Advertisements

Jacto Geo குறித்து அமைச்சர்கள் பேசுவது நியாயம்தானா?

Jacto Geo குறித்து அமைச்சர்கள் பேசுவது நியாயம்தானா?

Jacto Geo குறித்து அமைச்சர்கள் பேசுவது நியாயம்தானா?

ஜாக்டோ ஜியோ போராட்டம் ஜனவரி 22 முதல் ஆரம்பித்தது தீடிரென்று

இல்லை. 2001-2006 வரை நடந்த ஆட்சியில் 2003-ல் நடைபெற்ற போராட்டத்தில் எஸ்மா மற்றும் டெஸ்மா அரசு ஊழியர்கள்மேல் போடப்பட்ட ஒன்று. அப்போது தற்காலிக ஊழியர்கள் பணிக்கு சேர்ந்தார்கள்.அவர்களை பணி நிரந்தரம் பற்றி எதுவுமே சொல்லாமல் அந்த ஆட்சி போய் 2006-2011-ல் வந்த ஆட்சியில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டது. 2002-ல் பண்டிகை முன்பணம் அரசால் ஊழியர்க ளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்வது நிறுத்தப்பட்டது. 2004ல் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும்கூட மாறவில்லை. வழக்கமாக வழங்கும் பஞ்சப்படி கூட எம்.ஜி‌‌ஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு வழங்கும் பஞ்சப் படி அதேபோல் தமிழ்நாட்டில் வழங்க அரசு ஆணை பிறப்பித்தார். ஆனால் அது 2001 – 2006 ல் மீறப்பட்டது.2004ல் பணியில் சேர்ந்த ஊழியர்களின் CPS தொகை நிலவரம் தெரியவில்லை. அதுமட்டுமே அல்ல 7வது ஊதிய குழு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஆணைக்கு பிறகே வழங்கப்பட்டது. அதிலும்1/1/2016 முதல் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு பணபலன் அக்டோபர் 2017முதல் அதாவது 21மாத நிலுவை தொகை பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை. இதேபோல் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை. I .A.S &I.P S அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு 2016 ஜனவரி முதல் 7வது ஊதிய குழு வழங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இது மட்டுமே அல்ல காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று போராட்டம் செய்கிறார்கள் ஆனால் அமைச்சர்கள் இதனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது. இது நியாயம்தானா?

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#ஜாக்டோஜியா #போராட்ட‍ம் #வாபஸ் #JactoGeo #Strike  #jactojiyo #protesters  #Jactojiyo #jactojiya #vidhai2virutcham
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: