Advertisements

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

நேற்று இரவு இணையத்தில் காணொலி ஒன்றை கண்டேன். அற்புதமாக இருந்த

தோடு அல்லாமல் என்னை வியக்க‍வும், அதே நேரத்தில் வெறுக்க‍வும் வைத்த‍து. என்ன‍ அது எப்ப‍டி முடியும் ஒரே நேரத்தில் வியக்க‍வும் வெறுக்க‍வும் முடியும் இரண்டில் ஒன்றுதானே நடந்திட சாத்தியம் என்ற உங்களின் எண்ண‍ ஓட்டத்தை என்னால் உணர முடிகிறது.

அந்த காணொலியில் இடம்பெற்ற‍ காட்சியை இதோ விவரமாக விவரிக்கிறேன். படியுங்கள். அந்த காணொலி இரண்டு பகுதிகளாக வந்தது.

முதல் பகுதியில்

ஏதோ ஒரு கோவிலில்… நான்கு பக்க‍ திறந்த அலமாரியில் நூற்றுக்ணக்கான‌ லட்டு களை, அடுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த லட்டுக்களை விநியோகிக்க‍ யாரும் இல்லை. கிட்ட‍த்தட்ட‍ நூறு பேர் இருப்பார்கள். அத்த‍னைபேரும் ஒழுங்கீனம் இன்றி போட்டி போட்டு முண்டியடித்து அந்த லட்டுகளை எடுத்துச் செல்வதையும், அப்ப‍டி எடுத்துச் செல்லும்போது பாதி லட்டுக்கள் கீழே விழுந்து வீணாகி கிடப்ப‍தை அந்த காணொலி காட்டுகிறது.

அந்த காணொலியின் அடுத்த‍ பகுதியில்

ஒரு பெட்டி நிறைய தோலுரித்த‍ ஆரெஞ்சு பழங்கள் வைக்க‍ப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியைச் சுற்றி நூற்றுக்கணக்கான குரங்குகள் இருக்கின்றன• அவைகள், முதலில் 10 குரங்குகள் வந்து, அவை களுக்கு தேவையான பழங்களை எடுத்துக் கொண்டு அடுத்துவரும் குரங்குகளுக்கு வழிவிட்டு தூரநின்று சுவைத்து மகிழ்கின் றன• அதேபோல் அடுத்து வந்த குரங்கு களும் அவைகளுக்கு தேவையான பழங்களை எடுத்துக்கொண்டு, அடுத்து வரும் குரங்குகளுகு வழிவிட்டு தூர நின்று சுவைத்து மகிழ்ந்தன• குரங்குகள் போட்டி போடவும் இல்லை. முண்டியடிக்க‍வு மில்லை. பழங்களை தரையில் கொட்டி வீணாக்க‍வுமில்லை.

இந்த இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற‍ காட்சிகளில்தான் என்னை வியக்க‍வைத்த‍ குரங்குகள் அதேநேரத்தில் வெறுக்க‍ வைத்த‍ மனிதர்கள் என்பதை நான் உணர்ந்தேன்.

குரங்குகளிடம் இருக்கும் ஒழுக்க‍ம் மனிதர்களிடம் இல்லாமல் இருப்ப‍து வேதனை உச்ச‍ம்.

மனிதர்களிடம் இருக்க‍ வேண்டிய இந்த ஒழுக்க‍ம், நம்மால் ஏளனமாக பார்க்க‍ப் ப‌டும் குரங்குகளின் இருப்ப‍தைக் கண்டு நான் வியந்தேன். என் வியப்பை நான் வரிகளாக உங்களுக்கு பகிர்ந்தேன்.

அந்த காணொலியை எனது கைபேசியில் சேமிக்க‍ முயன்றும் முடியவில்லை. அதனால் உங்களுக்கு அந்த காணொலியை இங்கு பகிரவும் என்னால் இயல வில்லை.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081

#Monkeys #Human #Man #food #waste #dustbin

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: