Advertisements

மருத்துவ உண்மை- மஞ்சள் பூசி குளிக்காத பெண்ணின் கணவனுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும்

மருத்துவ உண்மை- மஞ்சள் பூசி குளிக்காத பெண்ணின் கணவனுக்கு  ஆண்மைக் குறைவு ஏற்படும்

மருத்துவ உண்மை- மஞ்சள் பூசி குளிக்காத பெண்ணின் கணவனுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும்

என்ன‍ சார் நீங்க, ஏதோ சோதிடம் சொல்வது போல் சொல்றீங்க, பெண்கள் மஞ்சள் பூசி

குளிப்பதற்கும் அவர்களின் கணவர்களின் ஆண்மைபக்கு குறைவுக்கு என்ன‍ சம்பந்தம் என்று நீங்கள் எள்ளி நகையாடுவது தெரிகிறது. மேற்கொண்டு படித்தால், இது சோதிடம் அல்ல‍ மருத்துவ உண்மை என்பது நீங்கள் அறிவீர்கள்.

முன்பெல்லாம் பெண்கள் குளிக்கும்போது மஞ்சளை உபயோகிக்க மறக்க மாட்டா ர்கள். அந்த மஞ்சள் தரும் இயற்கை அழகில் மினுமினுத்தார்கள். ஆனால், இன்றோ அதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது.இன்றைய நவநாகரீக பெண்களுக்கு மஞ்சள் என்றால் என்ன என்று பாடம் எடுத்தால்தான் புரிகிறது. அவர்களை மஞ்சள் பூசி குளிக்க என்று சொன்னால், “எவ்வளவோ பியூட்டி சோப்புகள், ஷாம்புகள் இருக் கும்போது மஞ்சள் எதுக்கு?” என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மையிலேயே மஞ்சளைப் போன்ற இயற்கையான அழகு சாதனம் வேறு எதுவுமே கிடையாது. பெண்களை இயற்கை அழகை மிளிரச் செய்யும் இதே மஞ்சள் தான், இனிய இல்லறத்திற்கும் காரணமாகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறை பாடுகளால் ஏராளமான கணவன்மார்கள் சிக்கி தவிக்கிறார்கள். இவர்களால் இனிமையான இல்லறத்தை அனுபவிக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்களின் மனைவிமார்கள் தினமும் மஞ்சள் பூசி குளித்தாலே, அவர்களின் இந்த குறைபாடு நீங்கி விடும். அது எப்படி தெரியுமா? மஞ்சள் பூசி குளிக்காத பெண்களின் கணவன் மார்களுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

காரணம், பெண்களுக்கு மூன்று மடங்கு உஷ்ணம் அவர்கள் உடலில் உள்ளது தான். இது இயற்கை ஒன்று. உணவு சீரணமாவதற்கும், இரண்டு, மாதவிலக்கு ஆவதற்கு ம், மூன்று. கருத்தரிப்பதற்கும் என இந்த உஷ்ணத்தை இயற்கையே பெண்களின் உடலில் உருவாக்கி வைத்துள்ளது. கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, மனைவி உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கணவனின் உடலுக்கு கடத்தப்படுகிறது. இதனால், அந்த கணவனுக்கு நரம்பு தளர்ச்சியும், ஆண்மைக் குறைவும் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும்போது அவர்களது உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள், கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, அவர்களது உடல் வெப்பம் கணவனது உடலுக்கு அதிகம் கடத்தப்படாது. அதனால், கணவனுக்கு ஆண்மைக் குறைவு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஆரோக்கிய சாரலில் நனையுங்கள்

#மஞ்சள்_பூசி_குளி #குளித்தல் #டர்மரிக் #ஆண்மைக்குறைவு #நரம்பு_தளர்ச்சி #கணவன் #மனைவி #உடலுறவு #உடல்_உஷ்ணம் #தாம்பத்தியம் #மாத_விலக்கு #இளம்பெண்கள் #பெண்கள் #பெண் #உடல்_வெப்ப‍ம் #ஷாம்பு #சோப்பு #பியூட்டி #இல்ல‍றம் #விதை2விருட்சம் #Turmeric #Bath #Bathing #Turmeric_Powder #Sex #Impotency #Period #Menses
Advertisements

One Response

  1. Arumaiyana pathivu,supper

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: