Advertisements

GST 2017 – முக்கிய வரி சீரமைப்பு – திரும்பி பார்க்க‍லாம் வாங்க 

GST 2017 – முக்கிய வரி சீரமைப்பு – திரும்பி பார்க்க‍லாம் வாங்க 

ஜி.எஸ்.டி. 2017 – முக்கிய வரி சீரமைப்பு – திரும்பி பார்க்க‍லாம் வாங்க 

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று நிகழ்த்தப்பட்ட

பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்க ளின் முன் மணிக்க ணக்கில் நின்று பணத் தை எடுப்பதில் இருந்த தடைகள் அகன்று நெகிழ்வுத் தன்மை வருவதற்குள் 2017-ம் ஆண்டு தொடங்கிவிட்டது. 2017-ம் ஆண்டி ன் தொடக்கமே பொருளாதார ரீதியாகவும் வணிக ரீதியாகவும் குழப்பமாக இருந்தது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையிலிரு ந்து ஓரளவு மீண்டுவரும்போதே ஜி.எஸ்.டி (#GST )-யை அமல் படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தத் தொடங்கியது.

இந்த ஜி.எஸ்.டி (#GST- #GoodsAndServiceTax)யானது, இன்று நேற்று யோசித்ததல் ல; 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, வாஜ்பாய் ( #Vajbayee) தலைமையிலான அரசால் `நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு என்ற நோக்கத்துடன் அச்சாரமிடப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் சற்று தள்ளிப்போனது. ஆனால், ஜி.எஸ்.டி (#GST )-க்கு முந்தைய வெர்ஷனான `மதிப்புக் கூட்டு வரி’யானது ( #VAT – #ValuableAddedTax) 2005 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தே இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வந்தது.  21 மாநிலங்களில் மட்டும் இது அமலுக்கு வந்தது. இன்னொரு பக்கம், ஜி.எஸ்.டி (#GST ) கொண்டு வருவதற் கான வேலைகள் நடந்து வந்தன.

ஜி.எஸ்.டி. (#GST ) அமல்படுத்துவதற்கேற்ப அரசியலமைப்பு ச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. அதைக் கொண்டுவருவதற்காக 2011-ம்ஆண்டு மார்ச்சில் மக்களவை யில் அரசியலமைப்புத் திருத்த சட்ட மசோதாவை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த து. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸு க்கும் இந்த மசோதாவை நிறைவேற்றும் அளவுக்குப் பெரும் பான்மை இல்லாததால், மசோதா நிறைவேற வில்லை. 

2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த ஜி.எஸ்.டி (#GST )-யை எதிர்த்த மோடி தலைமையிலான பா.ஜ.க-வே, பெரும்பான் மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியதும், இதே ஜி.எஸ்.டி -யைக் கொண்டு வருவதற்கான வேலையில் இறங்கி யது.

ஜி.எஸ்.டி (#GST )

2014 டிசம்பர் 19-ம் தேதியன்று, அரசியலமைப்புத் திருத்த சட்ட மசோதாவானது மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை காங்கிர ஸ் தலைமையி லான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த் தன. எனினும் தொடர்முயற்சியின் காரணமாகவும் தனக்கு இருந்த பெரும் பான்மை பலத்தின் காரணமாகவும் 2015, ஏப்ரலில் மக்களவையில் இந்த அரசியலமைப்புத் திருத்த சட்ட மசோதா வெற்றிபெற்றது.

அடுத்ததாக மாநிலங்களவையில் இந்த மசோதா அறி முகப்படுத்தப்பட்டபோது போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிந்தது. எனவே, எதிர்க்கட்சிகளை ஒத்து ழைக்க வைப்பதற்காக மக்களவை மற்றும் மாநிலங்கள வை இணைந்த ஒரு கமிட்டி 2015, மே 14-ம் தேதி அமை க்கப்பட்டு, ஜி.எஸ்.டி (#GST )-யை அமல்படுத்துவ தற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டன. இடைப்பட்ட நாளில் ராஜ்ய சபாவிலும் மத்திய அரசுக்கு எம்.பி-க்களின் பலம் அதிகரிக் கும் வகையில் சில தேர்தல் முடிவுகள் அமையவே மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி (#GST ) அமல்படுத்துவதற்கான துணிவு வந்தது. அதையடுத்து, அரசியலமைப்புத் திருத்த சட்டமசோதா, 2016, ஆகஸ்ட் 3-ம் தேதி மாநிலங்களவையி லும், 2016, ஆகஸ்ட் 8-ம் தேதி மக்கள வையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, சி.ஜி.எஸ்.டி. (#CGST ), ஐ.ஜி.எஸ்.டி. (#IGST ), யூ.டி.ஜி.எஸ்.டி. (#UGST ), மாநிலங்களுக்கான இழப்பீட்டு மசோதா ஆகியவை, மக்களவையில் 2017, மார்ச் 29-ம் தேதி யிலும், மாநிலங்களவையில் 2017, ஏப்ரல் 6-ம் தேதியிலும்  நிறைவேற்றப்பட்டன.

அதன்பிறகு 2017, ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி (#GST ) வரியா னது முறையாக அமல்படுத்தப்ப ட்டது. 5%, 12%, 18%, 28% என நான்காகப் பிரிக்கப்பட்டு, அனைத்தும் இவற்றுக்குள் முறை ப்படுத்தப்பட்டன.

வணிகர்களிடத்திலும் மக்களிடத்திலும் பல்வேறு கேள்விகள் வரிக்குறைப்புக்கான , வரி நீக்கத்துக்கான கோரிக்கைகள் எழுந்ததால் அதை அரசாங்கத்தின் பார்வை க்குக் கொண்டு செல்ல http://www.gst.gov.in என்ற இணையமும், மத்திய நிதியமைச்சரின் தலைமையில் மாநில அமைச்சர்களையும் உள்ள டக்கி ஜி.எஸ்.டி (#GST ) கவுன்சில் அமைப்பும் கொண்டுவரப்பட்டன.

இந்த கவுன்சிலானது தொடர்ச்சியாகக்கூடி விவாதித்து, தேவை யான மாற்றங்களை ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றும். அந்த ஓட்டெடுப்பில் 1/3 பங்கு மத்திய அரசின் பங்காகவும், 2/3 பங்கு மாநில அரசின் பங்காகவும் இருக்கும். ஒரு கோரிக்கைக்கு 4கில் 3 பங்கு வாக்குகள் கிடைத்தால், அது நிறைவேற்றப்படும்.

இவ் விதமாகச் செயல்பட்டு அவ்வப்போது மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த ஜி.எஸ்.டி (#GST )-யால் சிறுவணிகர்களும் மக்களு ம் பல்வேறு குழப்பங்களையும் இழப்புகளையும் சந்தித்தாலும் ` இவை அனைத்தும் தற்காலிகமே!’ என மத்திய அரசால் கூறப்படுகிற து. எனவே இந்த வரிவிதிப்பால் ஏற்படும் வணிக மாற்றங்களும் வாழ்வியல் தாக்கமும்,  அடுத்துவரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பது நிபுணர்கள் கருதுகிறார்கள். (#gstapplyandfiling ) ( #GST)

HAPPY MINDS SOLUTIONS – Cell: 9884117406

#Happy Minds Solutions

ஜி.எஸ்.டி… 2017-ம் ஆண்டின் முக்கியமான வரி சீரமைப்பு?! #2017Rewind

=> தெ.சு.கவுதமன், விகடன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: