Advertisements

பஞ்சாயத்து போர்டு அப்ரூவல் – சிக்கலும் நிரந்த தீர்வும் – ஓரலசல்

பஞ்சாயத்து போர்டு அப்ரூவல் – சிக்கலும் நிரந்த தீர்வும் – ஓரலசல்

பஞ்சாயத்து போர்டு அப்ரூவல் – சிக்கலும் நிரந்த தீர்வும் – ஓரலசல்

ஏறக்குறைய கோமா நிலையில் இருக்கிறது தமிழக ரியல் எஸ்டேட். அதிக விலை

காரணமாக மனைகளை விற்க முடியாமல் தவிப்பது ஒருபக்கம் என்றால், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் மனைகளைப் பதிவுசெய்ய முடியாமலும், பதிவு செய்த மனைகளை விற்க முடியாமலும் தவிப்பது இன்னொரு பக்கம் என பல பிரச்னைகள் தமிழக ரியல் எஸ்டேட்டை சுற்றிச் சுற்றி வருவதால்,  தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்கள் தூங்கிக் கொண்டிருக் கின்றன.

பஞ்சாயத்து மனை … அப்ரூவல் சிக்கல்… என்னதான் தீர்வு?

வீட்டுமனைகளை பதிவுசெய்ய முடியாததால் பல லட்சம்பேர் பாதிப்படைந்துள்ள னர். பொதுவாக, வீட்டுமனை லேஅவுட்கள் உருவாக்கப்படும்போது, நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (CMDA) அங்கீகாரம் (அப்ரூவல்) பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் கிராமப் புறங்களில் பஞ்சாயத்து அப்ரூவல் லே அவுட்கள் என்கிற பெயரில் விவசாய விளைநிலங்கள் கூறு போட்டு விற்பனை செய்யப்பட்டன. பஞ்சாயத்துத் தலைவருக்குப் புதிய வீட்டுமனைகளுக்கு அங்கீகார ம் வழங்கும் உரிமை சட்டப்படி கிடையாது. அவரிடம் தடையில்லாச் சான்று மட்டும் வாங்கி விட்டு, வீட்டு மனைகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் விற்பனை செய்து வந் தார்கள். இதனை எந்தவொரு மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு த் துறையும் பதிவு செய்து தந்தது.  அரசாங்கம், தனக்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் வந்தால்போதும் என்று நினைத்து சும்மா இருந்துவிட்டது 

இப்படி விற்பனையான லேஅவுட்களில் மனை வாங்கிய மக்கள், அடிப்படை வசதிக ள்கூட இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இச்சூழலில், அங்கீகாரமில்லாத மனை களைப் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரி த்த உயர்நீதிமன்றம், விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிப் பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யவும் 9.9.2016 முதல் தடை விதித்தது. இதனால், மாதத் தவணை மூலம் பணம் கட்டிய பல லட்சம் ஏழை கள், பணத்தை முழுமையாகக் கட்டிய பின்பும் மனையைப் பத்திரம் செய்து கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர். 

இதையடுத்து, சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி. அமைப்புகளில் ஒப்புதல் பெறாத வீட்டு மனைகள் அனைத்தையும் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை சி.எம்.டி.ஏ/ டி.டி.சி.பி ஒப்புதல் பெற்று அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளாக மாற்ற, 2017-ம் ஆண்டில் அரசாணை வெளியிட்டது. 2016 அக்டோபருக்கு முன் பதிவுசெய்த பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளைக் கட்டணம் செலுத்தி, ஒழுங்குமுறைபடுத்தி, அங்கீகாரம் பெற்ற மனைகளாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வீட்டு மனை அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. சி.எம்.டி.ஏ. மற்றும் டி.டி.சி.பி. இரண்டும் புதிய அரசாணையை பின்பற்றி களமிறங்கியுள்ளன. இதனைச் செய்துமுடிப்பதற்காக முதலில் ஆறுமாத காலஅவகாசம் தரப்பட்டிருந்தது. பின்னர், இது ஒரு வருடமாக மாற்றப்பட்டது. அப்படியும் பணிகள் மந்தமாக நடந்து வந்தால், தற்போது இன்னும் ஆறு மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் ஆணையில் என்னென்ன தெரிவிக்கப்பட்டுள்ளன, ஏன் இந்தக் கால தாமதம், பொதுமக்களுக்கு இதனால் விளையும் தீமைகள் குறித்து வழக்குரைஞர் எம்.சுந்தர பாண்டிய ராஜாவிடம் கேட்டோம்.

“தமிழகத்தில் போடப்படும் லே அவுட்டுகள் ‘நகர் ஊரமைப்பு சட்டம்-1971’ன்கீழ் வரு கின்றன.  இதன்படி, ஒரு நிலத்தை லேஅவுட்டுகளாக மாற்றம் செய்ய, டி.டி.சி.பி-க்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. நகர் ஊரமைப்புத்துறை, புதிய விதிமுறைகளை இயற்றி , ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நில உரிமையாளருக்கு அனுமதி அளிக்கிறது.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

தமிழகத்தில் சுமார் 27,000 அங்கீகாரமில்லாத லே அவுட்டுகளில்  சுமார் 13.5 லட்சம் மனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 20.10.16-க்குமுன் மனையை பதிவுசெய்திருந் தால் மனைகளின் உரிமையாளர்கள், அதனை இப்போது யாருக்கு வேண்டுமானா லும் விற்கலாம். இந்த மனைகளை வாங்கு பவர்களும் யாருக்கு வேண்டுமானலும் விற்பனை செய்யலாம். ஆனால்  பிற்காலத்தில் வீடு கட்டும்போது, அப்ரூவல் மனை என்கிற அங்கீகாரம் தேவைப்படும். அப்போது, மனையின் உரிமையாளர் அல்லது லேஅவுட் போட்டிருப்பவர், தங்களுடைய மனையை முறைப்படுத்தக்கோரி விண் ணப்பிக்கலாம். இதற்கு அந்த லேஅவுட்டின் உரிமையாளர், 20.10.16-க்கு முன் ஒரு மனையையாவது பதிவு செய்து தந்திருக்க வேண்டும்.

அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்க அந்த மனையானது அனைவருக்கும் உரிமையுள்ள பொதுச் சாலையில் அமையப்  பெற்றிருக்க வேண்டு ம் என்ற விதிமுறையைத் தளர்த்தி, பொதுச் சாலையிலிருந்து மனையை இணைக் கும் வழிப்பாதையைப் பயன்படுத்த மனை உரிமையாளருக்கு உரிமை இருந்தால் போதும் என இப்போது மாற்றப் பட்டுள்ளது.

அங்கீகாரம்பெறாத லேஅவுட்டுகளில், ஏற்கெனவே 20.10.16 தேதிக்குள் பத்திரப்பதி வு செய்தது, அந்த லேஅவுட்டில் மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும் என் று ஆரம்பத்தில் விதிமுறை வகுக்கப்பட்டது. அது 20.10.16-க்குள் ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனை கிரயம் செய்யப்பட்டிருந்தால் கூட முழுமையாக அந்த மனைப் பிரிவையே டி.டி.சி.பி மூலம் முறைப் படுத்தலாம் என விதிமுறை மாற்றப்பட்டிரு க்கிறது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீட்டுக் கட்டணம் நீக்கப்பட்டு உள்ளது.

அதிகக் கட்டணங்கள்

தற்போதைய நிலையில், மேம்பாட்டுக் கட்டணம் (Development charge), ஒழுங்கு முறைக் கட்டணம் (Regularisation Charge) மற்றும் சீராய்வுக் கட்டணம் (Scrutiny Fees) ஆகிய மூன்று கட்டணங் களைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

மேம்பாட்டுக் கட்டணம்

மேம்பாட்டுக் கட்டணம், மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.500-ம், சிறப்பு மற்றும் தேர்வுநிலை மாநகராட்சி எனில் ரூ.250, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.150-ம், நகர பஞ்சாயத்து எனில் ரூ.75-ம், கிராமப் பஞ்சாயத்து ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.  

இப்படி வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் அந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, குடிநீர், சாலை, தெரு விளக்குகள் போன் ற அடிப்படை வசதிகளை வழங்க செலவிடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறைக் கட்டணம்

இக்கட்டணமும் மனை அமைந்திருக்கும் பகுதியைப் பொறுத்து, சதுர மீட்டருக்கு மாநகராட்சி எனில் ரூ.100-ம், சிறப்பு மாநகராட்சி எனில் ரூ.60-ம், முதல்நிலை மற் றும் இரண்டாம் நிலை மாநகராட்சி எனில் ரூ.60, நகரப் பஞ்சாயத்து எனில் ரூ.30, கிராமப் பஞ்சாயத்து எனில் ரூ.30-ம் கட்ட வேண்டும்.

சீராய்வுக் கட்டணம்

சீராய்வுக் கட்டணமாக மனை ஒன்றுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். ஒருவர் ஒரு லே அவுட்டில் மூன்று சென்ட் வீதம் 10 மனைகள் என மொத்தம் 30 சென்ட் வாங்கி யிருந்தால், அவர் சீராய்வுக் கட்டணமாக மட்டுமே ரூ.5,000 செலுத்த வேண்டும்.  
 
மாநகராட்சி பகுதியில் ஒருவர், 1,200 சதுர அடி மனையை டி.டி.சி.பி அப்ரூவல் மனையாக மாற்ற ரூ.67,700-யைக் கட்டணமாக செலுத்த வேண்டிவரும். இதுவே கிராமப் பஞ்சாயத்து என்றால் ரூ.6,500 கட்ட வேண்டும். இதுதவிர, அதிகாரிகளை மனை இருக்கும் இடத்துக்கு அழைத்துவரும் செலவுகளும் இருக்கின்றன.  

விலை குறைவு என்பதாலும் பிற்காலத்துக்குத் தேவைப்படும் என்பதாலும் முதலீட் டு நோக்கிலும் புறநகர்ப்பகுதிகளில் பல லட்சம் பேர் மனைகளை வாங்கிப் போட்டி ருக்கிறார்கள். இப்படி மனை வாங்கிப் போட்டவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்ப ட்டவர்கள் மனை இருக்கும் ஊரில் இல்லை. உதாரணமாக, சென்னையில் வேலை பார்க்கும் பலர் திருநெல்வேலி, தேனி, சத்தியமங்கலம் என பல இடங்களி ல் மனை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அதி கம் அலைய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பல ரும் மனையைப் பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒழுங்குமுறைப்படுத்தவில்லை என்றால்… 

அங்கீகாரமில்லாத லே அவுட்களை, தமிழ்நாடு அங்கீகாரமற்ற லே அவுட்டுகள் ஒழுங்கு முறை விதி, 2017-ன்கீழ் முறைப்படுத்த விண்ணப்பிக்க வில்லை எனில், அவருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விதிமுறை 15, பின்வருமாறு குறிப்பிடு கிறது.

1. மின்சாரம், குடிநீர், கழிவு நீர் வடிகால் அமைப்பு வழங்கப்பட மாட்டாது;

2. அனுமதியற்ற மனையைப் பதிவுச் சட்டம், 1908-ன்படி பதிவு செய்ய இயலாது;

3. அந்த மனையில் எந்தவொரு கட்டடமும் கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை 

மனைக்கான அங்கீகாரத்தைக் கோரும் விண்ணப்பத்தினை  www.tnlayoutreg.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளம் வழியாகப் படிவம்-1-யைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு விண் ணப்பிக்கும்போது சீராய்வுக் கட்டணமாக ரூ.500-யை இணையம் மூலம் செலுத்த வேண்டும். இப்படி விண்ணப்பித்தபின், நாம்  விண்ணப்பித்தற்கான பதிவுச்சீட்டு சான்று இணையத்தில் வழங்கப்படும். அப்பதிவுச் சீட்டினைப் பெற்று, அதிலிருந்து 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் பின்வரும் ஆவணங் களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

1. விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள கிரயப் பத்திரம்.

2. விண்ணப்பதாரரின் பெயரில் பெறப்பட்ட பட்டா அல்லது முந்தைய உரிமையாள ரின் பெயரில் பெறப்பட்ட பட்டா.

3. விண்ணப்பம் செய்யப்படும் நாளன்று, ஒரு வார காலத்திற்கு முன்பு வரை உள்ள நிலை தொடர்பாக சார்பதிவாளரிடமிருந்து பெறப் பட்ட வில்லங்கச் சான்று.

4. மனையானது விவசாய பகுதிக்குள் அமைந்திருந்தால், சம்பந்தப்பட்ட தாசில்தாரி டம் நீர்வழிப் போக்குவரத்து, வெள்ளம் போன்ற பாதிப்பு குறித்து சான்று பெறப்பட வேண்டும்.

5. மனைப் பிரிவைச் சுற்றி பொது உபயோகச் சாலையை இணைக்கும் மற்றும் சுற்றி யுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு, சுற்றுச்சார்பு வரைபடம் (Topo Sketch) இணைக்க ப்பட வேண்டும்.

6. லே அவுட்டின் வரைபடம்.

7. எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்டு மனையின் உட்பிரிவு காட்டப்பட்டு மனையை ச் சுற்றியுள்ள சாலையின் அளவுகள் குறிப்பிடப்பட்டு, லைசென்ஸ் பெற்ற சர்வேயர் கையொப்பமிட்டு வழங்கும் இடஅமைப்பு வரைபடம் (FMB – Field Measurement Book) இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நமது லேஅவுட் அரசின் விதிகளுக்கு உட்பட்டு சரியாக இருந்தால், முறைப்படுத்தும் அதிகாரி அதற்கான ஒப்புதலை வழங்கி, பிற கட்டணங்களைச் செலுத்துவதற்காக உத்தரவிடுவார். அதிலிருந்து 30 நாள்களுக்குள் அனைத்துக் கட்டணங்களையும் நாம் செலுத்தியபின், முறைப்படுத்திய தொடர்பான ஆணை வழங்கப்படும்.

மேல்முறையீடு

எந்தவொரு நபரும் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மனை அமைந்திருக் கும் பகுதி சி.எம்.டி.ஏ-வின் வரும்பட்சத்தில், சி.எம்.டி.ஏ மேலதிகாரிகளிடம் முறை யிடலாம். மற்ற பகுதிகளில் இருந்தால், டி.டி.சி.பி மேலதிகாரிக்கு 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

தமிழ்நாடு அங்கீகாரமற்ற லேஅவுட்டுகள் ஒழுங்குமுறை விதி-2017 நடைமுறைக் கு வந்து ஓராண்டு காலமாகியும், சாதாரணமானவர்்களுக்கு இந்தத் திட்டம் குறித் து விழிப்பு உணர்வு ஏற்பட வில்லை. இத்திட்டத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர் ப்பதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை உள்ளாட்சி அமைப்புகள் தீவிரப்படுத்த வேண்டும்.

அதேபோல, இதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களும், வழிமுறைகளும் மிகக் குழப்பமாக உள்ளன. சார்பதிவாளர், தாசில்தார், சர்வேயர் எனப் பல அதிகாரிகளிட ம் சான்றிதழ்கள் பெறவேண்டியிருப்ப தால், அதிகப் பணம் செலவழிக்க வேண்டியி ருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது.

மேலும், இணையம்மூலம்  விண்ணப்பித்தபின், சம்பந்தப்பட்ட மனையின் உள்பிரிவு காட்டப்பட்டு, சுற்றியுள்ள சாலைகள் மற்றும் அருகிலுள்ள மனைகளின் எல்லை அளவுகளுடன் லைசென்ஸ் பெற்ற சர்வேயரால் தயார் செய்யப்படும் இட அமைப்பு வரைபடம் தயார் செய்வதிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன ர். அருகிலுள்ள மனையின் எல்லை அளவுகளை அளக்க, உரிமையாளர்கள் சம்மதி ப்பதில்லை. எனவே இட அமைப்பு வரைபடம் தயார்செய்யும் வேலையை அரசே செய்தால் கஷ்டப்படத் தேவையில்லை. 

அரசின் பிற துறைகளில் இருக்கும் எஃப்.எம்.பி போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இத்திட்டம் குறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இயக்குநர் செயலர் நடைமுறை வழிகாட்டிகளை வழங்க வேண்டும்.

இந்த அரசாணையின் மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டுமே மிகத் துரித மாக தங்களிடமுள்ள, அனுமதியற்ற லே அவுட் மனைகளை முறைப்படுத்தி விற்ப னை செய்து பத்திரப் பதிவு செய்து வருகின்றன. அரசு அதிகாரிகளும், பொதுமக்களி ன் விண்ணப்பங்களைவிட ரியல்எஸ்டேட் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கே அதிக  முக்கியத்துவம் தருவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனை 20.10.16-க்குள் விற்பனை செய்து பத்திரம் பதிவுசெய்திரு ந்தால் போதும், மீதமுள்ள  அனைத்து மனைகளும் முறைப் படுத்தி அனுமதியளிக் கப்படும் என்ற விதிமுறை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கே அதிகம் பயனளிக்கி ன்றன” என்றார்.

அரசின் அதிக அளவிலான கட்டண விதிப்புகள் மற்றும் ஏராளமான ஆவணங்க ளைச் சமர்பிக்கச் சொல்வதால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒழுங்குமுறைப் படுத்த விண்ணப்பித்திருப்பவர் களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. 
  
இனி போடப்படும் லேஅவுட்டுகளை முறைப்படுத்துவதைக் குறிக்கோளாக கொண் டு புதிதாக எளிய அரசாணையைக் கொண்டுவருவதே சரியான எளிய தீர்வாக இரு க்கும்.

டி.டி.சி.பி: எந்த அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும்?

அங்கீகாரம் பெறாத மனைகள் தொடர்பாக சென்னையில்உள்ள டி.டி.சி.பி தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி நம் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

‘‘தமிழத்தில் உள்ள லட்சக்கணக்கான மனைகளுக்கு  ஒரே நேரத்தில் அப்ரூவல் கொடுப்பது சாதாரண விஷய மில்லை. அந்த அளவுக்கு எங்கள் துறையில் ஆள்கள் இல்லை. இப்போது, ஆன்லைனில் விண்ணப்பம் செய்த பிறகு, எந்த அதிகாரியைத் தொடர்புகொள்ள வேண்டும் என்கிற விவரத்தை எங்களின் இணையதளத்தில்  http://www.tnlayoutreg.in/ContactNo.pdf என்கிற முகவரியில் பார்க்க முடியும். அடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களைப் பெறவும், இந்த அதிகாரி கள் உதவி செய்துவருகிறார்கள். மேலும், ஆங்காங்கே ஒருநாள் சிறப்பு முகாம்க ளையும் நடத்தி வருகிறோம்” என்றார் அவர்.

எந்த மனைகளுக்கு அப்ரூவல் கிடைக்காது?

அனுமதியற்ற மனைகளை முறைப்படுத்த அரசு பின்வரும் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது.

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமைக்கப்பட்ட மனைகள்

அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமையப்பட்ட மனைகள்

திறந்தவெளி ஒதுக்கீடு இடங்கள் (Open Space Reservation – OSR)

பூங்காக்களில் அமையப் பெற்ற மனைகள்.

அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை. 

மேற்குறிப்பிட்ட  மனைகளுக்கு முறைப்படுத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.

=> செந்தில்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: