Advertisements

Bitcoin – பிட்காயின் -பண பரிவர்த்த‍னை -நன்மைகளும் சில‌ சிக்கல்களும்

Bitcoin – பிட்காயின் -பண பரிவர்த்த‍னை -நன்மைகளும் சில‌ சிக்கல்களும்

Bitcoin – பிட்காயின் -பண பரிவர்த்த‍னை -நன்மைகளும் சில‌ சிக்கல்களும்

பிட் காயின் என்றால் என்ன? சடோஷி நகமோட்டா என்பவரால் இந்த

பிட் காயின் ( #Bitcoin ) உருவாக்கப்பட்ட‍து. இது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி – #DigitalCurrency). மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைக ளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு பிட்காயினை ( #Bitcoin ) ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை ( #Bitcoin ) மீண்டும் மீண்டும் பயன்ப டுத்த முடியாது. பெரும்பாலும் பிட் காயினைப் ( #Bitcoin ) பெறுவதற்குக் கைரேகை ( #FingerPrint) போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டா தவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களைத் ( #Bitcoin ) தனிப்பட்ட முறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினு ( #Bitcoin )க்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டு மானாலும் அனுப்பலாம்.

எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட்காயினின் ( #Bitcoin ) மதிப்பை மாற்ற முடி யாது. அதிக பிட் காயின்களை ( #Bitcoin ) உருவாக்க முடியாது என்பதால் பண வீக்க த்தையும் உருவாக்க முடியாது. தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்க ளைப் ( #Bitcoin ) பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. சட்ட விரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிர பலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் முதல் ‘பிட்காயின்’ ( #Bitcoin )- டிஜிட்டல் பணம் ( #DigitalCash) வழங்கும் ஏடிஎம் (ATM) திறப்பு கனடா வான்கூவர் (Canada Vaankoovar) நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்க ளாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம் – #DigitalCurrency) மாற்றிக் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டு ள்ளது. 

பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதல் பிட்காயின் ( #Bitcoin ) ஏடிஎம் இய ந்திரம் இது வாகும். இந்த ஏடிஎம் இயந்திரம் வான்கூவரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிட்காயினிகாஸ் நிறுவனமும், நெவேடாவைத் தலைமையி டமாகக் கொண்டு செயல்படும் ரோபோகாயின் ( #RobotCoin ) நிறுவனமும் இதனை செயல்படுத்துகின்றன. வான்கூவரில் ஒரு காபிக் கடையில் இந்த ஏடிஎம் நிறுவப்ப ட்டுள்ளது. வான்கூவர் நகரில் 20 வர்த்தக நிறுவனங்கள் பிட்காயின்களை ஏற்றுக் கொள்கின்றன. அதில் இந்தக் காபி கடையும் ஒன்று.

ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு $3,000 அமெரிக்க டாலர் ( #Doller) மதிப்புள்ள பிட்காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கை யை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும்.

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.

பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நம க்கும் பரிதாபமாக தான் இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் பற்றி கேள்விபட்ட போதே ஹோல்ஸ், இது தான் எதிர்கால நாணயமாக இருக்கப்போகிற து என உணர்ந்திருந்தார். ஆகவே ஆர்வத்தோடு பிட்காயினை தோண்டி எடுப்பத ற்கான செயலிலும் ஈடுபட்டிருந்தார். தோண்டி எடுப்பது என்றால் குழம்ப வேண்டா ம். டிஜிட்டல் உலகில் அர்த்தமுள்ள தகவல்களை தேடி எடுப்பதை மைனிங் என்று குறிப்பிடுகின்றனர். எந்த ஒரு மைய அமைப்பாலும் வெளியிடப்படாத பிட்காயி னையும் அதன் வலைப்பின்னலில் இப்படி தான் தோண்டி எடுக்க வேண்டும்.

2009ல் ஹோவல்ஸ் தனது லேப்டாப் மூலம் பிட்காயினை தோண்டி எடுத்துக்கொ ண்டிருந்தார். சுமார் ஒரு வார கால் தேடலில் அவருக்கு 7,500 பிட்காயின்கள் கிடை த்தன. இது பெரிய அதிர்ஷ்டம் தான். இப்போது பிட்காயினை தோண்டி எடுக்க லேப்டாப் எல்லாம் போதாது. ஏனெனில் பிட்காய்னை தோண்டி எடுப்பது என்றால் கணிதவியல் சமன்பாடு போன்ற புதிர்களுக்கு விடை காண வேண்டும். பிட்காயின் சித்தாந்தப்படி ,இந்த புதிர்கள் சிக்கலாகி கொண்டே வரும். தற்போது பிட்காயின் வலைப்பின்னலின் புதிர்களை விடுவிக்க லேப்டாப்பைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்கள் தேவை. இதற்காக என்றே பிரத்யேக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் இருக்கின்றன. பலர் ஒன்று கூடி கம்ப்யுட்டர் வலைப்பின்னல் அமைத்தும் பிட்காயின் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், 4 ஆண்டுகளுக்கு முன்னரே ஹோவல்ஸ் 7,500 பிட்காயின்களை சேகரி த்து வைத்து விட்டார். பிட்காயின்களுக்கு பெளதீக வடிவம் கிடையாது. அவற்றை குறீயிடுகளாக இணைய பர்சில் போட்டு வைக்கலாம். ஹோவல்ஸ் தனது பிட்காயி ன்களை லேப்டாப் ஹார்ட்டிரைவில் வைத்திருந்தார். அவரது போதாத நேரம் லேப்டாப் பழுதாகி அதை தனியே மேஜையில் வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டை சுத்தமாக்கிய பொது அதை தெரியாமல் தூக்கி வீசி எரிந்து விட்டார் . அதை மறந்தும் விட்டார்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் பிட்காயின் ஏற்ற இறக்கங்களுக்கு இலக்கானாலு ம் சமீபத்தில் அதன் மதிப்பு எகிறத்துவங்கியுள்ளது. கடந்த ஏப்ரலில் ஒரு பிட்காயி னின் மதிப்பு 100டாலரை தொட்டது. இதோ சில தினங்களுக்கு முன் ஒரு பிட்காயின் ஆயிரம் டாலர் எனும் உச்சத்தை தொட்டுள்ளது. இத்தனைக்கும் நிஜ உலகில் பிட்காயின் பரிவர்த்தனையில் நிறைய சிக்கல்கள் இரு க்கின்றன. சட்டபூர்வ கேள்விகளும் உள்ளன. பிட்காயினை கொண்டு சில பொருட்க ளை மட்டுமே வாங்க முடியும். ஆனாலும் அதன் மதிப்பு ஏறுமுகத்தில் இருக்கிறது. இதனால் கைவசம் பிட்காயினை வைத்திருப்பவர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாகி கொண்டிருக்கின்ற னர்.

இனி ஹோவ்ல்ஸ் கதைக்கு வருவோம். பிட்காயினை மறந்திருந்தவர் சமீபத்திய பரபரப்பால ஈர்க்கப்பட்டு தனது ஹார்ட்டிரைவை தேடிப்பார்த்த போது தான் அதை குப்பை என தூக்கி வீசியது தெரிந்து திடுக்கிட்டு போனார். பிட்காயின் பரிவர்த்தனை மதிப்புபடி அவரிடம் இருந்த 7,500 பிட்காயின்களின் மதிப்பு 75, 00000 டாலர்கள்.   ஹோவ்லஸ் உடனே தனது பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்ட ப்படும் இடத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். வேல்ஸ் மாகானத்தின் நியூபோர்ட் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் இடத்தின் அதிகாரிகள் , அவரிடம் கால்பந்து மைதானம் அளவுக்கு இருந்த குப்பை மலையை காட்டி அதன் அடியில் தான் ஹார்ட்டிரைவ் இருக்க வேண்டும் என கூறினர். அதை கேட்டதுமே ஹோவல்சு க்கு நம்பிக்கை போய்விட்டது. தன்னால் அதை தேடமுடியாது என விட்டுவிட்டவர் வேறு யாரேனும் அரும்பாடு பட்டு தேடி எடுத்தால் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டு ம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் இதழில் இது பற்றி தனது சோக கதை யை ஹோவல்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பிட்காயின் மதிப்பை உணர்த்துவதோடு இன்னொரு பாடத்தையும் சொல்லாமல் சொல்கிறது. கம்ப்யூட்ட ரில் எதை சேகரித்து வைத்தாலும் அதற்கு பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஹோவல்ஸ் பேக் அப் எடுத்து வைத்திருந்தால் அவர் சேகரித்திருந்த பிட்காயினை இயக்குவதற்கான இணைய சாவி அவரிடமே இருந்திருக்கும்.

=> #TopBitcoinFaucets

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: