Advertisements

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள்

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள்

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள்

க‌டந்த பலஆண்டுகளுக்குமுன் வசூல்ராஜா, M.B.B.S. திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனால் கட்டிப்பிடி வைத்தியம் என்றொரு வைத்தியம் பிரபலமடைந்தது. மேலு ம் கடந்தாண்டு விஜய் TV-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சிநேகன் அவர்களாலும் இன்னும் இந்த கட்டிப்பிடி வைத்தியம் பிரபலமானது. இவை போதாதென்று நம்ம‍ ஊர் நடிகை மும்தாஜ், குஷி திரைப்படத்தி ல் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற பாடலுக்கு விஜய்-உடன் நடனம் ஆடி னார். இந்த கட்டிப்பிடிப்ப‍து என்பது காதல், காமம் இவற்றை தாண்டி, நல்ல‍ நட்புக்கு இலக்கணமாகவும் இருக்கும் என்கிறார்கள்.

பொதுவாக‌ காதல் கொள்வது ( #Love ), முத்தமிடுவது ( #Kiss ) மற் றும் கட்டிப்பிடிப்பது ( #Hugging ).இவை மூன்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமான ஒன்றாகும். இம்மூன்றை விடுத்து நீங்க ள் ஆரோக்கிய வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள் என்றால் அது எவ்வளவு முழுமையானதாக இருக்கும் என்பது சொல்ல இயலாதது! காதல்கொள்வது முத்தமிடுவது மன இறுக்கத்தை குறைக்கும் என அறி ந்துள்ளோம் கட்டிபிடிப்பதுகூட உடல்நலத்திற்கு ஆரோக்கியமா னதா என்றால்? ஆம் ஆரோக்கியமானதுதான் கட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கட்டிப்பிடி வைத்தியத்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது மூலம் உங்களின் மந்தமான மன நிலையில் இருக்கும் உங்களை உற்சாகம் அடைய செய்கிறது, கவ லையில் உங்களை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் உங்களை காத்திடுகிறது. மேலும் கட்டி பிடிப்பதன்மூலம் அடையும் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள்…

ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகி ன்றன.

இருவருக்கு மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கு ம் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறது.

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும்போது ரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்கு கிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் ரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக் கொதிப்பு சமநிலைக்கு வந்து விடும்.

கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மன நிலையை அமைதிய டைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின்போது கட்டிப்பிடி த்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.

நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர் மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.

ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம் பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்க ளை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.

கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.

நீங்கள் கவலையாக உணரும்போது உங்களது அன்பிற்குரியவரையோ அல்ல செல்ல பிராணியையோ கட்டிப்பிடித்துக் கொண்டால் மனநிலை அமைதியடையும்.

நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும்போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.

கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெ னில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவு கிறது.

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதன்மூலம் நம்பிக்கை அதிகரிக்கிறது மற்றும் அதன் மூலமாக நல்ல அபிப்ராயம் அளிக்கப்படுகிறது.

கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது.

இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.

=> விஷ்வா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: