Advertisements

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

என்னுடைய 7 வயதில் கை, கால் மூட்டுகளில் வலி அதனை வாலாஜாபாத் என்ற

கிராமத்தில் இருந்த மருத்துவர் வைத்தியநாதன் அவர்களிடம் வைத்தியம். காலை சுமார் 7 மணிக்கு டோக்கன் வாங்கி மருத்துவரை பார்க்க வேண்டும்.என் சகோதரி என்னை தூக்கிக் கொண்டு போய் மருத்துவர் வீட்டில் வைத்தியம் பார்த்து, அதன் பின்னர் மறுபடியும் என்னை வீட்டில் விட்டுவிட்டு பள்ளிக்கு செல்வாள். இதை பார்த்துக் கொண்டிருந்த கம்பவுண்டர், என் தாத்தாவிற்கு தெரிந்தவர் என்பதால் என் சகோதரியிடம் நீ பள்ளிக்கு செல், நான் இவனை என் டூயுட்டி முடிந்ததும் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்லி அனுப்பினார். எனக்கு மருத்துவர் ஊசி போட்ட பிறகு மருத்துவர் வீட்டில் அமர்ந்தேன். அங்கே அவர் வீட்டில் உள்ள டீபாயில் ஹிந்து ஆங்கில பத்திரிகை மற்றும் தினமணி நாளிதழ் இருந்தது அதனை எடுத்து படிக்க ஆரம்பித்தேன் இப்படியாகத்தான் என் வாசிப்பு பழக்கம் ஆரம்பித்தது. தொடர்ந்து எங்கள் வீட்டில் வரும் செய்தித்தாள்கள் முக்கிய செய்திகள் என் தாத்தா சொல்ல சொல்ல நான் எழுத ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பள்ளியில் முக்கிய செய்திகள் எழுதுவது வழக்கம் இப்போது இல்லை என நினைக்கிறேன். நான் எழுதிய செய்திகள் எல்லோரும் படிப்பது எனக்கு பெருமையாக இருந்தது. இப்படி ஆரம்பித்து என் செய்தித்தாள்கள் படிப்பு இன்றுவரை தொடர்கிறது. மேலும் என் மகளுக்கும் செய்தித்தாள்கள் படிப்பதில் ஆர்வம் வர அவளின் 4 வயது முதல் 11 வயதுவரை நூலகம் அழைத்துச்சென்று நூல்களை அறிமுகம்செய்து வைத்தேன்.  இன்று வரை அவளுக்கு உற்ற‍ தோழியாக அறிமுகமாகி, இன்று வரை அவள் வாழ்க்கையில் அதன் நட்பு தொடர்கிறது.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838306

#TheHindu #Dinamani #ஹிந்து #ஆங்கில #பத்திரிகை #தினமணி #நாளிதழ் #English #Tamil #Newspaper #Knee #Pain #vidhai2virutcham
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: