Advertisements

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

நரேந்திர மோடி அவர்களின் புத்தாண்டு பேட்டி – இது நல்ல போக்கா?

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் புத்தாண்டுக்கான பேட்டியை ஒரு

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்தார். அதில் அவரது பெரும்பாலான பதில்கள் காங்கிரஸ் கட்சியின் குறைகளையே பட்டியலிடுவதாகவே அமைந்தது.

எங்களது கடந்ததேர்தல் அறிக்கையில் நாங்கள் ராமர்கோவில் கட்டியே தீருவோம் அதுவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே. கடந்த 70 வருடங்களாக நாட்டை ஆண்டவர்கள் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. காங்கிரஸ் தற்பொழுது அதனை தடுக்க கூடாது சட்ட முறைப்படி அது நடைபெற அனுமதிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தல் சாமானியர்களுக்கும் கூட்டணிக்கும் இடையே ஆன போட்டி.

நான் சாமானியன் எனவே மக்கள் பிஜேபிகே வாக்களிப்பார்கள். ராமர்கோயில் விஷயத்தில் முத்தலாக் போல ஏன் வாக்கெடுப்பு வழியாக தீர்வு காணவில்லை என்றதற்கு முத்தலாக், பெண்கள் உரிமையை நிலை நாட்டும் விஷயம் என்றார். அவர் தொடர்ந்து கூறும் போது ராமர்கோயில் விவகாரம் இந்த மாதத்திலேயே உச்சநீதி மன்றத்தில் விவாததிற்கு எடுத்து கொள்ளப்படும்.

விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவோம். பாகிஸ்தான் உடனான உறவு பற்றி கூறிய அவர், அவர்கள் நல்வழிக்கு வந்து பேச்சுவார்த்தையை தொடங்கினா ல் நாங்களும் தயாரே என்றார். சமீபத்தில் அந்த நாடு நம்முடன் எல்லையில் சண்டையிடுவது குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். RBI கவர்னரை நாங்கள் பதவி விலக சொல்லவில்லை, அவரது பணிகள் பாரட்டும் படியாகவே இருந்தது, அவர் நான்கு மாதங்களுக்கு முன்பே பதவியை ராஜினாமா செய்வதாக கடிதமே அளித்தா லும் நான் அவரை தொடர பணித்தேன். காங்கிரஸ் இதனைப்பற்றி பேச தகுதி அற்றது. அவர்கள் ஆட்சியில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அமைச்சரவை முடிவையே கட்சி தலைவர், பத்திரிகையாளர் சந்திப்பில் கிழித்து எறிகிறார், இது நல்ல போக்கா?

வரும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த பேட்டி அமைந்தது என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

=> மகாதேவன் (மின்ன‍ஞ்சல் itsmahadevan2009@gmail.com )

#நாடாளுமன்றதேர்தல் #ParliamentElection #Election #நாடாளுமன்ற #தேர்தல் #காங்கிரஸ் #பாகிஸ்தான் #பிரதமர் #அலுவலகம் #அமைச்சரவை #ராமர்கோயில் #உச்சநீதிமன்றம் #நரேந்திரமோடி #மோடி #நாடாளுமன்றதேர்தல் #நாடாளுமன்ற #தேர்தல் #vidhai2virutcham  #BJP
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: