நடிகையை முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் – வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை
நடிகையை முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் – வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை
தமிழில் புதுமையிலும் புதுமையான கதை அம்சத்துடன் ஆர்.கண்ணன் இயக்கத்தி ல் தற்போது
உருவாகிவரும் படம் ‘பூமராங்’. இதில் அதர்வா முரளி நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திர த்தில் இந்துஜா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்கள்.
இயக்குனர் வேலையை எளிதாக்கிய இந்துஜா #Indhuja
மேயாதமான் படம்மூலம் புகழ்பெற்ற இந்துஜாவை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, ‘இந்துஜாவின் திறமையைபற்றி கூற ‘திறமை ‘ என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சி யிலும் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதா க்கினார். அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார் இயக்குனர் கண்ணன்.
அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது “அதர்வா முரளி ( #AdharvaMurali ) மற்றும் மேகா ஆகாஷ் ( #MegaAkash ) கதாபாத்திரங் கள் ‘பூமராங் ( #boomerang )’ ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வா ய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்போது, மிகச்சிறப்பான நடிப் பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடி த்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உடனடிதேர்வாக அமைந்தார்’ என்றார்
பார்ப்பவரிடத்திலெல்லாம் இந்துஜாவின் நடிப்பை புகழ்ந்து இய க்குநர் கண்ணன், இந்துஜாவை நேரில் சந்தித்தபோது ஆர்வமிகு தியால் அவரது கன்னதில் முத்தமிட்டு ( #Kiss ) பாராட்டி மகிழ்ந்தா ராம். இதனால் வெட்கத்தில் ஆடிப்போனாராம் நடிகை இந்துஜா
ஆக்ஷன் – த்ரில்லர் படமான பூமராங் போஸ்ட் புரொடக்சன் பணி களின் இறுதிகட்டத்தை எட்டிஉள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இப் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இசை, டிரெய்லர் மற்றும் உலகளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: Adharva Murali, இயக்குநர், இயக்குனர், கண்ணன், நடிகை, நடிகையை முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் - வெட்கத்தில் முகம் சிவந்த நடி, பாராட்டிய, பூமராங், முகம் சிவந்த, முத்தமிட்டு, யை, வெட்கத்தில், வெட்கத்தில் முகம் சிவந்த நடிகை, boomerang, Director, Indhuja, Kannan, Mega Akash |
Leave a Reply