Advertisements

மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் மீண்டும் புரட்சி – காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி…

மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் ( Kaveri Management Board )  அமைக்கக்கோரி, போராடிய மாணவ

ர்கள், இளைஞர்கள் கைது! உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை ( #Kaveri_Management_Board ) அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. நேற்று முன் தினத்தோடு அதாவது (29ம் தேதியோடு) உச்ச நீதி மன்றம் விதித்த கெடு முடிந்து விட்ட‍து. இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியத் தை ( #Cauvery_Management_Board ) மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகம் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கண்டனங்களையும் , போராட்டங்களையும் பல்வேறு கட்சிகள் அறிவித்து வருகின் றன இந்நிலையில் இன்று காலையிலிருந்தே, சென்னை மெரினா கடற்கரை ( #Marina_Beach )யில் ஓன்று திரண்டு போராடுவோம் சமூக வலை தளங்களில் அறி வித்திருந்தார்கள். இதையடுத்து காவல்துறையினர் மெரினா ( #Marina )  கடற்கரை யில் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினாவுக்கு செல்லும் ஓவ்வொருவரையும் சோதனைக்குப் பின்னரே அனுமதித்தனர்.

யாரும் தலைமை தாங்காமல் ஜல்லிக்கட்டு ( #Jallikattu ) நடத்த அனுமதி வழங்கக் கோரி கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் தன்னெழுச்சி யாக இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். இது இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கிட்ட‍த்தட்ட‍ ஒரு வாரம் நடை பெற்ற‍ அந்த போராட்டத்துக்கு பின்னர் சட்டசபையில் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் அதுபோன்ற போராட்டம் மெரினாவில் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர். ( #Cauvery_Crisis )

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் தனித்தனியாக வந்த இளைஞர்கள், விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரைக்குள் ஊடுருவினர். தனித்தனி யாக வந்தவர்கள் வரிசையாக நின்று தங்கள் கையில் இருந்த பதாகைகளை எடுத் து விரித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.

இதையறிந்ததும், சாலையில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார், கடற் கரைக்குள் சென்று அவர்களை கைது செயய் முயன்றனர். உடனடியாக அவர்கள் பதாகைகளை மடக்கி வைத்துக் கொண்டு, மக்களோடு மக்களாக நின்று கொண்டா ர்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதை கண்டுபிக்க முடியாம ல் போலீசார் திணறினார்கள். ஒவ்வொருவரையாக பிடித்து அவர்களிடம் சோத னை நடத்தி வருகிறார்கள்.

போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றாலும், போராட்டக்காரர்களை அடை யாளம் கண்டு கைது செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது, ’வேடிக்கை பார்க்கும் பொது ஜனமே வீதிக்கு வந்து போராடு’, ‘போராடுவோம் போராடுவோம்… காவிரிக்காக போராடுவோம்’, ‘விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் பரபரப்படைந்த காவல்துறையினர், மெரினாவிற்கு இளைஞர்கள் போராட இங்கு வரவேண்டாம் என்றும் அனுமதியின்றி போராட்டங்களில் யார் ஈடுபட்டாலு ம் அவர்கள் மீது தகுந்த சட்ட‍ ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள‍ப்படும் என்றும் தெரிவித்துள்ள‍னர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: