Advertisements

மர்மம் விலகியது – ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது.

மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது.

மர்மம் விலகியதால் ஸ்ரீதேவி உடல் இன்றிரவு இந்தியாவுக்கு வருகிறது.

கடந்த (24.02.2018) சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த

கணவர் போனிகபூரின் மைத்துனர் மோகித் மார்வா திருமணத்தில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இரவு தான் தங்கி இருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலுக்கு சென்று தங்கினார். அவருடன் கணவர் போனிகபூர், மகள் குஷி ஆகி யோரும் தங்கி இருந்தனர்.

அப்போது குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத தால் கணவர் போனிகபூர் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்காததால் பதட்ட ம் அடைந்த போனிகபூர் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்தா ர்.

உள்ளே ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சுயநினைவின்றி மூழ்கி கிடந்தார். இதைப் பார்த்து கதறித் துடித்த அவர் போலீசுக்கும் ஆம்புலன் சுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து ஸ்ரீதேவியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

துபாய் நாட்டின் கடுமை யான சட்ட விதிகளின்படி, ஆஸ்பத்திரிக்கு வெளியே மரண ம் அடைந்தால் தீவிர விசாரணைக்குப் பிறகே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க ப்படும். இதனால் ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக துபாய் போலீஸ் தலைமையக த்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

இறந்த 24 மணி நேரத்துக்குப்பின் பிரேத பரிசோதனை நடந்தது. அதன் பிறகு உடல் பாகங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கை தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி இயற்கையாக வே நீரில் மூழ்கி இறந்தாரா? எப்படி குளியல் தொட்டியில் மூழ்கினார்? அதில் மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர்.

ஸ்ரீதேவி தங்கி இருந்த ஓட்டலுக்கு போலீசார் சென்று குளியல் அறையை பார்வை யிட்டனர். உடைக்கப் பட்ட கதவையும் ஆய்வு செய் தனர். அதன் பிறகு போனி கபூர் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். போனிகபூரிடம் 3 மணி நேர த்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் போனி கபூரின் மைத்துனரும், மண மகனுமான மோகித் மார்வா குடும்பத்தினரும் விசாரிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் துபாய் சட்டப்படி 24 மணி நேரம் கழித்து மாலை 6 மணிக்குத்தான் பிரேத பரி சோதனை முடிந்தது. துபாய் போலீசார் தாங்கள் நடத்திய விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை நாட்டின் உயர் மட்ட விசாரணை அமைப்பான “துபாய் பப்ளிக் பிரா சிக்கியூஷன்” எனப்படும் விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ரீதேவி செல்போனையும் கைப்பற்றி அதில் பதிவான எண்களில் தொடர்புகொ ண்டு விசாரித்தனர். ஸ்ரீதேவி மரணத்துக்கு முன் 24 மணி நேரம் வரை அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரத்தை சேகரித்து அதில் கிடைத்த தகவலும் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. ஓட்டல் அறையில் உள்ள சி.சி. டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே போனி கபூர் மகள் குஷியுடன் மும்பை திரும்பி இருந்தார். பொது விசாரணைக்குழு அதிகாரிகள் மீண்டும் போனிகபூரை துபாய்க்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளின் பல்வேறு சந்தேகங் களுக்கும் நீண்ட நேரம் விளக்கம் அளித்தார். இதையடுத்து நேற்று மாலை போனிகபூரிடம் ஸ்ரீதேவி யின் மரணச் சான்றிதழ் (Death Certificate) வழங்கப்பட்டது. ஆனால் உடலை ஒப்படைப் பதில் தாமதம் ஏற்பட்டது.

இதுபற்றி துபாய் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது சந்தேகத்துக்கு இடமின்றி மர ணம் நிரூபிக்கப்பட்டால் தான் உடல் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனைசெய்வோம். மறுவிசாரணையும் நடத்துவோம்” என்று தெரிவி த்து இருந்தனர்

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கியது துபாய் காவல்துறை.

ஆட்சேபனை இல்லா சான்றிதழ் இந்திய துணை தூதரகத்தின் பிரதிநிதிகளுக்கும் அவரது குடும்பத்தி னருக்கும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி உடல் பதப்படும் பணி தொடங்கியது . உடலை பதப்படுத்தும் பணி முடிந்ததும் துபாய் சுகாதார அதிகாரிகளால் உடலை பதப்படுத்திய சான்றிதழ் வழங்கபட்டது. உடனடி யாக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு எடுத்து செல்ல ப்பட்டது.

தனி விமானம் மூலம் இன்று இரவு 10 மணிக்குள் மும்பை விமான நிலையம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நன்றி தினத்தந்தி

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: