் வாய்பேச முடியாத அந்த முனிவர், தனக்கு வேண்டியதை அல்ல‍து விருப்பங்க ளை ஓர் ஓலைச்சுவடியில் Continue reading

எந்தவித‌ மன நிலை யோகியின் சமநிலை தெரியுமா?

வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொ ண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினா ர் அவர்.

அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசை யாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்ற து. கழியை எடுத்துக் கொண்டு பூனை யைத் துரத்தினார் அவர்.

மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த Continue reading

ஆயுட்காலம் – சிறுகதை

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்க லாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய் தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.

அவற்றைப்பார்த்து உங்கள் ஒவ் வொருவருக்கும் முப்பது ஆண் டு ஆயுள்தருகிறேன். இந்த வாழ் நாள்போதும் என்பவர்கள் இங் கிருந்து சென்றுவிடலாம் குறை உடையவர்கள் இங்கேயே இரு ங்கள். தீர Continue reading

ஆதலினால் உலகத்தீரே காதல் செய்வீரே!

(சிறுகதை)

முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண் டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிரு க்கிறான். சாலையோரம் ஏதோ கூட் டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடு கிறான். கூட்டத்தை விலக்கிக் கொ ண்டு என்னவெனப் பார்க்க முனை கிறான். விபத்தொன்று நடந்திருக்கி றது. அங்கு ஒரு இளம்பெண் இரத்த மொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறா ன் . அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான்.

அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவ மனைக் கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை Continue reading

தாத்தா தலைமுடி வெள்ளையா இருக்கு! ஏன்?

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலத்தில், டேனியும் அவன் அப் பாவும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்த சமயம் நடந்தது இது. அவன் அப்பா நெருங்கிய நாற் பதுகளில் இருப்பதால், காதோரங்க ளி ல் நரை அங்கொன்றும் இங்கொ ன்றுமாய் விழத் துவங்கியிருந் ததைக் கவனித்த டேனி அப்பாவி டம் கேட்டான்.

 “ஏம்பா… உனக்கு முடியெல்லாம் வெள் Continue reading

பொறுமை தாய்க்குத்தான் அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்

அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கி விட் டு அவரவர் இருக்கைகளில் அமர் ந்தனர்.

ஆனால், பீர்பால் மட்டும் வரவில் லை; அவருடைய ஆசனம் காலி யாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப் படாமையால் அக்பருக்கு உற்சா கம் இல்லை. சிறிது நேரம் பொறு த்திருந்தார்: அப்பொழுதும் பீர் பால் வர வில்லை.

ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு Continue reading

புத்திசாலி தவளையும் முட்டாள் தவளையும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவு க்கு மழை. அந்த ஏரி நீர் குளி ர்ச்சி அடைந்து விட்டது. அந் தக் குளிரைத் தாங்க முடி யாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலு ள்ள ஒரு கிணற்றுக்கு வந் தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் Continue reading

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை Continue reading

பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது?

“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போ கிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.
“என்ன சங்கதி’ என்றார்.
“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை’ என்றான் வந்தவன்.
இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந் தது. அவனுக்கு ஒரு சம்பவ த்தை Continue reading

செலவுக்கு ஒரு சிகிச்சை!

சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு வில கினார். பிறகுதான் தெரிந்தது, அது, முத்தரசு அண்ண னுடைய கார் என்று.
கண்ணாடியை இறக்கி, சொக்கலிங்கத்தைப் பார்த்த முத்தரசன், “”என்ன சொக்கா… நடந்து போற… சைக்கிளை வித்துட்டியா?” என்று கேட் டார்.
புது காரிலும், முத்தரசன் போட்டிருந்த உடையிலும், அமெரிக்க பணம் டாலடித்தது.
“”இல்லைண்ணா… சைக்கிள் டயர் பஞ்சர்; கடையில் விட்டிரு க்கேன்… நல்லாயிருக்கீங்களா… அண்ணி நல்லா இருக்காங் களா… ரகு அமெரிக்காவிலிருந்து பேசுறானா… எப்ப ஊருக்கு வர்றானாம்?”
“”எல்லாத்தையும் ரோடுல வச்சே பேசுவியா… உள்ளே வா… உன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேசணும்.”
சங்கடமாக ஏறி, உடம்பை ஒடுக்கி Continue reading

“சிறுகதை” எழுதுவது எப்படி?

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.

”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.

Continue reading

கடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று

நான்  லீனியர் கதை (spoof story)

சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்:

உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது. ஐயோ இந்தக் கதையை நேற்று எந்த பத்தியோடு நிறுத்தினோம் என்று தெரியவில்லையே என்று குழம்பத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் ஆரம்பித்து, எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம்.

பிரார்த்தனை:

நள்ளிரவு நேரத்தில் சிறுகதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, யாருக்கேனும் தலைமுடியை பிய்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால், கரண்ட் கட் ஆகிவிட வேண்டும் கடவுளே. ஏனெனினில் என்னால் யார் தலையும் சொட்டையாகிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பதைத் தெள்ளத் தெளிவாக ஆணித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகிறேன் கடவுளே……

ஆலோசனை:

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே

அத்யாயம் : ….. : …… (தெரியாது)
– பகவத் கீதை

(எதற்காக இந்த ஆலோசனை என்று எனக்கே தெரியவில்லை. இருப்பினும் எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேனோ என்னவோ?)

(1)

நான் லீனியர் கதை என்ற இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் வாசகரான நீங்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்ள முடியவில்லையே என உங்கள் சொட்டைத் தலையில் நறுக்…..நறுக்…..நறுக்…… என்று ரத்தம் வர கொட்டிக் கொண்டிருக்கலாம்.

அஜீரணம் ஆனதைப் போல் உணர்ந்து உவ்வேக்….. உவ்வேக்…. என்று வாந்தி எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும்போது எதிர்வீட்டு மசக்கையான பெண் உங்களை விநோதமாக சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கலாம்.

தெருவில் சிவனேயென போய்க்கொண்டிருப்பவனை அழைத்து அவன் மண்டையில், மடார்…….மடார்……. என கட்டையால் அடிக்க வேண்டும் போல் தோன்றலாம்.

இயற்பியல் வாத்தியாரை துப்பாக்கி முனையில் இக்கதையை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதைப் போல் பகல் கனவு கண்டு கொண்டிருக்கலாம்.

அவர் படிக்கும் பொழுது தூங்கிவிடாமல் இருக்க அவருக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கலாம். (கனவில்)

கண்ணீர்விட்டு கதறிக் கொண்டிருக்கும் அவரது கண்ணீரை உங்களது வெண்ணிற கைக்குட்டையால் துடைத்துவிட்டுக் கொண்டிருக்கலாம்.

உனக்கு துரோகம் இழைக்க நினைக்கும் உன் காதலிக்கு இக்கதையை பரிசளித்துக் கொண்டிருக்கலாம்.

அவளிடம் ‘நீ இக்கதையை பாதியில் நிறுத்திவிட்டால் நம் காதலே பொய்” எனக்கூறி அவள் படிப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம்.

பயங்கரமான கடல்மிருகம் (முதல் எழுத்து ‘சு’ கடைசி எழுத்து ‘றா’) பெயரைக் கொண்ட திரைப்படத்தில் நடித்த கதாநாயகனை பயங்கரமாக பழி வாங்குவதற்காக, இக்கதையை பிரதியெடுத்து நம்பியாரைப் போல் சிரித்துக் கொண்டே அவரது முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இக்கதையை படித்துவிட்டு அந்த கதாநாயகன் ஐ.சி.யூ.வில் துடித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கலாம்.

மெலினா படம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அந்த கதாநாயகியைப் போல் பழிவாங்கப்பட்டதாய் உணரலாம்…

மார்ட்டின் ஸ்கார்செசி, மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக திட்டுவாங்கிக் கொண்டிருப்பதைப் போல் கெட்ட கனவு கண்டு கொண்டிருக்கலாம்.

க்வென்டின் டராண்டினோ இதுபோன்ற ஒரு கொடூரத்தை தன் திரைப்படத்தில் கொண்டுவர முடியவில்லையே என ட்விட்டரில் வருத்தப்பட்டதை படித்துக் கொண்டிருக்கலாம்.

ஹீரோயினை வில்லன் கதறக் கதறக் கற்பழித்துக் கொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் அதீத குழப்பத்தில் இருக்கும் நீங்கள் ‘சூப்பரப்பு” என கவுண்டமனியைப் போல் முற்போக்குச் சிந்தனையுடன் கைதட்டியபடி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கலாம்.

கொடைக்கானலில் ஹேர்ப்பின் பெண்ட் வளைவுகளில் அதிவேகமாக வளைந்து கொண்டிருக்கும் பேருந்தில் அமர்ந்து கொண்டிருக்கும் நீங்கள், இது அப்படி ஒன்றும் அந்த கதையைப் போல் பயமுறுத்துவதாக இல்லை என்று தெம்புடன் கூறிக் கொண்டிருக்கலாம்.

ஒரு தூக்கு தண்டனை கைதிக்கு இக்கதையின் பிரதியை பரிசளித்துக் கொண்டிருக்கலாம்.

சிறையிலிருந்து தப்பித்த அந்த கைதி கொலை வெறியுடன் அடிபட்ட புலியை போல் உங்களை தேடிக் கொண்டிருக்கலாம்.

சொர்க்கத்தில் இறுதித் தீர்ப்பு நாளன்று

1. பருத்தி வீரன் கிளைமாக்ஸ் காட்சியை நூறுமுறை பார்ப்பது

2. நான் லீனியர் கதையை 3 முறை படிப்பது

3. எண்ணெய் சட்டியில் வறுபடுவது

இந்த மூன்று தண்டனையில் எதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய் என்று கடவுள் கேட்டு முடிப்பதற்கு முன், ஓடிச்சென்று எண்ணெய்ச் சட்டியில் நீ குதித்துக் கொண்டிருக்கலாம்.

அப்படி என்ன பருத்திவீரன் கிளைமாக்சிலும், நான் லீனியர் கதையிலும் இருக்கிறது என குழம்பிப் போன கடவுள், அவையிரண்டையும் முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு படபடப்பு தாங்க முடியாமல் மாரடைப்பு வர, அவரது உதவியாளர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவதை, நீ எண்ணெய் சட்டியில் வறுபட்டுக் கொண்டே ரசித்தபடி பார்த்துக் கொண்டிருக்கலாம்.

(அல்லது)

கடவுளும் ஓடிவந்து எண்ணெய்ச் சட்டிக்குள் சம்மர் சாட் அடித்தபடி குதிக்கலாம் உனக்குத் துணையாக

(அல்லது)

கடவுளும் இவ்வாறு கூறியிருக்கலாம் வாய்தவறி

‘கடவுளே என்னைக் காப்பாற்று”

(2)

பச்சிழம் குழந்தையின் செந்நிற பாதம்….. இமைக்கும் கண்ணிற்கும் இடையே ஏற்படும் மென்மையான உரசுதல்…. இளம் சாரல் வீச அதிகாலையில் நடைபயிற்சி…. காதலியிடம் காதலை சொல்லாமல் காதலுடன் கொடுக்கும் முதல் முத்தம்….. அவளின் அதிர்ச்சி கலந்த பார்வை…. ரோஜா இதழின் மென்மையை போன்ற இளங்காற்றின் பறக்கும் அவளது முடி….

என வெட்டி உணர்ச்சிகளால் நிரம்பிய இலக்கிய உலகத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும் கற்காலத்து செத்த மூளைகளுக்கு முற்போக்கு சிந்தனைகளையும், சர்ரியலிசத் தன்மைகளையும், பின்நவீனத்துவக் கோட்பாடுகளையும், வழங்குமாறு உந்தித்தள்ளும் கடமை உணர்ச்சிக்கு மதிப்பளித்து…..

அந்த வாய்ப்பைப் பெறுவது பற்றி…..

இர்ரிவர்சிபிள் என்னும் படத்தில் வரும் வன்கலவி காட்சியை இடது கையில் பாப்கார்ன் பக்கெட்டுடனும், வலது கையில் அப்சிந்த் அல்லது எல்.என்.டி. அல்லது மாரிஜுவானா என ஏதேனும் ஒரு போதை வஸ்துவுடனும்…

ஒப்புக்கொண்டால் உன் காதலி, அல்லது அவள் செருப்பால் அடிக்கும் பட்சத்தில், யாரேனும் ஒரு சாலையோரப் பெண்மணி, அல்லது அவள் காரித்துப்பிவிடும் பட்சத்தில் தன்னந்தனியாக,

(மனைவியிடம் மட்டும் வேண்டாம். அவள் எப்பொழுதும் பயங்கர ஆயுதங்களான சப்பாத்திக் கல், உலக்கை, வெண்கல தோசைக்கரண்டி, மிக முக்கியமக பெண்ணியம் பேசுதல் என ஏதேனும் ஒளித்து வைத்திருக்கலாம்)

ஐநாக்ஸ் தியேட்டரின் ஸ்கிரீன் 2 வில் அமர்ந்தபடி பாநூறு முறை பார்க்கும் பட்சத்தில்….

மேலும் அந்த வாய்ப்பை பெறுவது பற்றி…

அதிகாலை வேளை குளித்து முடித்துவிட்டு, மல்லிகைப் பூ போன்ற இட்லியில் மணக்கும் சாம்பாரை ஊற்றிவிட்டு டி.வி.டி. பிளேயரில் ‘இச்சீ த கில்லர்” படத்தின் முதல் காட்சியை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது… (நான் சாப்டேண்டா…. நான் சாப்டேன்)

மேலும் அந்த வாய்ப்பைப் பெறுவது பற்றி

ஆடிசன் என்னும் ஜப்பானிய திரைப்படத்தின் அருமையான திரைக்காட்சிகளை வீட்டில் இருக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் கூட்டி வைத்துக் கொண்டு அருமையாக போட்டுக் காண்பிக்கலாம்.

கோபப்பட்டு கொதித்தெழும் உங்கள் வீட்டு தாத்தா தன் கையில் வைத்திருக்கும் நீண்ட கம்பை உங்களை நோக்கி 100 கிலோமீட்டர் வேகத்தில் வெறியுடன் வீசலாம்.

உங்களுக்கான குறிப்பு : நீங்கள் குனிந்து கொள்ளலாம்

கோபப்படும் உங்கள் மனைவி தன் பார்வையாலேயே சிவனைப் போல் உங்களை எரிக்கலாம்

உங்களுக்கான குறிப்பு : வேறு வழியில்லை எரிந்து விடுங்கள். ஒன்றும் செய்ய முடியாது.

உங்கள் வீட்டு கோபமான சுட்டியான குழந்தை உங்கள் கையை நறுக்கென் கடித்து விடலாம்

உங்களுக்கான குறிப்பு : கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவிக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு நாய் உங்கள் மேல் பாய்ந்து கடித்து, குதறி, பிராண்டி,……… அய்யோ

உங்களுக்கான குறிப்பு : தயவு செய்து மற்றும் கண்டிப்பாக தொப்புளை சுற்றி 40 ஊசிகளைப் போட்டுக் கொள்ளவும்.

மேலும் அந்த வாய்ப்பைப் பெறுவது குறித்து

வித்தியாசமாக இருப்பது :

பசியுடன் கதறிக்  கொண்டிருக்கும் கைக்குழந்தைக்கென வைக்கப்பட்டிருக்கும் புட்டிப்பாலை, விருட்டென எடுத்து நிப்பிலைப் பிடுங்கி தூர எறிந்து விட்டு கடகடவென குடித்து விடுவது.

குழந்தையின் தாயால் விளக்கமாறு

குழந்தையின் தந்தையால் உருட்டுக் கட்டை

அன்பான பக்கத்து வீட்டு ஆண்கள் சைக்கிள் செயின், இரும்புக் கம்பி, செங்கற்கல், சோடாபாட்டில் மற்றும் பல்வேறு ஆயுதங்கள்

அன்பான பக்கத்து வீட்டு பெண்கள் குளிக்கும் மக்(பக்கத்து வீட்டுக்காரனுடையது), மஞ்சள் தேய்க்கும் கல், ஓட்டை விழுந்த பிளாஸ்டிக் குடம், செப்பல் (பிய்ந்து போனது மட்டும்) மற்றும் இதர பொருட்கள்

ஒருவேளை உயிருடன் இருந்தால் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு பெருமை பட்டுக் கொள்ளலாம்.

எவனாவது……….. எவனாவது……….. ஒத்துக் கொள்ள மறுத்தால் அந்த பயங்கர கடல் மிருகத்தின் படத்தை கண்ணீர் மல்க பார்த்த காட்சியை 18 க்கு 10 சைசில் போட்டோ பிரிண்ட் எடுத்து வீட்டின் நடுவில் ஒட்டி வைத்துக் கொள்ளவும்.

சர்ரியலிசம், கியூபிசம், ரியாலிசம், எக்ஸ்டென்ஷியலிசம், மேஜிக் ரியாலிசம், நியோ ரியாலிசம் என எழுதி அழகாக அம்புக்குறியிட்டு அதன் பக்கத்தில் உங்கள் பெயரை எழுதி வைத்துக் கொள்ளவும்.

(3)

1. சர்ரியலிச வன்முறை பற்றி கூறுங்கள்?

மலைக்காடுகளுக்கு காவல் துறையில் உயரதிகாரியாக வேலைபார்க்கும் கணவனுடன் சுற்றுலா சென்றிருக்கும் பெண்ணாகிய உன்னை, பெரிய மீசை வைத்தபடி யாரேனும் கடத்திச் சென்று மலை உச்சிக்கு தூக்கிச்சென்று துப்பாக்கி முனையை உன் நெற்றியில் வைத்து சுட்டுக் கொல்ல எத்தனிக்கும் போது……

‘நீ ஒரு பாரதியின் பாடலை வேகமாக கூறியபடி அவனை எதிர்க்க வேண்டும்’

நன்றாக நியாபகம் வைத்துக் கொள், அது ஒரு பாரதியின் பாடல் வரிகள்.

நான் பாரதியின் வரிகளை பாடுகிறேன் என்று கூறிக் கொண்டு அச்சமில்லை, அச்சமில்லை என்று ஆரம்பிப்பாயானால் நானே தேடி வந்து உன்னை செருப்பால் அடிப்பேன்…… ஜாக்கிரதை…….

அந்தப் பாடல் வரிகளை யாரும் அவ்வளவாக அறிந்திருக்கக் கூடாது. இது மிக கண்டிப்பான குறிப்பு. உனக்கு மேலும் ஏதேனும் தெரிந்திருக்கும் பட்சத்தில், கலித்தொகையில் இருந்து கூட ஏதேனும் பாடலாம்…..

2. நீங்கள் கூறுவதற்கும் சர்ரியலிஸ வன்முறைக்கும் என்ன சம்பந்தம்?

கேள், உண்மையான வன்முறை என்பது, சுட்டுக் கொல்ல வந்தவன் பாரதியின் பாடல் வரிகளைக்கேட்டு விட்டு சுட்டுக் கொல்லாமல் நீ விட்ட அதே இடத்திலிருந்து அதே பாரதியின் பாடலைத் தொடருவது…. இது ஒரு செருப்பை வாயில் கவ்வக் கொடுத்து மறு செருப்பால் மண்டையில் மடார்….மடார்…. என்று அடிப்பதற்கு சமம். இது ஒரு நவீன வன்முறை. இதுவே சர்ரியலிச வன்முறை. யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, எனக்கும் பாரதிக்கும் இது நன்றாகப் புரியும்.

3. பாரதியின் கவிதைகள் சர்ரியலிசக் கவிதைகளா?

‘செருப்பால அடிப்பேன்’ என வினுச்சக்கரவர்த்தியின் குரலில், பாரதியின் உருவம் என்னைப் பார்த்து அந்த வார்தையை கூறியபோது நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அதனால் இந்தக் கேள்விக்கு என்னுடைய பதில் மொளனம்.

4. எக்ஸ்டென்ஷியலிசம் என்றால் என்ன?

நீ காலையில் பல் துலக்கியதிலிருந்து, பாத்ரூம் போனது வரை அனைத்தைப் பற்றியும், பேசுவது, எழுதுவது, விவாதிப்பது.

5. சர்ரியலிச தன்மையுடன் ஒரு வார்த்தை ப்ளீஸ்?

போடி பொசக்கெட்டவளே

6. நீங்கள் ஒரு சர்ரியலிச எழுத்தாளரா?

5வது கேள்விக்குரிய பதிலே இதற்கும் பதில்

கேள்விகள் : லத்தின் அமெரிக்காவிலிருந்து

– சூர்யா , thanks Keetru

இரவு – சிறுகதை

(நிழல்கள்: கடந்த 2006-ல் தமிழோவியம் – தேன் கூடு போட்டிக்கான (வளர்சிதை மாற்றம்) படைக்கப்பட்ட‍ )

டி வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழிந்த பின்பும் நெஞ்சில் படபடப்பும் உடலில் பரவியிருந்த தகிப்பும் குறைந்த மாதிரித் தெரியவில்லை. இந்தப் படபடப்பும் தகிப்பும் உடல் சார்ந்து எழுந்ததல்ல, மனத்தின் போராட்டத்தினால் எழுந்தது. நேற்றிரவு காவேரியின் கரையில் நின்றுகொண்டு நானும் ராஜாவும் பேசிக்கொண்டிருந்தபோது இருந்த அமைதியான, போராட்டமற்ற மனநிலை இப்போதில்லை. ஒரே ஒரு இரவுக்குள் நான் புரட்டிப்போடப்பட்டேன்; இல்லை நான் என்னை புரட்டிப் போட்டுக்கொண்டேன். அதுவரை நானே என்னைப் பற்றி ஏற்றிக்கொண்டிருந்த பீடங்கள் அதன் அடியை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தன. ஸ்டேஷனுக்கு வரும் வழியில் ஓஷோவின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். அதைப் பிரித்து வம்படியாக வாசிக்கத் தொடங்கினேன். இப்படி நானாக ஏற்படுத்திக்கொள்ளும் லயிப்பிலிருந்து என்னை நான் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பி வாசித்தேன். இதுபோன்ற குழப்பமான நிலையில் புத்தகம் வாசித்தல் நல்லதொரு பழக்கம் என நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் புரிந்தது, இப்படியே நினைத்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய, இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை என்று. இந்த நினைப்பு எழுந்ததும் ஓஷோவின் மீதும் என் மீதும் இந்த உலகத்தின் மீதும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு எழுந்தது. ஜன்னல் வழியே காறித் துப்பினேன். ப்ளாட்பாரத்தில் எனது எச்சில் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு நாடு போலச் சிதறி விழுந்தது. அப்போதுதான் என் ஜன்னலைக் கடந்தவன், என்னைத் திரும்பிப் பார்த்துச் சலித்துக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் சந்தோஷம் உண்டானது. இன்னும் ரயில் கிளம்பவில்லை. ப்ளாட்பாரத்தின் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் கொஞ்சம் என் நினைவுகளைம் மறக்கலாமோ.

எதிரே இருந்த கடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒரு நடிகை இரண்டு கைகளையும் தலைக்கு மேலே குறுக்கக் கட்டித் தன் மார்பகத்தை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள். எனக்குள் மீண்டும் நினைவுகள் தலைதூக்கத் தொடங்க, அதை மறுத்துப் பார்வையை ஆவின் பால் ஸ்டாலுக்கு மாற்றினேன். சிறுவன் ஒருவன் அவன் அருகில் நிற்கும் மனிதரிடம் ஏதோ வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அடம் பிடித்தாலும் என்னளவில் அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். வேணும் என்று கேட்டு அடம்பிடித்தல், வாழ்க்கையின் சுமைகளைப் பற்றிய சிந்தனையின்றி இருத்தல் போன்ற குழந்தைமை விஷயங்கள் ஒரு காலத்திற்குப் பின் மறுக்கப்படுகின்றன. அதை வைத்துப் பார்த்தால் அந்தச் சிறுவன் சந்தோஷமாய்த்தான் இருக்கிறான். ஓடிப்போய் அவனைப் பிடித்துத் தூக்கி முத்தம் கொடுத்து, நீ சந்தோஷமா இருக்கடா பயலே, நீ சந்தோஷமா இருக்கடா, அண்ணாவைப் பார், கெடந்து அலையறேன் எனச் சொல்லலாம் போலத் தோன்றியது. அந்தச் சிறுவன் பக்கத்தில் நின்றிருந்த அந்த ஆள் சிறுவனின் அப்பாவாக இருக்கவேண்டும். சிறுவன் கேட்பதை வாங்கித் தர மறுத்துக்கொண்டிருந்தார். அந்த ஆளைப் பிடித்து உலுக்கி, பசங்க கேட்கிறதையெல்லாம் வாங்கிக்கொடுங்க சார், இந்த வயசு போனால் வராது எனச் சொல்லலாம். மனதில் நினைக்கிறதையெல்லாம் செய்யமுடிகிறதா என்ன? ஆனால் நினைக்காததை செய்ய முடிந்தாகிவிட்டது. காவேரியில் அதிசயமாய் நீர் அதிகம் இருந்தது. நீர் சுழித்துக்கொண்டு ஓடும் அழகைப் பற்றியே சிந்திந்துக்கொண்டிருந்தபோது நேற்றாகிய அந்த நாள் நான் மறக்கமுடியாத நாளாகிப் போய்விடும் எனச் சற்றும் நினைக்கவில்லை. மணற்பரப்பில் நானும் ராஜாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுகூடக் கீதாவைப் பற்றிப் பேசவில்லை. நானும் ராஜாவும் பேசாத விஷயங்கள்தான் இருக்கிறதா என்ன? ஆனாலும் நேற்றிரவு என்னைக் கீதா அப்படிச் சுற்றிக்கொள்ளுவாள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கீதா, நீ என்னைப் புரட்டிப் போட்டுவிட்டாய். நேற்றும், இன்றும், இனி என்றுமா?

வண்டி கிளம்புவதற்கான ஆயத்தங்கள் ஏற்பட்டன. ஆவின் பால் ஸ்டாலில் இருந்த சிறுவனும் அவனது அப்பாவும் என் கம்பார்ட்மென்ட்க்கு எதிரே இருந்த கடையில் ஒரு புத்தகமும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிவிட்டு வேக வேகமாக எனது கம்பார்ட்மென்ட்க்குள் ஏறினார்கள். பக்கத்து கம்பார்ட்மென்ட் பிரயாணி ஒருவரை வழியனுப்ப வந்திருந்த ஒரு பெண் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக்கொண்டு, ரயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அவள் அழுதது அவளது முகம் கோணிக்கொண்டு போவதிலிருந்து தெரிந்தது. நான் யாருக்கும் இப்படி அழுததாக நினைவில்லை. எனக்குள்ளே இந்தப் பாசம், அன்பு போன்ற சமாசாரங்கள் செய்யும் சேட்டைகள் குறைவு என்றே நான் என்னை நம்பி வந்திருக்கிறேன். இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. நான் இப்படித்தான் எனச் சொல்லமுடியாதபடிக்கு, நான் இப்படித்தான் எனச் சொல்லிவந்த ஒரு விஷயத்தில் ஒரு பெரிய இடி நேற்றிரவுதான் இறங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் கொஞ்சம் பொலிட்டிகல்லி கரெக்டாக, பிற்பாடு என்னிடமிருந்தே நான் தப்பிப்பதற்கு வசதியாக, ‘நான் நம்பி வந்திருக்கிறேன்; நான் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்கிற மாதிரி சொல்லிக்கொள்வது நல்லது. காமம் என்கிற விஷயம் எனக்குள், என் கட்டுக்குள் இருக்கிறது என்று எத்தனை திடமாக என்னைப் பற்றி நானே யோசித்து வைத்திருந்தேன். அத்தனையையும் போட்டு உடைத்தாள் கீதா. எனது பத்தொன்பதாம் வயதில் ஒரு பெண்ணை நான் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. அவள் நெருங்கிப் படுத்தபோது விலக்கியிருக்கலாம். அவளது கைகள் என் மேனியெங்கும் மேய்ந்தபோது விலகிப் போயிருந்திருக்கலாம். அவளது மென்மையான உதடுகள் என் உதடுகளைப் ஸ்பரிசித்தபோது விலக்கியிருக்கலாம் – எனக் கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போதே நான் என் வசம் இழந்துவிட்டிருந்தேன். என் நினைவு என்னிடம் இருந்தால்தான் விலகலாம், விலக்கியிருக்கலாம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். ரயிலின் ஒரு ஜெர்க்கில் கொஞ்சம் முன்னகர்ந்து பின்னகர்ந்தேன். கைக்குட்டையை மூடி அழுத பெண் என் ஜன்னல் வழியே மெல்ல கடந்தாள். பின்னோக்கி நகர்ந்து தலையைப் பின்னுக்குச் சாத்தி, ரிலாக்ஸ்டாகப் படுத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். எம் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண் மருத்துவத் துறை தொடர்பான புத்தகம் ஒன்றைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என்ட்ரன்ஸ் பாஸ் செய்து, மெடிக்கலில் சேரப் போகிறாளாயிருக்கும். கரிய நிறம், ரொம்பவும் மெல்லிசாக இருந்தாள். அவளது மேல் நெற்றியில் இருக்கும் கூந்தல் ஜடைக்குள் அடங்காமல் வெளியே பறந்து கொண்டிருந்தது. ஒரு காலை இன்னொரு கால் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, வலது கையில் செல்·போனையும் இடது கையில் புத்தகத்தையும் வைத்திருந்தாள். அடிக்கொரு தடவை கம்பார்ட்மென்ட்டை விட்டு வெளியே நோக்கினாள். டிக்கெட் எடுக்காதவன் டி.டி.ஆர்.-இன் வரவை எதிர்பார்ப்பது போல. இவள் டிக்கெட் எடுக்காமல் ஏறியிருக்க வாய்ப்பில்லை. அவளது சுரிதார் கொஞ்சம் மேலேறி, ஹீல்ஸ் அணிந்திருந்த அவளது கால் என் முன் துருத்திக்கொண்டு தெரிந்தது. காலில் மிருதுவான ரோமங்கள் முளைத்திருந்தன. கீதாவின் உடலில் ரோமங்கள் இருந்ததாக நினைவில்லை. அவள் என்னை நெருக்க நெருக்க எல்லாம் சொல்லி வைத்தமாதிரி மிகக் கச்சிதமாக அவள் மீது பரவியது நினைத்து இப்போதும் அதிசயமாக இருந்தது. அந்த நினைவு கூட என்னை இன்னும் சூடேற்றியது. இனி காணும் பெண்களை கீதாவின் உடல் நினைவில்லாமல் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது என் முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணைக்கூட நான் எந்தவித மேலதிக எண்ணங்கள் இல்லாமல் பார்க்கிறேனா என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை. இந்த நேரத்தில் வேறு எண்ணங்கள் எனக்கு இல்லை என்றாலும் அதை உறுதியாகச் சொல்லமுடியாது என்பதையும் உணர்கிறேன்.

பக்கத்து இருக்கையில் ஒரு மாமாவும் மாமியும் இருந்தார்கள். வண்டி கிளம்பிய பத்து நிமிடத்திற்கெல்லாம் தனது பர்த்தில் படுக்க ஆயத்தப்பட்டுக்கொண்டார்கள். எனக்கு அப்பர் பர்த். அவர்களுக்கு வழி விட்டு, நான் எனது பர்த்தில் மேலேறிப் படுத்துக்கொண்டேன். மாமி லோயர் பர்த்திலும் மாமா மிடில் பர்த்திலும் படுத்துக்கொண்டார்கள். அந்தப் பெண் எதிர் வரிசையில் உள்ள லோயர் பர்த்தில் அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த அதே நிலையில் அமர்ந்து அதே புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் என் கண்களை மூடித் தூக்கத்தை எதிர்நோக்கத் தொடங்கினேன். தூக்கத்தைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் மனதுள் அலையாடின. மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது சிரமாமாயிருந்தது. இப்படிச் சிரமமாய் இல்லாமலிருந்திருந்தால் நேற்றே அதை நிறுத்திக் கொஞ்சம் தப்பித்திருக்கலாம். எதுவும் நம் கையில் இல்லை என்கிற சால்ஜாப்புகள் உதவாமல் போனது குறித்துத் துக்கம் தொண்டையை அடைத்தது. இந்தக் காமம் என்கிற பாம்பு எப்போதும் என்னைச் சுற்றியே இருந்திருக்கிறது. எட்டாம் வயதிலேயே காமத்திற்குட்ட காலங்கள் இருந்ததாக என் நினைவு சொல்லியது. எட்டு வயதில் காமம் இருந்திருக்க முடியுமா என்று ஏதேனும் டாக்டரிடம் கேட்கவேண்டும். பதிமூன்றாம் வயதில் சுந்தர் அவனது பள்ளியிலிருந்து கிழித்துக்கொண்டு வந்திருந்த இரண்டு பக்கங்களைக் காண்பித்தபோது உடம்பு சில்லிட்டது. உடம்பின் அத்தனை ரத்தமும் ஒரே இடத்தில் குவிய நான் நிலை கொள்ள இயலாமல் கால் தள்ளாடி அந்த மின் கம்பத்தின் கீழே நின்றிருந்த காட்சிப் படிமம் இப்போதும் என்னுள் அப்படியே அடங்கிக் கிடக்கிறது. அந்த மூன்று பக்கங்கள் மிகவும் கொச்சையான மொழியில் ஆண் பெண் உடலுறவைச் சொல்லிக்கொண்டே போனது. அதில் சொல்லப்படும் கதை போன்ற ஒன்று கூட இன்னும் நினைவிருக்கிறது. முதலிரவுக்குக் காத்திருக்கும் ஒரு கணவனின் எண்ணங்களும் அவனை ஏமாற்றி விட்டு அந்தப் பெண் இன்னொருவனும் உறவு கொள்ளப்போவதும்… இது இப்போது தேவையா? கண் விழித்துப் பார்த்தேன். அரைத் தூக்கத்தில் இருந்திருக்கிறேன். கண் எரிந்தது. கம்பார்ட்மென்ட்டின் விளக்கை யார் எப்போது அணைத்தார்கள் எனத் தெரியவில்லை. தலை கடுமையாக வலித்தது. நேற்றிரவும் தூக்கமில்லாமல் கழிந்தது. அந்த இரவின் சம்பவம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்றிய அசதியும் வெம்மையும் ஒரே போக்காகத் தலைக்குள் புகுந்துகொண்டது போல. ஒருக்களித்துப் படுத்தேன். கம்பார்ட்மென்ட்டின் இருக்கைகள் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது.

மருத்துவப் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்த பெண் லோயர் பர்த்தில் படுத்திருந்தாள். அவளின் அருகில் அவளை ஒட்டினாற் போல் இன்னொரு பையன் படுத்திருந்தான். அவனுக்கு வயது இருபது அல்லது இருபத்தி ஒன்று இருக்கலாம். எனக்குப் பக்கென்று இருந்தது. அவன் எப்போது வந்தான், எப்படி வந்தான்? இருவரும் மெல்ல கிசு கிசுவெனப் பேசிக்கொண்டார்கள். அவன் கிசு கிசுவென பேசும் வாக்கில் அவன் உதட்டால் அவளின் செவியையும் அங்கு சூழ்ந்திருந்த அவளது கூந்தலையும் ஒதுக்கித் தள்ளினான். அவனது ஒவ்வொரு உசுப்பலுக்கும் அவள் இடங்கொடுத்து அவனை வெறி கொள்ளச் செய்தாள். எனக்குள் அடங்கிப் போயிருந்த காமம் மீண்டும் தலைதூக்குவதை உணர்ந்தேன். நேற்று இதே போல் ஒரு நிலையில் நான் இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் கீதாவை நான் உசுப்பேற்றத் தேவையில்லாமல் இருந்தது. மிகவும் தீர்க்கமான முடிவுடனேயே அவள் என்னை அணுகியிருக்கிறாள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. அப்படியானால் அவள் மனக்கண்ணில் இத்தனை நாள் நான் இப்படி ஒரு பிம்பத்தைப் பெற்றிருந்திருக்கிறேன் என நினைத்தபோது என்னுள் ஏதோ விட்டுப்போனது. கீதா எனக்கென ஒரு சுதாரிப்பு நேரத்தைக் கூடக் கொடுக்கவில்லை. பரபரவென என் மீது பரவினாள். தூக்கத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போயிருந்தது. இது ஒரு அத்துமீறல்தான். இதுவே வேறொரு விஷயத்தில் இருந்திருந்தால் எனது ஈகோ, எனது சுய கௌரவம் போன்ற விஷயங்களை எல்லாம் சம்பந்தப்படுத்தி ஏதேதோ யோசித்து, ராஜாவுடன் தர்க்கித்து ஒரு பெரிய இருப்பை ஏற்படுத்தியிருப்பேன். ஆனால் இந்த முறை காலையில் கிளம்பும்போது, போயிட்டு வர்றேன் கீதா என்றுதான் சொல்லிவிட்டு வரமுடிந்தது.

மருத்துவம் படிக்கும் பெண்ணும் அந்தப் பையனும் இன்னும் நெருக்கமாகப் படுத்துக்கொண்டார்கள். நான் அவர்களைக் கவனிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில் எதுவுமே நடக்காதது மாதிரி கருமமே கண்ணாகப் போய்க்கொண்டிருந்தது. இந்த ரயிலைப் போன்ற மனநிலை ஒரு மனிதனுக்கு வாய்த்திருந்தால் அவனே நிச்சயம் பெரிய ஞானியாக இருந்திருப்பான். ஒவ்வொரு நாளும் ரயிலுக்குள் நடக்கும் சம்பவங்கள், பேச்சுகள், சண்டைகள், கலவிகள் போன்றவற்றை யாரோ ஒருவன் தினமும் பார்த்து அதையெல்லாம் பதிந்து வைத்திருந்தால் அதுவே மனித குலத்தின் மகா காப்பியமாக இருந்திருக்கும். அந்தப் பெண் தன் இடையை அவனுக்கு ஏற்றவாறு அவன் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள். அவளின் காலின் மீது அவனது கால்களைப் போட்டுக்கொண்டு, இடது கையை அவளின் வயிற்றின் மீது போட்டுக்கொண்டு, அவளை அணைத்து ஒருக்களித்துப் படுத்துகொண்டான் அவன். அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அவனும் அவன் கண்களைத் திறக்கவே இல்லை. இரண்டு பேரும் ஏதேதோ முனகிக் கொண்டார்கள். மற்ற பர்த்களில் இருந்த மாமாவும் மாமியும் விட்ட குறட்டையை மீறி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது கேட்கவே இல்லை. அவன் அவளைத் தன் கால் கொண்டு இறுக்கிக்கொண்டான். அவள் இலேசாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவன் அவளை மெல்ல முத்தமிட்டான். நான் பெற்ற முத்ததின் வெறியே இன்னும் அடங்காத நிலையில் இந்த முத்தம் இன்னும் என்னை வெறிகொள்ளச் செய்தது. அடுத்த நிறுத்ததில் இறங்கி மீண்டும் திருச்சி சென்று, கீதா அறியாதவாறு அவள் அருகில் படுத்துகொள்ளலாம் என்று தோன்றியது. இந்த எண்ணம் தோன்றவுமே கீதாவைப் பற்றி இப்படித்தான் இத்தனை நாள் நினைத்திருக்கிறேன் போல என்ற எண்ணமும் எழுந்தது. என் உள் மனதில் அடங்கிக் கிடந்த எண்ணம்தான் அவள் என் மீது பரவும்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க வைத்ததோ. மீண்டும் மீண்டும் இந்தக் களியாட்டங்களில் என் மனம் சுழல்வதை நினைத்து வெறுத்து, இனி அவர்களைப் பார்க்கக்கூடாது என முடிவு கட்டி, கண்ணை இறுக்க மூடிக்கொண்டு படுத்தேன். ரயில் மதுரையைக் கடந்திருக்கும். இன்னும் மூன்று மணிநேரத்தில் திருநெல்வேலியில் இறங்கிக் காலையிலேயே அம்மாவின் முகத்தைப் பார்த்துவிடலாம். அம்மாவின் முகம்தான் எத்தனை சாந்தமானது. இதுவரை நான் பார்த்தது போல் அம்மாவின் முகத்தை என்னால் களங்கமில்லாமல் பார்க்கமுடியுமா? இந்தச் சந்தேகம் பரவவும் எனக்குள் ஒரு பீதி எழுந்தது. இனி அம்மாவின் மடியில் தலை வைத்து என்னால் தூங்க முடியுமா? மருத்துவம் படிக்கும் பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. நான் பார்த்தபோது அவள் அவன் கையை இரண்டு முறை செல்லமாகத் தட்டினாள்; பின்னர் மீண்டும் சிரித்தாள். கீதாவின் சிரிப்பொலி ஒரு மாதிரியாகக் கொணட்டிச் சிரிக்கும் சிரிப்பொலி. அவளைப் பலமுறை கொணட்டி என்று கேலி செய்திருக்கிறேன். காவேரியின் கரைகளில் பதினெட்டாம் பெருக்கு அன்று உணவு உண்ட ஒரு சமயத்தில் அவளைக் கொணட்டி எனச் சொல்லப்போக அவளின் அத்தை பையன் என்னைக் கடுமையாகத் திட்டினான். மறுநாள் கீதா என்னிடம் அவனைக் கண்டுக்காத, அவன் யாரு, நீ சொல்லு என்று சொன்னாள். அப்போது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷம்தான் வித்தாகி மரமாகி அவளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது. பேசாமல் கீதாவைத் திருமணம் செய்துகொண்டுவிட்டு இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துவிடலாம் என்றாலும் அதற்கும் வழி இல்லை. அவளுக்கும் எனக்கும் ஒரே வயது. இதெல்லாம் சரிப்படாது என்று எனக்கே புரிந்தது. அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேனா என்பது பற்றி எனக்கே சந்தேகம் இருந்தது. இல்லையென்றால் மீண்டும் கீதா அருகில் சென்று படுத்துக்கொள்ளலாம் என எப்படித் தோன்றும்? அவளும் நானும் கலந்து கிடந்தபோது அடுத்த கட்டில் கீதாவின் அம்மா மடக் மடக்கென தண்ணீர் குடிக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் என் தவறையும் என் நிலையையும் உணர்த்த அவளை விட்டு நான் விலக முற்பட்டபோது, அவள் என்னை விடவில்லை. விடவே இல்லை. இப்போது அந்தப் பெண் விடுபட நினைக்கிறாள். அவன் விடவில்லை. அவனின் ஆள்காட்டி விரல் அவளின் வயிற்றுக்கு மேலே வட்டங்களாக இட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வட்டங்கள் அவளை மெல்ல மெல்ல சூழ்கின்றன. அவளால் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர இயலாது என்பது எனக்கு அனுபவபூர்வமாய்த் தெரியும். கீதாவின் அம்மா போல யாரேனும் தண்ணீர் குடிக்கவேண்டும். யாரேனும் எதையேனும் மடார் என்று கீழே போடவேண்டும். அப்போதுதான் கொஞ்சம் தெளியும் அப்பெண்ணுக்கு. அந்த யாரோ நானேவாக இருக்கலாம். சத்தமாக இருமினேன். அந்த இருமல் அவர்களைக் கவனம் கொள்ளச் செய்தது. அதைவிட என் மேல் அப்பிக்கிடந்த கீதாவும் அவளின் எண்ணங்களும் கொஞ்சம் தெறித்து விழ எனக்கே உதவியது. இதை அறிந்ததும் மீண்டும் மீண்டும் இருமினேன். மாமாவின் குறட்டை நின்றது. நான் தட தடவெனச் சத்தம் வரும்படியாக அப்பர் பர்த்தில் எழுந்து உட்கார்ந்தேன். லோயர் பர்த்தைப் பார்த்தேன். அந்தப் பையனைக் காணவில்லை. எப்போது எப்படி ஓடினான் எனத் தெரியவில்லை. அந்தப் பெண் ஒன்றுமே நடக்காத மாதிரி போர்வையைப் போர்த்திக்கொண்டு ‘தூங்கிக்’கொண்டிருந்தாள். அவளின் சீரான குறட்டை ஒலி என்னைக் கலவரப்படுத்தியது. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்று. அடுத்த நொடியே ‘போயிட்டு வர்றேன் கீதா’ என்று சொன்ன என்னை மாதிரியே எனத் தோன்றியது.

பர்த்தில் இருந்து இறங்கி மூத்திரம் கழித்துவிட்டு மீண்டும் பர்த்தில் ஏறிப் படுத்தேன். தூக்கம் வருவது போன்று இருந்தது. இனி கீதா இல்லை, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் இல்லை, கனவுலகம் என்னை மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டு செல்லும். கனவுலகம் நினைவுலகத்தை விட சுமாராக இருந்தது. அங்குச் சிவப்பு நிற மலர்கள் பூத்திருந்தன. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடியது. வெயில் குறைவாக அடித்தது. மாரியம்மன் கோவிலில் கொடி ஏற்றியிருந்தார்கள். என் அம்மா வீட்டில் பாயாசம் செய்து வைத்திருந்தாள். பூனைக்குட்டி குதித்தாடியது. வேறோர் இடத்தில் பெரும் மழை பெய்தது. மழையில் கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் வெற்றிச் சிரிப்புடன் வந்தாள். அவள் கீதாவாக இருக்குமோ? சட்டென கண் விழித்தேன். ரயில் சீரான ஜதியில் ஓடிக்கொண்டிருந்தது. மாமாவும் மாமியும் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் நிஜமாகவே தூங்கிவிட்டிருந்தாள். கங்கை கொண்டானை நெருங்கியிருக்கவேண்டும் என்று உள்மனது சொல்லியது. நானும் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆன் செய்தேன். வரிசையாக ஏழெட்டு மெசேஜ்கள் வந்து விழுந்தன. அத்தனையும் அம்மா அனுப்பியது. ஆறு மெசேஜ்கள் where are you? என்று இருந்தது. ஏழாவது மெசேஜ் Happy Birth Day என்று இருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தவை எல்லாம் ஒரு நாள் இரவில் மாறிப்போன ஞாபகம் வந்தது. அந்த மெசேஜைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அம்மா அழைத்தாள்.

“சொல்லும்மா’

“ஹாப்பி பர்த்டேடா செல்லம்”

அம்மாவின் கொஞ்சல் என்றுமில்லாமல் அந்நியமாகப்பட்டது.

“தேங்க்ஸ்.”

“ஏண்டா டல்லா இருக்க? டயர்டா இருக்கா? எங்கே இருக்க? ஏன் மொபைலை ஆ·ப் பண்ண? எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன், மொபைலை ஆ·ப் பண்ணாதேன்னு. சரியான தூங்கு மூஞ்சி. சீக்கிரம் வாடா செல்லம். பார்த்து ரெண்டு நாளானதே என்னமோ மாதிரி இருக்கு”

“ம்”

“நா இவ்ளோ பேசறேன், வெறும் ம் தானா? சரி சீக்கிரம் வா, கோயிலுக்குப் போகணும், அப்பா காத்துக்கிட்டு இருக்கார்”

போனை வைத்துவிட்டாள். மணியைப் பார்த்தேன் ஐந்து காட்டியது. நான் வீட்டிற்குப் போகுமுன்பு அம்மா குளித்துவிட்டு தயாராகக் காத்திருப்பாள். அம்மாவின் குரலைக் கேட்டதும் என் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போனது போலத் தோன்றியது. அம்மாவின் உற்சாகம் என்னையும் பற்றிக்கொண்டதோ. கனவில் வந்த பெண்ணை கனவோடு மறந்துவிடுகிற மாதிரி கீதாவைக் கனவாக மறந்துவிட வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன். அம்மாவின் செல்லம் என்கிற வார்த்தை நான் எங்கோ ஓரிடத்தில் இன்னும் சின்னப் பையனாக இருக்கிறேன் என்று சொல்லியது. அந்த எண்ணம் என்னை ஒரு சிறு பையனாக மாற்றியது. சிறு பையனின் மூளைக்குள் ஏறிக்கிடந்த தேவையற்ற எண்ணங்களைத் தூக்கி எறிய நான் முயன்றேன். இப்படியே இன்னும் கொஞ்சம் முயன்றால், அம்மாவை நேரில் பார்க்கும்போது அவள் கண்ணில் தெரியும் அந்தச் சிறுவனில் இன்னும் கொஞ்சம் கரையலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

ரயில் திருநெல்வேலியில் நின்றது. எனது பதின்ம வயதின் உச்ச நிகழ்ச்சியை, என் வாழ்நாள் முழுதும் நான் சுமக்கவேண்டிய அந்த நினைவை மட்டும் எடுத்துக்கொண்டு, என் குற்ற உணர்ச்சியை ரயிலிலேயே விட்டு விட்டுக் கீழிறிங்கினேன். ஜன்னல் வழியாக அந்தப் பெண் எட்டி என்னைப் பார்த்தாள். “பை பை” என்றேன். திடுக்கிட்டுத் தலையை உள்ளிழுத்துக்கொண்டாள். திருச்சி ரயில் நிலையத்தில் ஒட்டியிருந்த அதே போஸ்டர் திருநெல்வேலியிலும் படபடத்தது. கையைத் தலைக்கு மேலே குறுக்கே கட்டித் தன் மார்பை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள் ஒரு நடிகை. ஒரு நிமிடம் நின்று இரசித்துவிட்டுத் தொடர்ந்து நடந்தேன்.


என்ன பிறப்பு இது?

இரை தேடச்சென்ற இடத்தில் தற்செயலாக இரு ஓணான்கள் சந்தித்துக் கொண்டன.இரண்டும் உலக விஷயங்கள் குறித்தும், தங்களுடைய வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தன. “என்ன பிறப்பு இது? ஏதோ சாப்பிடுகிறோம்,சுற்றுகிறோம், தூங்குகிறோம். இதெல்லாம் ஒரு வாழ்வா? நமக்கென்று ஒரு பெயர் உண்டா? மரியாதை உண்டா? இல்லை நம்மைப்பற்றி யாராவது பெருமையாகப் பேசுகிறார்களா? ஒன்றுமே கிடையாது. புள்ளிமானாகப் பிறந்திருந்தாலாவது ராஜாவின் தோட்டத்தில் சுற்றித் திரியலாம். நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும். இப்படி காடு முழுக்க சுற்றித்திரிய வேண்டிய அவசியமில்லை” என அலுத்துக் கொண்டது ஒரு ஓணான். இப்படி அது பேசிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு வேட்டை நாய்கள் ஒரு புள்ளிமானை துரத்திக் கொண்டு வந்தன. உயிர் பிழைக்கும் ஆசையில் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது புள்ளிமான். இருந்தாலும் வேட்டை நாய்கள் அதைப் பிடித்து விட்டன. தங்கள் கண் முன்னாலேயே புள்ளிமான் வேட்டையாடப்படுவதை இரண்டு ஓணான்களும் பார்த்தபடி இருந்தன. வேட்டை நாய்கள் சென்றபிறகு, அதுவரை பொறுமையாக இருந்த மற்றொரு ஓணான் பேசத் தொடங்கியது. “இங்கு நடந்ததைப் பார்த்தாயா? எல்லா உயிர்களுக்குமே ஆபத்து இருக்கிறது. நாம்தான் அதிலிருந்து கவனமாக நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புள்ளிமானின் நிலையைப் பார்த்தாவது நீ திருந்துவாய் என நினைக்கிறேன்” என்றது. ஓணானும் அதைப் புரிந்து கொண்டது போல தலையை ஆட்டியது. கதையின் நீதி: எப்போதுமே இருப்பதைக் கொண்டு திருப்தியடையக் கற்றுக் கொள்ள வேண்டும். -திருப்தி ***
thanks malaimalar

சிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை!

“சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.

அய்யய்யோ இவன வேற ஸ்கூலுக்கு கௌப்பணும்.. சாப்பாடு வேற கட்டணும்.. தலைவலின்னு நேத்து போட்ட மாத்திரை ஆளையே அசத்திடுச்சு… மனதில் பதட்டத்தின் ரேகைகள் கூட “டேய் எழுந்திரு, எழுந்திரு” மகன் ராகுலை எழுப்ப கண்களை திறக்காமலே எழுந்தவன், அந்த இடத்திலே ஒண்ணுக்கு போக டவுசரைத் தூக்க.. “டேய்.. டேய்.. மாடு கண்ணத் தொறயேன்.. ” என்று கத்தியபடி.. பாத்ரூமுக்குள் அவனைத் தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினான்.

மனைவி முகத்தைப் பார்த்தே சரியில்லை என்று புரிந்து கொண்ட மூர்த்தி அவசர அவசரமாக கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தான்.

ஆமாம்.. இவன் டீயப் போடுறதுக்குள்ள.. நான் ஆபீசுக்கே போய் சேர்ந்துடுவேன். வந்து வாச்சுது பாரு எனக்குன்னு.. ஒரு குடும்பப் பய காலைல எழுந்தமா, வேலையப் பாத்தமான்னு இருக்கணும்.. பொண்டாட்டில்ல வந்து எழுப்ப வேண்டியிருக்கு.

தோ.. ரெடியாயிடுச்சு.. இடைப்பட்ட நேரத்தில் அரையும் குறையுமாக பல் துலக்கியபடி.. ராகுலைத் தேட, அவன் பாத்ரூமிலேயே நின்று கொண்டிருந்தான். எருமை மாடு.. ஒண்ணுக்கு போக சொன்னா அங்கேயே நின்னுக்கிட்டு கெடக்கிறியே.. வா இங்க.. நீங்க கொஞ்சம் அவன் முகத்த கழுவக் கூடாதா? மனைவி சுதாவைப் பார்த்து கேட்டபடி ராகுலை இழுத்து வைத்து அவன் தேம்பத் தேம்ப முகத்தை பாத்திரம் கழுவுவது போல சலிப்புடன் கழுவி எடுத்தான்.

நீ சீக்கிரம் எழுந்து வேலையப் பாக்காம.. கோவம் வேற வருதா.. வேலைக்கு லாயக்கில்ல. வாய்தான் நீளுது.. ஆயி, அப்பன் வளர்ப்பு அப்படி.. சுதா தலைவாரிக் கொண்டே பொரிந்து தள்ளினாள்.

மரகதம்மாளும் சேர்ந்து கொண்டாள்.. எல்லாம் உன் அவசரம். வேற பையன் பாக்கலாம்னா பாத்தவுடனேயே புடிச்சு போச்சுன்ன.. உங்க அப்பாவும் பாய்ஞ்சுகிட்டு முடிச்சாரு ! அந்த வைத்தீஸ்வரன் கோயில் சோசியன் அப்பவே சொன்னான்.. இது கேட்ட நட்சத்திரம்.. ஒத்து வராதுன்னு. அதான் கேட்டவங்கள அடிச்சது.. அவுரு போய் சேர்ந்துட்டாரு .. ! இப்ப குத்துது கொடையுதுன்னா..

எதிர்த்துப் பேசினால் வம்பு அதிகமாகும் என்பதைப் புரிந்து கொண்ட மூர்த்தி.. மாமியாரை ஒரு திராவகப்பார்வை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் அவன் மனசாட்சியைப் போலவே சோறும் பொங்கியது. அவசர அவசரமாக அடுப்பை சின்னது செய்துவிட்டு.. டீ ஆற்றி எடுத்து வந்தான்.. இந்தாங்க டீ..

மணி என்னாவுது.. உன் டீய குடிச்சிகிட்டு உட்கார்ந்தா அங்க வேலை போயிடும்.. மொதல்ல டிபனை கொடு.. கௌம்புறேன்… மனைவி அரக்க பறக்கடிக்க.. வேகமாக மதிய உணவைக் கட்டி டிபன் பாக்சு அடியை கைலி தலைப்பால் துடைத்துக் கொடுத்தான்… இட்லி ரெண்டாவது சாப்புட்டு போங்க.. கெஞ்சினான்.. திருப்திதான.. நீயே தின்னுட்டு நிம்மதியா தூங்கு.. மேற்கொண்டு பேச நேரம் அனுமதிக்காததால் வசவியபடியே கிளம்பிப் போனாள் சுதா.

சே ஒருநாள் லேட்டா எழுந்திருச்சது எவ்வளவு தப்பா போச்சு.. என்று தன்னைத்தானே நொந்தபடி.. மகனுக்கு அவசர அவசரமாக இட்லியை வாயில் திணித்தபடி.. மாமி ராகுலை ஸ்கூல்ல விட்டு வர்றீங்களா.. நான் தண்ணி தூக்கியாந்துர்றேன்.. மூர்த்தியின் வேண்டுகோளைக் கேட்டு ஆத்திரமானாள் மரகதம்மாள்.

“என்னமோ நடக்குதாம் கதையில.. எலி ரவிக்கை கேட்டுதாம் சபையிலன்னு.. நானே மவ சாப்பிடாம போயிட்டாளேன்னு வேதனையில இருக்கேன். இந்த கால வெய்யில்ல நம்பாள முடியாதுப்பா.. இதுவும் வேற ரோட்ல எங்கிட்ட அடங்காது..” என்று வெடுக்கென மறுத்தாள்.

வேறு வழியில்லாமல் மகனை ஸ்கூலுக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் நினைப்போடு ஓடிவந்தவனை, என்ன மூர்த்தி நேத்து சொர்க்கம் பாத்தியா.. என்று எதிர்வீட்டு மணி ஆரம்பிக்க.. நீ வேற நம்ப பாடே நரகமா இருக்கு! ஒரு நாள் லேட்டா எழுந்திருச்சதுக்கு இன்னிக்கு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். இந்தக் கெழம் வேற மவளை நிண்டி விடுது.

என் மாமியார் பரவாயில்ல.. கூடமாட வேல பாக்குது. மவள் புரியாம பேசுனா கூட, அவன் பொழுதுக்கும் வேல செய்யுறான்.. தண்ணி கூட எழுந்திருச்சு குடிக்கக் கூடாதான்னு மவளையே கண்டிக்கும். என் வீட்ல இப்படி.. உனக்கு வாச்சது அப்படி.. என்னா பண்றது. ஆணா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிச்சுதான் ஆகணும்..

சரி வாரேன்.. மலையாய் குவிந்திருக்கும் துணியும், சமைத்த பாத்திரங்களும் கண்ணில் நிழலாட.. தண்ணீர் குடத்தின் எடை அதை விட குறைவானது போல வேகமாக வந்தான் மூர்த்தி.. களைப்பும், வறட்சியும் ஒருசேர, காலையில் மனைவிக்கு போட்டு அவள் குடிக்காமல் வைத்துச் சென்ற தேநீர் கண்ணில் பட்டது. ஆறிப்போய் அந்நியமாக இருந்த தேநீரை ஆதரவாக ஊற்றிக் கொண்டான். துணிகளை அலசி எடுத்து நிமிரும்போது இடுப்பு தனியாகக் கழண்டு விழுவது போல் வலி பின்னியெடுத்தது. தஸ், புஸ் என்று நாவில் குழறிய காற்றின் வழி ‘அம்மா’ என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

மதியம் சாப்பிடவே மணி இரண்டரை ஆனது. சற்று கண்ணயர்ந்த வேளையில் “கேஸ்.. சார் கேஸ்” என்று குரல் வர வெடுக்கென விழித்துக் கொண்ட மூர்த்தி “வர்றேன்” என்றாவாறு கூடத்தில் படுத்திருந்த மாமியாரை லாவகமாகக் கடந்து போனான். காஸ் சிலிண்டரை வாங்கி வைத்த கையோடு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி மூணரை. இனி எங்கே படுப்பது.. போய் மகனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வர வேண்டும். மூர்த்தி வேகமாகக் கிளம்பினான்.

“என்ன ராகுலப்பா, ரேசன்ல இந்த அம்பது ரூவா சாமான்லாம் வாங்கிட்டீங்களா?” பையனை அழைத்துப்போக வந்திருந்த ராஜன் விசாரிக்க, மூர்த்தி சலிப்போடு “எங்க வாங்கறது.. மொதல் வாரம் போனா ‘அப்புறம் வா’ங்குறான். கடைசி வாரம் போனா இல்லேங்குறான். நமக்கிருக்குற வேலைல சரியா போக முடியாது.. இன்னிக்கு கூட போகலாம்னா.. மிளகா, மல்லி வேற காய வச்சிருக்கேன். கொழம்புப் பொடியே இல்ல.. அத மொதல்ல அரைச்சிட்டு வரணும்.. இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு வந்த ராகுலைக் கண்டதும் “டேய் இங்க வாடா..” அவசரமாய் கையைப் பிடித்து இழுத்தான். கண்கள் பையன் மேல் இருந்தாலும் மனம் அடுத்த வேலையில் மூழ்கியிருந்தது.

மிளகாய்த்தூள் அரைத்து வருவதற்குள் காத்திருப்பும் புழுக்கமும் இன்னொருமுறை குளிக்கலாம் போலிருந்தது.. இந்தக் களைப்புக்கு யாராவது ஒரு காபியோடு வந்து கையில் கொடுத்தால் அப்படியே கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் போல உடல் ஏங்கியது.. “காபியா போட்டிருக்க.. மணி ஆறாகுதேன்னு கேட்டேன்..” மாமியார் குரல், நினைப்பில் தீ மூட்ட.. அடுப்படிக்கு நகர்ந்தான்.

ஏய் காப்பி குடிச்சிட்டு.. புக்க எடுத்து வச்சு படி.. நான் காயற துணிய எடுத்துட்டு வந்துடறேன்.. இந்தாங்க.. மாமியாருக்கு காபி டம்ளரை தந்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்தான் மூர்த்தி.

மூர்த்தி ! ஏம்பா ராத்திரிக்கு என்ன செய்யப் போற!.. சாப்பாடா? டிபனா?.. இடுப்பொடிய வேலை பார்த்துவிட்டு சற்றுநேரம் வேலைகளை மறந்து தலைசீவிக் கொண்டிருந்தவனை மரகதம்மாளின் பேச்சு எரிச்சலூட்டியது. பீறிட்டுவந்த கோபத்தை அடக்கிக் கொண்டவன் நையாண்டி தோரணையில் ஏன்! என்ன வேணும் உங்களுக்கு? என்று நேர்படவே கேட்டான்.

எனக்கு ஒண்ணுமில்ல.. பொழுதுக்கும் சோறு, சோறுன்னு மூஞ்சில அடிச்சமாதிரி இருக்கும்பா உன் வீட்டுக்காரி.. காலைலயே வேற மொணவிகிட்டு போனா.. அவளுக்கு பூரின்னா புடிக்கும்.. பேசாம, பூரியே போட்டுறேன்..

அவளுக்கு புடிக்குமோ, உனக்கு புடிக்குமோ! என்று வாய்க்குள்ளேயே முணகிக் கொண்டவன்.. வெங்காயத்தையும் அரிவாள்மனையையும் எரிச்சலோடு கொண்டுவந்து வைத்தான். “மர கழண்டு போச்சு.. சே!” என்று மூர்த்தி சலித்துக்கூற.. வெடுக்கென ஆனந்தம் டி.வி. தொடரில் மூழ்கியிருந்த மாமியார் திரும்பினாள். சுதாரித்துக் கொண்ட மூர்த்தி “வாங்கி ஒரு மாசம் கூட ஆகல தேங்கா துருவி கழண்டுகிச்சு..!” என்றான் மாமியாரைப் பார்த்தவாறு.. தேங்காய் துருவியையும், மருமகன் கண்களையும் மாற்றி மாற்றி பார்த்தபடி மரகதம்மாள் சந்தேகப் பார்வையுடன் டி.வி. பக்கம் முகத்தைத் திருப்பியபடியே “வாங்கறப்பவே பாத்து வாங்கலேன்னா இப்படித்தான்” என்றாள் தன் பங்குக்கு. “பாக்குறப்ப எல்லாம் நல்லாத்தான் தெரியுது.. பழகப் பழகத்தானே தெரியுது.. சுத்த வேஸ்ட்டுன்னு..” மூர்த்தியும் விடுவதாயில்லை. மரகதம்மாளும் ஏதோ கூற வாயெடுக்க.. அலுவலகப் பையைக் கழட்டிய களைப்புடன்.. சுதா வீட்டிற்குள் நுழைந்தாள்.

மனைவி வந்ததும் அரிவாள்மனையைப் படுக்க வைத்தபடி ஒரு டம்ளர் தண்ணீரோடு பின் தொடர்ந்தான் மூர்த்தி.. என்ன வெங்காயம் வாட வருது.. அதே கையோட தண்ணி மொண்டியா.. கைய கழுவிட்டு வேற எடு.. அய்யோ!.. என்று தலையில் தட்டிக் கொண்டாள்.

அப்பாடா இந்த பஸ்ல வர்றதுக்குள்ள உடம்பே விண்டு போவுது.. என்று அவள் முடிப்பதற்குள் கூடத்தில் டி.வி.க்கு நேராக ஈஸி சேரை தயாராக வைத்தான் மூர்த்தி. டி.வி.யின் ஆனந்தத்தில் அவளும் பங்கெடுத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு கண் எரிச்சல் தந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவள் “அறிவில்ல இப்பதான் அலுத்துப் போயி வந்து உட்கார்ந்துருக்கேன்.. பக்கத்துல உக்காந்து வெங்காயம் நறுக்குறியே.. கண் எரியுதுல்ல.. இதைக் கூட சொல்லணுமா.. எடு .. அந்தப் பக்கம்.. போ உள்ளாற.. சத்தமாகக் கத்தினாள்.

அதானா.. நான் கூட ரொம்ப நேரம் டி.வி. பாக்குறோமே, அதான் கண் எரியுதோன்னு பார்த்தேன்.. ஏம்பா அந்த வெங்காயத்த தண்ணியில போட்டு நறுக்கக் கூடாது.. மாமியாரும் சேர்ந்து கொண்டாள். டி.வி. பார்க்கும்போது குறுக்கே மிக்சி போட்டால் வேறு மனைவிக்கு கோபம் வரும் என்பது தெரிந்ததால், துருவியவைகளை அரைக்காமல், முதலில் தயார்செய்து வைத்திருந்த பூரிமாவை வட்டவட்டமாக பூரிக்கட்டையால் தேய்க்கத் தொடங்கினான். கூடத்தில் உட்கார்ந்தாலாவது கொஞ்சம் காற்றோட்டம் வாய்த்திருக்கும்.. ஆறுக்கு மூணு அடுப்படியில் புழுங்கித் தொலைத்தது, முதுகுத்தண்டில் வலி ஊர்ந்தது. அவனைப் பார்த்து பரிதாபப்பட்ட மாதிரி பூரிமாவு அவன் இழுத்த இழுப்புக்கு கொஞ்சம் இணங்கி வந்தது.

என்ன ரெடியா? மொதல்ல அவனுக்கு வையி.. மகனுக்கு கேட்கும் சாக்கில் அடுப்படி நிலவரத்தை ஆராய்ந்தாள் சுதா. தோ குருமா.. ரெடியாயிடுச்சு.. ராகுல் தட்டில் ஆவி பறந்தது. பூரியும், குருமாவும் அப்படியே எனக்கும் வச்சிடேன்?.. தோ எடுத்துட்டு வர்றேன்.. மனைவிக்கு கருகாமல் எடுக்க வேண்டுமே என்ற பயத்துடன் கொதிக்கும் எண்ணெயிடம் இரக்கம் வேண்டியவனைப் போல பார்த்தான் மூர்த்தி.

இந்தாங்க.. சுதாவுக்கு பூரி வைத்த வேகத்தில் அடுப்படிக்கு ஓடினான். “தண்ணி உங்க அப்பன் வைப்பானா? தண்ணி வக்கிற பழக்கமே கிடையாது.. வளர்த்திருக்காங்க பாரு.. சுதா முன்பு பதட்டத்துடன் வந்து டம்ளரை வைத்தான். சுடச்சுட நாலு பூரியை அமைதியாக விழுங்கியவள், “ஊம் இது என்ன குருமாவா சரவண பவன்ல வெக்கறானே அது எப்படி இருக்கு? அவன் மட்டும் என்ன வானத்துலேர்ந்து வர்ற பொருளை வச்சா செய்யுறான்.. உனக்குந்தான் எல்லாப் பொருளும் வாங்கித் தர்றேன்.. ஒரு டேஸ்ட் இல்ல. நீ எல்லாம் டிபனுக்கு லாயக்கில்ல… வேஸ்டு… பேசாம சோறு பொங்க வேண்டியதுதான்.. அதுக்குத்தான் லாயக்கு.. எங்க சோறு இருக்கா? அதையாவது தின்னு தொலைக்கலாம்.. சுதாவின் கோபம் பூரி போடுகையில் கையில் தெறித்த எண்ணெயை விட மூர்த்தியின் மேல் தனலாக விழுந்தது.

அய்ந்தாறு பூரி தின்ற பிறகு வழக்கம்போல அவள் இப்படி ஆரம்பிப்பாள் என்று தெரிந்து, ஏற்கெனவே அவன் கொஞ்சம் சோறு செய்திருந்தது நல்லதாகிப் போனது. ஏதோ வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டதைப் போல முழுச் சோற்றையும் சாப்பிட்டாள் சுதா.. சாப்பிட்டு முடித்து அடுத்து வெற்றிலை பாக்கைப் போடுபவள் போல.. டி.வி.க்கு நேராகப் போய் ‘அரசி’ ராதிகாவின் வசனத்திற்கு ஏற்ற மாதிரி வாயை அசைத்துக் கொண்டு கிடந்தாள். ஒரு இடத்தில் ராதிகா தேசப்பற்றோடு வசனம் பேச தன்னையறியாமல் கொட்டாவி விட்டபடி படுக்கைக்குப் போனாள்.

மாமியாரும், மகனும் கூட படுத்துவிட்ட கூடத்தில் ‘அரசி ராதிகா’ தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள். டி.வி.யைக் கூட யாரும் அணைக்கவில்லை. அடுப்படியில் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரு பாத்திரம் விடாமல் துலக்கி வைத்தான் மூர்த்தி.. பொத்தென்று விழுந்து படுத்தால் தேவலாம் என்று நினைத்தான். மனைவிக்கு கால் அமுக்காவிடில் அதன் பாதிப்பு மறுநாள் பேச்சில் வரும் என்பதால்.. சுதாவின் கால்களைப் பக்குவமாகப் பிடித்துவிட்டான். இதமாக இருக்க.. அப்பா அப்படித்தான் இந்தக் காலையும் புடி.. என்று புரண்டு படுத்தாள் சுதா.. தூக்கத்தை விடுத்து அமுக்கிவிடச் சொல்வதிலேயே குறியாக இருந்தாள் .. ஏய்! அதே இடத்துலேயே அமுக்குறீயே.. ஒருநாள் சொன்னா தெரியாதா.. இந்தப் பாதத்தைப் புடியேன்.. தானா அறிவா யோசிக்க மாட்டியா!.. கண்களைப் பிசைந்த தூக்கத்தைக் கலைத்தபடி அவள் சொன்னபடியெல்லாம் கைகளை அழுந்தினான்.

அப்படித்தான்.. ரெண்டு நாளா அந்தப் பையன் டவுசர்ல பட்டன் இல்லாம.. ஊக்க மாட்டி வுடறியே ஒழிய.. சும்மா இருக்குற நேரத்துல அதை தச்சி வைக்கக் கூடாது.. இல்ல டெய்லர்கிட்ட தரக்கூடாது.. எல்லாம் உனக்கு சொல்லணும்.. என்ன மூளையோ.. சுதா பொரிந்து தள்ள.. அழுகை பீறிட்டது மூர்த்திக்கு.. காலைலேர்ந்து படுக்குற வரைக்கும் உடம்பு நோவுது.. ஒரு நேரம் ஓய்வில்ல.. ஆள் வைக்காமல் அவ்ளோ வேலை பாக்குறேன்.. உங்களுக்கு இரக்கமே இல்லையா.. சும்மா இருக்குறப்பன்னு சொல்றீங்களே.. எப்போ சும்மா இருக்குறேன் சொல்லுங்க.. மறுமொழி பேசியதுதான் தாமதம், சுதாவுக்கு சூடு ஏறியது. “ஓகோ! அப்ப நான்தான் சும்மா இருந்தனா.. இதுல எனக்கு இரக்கம் வேற இல்லாம வேல வாங்குறனா!.. திமிரு அதிகந்தான் ஆயிடுச்சு.. வாய்க்கொழுப்ப கொறச்சா சரியா போயிடும்.. விடு கால..” என்று கடுப்போடு ஓங்கி ஒரு உதை உதைத்தாள்.

அந்த உதை நெஞ்சில் நங்கென்று விழ.. நிலை குலைந்த மூர்த்தி ‘ஆ’ என்று அலறியே விட்டான்.

மூர்த்தியின் அலறலைக் கேட்டு பதட்டத்துடன் கணவன் அருகே வந்தாள் சுதா. கையில் கொண்டு வந்த பால் டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, கணவனின் தோளை உலுக்கியபடி என்னங்க.. என்னங்க.. என்று எழுப்பினாள். வெடுக்கென்று தூக்கத்தில் இருந்து விழித்த மூர்த்தி ஒருவாறு பிரமை பிடித்தவன் போல மனைவியை உற்றுப் பார்த்தான். கண்களைக் கசக்கியபடி மீண்டும் இமைகளை உதறி ஏதோ எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது போல அதிர்ச்சியடைந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தபடி மனைவியை வெறித்தான். “ஏங்க, என்னங்க ஆச்சு.. ஏன் அலறுனீங்க? தூக்கத்துல ஒரே சத்தமா கத்துனீங்க.. ஏதாவது கெட்ட கனவா.. என்றபடி ஆதரவாக அவன் கைகளைப் பிடிக்க, இவ்வளவு நேரம் நடந்ததெல்லாம் கனவுதான் என்ற புரிதல் மூர்த்திக்கு வந்தது. இருந்தாலும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் அவன் கண்களில் பீதி உறைந்திருந்தது. சரி, சரி எதாவது பயந்தா கொணமா இருக்கும்.. நான் வேலைய முடிச்சுட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டீங்க. இந்தாங்க இந்தப் பாலைக் குடிங்க.. என்று டம்ளரை எடுத்தவள், “அய்யய்ய, பால் திரிஞ்சிடுச்சு.. இருங்க வேற ஆத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று அவனிடம் ஆறுதலாகப் பேச அவனோ ஏதோ யோசித்தவன் போல “பரவாயில்ல.. கொடு..! கொடு” என்று அவள் முகத்தையே வெறித்தபடி டம்ளரை வாங்கப் போனான்.

அவனுடைய நடவடிக்கை விசித்திரமாகப்பட, லேசான சிரிப்புடன், “என்ன கனவு கண்டதுல ஆளே மாறிட்டீங்களா.. நல்லா கத்துனீங்க. இருங்க வேற கொண்டாறேன்’’, என்றபடி நகர்ந்தாள். மனைவி சென்றதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. அப்பாடா நல்லவேளை கனவு என்பது போல விழித்தான்.

நன்றி: துரை. சண்முகம, வினவு

%d bloggers like this: