Advertisements

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்ன‍க்கிளி ( #Annakili ) தமிழ்த் திரைப்படத்தில் ஒரு சாதாரண

இசையமைப்பளராக அறிமுகமாகி இன்று ராகதேவனாக விஸ்வரூப மெடுத்து நிற்கும் நமது இசைஞானி, இசை பிரம்மா இளையராஜா ( #ilayaraja ) வை நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டுகிறோம் என்பதற்கான காரணமே இசையில் அவர் பற் பல புதுமைகளையும் சில யுத்திகளையும் கையாண்டதுதான்.

இதோ இசைஞானி புதுமைகள் – யுத்திகள்

1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக் கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது ( #Thendral_Vandhu_Theendumbodhu… ) என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீ ரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ”நூறாவது நாள் ( #Nooravadhu_Naal) “

3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக் கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட் டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனா ல் ராஜா மட்டும்தான் இசையை ‘பக்கா’ நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

5.அமிர்தவர்ஷினி ( #Amirdhavarshini )என்ற மழையை வரவழை ப்பதற்கான தனித் துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழு தின் பிற்பகலில் “தூங்காத விழிகள் ரெண்டு ( #Thoongadha_Vizhigal_Rendu ) ” பாடலை அமைத்து மழையையு ம் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தை யும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை ( #ReehiKowla ) என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் .”கவிக்குயில் ( #Kavikuyil )” என்னும் படத்தில் “சின்ன கண்ணன் அழைக்கி றான்” என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசை ஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற “என் கண்மணி ( #En_Kanmani )” என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத்திரை இசையில் காயத்ரி ( #Gayathri) என்ற படத்தில் தான் முதன் முதலாக இசைஞானி “எலெக்ட்ரிக் பியானோ ( #Electric_Piano )” உபயோக படுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு ( #Aatukkutti_Muttaiyittu ).

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்க வே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசைய மைத்து, பாடல் வரிகள் எழுத ப்பட்டு படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு அக்காட்சி யை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித் தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் #Heyram )

12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரி டம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பா ளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக் குறிப்புகளை எழுத ஆரம்பி த்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி ( #Symphony )  இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் ( #Symphony Compose) பண்ண குறைஞ் சது ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் “காதலின் தீபம் ஒன்று ( #Kadhalin_Deepam_Ondru )”.

15.படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைக ளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், ‘கரகாட்டக்காரன் ( #Karakattakaran )’.

16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்க ளுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌன மாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரை யில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா ( #Pillai_Nila )’

19. பருவமே புதிய பாடல் பாடு ( #Paruvame_Pudhiya_Padal_Padu ) என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாண த்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி முதன் முதலாக ‘ஸ்டீரியோ” முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா ( #Priya ).

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி ( #Sundari_Kannaal_Oru_Sedhi )”

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக் கண்ட படங்கள் ‘வைதேகி காத்திருந்தால் ( #Vydegi_kaathirundhaal )’, ‘அரண்மனைக் கிளி ( #Aranmanai_Kili )’.

24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் #Punnagai_Mannan )

25. ‘பஞ்சமுகி ( #Panjamugi) ‘ என்றொரு ராகம் நமது ராகதேவ னால் இயற்ற ப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராக த்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்து விடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசை கோர்ப் புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி #Kalabani ) தமிழில் ( சிறைச்சாலை #Siraichaalai )

27. முன்பெல்லாம் கிட்டார் (# Guitar), தபேலாக் (Dabela)  கலைஞர்கள் உதவி யுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை அமைப்பாளர்களில் இவரிட த்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப் பான உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல… அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது ‘குரு’ என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

இப்போது புரிகிறதா உங்களுக்கு? நாம் இளையராஜாவை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் என்று?

=> திருமதி சுவேதா வாசு (படித்த‍தை பகிர்ந்து கொண்டவர்)
கட்டுரையின் தலைப்பை மட்டும் மாற்றியது விதை2விருட்சம் இணையம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

2 Responses

 1. ப்ரியன் அவர்களுக்கு,

  மேலோட்டமாக படித்து விட்டு தாங்கள் கருத்தினை தெரிவத்திருப்ப‍து தெள்ள‍த்தெளிவாக தெரிகிறது. தயவுசெய்து இளையராஜா குறித்த‍ கட்டுரையை முழுவதுமாக படித்து விட்டு அதன்பிறகு உங்கள் கருத்தினை தெரிவிக்கும் கருத்தே மிகச் சரியானது. நியாயமானது.

  அரிசி கொதிநீரில் முழுவதுமாக வெந்த பிறகுதான் அது சோறாக மாறும்\
  ஆனால் அரைவேக்காட்டில் அவசரப்பட்டு ஒரு பருக்கையை எடுத்துப்பார்த்தால் அது அரிசியாகத்தான் இருக்கும். என்பது நான் சொல்லித்தான் தங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

  Like

 2. Jayalalitha iranthaalum unga jaathi pasi innum nikkala…. athenna saathaarana isaiyamaippaalazhar…..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: