Advertisements

ஓட்டு போடுவது எப்படி? – வழிகாட்டும் பதிவு

ஓட்டு போடுவது எப்படி? – வழிகாட்டும் பதிவு

ஓட்டு போடுவது எப்படி? – வழிகாட்டும் பதிவு

2019 பொது தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளு மன்ற தொகுதிகளுக்கு

ஏப்ரல் 18ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடை பெறுகிறது. இதில் வேலூர் நாடாளுமனறத் தேர்தல் திடீரென ரத்தானது. மேலும் 18 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந் துள்ள நிலையில் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள் வாக்காளர்கள். வாக்குச் சாவடிக்குச் செல்லும் முன்னர் வாக் காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கே காணலாம்.

வாக்களிக்கும் மையத்திற்கு செல்லும் முன், தேர்தல் ஆணையம் அறிவி த்துள்ள, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.

வாக்கு சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்கவும். ஒரு வேளை கொண்டு சென்றாலும் முழுவதுமாக அனைத்து விடவும்.

வாக்குச் சாவடிக்குள் நீங்கள் நுழைந்தவுடன் முதல் தேர்தல் அலுவலர், உங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்த்து, உரத்த குரலில் படிப்பார். அதை ஓட்டுச் சாவடிக்குள் உள்ள அனைத்து கட்சி ஏஜன்ட்களும் உறுதி செய்வர்.

அடுத்ததாக இரண்டாவது அலுவலர், உங்களது இடது ஆள் காட்டி விரலில், அடையாள மையிட்டு, ஓட்டளிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணைப் பதிவு செய்வார். இதில் நீங்களும் கையெழுத்திட வேண்டும்.

அடுத்து நீங்கள் மூன்றாம் அலுவலரிடம், ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் ஓட்டளிக்கும் இயந்திர த்தின் கண்ட்ரோல் யூனிட்டில் காணப்படும் ‘பேலட் பட்டனை’ அழுத்துவார். அதன்பிறகு மறைவாக வைக்கப்பட்டிருக்கும் ஓட்டு எந்திரத்தில் உங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

வாக்குபதிவு இயந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் மற்றும் பெயரு க்கு எதிரே நீலநிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். யாருக்கும் ஓட்டுப் போட விருப்பம் இல்லாவிட்டால், கடைசியாக “நோட்டா’ என்ற பட்டனை அழுத்த லாம். ஏதாவது ஒரு பட்டனை மட்டுமே வாக்காளர் அழுத்தி, வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

நீல பட்டன் பயன்படுத்தும்போது, நீங்கள் ஓட்டளித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே, சிகப்புவிளக்கு எரியும்; வாக்குபதிவு செய்யப்பட்ட பிறகு, ‘பீப்’ என்ற ஒலி ஒலித்தவுடன் இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் எரிந்த விளக்கு, அணைந்து விடும். 

ஓட்டு போட்டவுடன் அதன் அருகே உள்ள ஒரு மிஷினில் நீங்கள் யாருக்கு ஓட்டளித் தீர்கள் என்பதை காட்டும் சீட்டு தெரியும். அநத சீட்டை நீங்கள் எடுக்க இயலாது. 7 விநாடிகள் வரை அந்த சீட்டு தெரியும். அதன்பிறகு மிஷினுக்குள்ளே அந்த சீட்டு விழுந்து விடும்.

உங்கள் வாக்கு உங்கள் உரிமை… உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல. . .
நேர்மையான தலைமைக்கு உங்கள் விரல்நுனிமையே தொடக்கமாக இருக்கட்டும்.

How to put Vote for Parliament Election, ஓட்டு போடுவது எப்படி? #Vote  #Parliament_Election #Election 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: