Advertisements

நம்புங்க – பொய் சொன்னால் கொலை செய்யும் நாகம் – அதிர வைக்கும் உண்மை

நம்புங்க – பொய் சொன்னால் கொலை செய்யும் நாகம் – அதிர வைக்கும் உண்மை

நம்புங்க – பொய் சொன்னால் கொலை செய்யும் நாகம் – அதிரவைக்கும் உண்மை

முதலில் இயற்கை வழிபாட்டு முறையினை தொடங்கிய மனிதன், படிப்படியாக

விலங்குகளை வழிபடத் தொடங்கினான். அவற்றில் பைரவர், நந்தி உள்ளிட்ட பிற விலங்கு வழிபாடுகளை விடவும், நாக வழிபாடு பெரும் புகழ்பெற்றது ஆகும். சிவ பெருமான் கழுத்தில் வாசுகி ( #Vasuki ) என்ற பாம்பை ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளது இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். திருமால் ( #Thirumal ) பாற்கடலில் ஆதிசேசன் ( #Aadhisheshan ) என்ற பாம்பினை படுக்கையாக வைத்துள்ளார்.

பொய் பேசுபவர்களை துரத்திக் கொள்ளும் 10கி.மீ நீளமுள்ள பாம்பு… நம்பமுடியாத உண்மை

தென் இந்தியாவில் பாம்பு ( #Snake ) வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்து நடைபெறு கிறது. இதில் பல நாகக் கோவில்களில் சிலிர்ப்பூட்டும் ஓர் வரலாறும், பின்னியும் இருக்கும். அவ்வாறாக தமிழகத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள் ள ஒரு கோவிலில்தான் இந்தியாவிலேயே மிக நீண்ட பாம்பு சிலை  ( #SnakeStatue )அமைந்துள்ளது. அது எங்கே உள்ளது? எப்படி உள்ளது என பார்க்கலா ம் வாங்க.

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம், திருவமதூர் அடுத்து, தும்பூர் அருகே அமைந்து ள்ளது அருள்மிகு நாக கன்னி அம்மன் கோவில். தேசிய நெடுஞ்சாலை 38-யில் சுமார் 14 கிலோ மீட்டர் பயணித்தால் இதனை அடையலாம். விக்கிரவாண்டியில் இருந்து குறிச்சிபாடி, ஒரத்தூர் வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

சித்திரை மாதங்களில் இக்கோவிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், பல் வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நீராட்டு விழா, பூச்சட்டி, பால்குடம் எடுத்தல் உள்ளி ட்ட பல்வேறு வழிபாடுகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர்.

பிற கோவில்களைப் போல் வாரத்தில் அனைத்து நாட்களும் இந்தக் கோவில் திறக்கப்படுவதில்லை. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறக்கப்படுகிறது. பிற நாட்களில் காலையும், மாலையும் சிறிது நேரம் மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது.

நாக தோஷம் ( #NagaDosha ) உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் பலன் கிடைக்கும். ராகு ( #Ragu ), கேது ( #Kedhu ) தோஷம் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

வேண்டியவை நிறைவேறியதும் கோவில் திருவிழாவிற்காகப் பொருளுதவியும், நிதி உதவியும் வழங்கப்படுகிறது. அன்னதானம் இட்டும் நேர்த்திக்கடன் நிறைவேற் றப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் உயரமான சுவாமி சிலைக ளையே நாம் வியப்புடன் காண்பது வழக்கம். ஆனால், தும்பூரில் அமைந்துள்ள இந்த நாககன்னியம்மன் கோவிலில் மூலவராக உள்ள பாம்பு சிலை சுமார் 10கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு காணப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இன்று அந்தச் சிலை முழுமையாகக் காணக்கிடைக்காவிட்டாலும் தலையை ஒரு இடத்தி லும், உடல் பகுதியை ஒரு இடத்திலும், வாலை பத்து கிலோ மீட்டர் தொலைவில் வேறொரு இடத்தில் காண முடிகிறது. இங்குள்ள திருவட்டப்பாறை மீது ஏறி யாரேனும் பொய் கூறினால் அவர்களது பார்வை பறிபோய்விடும். அவன் பாம்பு கடித்து உயிரிழப்பான் என்பது தொன்நம்பிக்கை. தமிழகத்தில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜ கோயிலில் தான் பாம்பு மூலவராக உள்ளது என நாம் அறிந்திரு ப்போம். ஆனால் தும்பூரில் உள்ள கோவிலிலும் பாம்பே மூலவராக உள்ளது. நாகர் கோவிலில் நாக ராஜாவாகவும், விழுப்புரத்தில் நாக கன்னியாகவும் வழிபடப்ப டுகின்றது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த அரசரின் முன்னிலையில் வழக்கு ஒன்று நடைபெற்றது. அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையேயான வழக்கில் அண்ணன் திருவட்டப்பாறை மீது ஏரி பொய் கூறினான். பின் பாறையின் அடிப் பகுதியில் இருந்து வெளியே வந்த பாம்பு அவனை நீண்ட தூரம் துரத்திச் சென்று கொன்றது. அந்த இடமே தும்பூர். இங்கே பாம்பின் தலையும், வயல் பகுதியில் உடல் பகுதியும், இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் ஆமத்தூர் முத்தாம்பிகையின் உடலில் பாம்பின் வால் பகுதி சுற்றிய நிலையிலும் பார்க்க முடிகிறது.

=> மனிதன் மாணிக்க‍ம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: