Advertisements

அதிரவைக்கும் உண்மையும் புண்ணிய பூமியும் – ஓர் இரகசியம்

அதிரவைக்கும் உண்மையும் புண்ணிய பூமியும் – ஓர் இரகசியம்

அதிரவைக்கும் உண்மையும் புண்ணிய பூமியும் – ஓர் இரகசியம்

இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு மதத்திற்கும் புண்ணிய பூமி உண்டு, அந்த

வகையில் கிறித்துவர்களுக்கு ஜெருசலம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா, அதே போல் இந்து மதத்த வருக்கு பல புண்ணிய ஷேத்திரங்கள் இருந்தாலும் காசி இராமேஸ்வரம் ஆகிய இரண்டு உண்டு. இந்த இரண்டில் ஒன்றான காசியை பற்றி இங்கு காணவிருக்கிறோம்.

காசி இரகசியம்!- அதிரவைக்கும் உண்மைகள்!

காசி ( #Kasi ) (வாரணாசி / #Varanasi ) பற்றி எல்லோருக்கும் தெரியும். புண்ணிய பூமி. பலர் பார்த்தும் இருப்பீர்கள்.   காசியில் இறந்தால் முக்தி, மோட்சம் என்று இந்து மதத்தினர்க்கு ஆழ்ந்த நம்பிக்கை.   பல வயதானவர்கள் தங்கள் அந்திம காலத்தை அங்கே கழிக்க பெரும் ஆவல் உண்டு. இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கென்றே தங்குவதற்கு காசியில் பல இடங்கள் உண்டு.

அதில் ஒன்றுதான் “காசிலால் முக்தி பவன் – #MukthiBhawan”

அங்கே ஒரு விசித்திரமான rules உண்டு. 15 நாட்களுக்குதான் தங்க அனுமதிப்பார் கள். அதற்குள் இறப்பு இல்லை என்றால் அறையை காலி செய்துவிடவேண்டும்.   இதை கேள்விபட்ட ஒரு ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் ஒருவரின் அனுபவம் இங்கே.இனி அவர் பேசுவார். நான் முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் ஆச்சரியமாகவும், ஆர்வமாகவும் இருந்தது. அங்கே வந்து தங்கு பவர்கள் எந்த மன நிலையில் வருகிறார்கள்? அவர்கள் விரும்பியபடி மன நிறைவோடு தங்கள் பயணத்தை முடித்து கொள்கிறார்களா? என்ற அறிய ஆவல் ஏற்பட்டது. அந்த முக்தி பவனில் ஒரு வாரம் தங்குவதற்கு அனுமதி பெற்று அங்கே தங்கி, அங்கே உள்ள வயதானவர்களுடன் ஆத்மார் த்தமாக உரையாடியதில் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டேன்.

முக்தி பவனின் மேனேஜர் Mr.சுக்லா.44 வருடங்களாக அங்கே பணிபுரிகிறார். சுமார் 12,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பார்த்திருக்கிறார். அவரிடம் உரையாடியதில் கிடைத்த Core point. வாழும் போதே அவ்வப்போது வரும் பிரச்னைகளை சரிசெய்து விடவேண்டும். (குடும்பத்துடன், உறவுகளு டன், மற்றவர்களுடன்) அதைவிட்டு விட்டு இந்த முக்தி பவன் வரும்வரை (இறுதிக் காலம் வரும் வரை) வாழ்நாள் எல்லாம் அதை சுமந்துகொண்டு மனதளவில் அடிபட்ட காயங்களோடு இங்கு கடைசி நேரத்தில் அடைக்கலம் ஆகிறார்கள். செய்த தவறுக்கு வருந்துகிறார்கள். சரிசெய்து கொள்ள அந்திம காலத்தில் முயற்சிக்கிறார்கள்.அவதிப்டுகிறார்கள். 

Mr.சர்மா என்பவர் இங்கே வந்தபோது 16வது நாள் இறந்து விடுவேன் என்றார். 14 வது நாள் என்னை கூப்பிட்டு, 40வருடங்களுக்குமுன்பு முட்டாள்தனமாக சகோதரர்களுடன் சண்டை போட்டுக்கொண் டு வீட்டின் குறுக்கே சுவர் கட்டி எல்லோரையும் வருத்தப்பட செய்தேன். என் சகோதரர்களை பார்க்க வேண்டும் என்றார் கண்ணீர் மல்க. சகோதரர்களை வரவழைத்தேன். அவர்கள் கைகளை பிடித்து க்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார். வீட்டு சுவரை இடித்து விடுங்கள். என்னை மன்னித்து விடுங்கள் என்றார். சகோதரர்களும் கண் கலங்கி அவரை சமாதானப்படுத்தினார்கள்.

உரையாடிக் கொண்டிருக்கும் போதே, மனநிறைவுடன் அவர் மூச்சு நின்றது. அன்று 16வது நாள் இது நிஜம். சினிமா கதை இல்லை. இதுபோல பல நிகழ்வுகள். வாழும் போதே எல்லாவற்றையும் மன நிறைவோடு ஒழுங்குபடுத்தி விட்டால் இறப்பு ஒரு முக்தி மோட்சமே” என்று முடித்தார். இதிலிருந் து என்ன புரிகிறது? இந்த கணம் மட்டுமே நிஜம். அடுத்து என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியா து. மனநிறைவோடு வாழ்வது நம் கையில்தான். நிகழ்காலத்தில் நீங்கள் வாழும்பொழுது மட்டுமே, நீங்கள் வாழ்கிறீர்கள்.

வாட்ஸ் அப் பதிவு

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: