Advertisements

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மிதுன ராசிக்காரர்களே! – தற்பெருமை கூடாது.

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மிதுன ராசிக்காரர்களே! – தற்பெருமை கூடாது.

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – மிதுன ராசிக்காரர்களே! – தற்பெருமை கூடாது.
 
நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் மிதுன ராசிக்குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
மிதுன ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018

மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களிலும் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்கள் கௌரவம், அந்த ஸ்து ஆகியவை படிப்படியாக உயரத் தொடங்கும். முக்கியமான விஷயங்களில் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

உடன்பிறந்தோரை விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் போட்டியாளர்கள் அடங்கியே இருப்பார்கள்.

செய்தொழிலை விரிவுபடுத்த சிறிய தூரப்பயணங்களை அடிக்கடி செய்ய வேண்டி வரும். பொருளாதாரம் சிறப்பாகவே செல்லும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப் புகளும் தேடி வரும். அரசாங்கத்திடமிருந்து, கெடுபிடிகள் என்று எதுவும் ஏற்படாது.

அதேநேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அவசரப்பட்டு முன்யோசனை யின்றி எவரிடமும் பேசவேண்டாம். மேலும் இந்த காலகட்டத்தில் தற்பெருமை கூடாது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து, ஆண்டு இறுதிவரை உள்ள கால கட்ட த்தில் ஆக்கஜ்ஃப் பூர்வமான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். செலவினங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

இதுவரை விலை போகாமலிருந்த மண் மனைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகும். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள்.

உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அநாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

இதனால் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். மற்றபடி மன தைரியத்துடனும் தன்ன ம்பிக்கையுடனும் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

விருந்து கேளிக்கைகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். எல்லா விஷயங்க ளிலும் முன்னதாக திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் சில அனுகூல திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்துகொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்க ள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு நல்குவார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சோம்பலுக்கு இடம்தர கூடாது.

வியாபாரிகள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வளர்ந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப் பதால் கூட்டுத்தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். இந்த ஆண்டு கொஞ்சம் நலம் தரும் திருப்பங்களைக் காண்பீ ர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்கு சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்கு தகுந்த விலையை நிர்ணயிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்படும் ஆற்றலும் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கட்சித்தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதக மான தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயர் புகழ் கூடும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெயரும் புகழும் கூடும். ரசிகர்கள் உங்களை அலட்சியப் படுத்தினாலும் அதை வெளிக்காட்டி க் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவு செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங் குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இதனால் சுப விரயங்கள் உண்டா கும். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்ளுவார்கள். கணவரும் உங்களை மதித்து நடத்துவார்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்து ழைப்பைப் பெறுவார்கள். உடல்நலம் பலப்படும்.

பரிகாரம்: துர்க்கையையும் நவக்கிரகங்களையும் பிரதட்சணம் செய்யுங்கள்

=> தீப்தி தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: