Advertisements

செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌

செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌

செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌

பெண்கள் என்றால் அழகு, அழகு என்றால் பெண்கள். ஒரு ஆண், ஒரு பெண்ணை

பார்க்கும்போது அவனுக்குள் தானாகவே கவிதை சுரந்து கவிஞனாகிறான். அதே போல் பல பாடலாசிரியர்கள் கவி ஞர்கள் பெண்களின் அழகை அருமையாக வர்ணித்து பாடி யிருப்ப‍தை நீங்கள் அறிவீர்கள். அதிலும் பெண்களின் மலர் போன்ற பாதங்கள் குறிப்பாக சொல்ல வேண்டும்

அந்த மலர் போன்ற பாதங்களுக்கு உரிய செருப்புக்களை அணிய பெண்களுக்கான முக்கிய குறிப்புக்கள் சில

பெண்கள் விரும்பும் வகையில் மிகவும் நளினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொ ஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன.பெண்களின் ஆடை யின் நிறத்திற்கேற்ற செருப்பு (Footwear – Slipper), அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு (High Heel Slippers), கால்களை முழு வதும் மூடிக்கொள்ளும் கட்ஷூ (Cut Shoe), மெல்லிய லேஸ்க ளைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை (Stoned Slippers), துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் (Designed Slippers) என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன. ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன.

குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடி யும். பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கி ன்றன. பெண்கள் விரும்பும் வகையில் மிகவும் நளினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவ தற்கு சுகமா னதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பி டித்துள்ளன.

காலணிகள் என்றதும் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறு வர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணி களைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம்.

இதிலும் விளையாட்டுவீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோ ற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன. பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். பெண்கள் செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவ சியம். செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.

பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்ற ங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இட ம்பெறுகின்றன. இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வுசெ ய்வது, எம்ராய்டரி வே லைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தா ன். இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) ம ற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) கால ணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். சந்தையில் பல வகை களில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள். காலுக்கு ம், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

=> சார்லஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: