Advertisements

பிப்ரவரி 14 – காதலர் தினத்தில் காதல் குறித்த‍ சில மெய் சிலிர்க்கும் தகவல்கள்

பிப்ரவரி 14

காதலர் தினத்தில்

காதல் குறித்த‍ சில மெய் சிலிர்க்கும் தகவல்கள்

பிப்ரவரி 14 – காதலர் தினத்தில் காதல் குறித்த‍ சில மெய் சிலிர்க்கும் தகவல்கள்

காதல் இன்றி மனிதர்கள் மட்டுமல்ல‍ விலங்குகளும் ஏன் தாவரங்களும் கூட‌

வாழ முடியாது. காதல் என்பது நாம் சுவாசிக்கும் காற்று போன்றது. அத்தகைய காதல் குறித்த‍ சில மெய்சிலிர்க்கும் தகவல்களை இங்கு காண்போம்.

காதலிக்க என்னென்ன வேண்டும் – சுவாரஸ்ய குறிப்புக‌ள் (What qualities do you love?)

உயிருள்ள‍ உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அதாவது மனிதர்களாகவோ, அல்ல‍து மிருகங்களாகவோ அல்ல‍து தாவரங்களாகவோ இருந்தாலும் அங்கே கண்டிப்பாக காதல் இருந்தே தீரும். அந்த காதல் என்ற உறவிற்குள் நுழைவதற்கு முன்பு அதில் உள்ள சில நிதர்சனங்களை புரிந்து கொள்ள வே ண்டியது அவசியம். உங்களுக்கு தெரிந்த சில நண்பர்களின் காதல், திரைப்படங்களில் வரும் காதல் என சிலவற்றை கண்டு அதிர்ச்சியிலும், பயத்திலும் இருப்பீர்கள். அனைத்து விஷயத்திலும் சரியாக இருக்கும் மனிதர்களை காண முடி யாது.

ஒரு ஆண், ஒரு பெண்ணை காதலிக்கும் முன்பு அல்ல‍து ஒரு பெண், ஒரு ஆணை காதலிக்கும்போதே அந்த உறவுகளில் சில ஏற்ற இறக்க ங்கள் இருப்பது இயல்பு தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டி யது அவசியம்.

1. எதுவுமே நிலையில்லை! (Nothing has happened)

இந்த உலகில் எதுவுமே நிலையானது இல்லை. ஒரு சில சமயங்களி ல் ஒருவரை இழக்க வேண்டும் என்றால் இழந்துதான் ஆகவேண்டும். அதேபோல ஒருவரால் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு பிடித்த மாதிரியாகவே இருக்க முடியாது.

2. யாரையும் மாற்ற முடியாது! (No one can change)

நீங்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டாலும் சரி, உங்களால் யாரையும் மாற்ற முடியாது. ஒவ்வொருவரு க்கும் அவர்களது தனித்திறன் என்றுள்ளது, அதை மாற்றிக்கொள்ள சொன்னால் அது அவர்களுக்கு மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

3. உங்களையும் மாற்ற முடியாது! (You cannot change yourself)

உங்களால் யாருடைய குணத்தையும் மாற்றமுடியாது என்பது போல யாரலும்உ ங்களையும் மாற்றமுடியாது. என்னை நீ மாற்றி விட்டாய், உன்னால் தான் நான் இப்படி செய்கிறேன் என்று கூறுவது தவறு. உங்களது மாற்றத்திற்கு உங்களை தவிர வேறு யாரும் கார ணமாக இருக்க முடியாது. உங்களை ஒருவர் வந்து மாற்ற வே ண்டும் என்று நினைப்பதும் தவறானது, அது இயலாததும்கூட..!

4. இதை செய்யாதீர்கள் (Don’t Do this)

உங்களது துணையின் நன்மைக்காக நீங்கள் ஒரு விஷயத்தை செ ய்கிறீர்கள் என்றால் முழு சந்தோஷத்துடன் செய்யுங்கள். அவராவது மகிழ்ச்சியாக இருக்கட்டு ம் என நினைத்து, எதையும் செய்ய வேண்டாம். இது பின்னா ளில் உங்களது உறவில் விரிசல் உண்டாக காரணமாக அமையும்.

5. பொய் சொல்லாதவர்கள் இல்லை! (There are no people who do not lie)

இன்று அனைத்து விஷயத்திலும் சரியானவர்கள் யாருமே இல்லை! உங்களது துணை ஒரு பொய் சொன்னால் அதன் பின்னால்உள்ள காரணத்தை பாருங்கள். அந்த பொய் உங்களது உறவை முறிப்பதற்காக சொல்லப்பட்டது என நினைக்காதீ ர்கள். உறவில் விரிசல்வரகூடாது என்பதற்காக சொல்லப்ப ட்டது என எடுத்துக்கொ ள்ளாமே!

6. ஏற்றுக்கொள்ளுங்கள்! (Accept All)

உண்மையான காதல் நிறை, குறை என இரண்டையுமே ஏற்றுக்கொள்ளும். இத னை இருவருமே செய்ய வேண்டும். ஒரு வரின் நிறைகளை மட்டுமே காதலிப்பது தவறு. நிறை இருக்கும்இடத்தில் குறையும் சேர்ந்தே இருக்க தான் செய்யும். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

7. ஓடி விடாதீர்கள்! (Do not run away)

உண்மையான காதலில் சில சவால்கள் இருக்கத்தான் செய்யும்! அதை சமாளிக்க முடியாமல் ஒளிந்துஓடுவது தவறான ஒன்று. எத்தனை தடைகள் வந்தாலும் நின்று போராடுவேன் என்று இரு க்க வேண்டும். ஒளிந்து ஓடினால் உங்களை யாரும் நம்ப மாட்டா ர்கள்.

8. உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே காரணம்! (You are responsible for your happiness)

உங்களது மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டும்தான் காரணமாக இருக்க வேண்டும். உங்கள து சந்தோஷம் உங்களது துணைதான் என்று நினைக்காதீர்க ள். ஒரு வேளை உங்கள் துணை ஒருநாள் உங்களை விட்டு சென்று விடலாம், அப்போது உங்களுக்கு உலகமே இருண்ட தாக தோன்றும்.

9. இது தான் காதல்! (This is Love)

மற்றவர்கள் இப்படி காதலிக்கிறார்கள், அப்படி காதலிக்கிறார்கள், நமது காதல் ஏன் இப்படி இருக்கிறது என நினைப்பது தவறு…! உறவில் சில ஏற்ற இறக்கங்கள், மேடு, பள்ளங்கள் இருப்பது இயல்பு தான். அதை எல்லாம் கடந்து வர வேண்டும். எல்லாம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை வேண்டும். அதை விட்டுவிட்டு என் காதல் மட்டுமே ஏன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இல்லை என்று நினைக்க கூடாது!

=> கிசுகிசு கீதா

உங்கள் காதலி உங்களிடம் கேட்க விரும்பும் கிளுகிளு வினாக்கள் (Your lover is like to ask which questions)

பெண்களால் கேள்விகள் கேட்காமல் இருக்கவே முடியாது. அதிலும் தான் காதலி க்கும் ஆணிடம் பெண்கள் கேட்கவிரும்பும் கேள்விகள் என பொதுவாக ஒரு பட்டிய ல் இருக்கிறது. அந்த பட்டியலை பார்க்கலாம். பொதுவாக காதலன் அவனது நண்பர்களுடன் எங்காவது வெளியே செ ன்று வந்தால்கூட ஆயிரம் கேள்வி கள் கேட்பார்கள். காதலன் என்ன செய்தான், எங்கு போனான் என அனைத்தையும் தெரி ந்து வைத்திருக்க வேண்டும் என்பது பெண்களின் இயல்பு.

அந்தவகையில் தான் காதலிக்கும் ஆணிடம் பெண்கள் கேட்கவிரும்பும் கேள்விகள் என பொதுவாக ஒரு பட்டியல் இருக்கிறது. சில கேள்விகள் சாதாரண கேள்விக ள்தான் ஆனால், பதிலை யோசித்துக்கூறும்படி இருக்கும். சில கேள்விகள் எடக்குமடக்கான கேள்விகளாகவும் இருக்கி ன்றன காதலனிடம் பெண்கள் கேட்க விரும்பும் கேள்விகள்

நான் இல்லாத போது நீ போக விரும்பும் இடம்? (Where do you want to go when I’m not?)

நீங்கள் உங்களுக்கு பிடித்த எந்த இடத்தை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், கடைசியில் நீயும் உடன் இருந்தால் அது மிகவும் சிறப்பாக அமை யும் என்பது போல கூறி முடித்துவிடுங்கள்.

குழந்தைகள் பிடிக்குமா? (Do you like kids)

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பிடிக்கும் என்றே கூறுங்க ள், ஏனெனில், பெரும்பாலான பெண்களுக்கு குழந்தைகள் என்றா ல் பிடிக்கும். இதற்கு துணை கேள்வியாக ஆணா, பெண்ணா? என்றும் கேட்பார்கள்.

சமைக்க பிடிக்குமா? (Do you like to cook)

சமைக்க பிடிக்குமா என்று கேட்டால் தெரியாது என கண்ணை மூடிக் கொண்டு கூறி விடுங்கள். இதனால் 2 நன்மைகள் இருக்கி ன்றன. ஒன்று என்றாவது சர்ப்ரைஸாக சமைத்து அசத்த முடியும், மற்றொன்று அவர்கள் சமைக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகள் நிறைய கிடைக்கும்.

டேட்டிங் பற்றிய உனது கருத்து? (Your comment on dating)

மேல்நாட்டு பெண்கள், மேற்கத்தியம் விரும்பும் நம்நாட்டு பெண்களி ல் ஒருசிலரை தவிர பெரும்பாலான பெண்களுக்கு டேட்டிங்கில் பெரிதாக நாட்டம் இருக்காது. இந்த கேள்வி நீங்கள் எப்படிப்பட்டவர் என தெரிந்துக் கொள்ள கேட்கப்படும் கேள்வி எனவே உஷார ய்யா உஷாரு!!!

உன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் என்ன? (What is your bad habit?)

முன்கூட்டியே அவர்களுக்கே தெரிந்த பதிலை கூறிவிடுங்கள். புதிய தாக கூறி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

இருபது வருடம் கழித்து என்னைப் பற்றி நீ என்ன நினை ப்பாய்? (About twenty years later what would you think about me?)

இப்போதுபோலவே அன்றும் உன்னை காதலித்துகொண்டு தான் இருப்பேன். இன்னும் உன்மேல் அதிக அன்பு செலுத்த இரண்டு குழந்தைகளும் உடனிருக்கும் என நாலைந்து பிட்டுகளை அடித்து விடுங்கள். அப்போ யோசிப்போம், இப்போ எதுக்கு என எடக்கு மடக்காக பதில் கூற வேண்டாம்.

உன்னை பொறுத்தவரை காதல் என்றால் என்ன? (Do you tell about love?)

காலம், காலமாக கூறப்படுவது தான், உண்மை, நேர்மை, கடமை தவறாமல் இருப்பது. ஒருவரை ஒருவர் முழுவதாக புரிந்துக் கொள்வது தான் உண்மை யான காதல்.

***

உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்

காதலன் அல்ல‍து க‌ணவன்… காதலி அல்ல‍து மனைவியின் கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்

ஆண்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த ஆண்களை நேசிக்கும் உண்மையான பெண்களும் இன்னமும் இருந்து கொண்டு இரு க்கிறார்கள். அதாவது ஓர் ஆண், தனது காதலிக்கு அல்ல‍து மனைவியின் கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ண‍ம் ஒவ்வொரு ஆணுக்கும் மேலோங்கி இருக்கும்.

அந்த வகையில் தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களின் அழ கை அதிகரிக்க விரும்புகின்றனர். ஆனால் அத ற்கான போதிய பராமரிப்புக்களை முறை யாக அன்றாடம் பின்பற்றுவதில்லை.

பெண்களின் சருமத்தைவிட ஆண்களின் சருமத்தைப் பார்த்தால், அதிக அளவில் பாதிப்படைந்தி ருப்பது நன்கு தெரியும் .இதற்கு அவர்கள் தங்களின் சருமத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம்.

எனவே ஆண்களே நீங்கள் அழகாகமாற ஆசைப்பட்டா ல், சலூன்சென்று உங்கள் அழகை அதிகரிக்காமல், அ ன்றாடம் ஒருசில பராமரிப்புக்க ளை தவறாமல் பின்பற்றி வந்தாலே, நல்ல பலனை ப் பெறலாம்.

இங்கு அழகை அதிகரிக்க விரும்பும் ஆண்கள் செய்யும் தவறுக ள் கொடுக்கப்ப ட்டுள்ளன.

சன் ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது

ஆண்கள் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை அடிக்கடி பயன்படுத்தமாட்டார்கள். அப்படியே பயன்படுத்தினாலும், கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு SPF குறை வாக உள்ள சன் ஸ்க்ரீன் க்ரீமை பயன்படுத்துவார்கள். ஆனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால், SPF அதிகமு ள்ள சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவதோடு, வெளியேசெல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே தடவிக்கொள்ள வேண்டும். வேண்டுமானால், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெ ண்ணெய் சரும த்திற்கு தடவி செல்லலாம்.

ஆன்டி-ஏஜிங் க்ரீம் பயன்படுத்தாதது

ஆன்டி-ஏஜிங் க்ரீமை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற எதுவும்இல்லை. ஆண்களுக்கும் முதுமை தோற்றம் வரும். அதை மறைக்கவும், போக்கவும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ நிறை ந்த ஆன்டி-ஏஜிங்க்ரீம்களை பயன்படுத்தினால், முதுமை தோற்றத்தைத்தடுக்கலாம்

மாய்ஸ்சுரைசிங் பயன்படுத்தாதது

ஆண்கள் பொதுவாக எந்த ஒரு க்ரீமையும் சருமத்திற்கு தடவ விரு ம்பமாட்டார்கள். இதனால் சருமம் வறட்சி அடைந்து, அதிக பாதிப்பி ற்குள்ளாகி, கடினமானதாக இருக்கும். எனவே ஆண்களே உங்கள் சருமம் மென்மை யாக அழகாக இருக்க வேண்டுமானால், தினமும் மாய்ஸ்சுரைசர் தடவி வாருங்கள் . இத னால் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

வறட்சியான ஷேவிங்

சிலஆண்கள் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தாமல், வறட்சியான ஷேவி ங்கை மேற்கொள்வார்கள் ஆனால் இப்படி செய்தால், சருமம்தான் பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் அதிகவெட்டு காயங்கள் ஏற்பட்டு, அதனால் தழும்புகள் விழும். ஆகவே எப்போதும் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்ய வேண்டாம். மேலும் ஷேவிங் முடிந்த பின்னர், ஆப்டர் லோஷனை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

சோப்புக்களை பயன்படுத்துவது

பயன்படுத்தினால், முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும்நீங்கி, முகம் வறட்சியடைவ தோடு, சருமசெல் களும் அதிகம் பாதிக்கப்படும். எனவே குளிக்கும்போது தவிர, மற்றநேரங்களில் ஃபேஸ் வாஷ் பயன்படுத் துங்கள்.

ஸ்கரப் பயன்படுத்தாமல் இருப்பது

பெண்களின் சருமத்தில் மட்டும் அழுக்குகள், இறந்த செல்கள் சேர்வதில்லை. ஆண்களின் சருமத்திலும் இவை சேரும். எனவே ஆ ண்கள் அவ்வப்போது முகத்தை ஸ்கரப்செய்ய வேண்டும். இதனால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். வீட்டில் இருக்கும் சர்க்கரை அல்லது ஓட்ஸ் கொண்டே ஸ்கரப் செய்ய லாம். முக்கியமாக ஸ்கரப் செய்யு ம்முன், முகத்தை நீரில் கழுவி, பின்னர்தான் ஸ்கரப் செய்ய வேண்டும்.

சரியாக தண்ணீர் குடிப்பதில்லை

அழகு என வரும் போது அதில் தண்ணீரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், அது சரும செல்கள் புத்துண ர்ச்சியோடு வைப்பதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவோடு வைத்து க்கொள்ளும். இதற்கு காரணம் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸி ன்களை வெளியேற்றுவது தான்.

எனவே தினமும் தவறாமல் 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம்.

 இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: