Advertisements

க‌தறி அழுத‌ மைனா நந்தினி – நானும் பொண்ணுதாங்க• எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு

க‌தறி அழுத‌ மைனா நந்தினி – “நானும் பொண்ணுதாங்க• எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு”

க‌தறி அழுத‌ மைனா நந்தினி – “நானும் பொண்ணுதாங்க• எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு”

வம்சம் திரைப்படத்தில் நடிகை சுனைனாவின் தோழியாக வந்தவர். அதன்

தொடர்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சியில் நடித்தவர். இத்தொடரில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைனா. இந்த மைனா நந்தினி (mynanandhini)யை அவ்வளவு எளிதாக மறக்க முடி யாது. கணவரின் தற்கொலைக்குப்பின்னர், நந்தினி பற்றி பலஎதிர்மறை யான கருத்துகள் துரத்தின. அவற்றையெல்லாம் சவாலுடன் எதிர்கொ ண்டு, தற்போது மீடியா துறையில் பிஸியாக இருக்கிறார். அவருடன் பர்சனல் சாட்!

”மீடியாவில் நீங்க பார்க்கும் நந்தினிக்கும் நேரில் பார்க்கும் நந்தினிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னைப்பற்றி நானே சொல்லக்கூடாது. இருந்தாலும் கேட்டுட்டீங்களேனு சொல்றேன்” என அவருக்கேயான லந்தோடு பேசத் தொடங்கி னார்.

”சின்ன வயசிருந்தே நான் பொறுப்பான பொண்ணு. என் அம்மாவும் அப்பாவும் கஷ்டப்படுறதைப் புரிஞ்சுக்கிட்டு இதுவேணும், அதுவேணு ம்னு அடம்பிடிச்சதே இல்லை. என்னால் முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சப்போ ர்ட்டா இருக்க நினைச்சேன். எங்க வீடு ரொம்பவே சின்னது. டிவி கூட கிடை யாது. அந்த அளவுக்கு ஏழ்மையான குடும்பம். என் குடும்பத்தை பெரிய லெவலுக்குக் கொண்டுவர்றது என் கனவா இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போதே டைப்ரைட்டர் வேலைக்குப் போனேன். ஆர்ஜே, வீஜே னு நான் பார்க்காத வேலையே கிடையாது. அந்தளவுக்கு உழைச்சேன். இப்போ என்முகம் வெளியில் தெரியுதுன்னா , அதுக்குப் பின்னாடி கடின உழைப்பும் என் பெற்றோர் கொடுத்த தன்னம்பிக்கையும் இருக்கு” என்றவரி ன் பேச்சில் அத்தனை கம்பீரம்.

”என் குடும்பத்துக்கே நகைச்சுவை உணர்வு அதிகம். ஏதாச்சும் சீரி யஸா பேசிட்டிரு க்கும்போது, அம்மா அசால்டா கலாய்ச்சுட்டுப் போயிடுவாங்க. வெளியில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வீட்டுக்குள்ளே நுழை ஞ்சுட்டா, எல்லாம் மறந்துடும். அது, எனக்குள் நகைச்சுவை உணர்வை அதிகம் கொ டுத்துச்சு. மதுரைக்காரங்களுக்கு ‘லந்து’ இல்லாமல் இருக்குமா? எவ்வளவுதான் மத்தவங்க ளைக் கலாய்ச்சாலும், அவங்க மனசு புண்படாமல் கவனமா இருப்பேன். அதனால்தான், ஜீ தமிழின் ‘காமெடி கில்லாடிஸ்’ நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்திருக்கேன். காமெடி கில்லாடிஸில் கலந்துகொண்ட எல்லோருமே அவங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கப் போராடுறவங்க. என்னால் முடிஞ்சளவு அவங்களை உற்சாகப்படுத்துறேன். அந்த செட்டில் டபுள் மீனிங் ஜோக்ஸையும் தவிர்க்கச் சொல்லி அட்வைஸ் பண்றோம்.

என் கணவர் இறந்ததும் எல்லோரும் என்னைக் கடுமையா விமர்ச னம் செஞ்சாங்க. நானும் பொண்ணுதாங்க. எனக்கும் எல்லா உண ர்ச்சிகளும் இருக்கு. (சில விநாடிகள் கதறி அழுதார். அதன் பிறகு தன்னை தேற்றி க்கொண்டு) எனக்கும் குடும்பம் முக்கியம். என் அம்மா, அப்பா, தம்பி மூணு பேருமே எனக்குக் குழந்தைகள் மாதிரி. அவ ங்களுக்காக நான் இங்கே இருந்துதான் ஆகணும். சிரிக்கிறது, டான்ஸ் ஆடுறது, பாட்டுப் பாடறது என்னுடைய வேலை. அதை நான் செஞ்சுதான் ஆக ணும். விமர்சனம் பண்றவங்களால் என்னைப் புரிஞ்சுக்க முடி யாது. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா புரிய வெச்சுட்டு இருக்கும் அவசியமும் எனக்கு இல்லை.

நான் நானாக இருக்கேன். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கேன். அதனாலதான் எல்லோரையும் ஈஸியா நம்பி ஏமாந்துடறேன். இந்த ஒரு வருஷத்தில் நிறைய கத்துக்கிட்டேன். அழறது ஒண்ணும் கேவலம் கிடையாது. அழுகையின் மூலமா ஒரு அமைதியை யும் தெளிவையும் உணர முடியும். ‘நீலி’ சீரியலில் நடிக்கும்போதெல்லா ம் நான் கிளிசரின் பயன்படுத்தவே இல்லை. இன்னும் நிறைய ஹார்டு ஒர்க் பண்ணி என் ஃபேமிலியை பார்த்துப்பேன். எந்தப் பிரச்னை வந்தாலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கும் என் நண்பர்களுக்கு நன்றி” என அழுத்தமான குரலில் சொல்கிறார் ‘மைனா’ நந்தினி #mynanandhini #nandhini

+வித்யா காயத்திரி விகடன்

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: