Advertisements

குழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல‍ நோயின் அறிகுறியும்கூட‌

குழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல‍ நோயின் அறிகுறியும்கூட‌

குழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல‍ நோயின் அறிகுறியும்கூட‌

பெண்கள் அழகில் பளிச்சென்று திகழவேண்டும் என்றால் அவர்களது

கன்னங்கள் மொழுமொழுப்பாக ஜொலிக்க வேண்டும் என சொல்லி க்கொண்டிருந்தவர்கள், இப்போது கன்னங்களில் கூடுதலாக இன் னொன்றையும் எதிர்பார்க்கி றார்கள். அது கன்னக்குழி.

கன்னத்தில் குழி விழுந்தால் பயன்களும் வரும் நோய்களும் தெரியுமா

கன்னத்தில் குழிவிழுந்தால் அது கவர்ச்சியை அதிகரிக்கிறது என்கி றார்கள். ஆனால் இந்த கன்னக்குழி உள்ளவர்களுக்கு உண்மையில் சில மரபியல் மாற்றங்கள்தான் காரணம் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?…

ஆம், அந்த அழகை பார்த்து ரசிக்கும் ஆண்களில் பலர் ‘சில பெண் களை மட்டும் இறைவன் நிதானமாக ரசித்து படைத்திருக்கிறான். அவர்களது கன்னங்களில் மட்டும் குழி விழுகிறது’ என்பார்கள். ஆண்களுக்கும் கூட கன்னக்குழி விழும்.

இந்த குழி கன்னத்தில் உள்ள தோலுக்கும், அதன் உள்ளே உள்ள தசைக்கு இடையே ஏற்படும் பிரச்சனை காரணமாக ஏற்படுகின்ற தாம். இந்த கன்னக்குழி சிலருக்கு லேசாகவும், சிலருக்கு நன்றாக குழி தெரியும் அளவுக்கு இருக்கும்.

இது ஒரு மரபியல் ரீதியாக தொடரும். கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவ ர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிச்சயம் கன்னக்குழியுடன் தான் குழந்தையும் பிறக்கும்.

செயற்கை கன்னக்குழி

இயற்கையாக குழி இல்லாதவர்கள் செயற்கையாக உருவாக்கிக்கொள்ளலாம். இது நவீன அழகு சிகிச்சையாகும். லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத் து, 20 நிமிடங்க ளில் குழியை உருவாக்கிவிடுகிறார்கள்.

முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷ யங்களை கருத்தில்கொண்டு குழியை உருவாக்குகிறார்கள்.

ஆபரேஷன் முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி, பின்பு சிரிக்கும்போதும், பேசும்போதும் மட்டும் தெரியும்.

சரி. செயற்கை குழி அழகாக இல்லாவிட்டால், குழியை மூடிவிடலா மா? அதற்கு எளிதான இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம்.

கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்?

கன்னங்களின் தசைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் குழி விழுவதற்கான காரணம் முகத்தில் ‘ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர் ’ என்ற தசைப்பகுதியில் ஏற்படும் மாற்றமே கன்னத்தில் குழியாக மாறுகிறது. அந்த தசையின் தடிமனாலோ, தொடர் தசையில் ஏற்ப டும் பிளவாலோ குழி உருவாகிறது

முகத்தில்சேரும் கொழுப்பும் கன்னக்குழிக்கு காரணமாகிறது. ஆனால் கொழுப்பு குறையும்போது அது மறைந்துவிடும். இளமை யில் குழி அழகோடு தோன்றினாலும் வயதாகும்போது அது காணாமல் போவதன் மாயம் இதுதான்.

=> வரலட்சுமி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: