Advertisements

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல் சங்கர மடத்திலேயே நல்ல‍டக்க‍ம்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல்  சங்கர மடத்திலேயே நல்ல‍டக்க‍ம்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் பூத உடல் காஞ்சி சங்கரமடத்திலேயே நல்ல‍டக்க‍ம்

ஆதிசங்கரர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய காஞ்சி காமகோடி

பீடம்.  இந்த மடம் காஞ்சீபுர த்தில் இருந்தாலும் உலகப்புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம். சங்கர மடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுபவர் ‘‘சங்கராச்சாரியார்’’ என்ற பட்டத்துடன் திகழ்வார். பீடாதிபதி, மடாதிபதி என்றும் அழைப்பார்கள்.

காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

சில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகி ச்சை பெற்று வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூர யாத்திரை களை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தான் இன்று காலை 7.30 மணிக்கு அவரு க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்க ள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

7 டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிர மாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார். இது குறித்த தகவல் தீயாக‌ பரவியதும் காஞ்சீபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். இதையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவி க்கப்பட்டு, மாலைகள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டப த்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

முக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது84. இவர் 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி எ னும் கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிர மணியம் மகாதேவர் அய்யர்.

சிறுவயதிலேயே புரோகிதத்தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இவர் இந்து சமய பெரியவர்க ளிடம் செல்வாக்கு பெற்றார். இதையடுத்து அவரை காஞ்சி மடத்தி ன் இளைய பீடாதிபதியாக 1954-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் அறிவித்தார். சுப்பிரமணியன் என்ற பெயரை ஸ்ரீ ஜெ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர்சூட்டி பக்தர்களுக்கு அறிமுகம் செய்தார். இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு வயது 19.

1994-ம் ஆண்டு மகாபெரியவர் முக்தி அடைந்தபிறகு இவர் காஞ்சி மடத்தின் முத ன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார். அன்றுமுதல் ஆன்மீகம் தவிர கல்வி, மரு த்துவம் உள்பட பல்வேறு பணிகளிலும் அவர் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.

காஞ்சி மகா பெரியவரை பின்பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சங்கர மடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

1998-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மானசரோவர் மற்றும் கைலாய மலைக்கு சென்றார். ஆதிசங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற சிறப்பை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றார். கைலாயத்தில் ஆதி சங்கரரின் சிலையை நிறுவி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தா ர். அதுபோல மானசரோவரிலும் ஆதி சங்கரருக்கு சிலை எடுத்தார்.

இவர் சந்தித்த சில சோதனை

2004ம் ஆண்டு காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் கைதான அவர் 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 2 மாதங்க ளுக்கு முன்பு ஒருதடவை அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. போரூர் ராம ச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு மடத்திற்கு திரும்பினார்.

அதன்பிறகு அவர் மடத்தைவிட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார். ஆனா ல் இன்று காலை அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் முக்தியை அளித்து விட்டது.

முக்தி அடைந்தசுவாமிகளின் உடலை காஞ்சி சங்கர‌ மடத்தில் உள்ள ஒரு இடத்தி ல் நாளை காலை 8.00 மணியளவில் நல்ல‌டக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகி ன்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன. பல்வேறு பிரபலங்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருவ தால் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.  

#Kanchishankaracharya #JayendraSaraswathi

#KanchiSankaracharyaJayendraSaraswathi 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: