Advertisements

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்

மாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்

வியாபாரி ஒருவருக்கு தனக்குப் பின் வியாபாரத்தை கவனிக்க தகுதியானவன் யார் என அறிய விரும்பினார். தன் மூன்று மகன்களை அழைத்து நான்

உங்களுக்கு ஒருபோட்டி வைக்கப்போகிறேன் அதற்காக ஒவ் வொருவருக்கும் நூறு சீப்பு ( #Comp ) தரப்படும். மூவரும் தனித் தனியாக ஏதாதாவது புத்த மடத்திற்கு சென்று சீப்பு விற்கவேண் டும் மூன்று நாளைக்குள் யார் அதிகம் சீப்புகளை விற்கிறீகளோ அவரே வெற்றியாளர் எனசொல்லி அனுப்பினார் புத்த துறவிகள் மொட்டை போட்டிருப்பார்களே அவர்களிடம் எப்படி சீப்பு விற்க முடியும்? என குழப்பத்துடன் ஆளுக்கொரு மடத்தை நோக்கி சென்றனர். ( நூற்றுக்கு நூறு )

மூன்று நாள் கடந்தது. மகன்களை அழைத்து விவரம் கேட்டார் வியாபாரி. மூன்றா வது மகன் சொன்னான் நான் இரண்டு சீப்பு விற்றேன் என்றான் அதற்கு வியாபாரி. பரவாயில்லை எப்படி விற்றாய் என்பதை மட்டும் சொல் என கேட்டார். அதற்கு அந்த மூன்றாவது மகன், முதுகு சொறிய பயன்படும் என்றேன் அரை மனதாக ஒரு துறவி இரண்டு சீப்பு வாங்கினார் என்றான்.

அடுத்த‍தாக இரண்டாம் மகன் சொன்னான் மடத்திற்கு வரும் பக்தர்கள் கலைந்த தலையுடன் வந்தால் நன்றாக இருக்காதல்லவா? வாசலில் ஒரு கண்ணாடியுடன் சீப்பு வைத்தால் சீவிக்கொள்வார்கள் என்றேன் பத்து சீப்புகளை வாங்கிக் கொண்டனர். ஓ! நல்ல யோசனை தான் என்றார்.

அடுத்த‍படியாக கடிசையாக மூத்த‌ மகனைப் பார்த்தார். அவன் சொன்னான். அப்பா நான் 100சீப்புக்களையும் விற்றுவிட்டேன் . இன்னும் எனக்கு நூறு சீப்பு தேவை என்றான். ஆச்சர்யம் தா ங்கவில்லை வியாபாரிக்கு. சிரித்தபடியே பிரம்மாதம் பிரம்மாதம் எப்படி விற்றாய் எனகேட்டார். சீப்புகளில் புத்தரின் உபதேசங்களை பொரித்தேன். அதை ஆசையுடன் பக்தர்கள் வாங்கிவிட்டனர். சபாஷ் என்ற வியா பாரி மூத்த மகனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். எப்படியும் மூத்த‌ மகன்தான் வெற்றி பெறுவான் என்று கதையின் ஆரம்பத்திலேயே நினைத்திருப்பீர்கள் ஆனால் இந்நபர்போல நம்மால் முடியவில்லை யே ஏன் என நினத்திருப்பீர்களே. அதற்கு காரணம் ஒரு விஷயத்தை ஒரே கோணத்தில் மட்டும் அணுகாமல் மாற்றி யோசித்தால் போதும் சிறு மாற்றம் கூட பெரிய ஆதாயத்தைத் தரும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: