Advertisements

பரீட்சை கட்டணம் வெறும் 25 பைசா மட்டுமே

பரீட்சை கட்டணம் வெறும் 25 பைசா மட்டுமே

பரீட்சை கட்டணம் வெறும் 25 பைசா மட்டுமே

சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டின்

நான்காவது சட்டமன்றத் தேர்தல் 1967ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது ஆட்சி யில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வரானார் அண்ணாதுரை.

1968ஆம் வருடம் 11 ஆம் வகுப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் மாற்றம் செய்யப்பட்டது. என் வீட்டில் என் சகோதரி மற்றும் சகோதரன் இருவரும் அந்த ஆண்டு 11 ஆம் வகுப்பில் படித்து வந்தார்கள். என் பாட்டனார் சென்னைக்கு வந்த சமயத்தில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று இரண்டு செட் புத்தகங்கள் வாங்கி வந்தார். என் பாட்டனார் வாலாஜாபாத் இந்துமத பாட சாலை தலைமை ஆசிரியர். மேலும் புத்தக கமிட்டி உறுப்பினர் (டெக்ஸ் புக் கமிட்டி). என் சகோதரி வேலூரிலும் சகோதரர் வாழைப்பழத்தில் என்ற ஊரிலும் படித்து வந்தார்கள். 1969ல் இருவரும் 11 ஆம்வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி (S.S.L.C) முடித்துவிட்டார்கள். அவர்கள் படித்துமுடித்து பின்னர் அந்த தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் ஊட்டியில் என் அத்தை மகள்கள் இருவர் படிக்க அனுப் பப் பட்டது. அவர்கள் படித்து முடித்துவிட்டு பின்னர் நான் வேலூரில் 11ஆம் வகுப்பு பயிலும் போது எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் வந்தது. நானும் படித்து முடித்து பின்னர் 1971ல் வேறு ஒரு மாணவனுக்கு கொடுத்துவிட்டேன். 11ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில்” ஹேப்பி பிரின்ஸ் (Happy Prince)” என்ற பாடம் இன்னும் நினைவில் உள்ளது. இந்த காலத்தில் இம்மாதிரி 3 வருடங்கள் புத்தகம் மாறி படித்து இருப்பார்களா என்பது சந்தேகமே. முக்கிய விஷயம் என் தம்பி காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது இ.எஸ்.எல்.சி (ESLC)க்கு பரீட்சை கட்டணம் வெறும் 0.25 பைசா மட்டுமே. இப்போது புழக்கத்தில் சில்லறை நாணயமாக அதிகபட்சம் இருப்பது ரூபாய் 1.00 மட்டுமே.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#ஹேப்பி_பிரின்ஸ் #HappyPrince #திராவிட_முன்னேற்றக்_கழகம் #திமுக #தி.மு.க. #DravidaMunnetraKazhagam #DMK #vidhai2virutcham 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: