Advertisements

பானி பூரியில் பான் மசாலா – ஊசலாடும் உயிர்கள் – அதிரவைத்த விகடன் கட்டுரை

பானி பூரியில் பான் மசாலா – ஊசலாடும் உயிர்கள் – அதிரவைத்த விகடன் கட்டுரை

பானி பூரியில் பான் மசாலா – ஊசலாடும் உயிர்கள் – அதிரவைத்த விகடன் கட்டுரை

வட இந்தியாதான் பூர்வீகம். ஆனாலும், தமிழகத்தில் பலராலும் தவிர்க்க முடியாத

நொறுக்குத்தீனி பானி பூரி ( #PanipuriAlert ). இந்த `கரகர’ ஸ்நாக்ஸ் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஃபேவரைட். சென்னையின் முட்டுச்சந்தில்கூட குட்டி வண்டியில் பானி பூரி (Pani Puri) வியாபாரம் படுஜோராக நடந்து கொண்டிருக்க, அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தகவ லும், அதற்காக உணவுப் பாதுகாப்புத்துறை எடுத்த நடவடிக்கையும் பானி பூரி  (Pani Puri)பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 

சென்னையிலிருக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தின் வா ட்ஸ்அப் எண்ணுக்கு வந்தது அந்தப் புகார். அதில் குறிப்பி டப்பட்டி ருந்த தகவல் இதுதான்… `பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் பானிபூரி (Pani Puri)களில் பான் மசாலா (Pan masala) கலந்தது போன்ற சுவையும் மணமும் இருக்கிறது.’ 

நம் அன்றாட நொறுக்குத்தீனிகளில் ஒன்றாகிவிட்டது பானி பூரி (Pani Puri). குழந்தைகளையும் இளம் வயதினரையும் அதன்  சுவைக்கு அடிமையாக்கும் நோக்கத்தில், பான் மசாலா சேர்க்க ப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், உணவுப் பாது காப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களுக்கும் நேரில் சென்று சோதனை நடத்திவருகிறார்கள்.

பான் மசாலா சேர்த்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்? போதை மறுவாழ்வு மருத்துவர் அனிதா ராவிடம் பேசினோம். 

“பானிபூரி (Pani Puri)யில் பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது என க்குத் தெரிய வில்லை. அதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தா ன் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல, இதுவரை சிகரெட் (Cigrette), பீடி (Beedi), புகையிலை (Tobacco) போன்றவ ற்றுக்கு அடிமையானவர்களைப்போல, ‘ பானி பூரி அடிக்‌ஷன் (Pani Puri Addiction)’ என்பதற்காக யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு வேளை அப்படி பான் மசாலா (Pan Masala) சேர்த்திருந்தால், அது கண்டிப்பாக, பானி பூரி (Pani Puri)க்கு அடிமையாக்கும் நோக்கத்தி ல் சேர்க்கப்பட்டிருக்கலாம். பான் மசாலா (Pan Masala)வும் ஒரு வகைப் புகையிலைப் பொருள்தான் என்பதால், புகையிலை (Tobacco) ஏற்படுத்தக்கூடிய புற்று நோய் (Cancer) போன்ற பல பிரச்னைகளுக்கு ள்ளாக நேரிடும். இது உண்மையெனத்தெரியும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’’ என்கிறார்.

இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

“பானி பூரி(Pani Puri)யில் வட மாநிலத்தவர்கள் சிலர் பயன்படுத்து ம் `மாவா’ போன்ற பான் மசாலாப் பொருள்கள் சேர்க்கப்படுவதாக புகார் வந்தது உண்மை தான். இப்புகாரின் அடிப்படையில்தான் உணவுப் பாதுகா ப்புத்துறை கமிஷனர் அமுதா தலைமையில் தனிக்குழு அமைக்க ப்பட்டது. சென்னையில் சௌகார்பேட்டை (Chennai Sowcarpet), புரசைவாக்கம் (Purasaiwakkam), வடபழனி (Vadapalani) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 22 பேர் 5 குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது பூரி, புதினா (Minit) தண்ணீர் (Water), சாஸ் (Chaos), சமோசா (Samosa)… இவற்றைப் பொரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம்… என அனைத்தும் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கி ன்றனவா எனச் சோதிக்கப்பட்டது. கசடு தங்கிய நிலையில் காணப்பட்ட புதினா (Mint) தண்ணீர் உள்ளிட்ட சில கண்டுபிடிக்கப்பட்டு கால்வாயில் கொட்டி அழிக்கப்பட்டன. 

அதேபோல, தங்களுடைய பகுதியில் இதேபோல சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், தயங்காமல், ‘94440 42322’ என்ற உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது வாட்ஸ்அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். அந்தத் தகவல்கள் அடிப்படையில் சோத னை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவி த்தார் நம்மிடம் பேசிய அதிகாரி.  

பானி பூரி (Pani Puri) சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் சொல்கிறார்…

“உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா (Maidha), பேக்கிங் சோடா (Packing Soda) போன்றவைதான் பானி பூரி (Pani Puri) தயாரிக்கப் பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருள்களாக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன், சர்க்கரை நோய் (Diabetics) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கி ன்றன. அந்த பூரியில் சத்துகள் பெரிதாக இல்லை என்ப து ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்ப டும் தண்ணீரே எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதே போல, கடைக்காரர்கள், அந்த பூரியைப் பெரும்பாலும் தங்கள் கை விரல்களால் உடைக்கிறார்கள்; அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அதனால், அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும் கையில்உள்ள அழுக்கும் பானியிலு ம் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சுத்தம் இல்லாமல் பரி மாறப்படும் அதை சாப்பிடுவது, வாந்தி (Vomit), வயிற்று ப்போ க்கையும் (Dyaria) ஏற்படுத்தலாம். இது போன்ற சாலையோரக் கடைகளில், சுகாதார மற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவு களைச் சாப்பிட்டால் ஹெபடைடிஸ் ஏ தொற்று (Hepatitis A Infection), டைஃபாய்டு காய்ச்சல் (typhoid fever) போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதன் விளைவாக விரைவிலேயே அவர்களின் உயிர் ஊசலாடும் வாய்ப்பு உள்ள‍து.

இது நம் மக்களின் பாரம்பர்ய உணவே அல்ல. எனவே, ஆசைக்காகச் சாப்பிட்டால்கூட என்றைக்காவது ஒருநாள் சாப்பிடலாம். அதுவும் முடிந்தவரை சுகாதாரமான தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பொருள்களைக்கொண்டு தயாரி க்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு சாப்பிடுவது அல்லது வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறந்தது.’’ என்கிறார் .

=>  ஜி.லட்சுமணன்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: