Advertisements

கூந்தலுக்கு ஏற்ற‌ ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கூந்தலுக்கு ஏற்ற‌ ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

கூந்தலுக்கு ஏற்ற‌ ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

இயற்கையாக ஏற்படும் நரைத்த முடிக்கும் ஹேர் டை உபயோகப்படுத்துவதை

தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட‍து. அந்த நரைத்த‍ முடியை கருமையாக்கும் ஹேர் டை பற்றி இங்கு காண்போம்.

ஹேர் டையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஹேர் டையைத் தேர்ந்தெடுக்கும் முன் அவற்றை வகைப்படுத்தி இனம் கண்டு கொள்வது அவசியம்.

1. Gradual Hair Dyes

2. Temporary Hair Dyes

3. Semi-Permanent Hair Dyes

4. Demi – Permanent Hair Dyes

5. Permanent Hair Dyes

(1) GRADUAL HAIR DYES:

இவ்வகை டை, வீட்டிலேயே உபயோகிக்க ஏதுவாக தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பல நாட்கள் தொடர்ந்து உபயோகித்த பின் தேவையான நிறம் கிடைக்கும். அதன் பின்னர் உபயோகத்தை நிறுத்திக்கொள்ளலாம். பின்பு கலர் குறைந்த பிறகு திரும்ப வும் முன்புபோல உபயோகிக்க வேண்டியிருக்கும். இது பொதுவாக உலோக உப்புகளால் திரவ நிலையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

எ.கா: Lead, Silver, Bismuth அதை தலையில் தடவியபின் Sulfides, Suboxides மற்றும் Oxides-களாக மாறி நிறத்தைக் கொடுக்கும். இவ்வகை டை போடுவதற்கு அவ்வளவு எளிதாக இருக்காது. அதிக நேரம் தடவி வைத்திருக்க வேண்டியிருக்கும். சரியான நிறம் கிடைக்காது. ஆனால், PPD அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த டை உகந்தது.

PPD என்றால் என்ன?

Para Phenylene Diamine என்பதின் சுருக்கம்தான் PPD. டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே.

2002ல் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் 1-64% சதவீதம் வரை ஹேர் டைகளில் PPD இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் விலை மலிவான, தரமில்லாத டையை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

(2) TEMPORARY HAIR DYE 

இது தற்போதிருக்கும் முடியின் நிறத்தை கொஞ்சம் அதிகப்படுத்திக் காட்டும். ஆனால், இது பொதுவாக ஒரே தடவை ஷாம்பு போட்டால்கூட போய் விடும். துணி களுக்கு உபயோகப்படுத்தப்படும் டையை இதில் உபயோகிப்பார்கள். Silver Shampoo என்று விற்கப்படுவதுகூட ஒரு Temporary Hair Dye-தான்.

(3) SEMI-PERMANENT HAIR DYES

இது தண்ணீரில் கரையக்கூடிய அயனி அல்லாத எடை குறைவான முன்பே உருவா கிய(Preformed) டையைக் கொண்டது. Anthraquinone அல்லது Aromatic Amines போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும். இதை பொதுவாக ஷாம்பூ போட்டு நன்கு உலர்ந்த முடியில் 20நிமிடம் தடவி வைத்துபின் கழுவியபின் ஒரு கண்டிஷன ரும் உபயோகிக்க வேண்டியிருக்கும். 6-8 தடவை ஷாம்பு போட்டு கழுவும் வரை, இவ்வகை ‘டை’ தலைமுடியில் இருக்கும். ஆனால், இவ்வகை ‘டை’ உபயோகிக்கும் முன் Patch Test செய்துகொள்வது அவசியம்.

(4) DEMI – PERMANENT HAIR COLORS

இதில் அமோனியா கிடையாது. Hydrogen Peroxide 2% இருக்கும். இது நிரந்தர டையை விட குறைவான தோல் எரிச்சலையும் முடி சேதத்தையும் கொடுப்பதாக இருக்கும்.

(5) PERMANENT HAIR DYES 

இந்த நிரந்தர ஹேர் டைதான் மிக அதிகமான உபயோகத்தில் உள்ளது. உபயோகி க்க எளிதாக இருப்பதாலும், நிறைய நாட்கள் தலைமுடியில் இருப்பதாலும், பல நிறங்களில் கிடைப்பதாலும் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருக்கும் Para Dyes என்பது Para Phenylene diamine, Pra toluene diamine, Para amino phenol எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவைகளை Primary Intermediaries என்று அழைப் பார்க்ள். இது ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் சேர்ந்து `O2’ வை ரிலீஸ் செய்யும் செயல் முடியின் ‘கார்டெக்ஸ்’ உள்ளே நடக்கும்.

இது கார்டெக்ஸ் உள்ளே நுழைவதற்கு உதவி செய்வது அமோனியா (Ammonia). அமோனியா அல்லாத டையில் அதனுடைய வேலையைச் செய்வது Sodium carbonate மற்றும் Ethanolamine. Para dye-களின் அளவு சிறியதாக இருப்பதால் அவை களால் க்யூட்டிகளின் ஊடே செல்ல முடியும். கார்டெக்ஸின் உள்ளே சென்றபின் அனிலீன் டைகளோடு (Aniline Dyes) சேர்ந்து தேவையான நிறத்தை கொடுக்கும்.

மார்க்கெட்டில் கிடைக்கும் Black Henna என்பதில் PPD- தான் சேர்க்கப்பட்டிருக்கும். PPD அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இவ்வகை நிரந்தர டைகள் Liquids, Gels மற்றும் Cream வடிவங்களில் கிடைக்கிறது. வீட்டில் உபயோகிக்க ஏது வாக உள்ள ஒரு வகையில் Hydrogen Peroxide ஒரு பாட்டிலிலும், Primary Intermediaries கண்டிஷனரோடு சேர்ந்து மற்றொரு பாட்டிலிலும் இருக்கும் இரண்டையும் சம அளவில் எடுத்து உபயோகிக்க வேண்டியிருக்கும். இதை கலந்த உடனேயே உபயோகித்துவிட வேண்டும். மீதம் இருப்பதை பின்பு உபயோகிக்கக் கூடாது.

PATCH TEST எப்படி செய்ய வேண்டும்?

காதுக்குபின்பு அல்லது முன்னங்கையில் இந்த ‘டை கலவையை பஞ்சினால் கொ ஞ்சமாக தடவிவிட்டு காயவிடவேண்டும். 2-3நாட்கள்வரை எந்தவித பக்கவிளைவு ம்  ஏற்படாவிட்டால் பின்பு அந்த ‘டையை’ தலையில் தைரியமாக உபயோகப்படுத் தலாம்.

ஆயுர்வேதிக் டைகள்

இந்தியா முழுவதும் பல்வேறு ஹெர்பல் மற்றும் ஆயுர்வேதிக் டைகள் விற்கப்படுகி ன்றன. Para dyes அலர்ஜி உள்ளவர்களுக்கு இது உதவும். இவை மருதாணி இலையை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. 2- Hydroxy 4-Napthaquinone என்னும் வேதிப்பொருட்கள் மருதாணியில் உள்ளது. அதுதான் நமக்கு நிறத்தை கொடுக்கிறது.

இவ்வகை பவுடர்களோடு டீ டிகாஷன் அல்லது காபி டிகாஷன் கலந்து 2-3 மணி நேரம் ஊறவைக்கும்போது ஒரு கருஞ்சிவப்பு நிறம் கிடைக்கிறது. அதனை தலை யில் 2-3 மணிநேரம் வைக்கவேண்டும். இது செய்வது கொஞ்சம் சிரமம். மற்றும் ஸ்ட்ராங்கான வாசனை சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. டை-அலர்ஜி இருப்பவர்கள், அதை தவிர்த்துவிட்டு இந்த மருதாணி இலை துகள்களை (ஹென்னா) பயன்படுத்தி க் கொள்ளலாம்.

=> செந்தில்

 

#GradualHairDyes #TemporaryHairDyes #SemiPermanentHairDyes #DemiPermanentHairDyes #PermanentHairDyes #HairDyes #HairDye #Hair #Dye #vidhai2virutcham

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: