Advertisements

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – தனுசு ராசிக்காரர்களே! – எதையும் சமாளிக்கும் மனோபலம் வரும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – தனுசு ராசிக்காரர்களே! – எதையும் சமாளிக்கும் மனோபலம் வரும்

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 – தனுசு ராசிக்காரர்களே! – எதையும் சமாளிக்கும் மனோபலம் வரும்

நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் உண்டான பலன்களில் தனுசு ராசிக் குரிய பலன்களை இங்கு காண்போம். (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்)
 
சாதுர்யமான பேச்சு திறனுடைய தனுசு ராசிக்காரர்களே! இந்த வருடம் உங்களுக்கு எப்படி?

மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவுப வர்கள்.

எப்போதும் நியாயத்திற்காக போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பவர்கள். சந்திரன் 4ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வசதி கூடும். புதிய சிந்தனைகள் உதயமா கும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டிற்குத் தேவையான அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும்.

படிப்பின் பொருட்டு அவர்களை கசக்கிப் பிழிய வேண்டாம். விட்டுப் பிடிப்பது நல்ல து. பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண்செல வு ம், மனக்கசப்பும் வந்து போகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குருபகவா ன் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரக ப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பா பிஷே கத்திற்கு தலைமை தாங்குவீர்கள். செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உற வினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார் கள். ஆனால் 04.10.2018 முதல் 12.03.2019 வரை 12ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர் பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லு ம். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்க ப்படுவீர்கள்.

ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோ சனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது.

13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்கு ள்ளேயே வந்தமர்வ தால் அடிக்கடி கோபப்பட்டுக் கொள்வீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்ட வட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறு வீர்கள்.

தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும் உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினை ப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். வருடப் பிறப்பு முதல் 12.02.2019 வரை ராகு 8ம் வீட்டிலும் கேது 2ம் வீட்டிலும் நிற்பதால் கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

எனவே நிதானித்துப் பேசுவது நல்லது. கனவுத்தொல்லை, கழுத்துவலி வந்து நீங்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும்.

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ராகு 7ல் நுழைவதால் மனைவிக்கு மாத விடாய்க் கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.

குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். சிலர் கணவன் மனைவிக்குள் கலகத்தை ஏற்படுத்தக் கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அடிக்கடி வருந்தி னீர்களே! இனி அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள்.

சிலர் புதுமனை புகுவீர்கள். என்றாலும் ஜென்ம சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்து கவலை யடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள்.

உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்து கொள்வார்கள். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசி தீர்க் கப்பாருங்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர, சகோத ரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடு கள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 21.04.2018 முதல் 14.05.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.

எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்த காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டு மென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும்.

கன்னிப்பெண்களே! சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். நல்ல வரன் அமையும். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். வேலை கிடைக் கும்.

மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி, தூக்கமின்மை நீங்கும். பெற்றோரின் கோரிக் கையை நிறைவேற்றுவீர்கள்.

மாணவ மாணவிகளே! நினைவாற்றல் பெருகும். போட்டி, பொறாமைகளுடன் பழகிய சக மாணவர்கள் திருந்துவார்கள். உங்களுடைய தனித்திறமைகளை அதிக ரித்துக் கொள்வீர்கள். விளையாட்டு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீ ர்கள். வேலையாட் களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புது ஒப்பந் தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும். புரட்டாசி மாதங்களில் புதிய பங்குதாரர்கள் அமைவார்கள்.

பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக் கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.

உத்யோகத்தில் சந்தித்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். புரட்டாசி ஐப்பசி மாதங்களில் சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சம்பளம் உயரும். புது பொறுப்பு களும், சலுகைகளும் கிடைக்கும்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்பிற்கு மதிப்பு, மரியாதை கூடும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங் கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப் படுத்தி விளையச் செய்வீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க கடன் உதவிகள் கிடைக்கும். பூச்சித் தொல்லை, வண்டுக்கடி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். தொட்ட காரியங்கள் துலங்குவதுடன், சாதித்துக் காட்டும் வருடமாக இந்த விளம்பி வருடம் உங்களுக்கு அமையும்.

=> தீப்தி தினகரன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: