Advertisements

தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ

தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ

தேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ

இதுவரை ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல‍

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.நமது எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஒரு முறை படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுதிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தான் தேம்பி தேம்பி அழுததைஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவரே விவரித்துள்ளார்.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் இயக்க‍த்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில், கண்ண‍தாசன் பாடல்கள் எழுத, நடிகர்கள் கமல்ஹாசன், சுமித்ரா, சரத்பாபு, ஷோபனா அனுமந்து ஆகியோரது நடிப்பில் உருவாகி, கடந்த 1978 ஆம் ஆண்டு வெளிவந்து பெரு வெற்றி பெற்ற‍ திரைப்படம்தான் நிழல் நிஜமாகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற‍ பாடல்கள் அனைத்தும் இனிமையானவை அற்புதமானவை பொருத்த‍மானவை.

அழுத்த‍மாக சொல்ல வேண்டுமானால், அத்திரைப்படத்தில் இடப்பெற்ற‍ பாடல்களில் கம்பன் ஏமாந்தான் மற்றும் இலக்க‍ணம் மாறுதோ ஆகிய இருபாடல்களைச் சொல்ல‍லாம். இந்த இருபாடல்களில் இலக்க‍ணம் மாறுதோ என்ற பாடலின் ஒலிப்பதிவின் போது, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க‍, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் பாடி முனித்து வீடு திரும்பினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அவர் வீடு சென்ற கொஞ்ச நேரத்தில் இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் தொலைப்பேசி மூலம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை தொடர்பு கொண்டு, இலக்க‍ணம் மாறுதோ பாடல் மிகவும் அற்புதமாகவும், அழகாகவும் பாடியதாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை மனம் திறந்து பாராட்டினார். இதனால் மிகவும் மகிழ்ந்து போன நமது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் , ஆனந்தத்தில் படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுதாராம்.

இதோ அந்த இலக்க‍ணம் மாறுதோ என்ற பாடலின் வரிவடிவமும் அதனைத் தொடர்ந்து ஒலி ஒளி வடிவமும் படித்து பார்த்து கேட்டு மகிழுங்கள்.

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

கல்லான முல்லை பின்பென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தாலோ

இலக்கணம் மாறுதோ

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை

மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட ஆதாரம் இல்லை
தெய்வங்களெல்லாம் உனக்காகப் பாடும்

பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைத்தது கீதை

மணியோசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்

நிஜமாக வந்த எனைக் காத்த கண்ணே
நீ எது நான் எது ஏனிந்த துன்பம்
பூர்வ ஜென்ம பந்தம் ஆஆஆஆஆஆஆ

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்


விதை2விருட்சம் சத்தியமூர்தி – 98841 93081

Ilakkanam Maarudo – Nizhal Nijamakirathu – Kamal Haasan & Sumitra

Illakanam maarutho :- MSV classic from movie Nizhal NIjamagirathu

 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: