Advertisements

Vijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்

விஜய் டி.வி – நீயா நானா நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்

Vijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்

நீயா நானா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து 05-07-2018 மதியம் எனக்கு

அழைப்பு வந்தது. (எனது கைபேசி எண்ணை நான் கொடுக்க‍ வில்லை அவர்களா கவே கண்டறிந்து, என்னை கைபேசியில் தொடர்பு கொண்டார்கள்) நாங்கள் விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சியிலிருந்து பேசுகிறோம் என்று அறிமுகப்படு த்திக் கொண்டு. நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று பேச நீங்கள் விரும்புகிறீர்களா எனக்கேட்டனர். அதற்கு நான் விரும்புகிறேன் என்றேன். உடனே அடுத்த‍ கேள்வி, விடுமுறையே எடுக்காதவர்களை பற்றி நீங்கள் என்ன‍ நினைக்கிறீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களைப் பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கும் என்றேன். உடனே அவர்கள், சரி சார் நீங்கள் வரும் சனிக்கிழமை (07-07-2018) அன்று 6 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள‍ பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த‍னர்.

அதன் பிறகு 07-07-2018 அன்றைய‌ தினம் மதியம் மீண்டும் ஒரு அழைப்பு நீயா நானா விலிருந்து… நீங்கள் வரும்போது மிகச்சரியாக 6.30 மணிக்கு வந்துவிடுங்கள் வரும் போது கருப்பு வெள்ளை நிற உடையை தவிர்த்து பிற நிற உடைகளை அணிந்து வரச்சொன்னார்கள். நானும் அதற்கு சரி என்றேன்.

அவர்கள் சொல்படி அடர்த்தியான சாம்பல் மற்றும் நீல நிறம் கலந்த பேண்டும், நீலமும் வெள்ளையும் கலந்து செக்டு சட்டையையும் அணித்து கொண்டு, சரியாக அன்று மாலை 5.45 மணிக்கு கிளம்பினேன். நான் கிளம்பும்போது என் அம்மாவும் என்னுடன் வர விரும்பியதால் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னை சேப்பாக் க‍த்தில் உள்ள‍ எனது வீட்டில் இருந்து பிரசாத் ஸ்டூடியோ நோக்கி கிளம்பினேன்.

மிகச்சரியாக 07-07-2018 அன்று மாலை 6.30க்கு பிரசாத் ஸ்டூடியோவிற்குள் நுழைந்தேன்.

மணி 6.35

– நிகழ்ச்சி அரங்குக்கு வெளியே இருந்த ஊழியரிடம் எனது பெயரைச் சொல்லி நான் வந்திருப்ப‍தை பதிவுசெய்தேன். மேலும் வேறு பதிவு ஏட்டில் எனது பெயரை குறிப் பிட்டு, கையெழுத்தினை போட்டேன். ( என்னைப் போலவே பலரும் அங்கு கூடியிரு ந்தனர். )

மணி 7.00

– அனைவரையும் உள்ளே அழைத்தார்கள். முதலில் விடுமுறை போடாமல் பணிக்கு வந்தவர்களை ஒவ்வொருவருடைய பெயர்களையும் அழைத்து, அவர்களை இடது புறத்தில் உள்ள‍ நாற்காலிகளிலும், விடுமுறை போடாமல் பணிக்கு வருவதை மறு த்துப் பேசுபவர்களாகிய எங்களையும், எங்களது பெயர்களைச் சொல்லி அழைத்து, வலது புறத்தில் உள்ள‍ நாற்காலிகளிலும் அமரச் சொன்னார்கள். (நான் உயர்ந்த மனிதன் என்பதால் எனக்குமேல் வரிசையில் நடுவில் என்னை அமரசொன்னார்கள் )

மணி 7.20

– இரவு சாப்பாடு தயாராக இருக்கிறது ஆகவே நீங்கள் எல்லோரும் சென்று சாப்பிட் டு விட்டு, மீண்டும் இங்கு வந்து அவரவர் இடங்களில் அமருங்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து அறிவிப்பு வரவே நாங்கள் சாப்பிட கிளம்பினோம்

மணி 7.30

– உணவகத்தில் நீண்ட வரிசையில் நின்று ஒரு தட்டுஎடுத்து நீட்டினேன். அதில் ஒரு இட்லி, ஒரு சப்பாத்தி ஒரு பெரிய கரண்டியில் தயிர் சாதம் அப்புறம் ஒரு பெரிய கரண்டியில் சாம்பார் சாதம் வைத்தார்கள். அதனை சாப்பிட்டு முடித்தோம். (பரவா யில்லை சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது)

மணி 8.00

– நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர் ந்தேன். நிகழ்ச்சி குறித்த‍ விதிமுறைகளை, அதாவது மைக்கை யாரும் பிடுங்க வேண்டாம், கோரஸாக சத்தம் போடவேண்டாம் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டும். போன்ற சிலவிதிமுறைகளை வாய்மொழியாக கூறிவிட்டு அதன் பிறகு, சில பல விதிமுறைகளை குறிப்பிட்ட‍ ஒரு விண்ண‍ப்பத்தினை எங்களிடம் கொடுத்து அதனை படித்துப் பார்த்து, உங்கள் பெயர், வீட்டு விலாசம், கைபேசி எண் போன்றவற்றை குறிப்பிடுமாறு தெரிவித்தார்கள். அவ்வாறே நாங்களும் விண்ணப் பத்தை படித்துபார்த்து பூர்த்திசெய்து கொடுத்தோம். (அவர்கள் கொடுத்த‍ மூன்று நான்கு தண்ணீர் பாட்டில்களை திறந்து தாகத்தை தீர்த்தோம். )

மணி 8.15

– நீயா நானா கோபிநாத் வருகை. அவரது ஒப்ப‍னை மற்றும் டச்சப் சில நிமிடங்கள். இந்நேரத்தில் எங்கள் முகங்களை குளோஸப் ஷாட் எடுக்க‍ விருப்ப‍தாகவும் , எங்கள் எல்லோரையும் அமர்ந்த இடத்தில் இருந்தவாறே அரங்கு நடுவில் நிற்கும் ஒருவரை பார்த்த‍வாறு இருக்குமாறு போஸ் கொடுக்க‍ச் சொன்னார்கள் நாங்களும் கொடுத்தோம். மேலும் நிகழ்ச்சி முடிய நள்ளிரவு ஆகிவிடும் என்பதால், தாம்பரம் செல்லும் வாகனம் உண்டு. ஆதலால் தாம்பரம் வழியில் யாராவது போகிறவர்கள் தாராளமாக பெயர்களை சொல்லவும் என்று அறிவிப்போடு ஒருவர் வந்தார். அவரி டம் பலர் தங்களது பெயர்களை தங்களுடன் வந்த உறவுகளின் பெயர்களையும் பதிவு செய்தனர். ) பங்கேற்பாளர்களுடன் வந்த உறவினர்கள் நண்பர்களுக்கு கோபிநாத்துக்கு எதிர் புறம் இருக்கைகள் ஒதுக்க‍ப்பட்டிருந்தன• அதில் அவர்கள் அமர்ந்து நிகழ்ச்சி கண்டுகளிக்க‍த் தொடங்கினர்.

மணி 8.30

– நீயா நானா கோபிநாத், நிகழ்ச்சியைத் தொடங்கினார். முதலில் ஒருநாள் கூட விடுமுறை போடாதவர்கள் பக்க‍ம் நின்று அவர்களிடம் சிலகேள்விகளை கேட்க தொடங்கினார். அவர்களில் ஒருவர், தான் பணிபுரிந்த 40 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை போட்ட‍தில்லை என்று கூறியதோடு, த‌ன் மனைவிக்கு தீ விபத்து ஏற்பட்டு விட்ட‍தாக இரவு 7 மணிக்கு தகவல் வந்தது ஆனால் தான் த‌னது வேலை யை முடித்து விட்டுத்தான் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு போனதாக‌ தெரிவித்தார். அதன்பிறகு ஒரு ஆசிரியை, தான் பள்ளிக்கு விடுமுறையே போடாமல் பள்ளிக்கு சென்றதாகவும் பேசினார்கள். இவர்களைப் போன்று பலர் விடுமுறை போடாமல் பள்ளிக்கு சென்றதை பெருமை பொங்க பேசினர். மூன்றாவதாக, தனது மனைவிக்கு நடந்த 2 பிரசவங்கள்போதும் நான் மனைவியுடன் இருக்காமல் எனது அலுவலகம் சென்று அங்கு பணியில் இருந்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.

மணி 9.00

– (எனக்கு மைக் கிடைத்த‍ நேரம்) போபிநாத் எங்களிடம் இவர்களிடம் கேள்வி கேட்க விரும்புவர்கள் கேட்கலாம் என்றார். சிலர் கேள்விகள் கேட்ட‍போது அதனை கோபிநாத் அவர்கள், ரொம்ப ஆழமா போகாதீங்க என்றவாறே புறக்கணித்து விட் டார். இந்த நேரத்தில் எனது கைக்கு மைக் கிடைத்தது. உடனே நான், 40 வருடங்கள் விடுமுறையே போடாமல் பணிக்கு சென்றவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகி றேன் என்று கூறிவிட்டு அவரிடம் ஐயா, “உங்கள் மனைவி தீவிபத்தில் வேறு மாதிரி யாக இருந்தால், என்னை தவறாக எடுத்துக்கொள்ள‍ வேண்டாம் உங்கள் மனைவி இறந்து விட்டால் என்ன‍ ஆகியிருக்கும்” என்று உரத்த‍ குரலில் கேட்டேன். .அதற்கு  எதிர்ப்புகுரல்கள் பல எழ தொடங்க‌, கோபிநாத் அவர்களிடம் இருந்தும் எதிர்ப்பலை வீச சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட‍து. (அதன்பிறகு இதுபோன்ற கேள்விகளை தவிர்க்குமாறு கோபிநாத் கேட்டுக்கொண்டார்)

அதன்பிறகு விவாதம் இரதரப்புக்கும் இடையே சற்று சூடுபிடிக்க‍த் தொடங்கியது

மணி 10.30

– (எனக்கு மைக் கிடைத்த‍ நேரம்) எங்களிடம் கோபிநாத் அவர்கள், விடுமுறையே போடாதவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன‍ தோன்றுகிறது என்றார். அதற்கு நான் மைக்கை கையில் பிடித்த‍படி, எனக்கு வேடிக்கையாகவும், விநோத மாகவும் இருக்கிறது. என்றேன். அதற்கு கோபிநாத் அவர்கள், நான் அதைக் கேட்க வில்லை. உங்களுக்கு எப்ப‍டி இருக்கிறது என்று திரும்பவும் கேட்டார். அதற்கு நான், சார், நான் அலுவலகம் வைத்திருக்கிறேன். இவர்களைப் போன்று விடுமுறை யே எடுக்காத‌ பணியாளர்கள் எனக்கு கிடைத்தால், நான் இன்னும் அதிகமாக விடுமுறை எடுத்துக்கொண்டு ஜாலியாக இருந்திருப்பேன் என்றேன். (முதலில் எதிர்தரப்பினர் கைத்த‍ட்ட‍லும், அதன்பிறகு என் தரப்பினர் கைத்தட்ட‍லும் கேட்ட‍து) .

அதன்பிறகு விவாதம் இரதரப்புக்கும் இடையே சற்று சூடுபிடித்தாலும் கொஞ்சம் ஜாலியாகவும் போனது.

மணி 11.40

– (எனக்கு மைக் கிடைத்த‍ நேரம்) எங்கள் தரப்பிடம் நீங்கள், என்ன‍ என்ன‍ காரணங் களுக்காக விடுமுறை போடுவீர்கள் என்று கேட்டார். சிலர் இந்த கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே வரும்போது நான் அவர்களிடம் மைக் கை வாங்கி, எனது அலுவலகத்திற்கு யாராவது வி.ஐ.பி.க்கள் வந்தாலோ, அல்ல‍து நல்ல‍ வியாபாரம் ஆனாலோ கடையை மூடிவிட்டு , வீட்டுக்கு வந்து, எனது அம்மா மற்றும் உறவுகளு டன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வேன் என்றேன்.

அதன்பிறகு விவாதம் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்க‌ளை எடுத்து வைத்த‍னர்,

மணி 12.15 முதல் 12.50 வரை

– விருந்தினர்கள் இருவருக்குமிடையே கடுமையான‌ கருத்து மோதல்கள் ஏற்பட்டு அனல் பறக்கும் விவாதமாக மாறியது.

மணி 12.55

– நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கோபிநாத் சென்று விட்டார்.

மணி 1.00

– பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து, எனது இருசக்க‍ர வாகனத்தில் நானும் எனது அம்மாவும் சேப்பாக்க்த்தில் இருக்கும் எங்கள் இல்ல‍த்திற்கு வந்து சேர்ந்தோம்.

(ஏனோ தெரியவில்லை. இங்கு சென்றும் எனது கைபேசியில் ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ள‍ எனக்கு விருப்ப‍ம் இல்லாமல் போனதால் நான் ஒளிப்படங்கள் எடுத்துக் கொள்ளவில்லை ) #NeeyaNaana #VijayTV TGopinath #vidhai2virutcham 

=>விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (98841 93081)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: