Advertisements

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

க‌டந்த‌ 3/2/2019அன்றிரவு முரசு டிவியில் காசேதான் கடவுளடா படம் பார்த்துக்

கொண்டு இருந்தேன். அந்தப்படம் 1972-ல் வெளியானது. 18/6/1972 என் சகோதரிக்கு திருமணம் முடிந்தது. மறுநாள் இரவு, நான் என் சகோதரன் மற்றும் புதுமண தம்பதி சூழ காஞ்சிபுரம் ராஜா தியேட்டரில் இரண்டாவது காட்சி பார்க்க சென்றோம். படம் ரொம்ப தமாஷ் படம் ரசித்து பார்த்தோம். டீ வந்தது 2டீ ஆர்டர் செய்தோம். அந்த சமயத்தில் வந்த தமாஷ் காட்சியை ரசித்த படியும் மேலும் திருமணத்தில் ஓடியாடி வேலை செய்தது தூக்கம்வர அப்படியே டீ கீழே கொட்டி கிளாஸ் உடைந்துவிட்டது. டீக்கார பையன் பணமும் டீ கிளாஸ் கேட்கும் போது தான் கீழே பார்த்தால் டீ ஆறு மற்றும் உடைந்த ஐடீ கிளாஸ்கள். உடனே அவன் எங்களை, அவன் முதலாளியிடம் கொண்டு போய் நிறுத்தினான். எங்களை ஏற‌ இறங்க பார்த்தார் முதலாளி. 2 டீ கிளாஸ்க்கு ரூபாய் 15 கேட்டார், பணமில்லை என்றால் நீங்கள் கையில் கட்டியுள்ள கடிகாரத்தை கொடுத்து விட்டு, நாளை காலை ராயல் பேன்சி கடையில் இருந்து டீ கிளாஸ் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விட்டு கடிகாரம் வாங்கி கொள்ளலாம் என்றார்• நான் டீ கூட குடிக்க வில்லை என்றதற்கு அதை டீ பையன் பார்த்து கொள்வான் என்றார். வேறு எதுவும் செய்ய இயலாமல் ரூபாய் 15 மற்றும் குடிக்காத டீக்கும் காசு கொடுத்து விட்டு வந்தோம். காசே தான் கடவுளடா திரைப்படம் எப்போது பார்த்தாலும் இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வரும்.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307.

#குடிக்காத #டீ #காசு #காசேதான்கடவுளடா #Tea #Coffee #KasedhanKadavulada # Paisa #RajaTheatre #Raja #Theatre  #Kancheepuram #காஞ்சிபுரம்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: