Advertisements

விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல்

விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் (சளி) – ஓரலசல்

விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் (சளி) – ஓரலசல்

வாதம், கபம், பித்தம் – இந்த தொஷங்களில் அதிகப்படியாக இருக்கும் ஏதாவது ஒரு தோஷம், உங்கள் வாழ்க்கையில் அழிவைத் தரமுடியும். இந்த கபம் குறித்த‍ மருத்துவ தகவல்கள் முழுமையாக இங்கு காண்போம்.

கபம் என்றால் என்ன ?

கபத்தை சிலேத்துமம் என்றும் அழைக்கப்படும், கபம் என்பது மனித உடலில் உள்ள ஈரப்பததின் அளவை குறிக்கும். சூரிய உதயத்திற்க்கு முன்பும் சூரிய உதயத்திற்க்கு பின் உள்ள நேரத்தை கப நேரம் என்று கூறுவார்கள் ஏன் எனில் இவ்விரண்டு கால மும் குளிர்சியான காலம் ஆகும் மற்றும் மழை காலங்களும் அடங்கும். இச்சமய ங்களில் அதிக குளிர்ச்சியான பாணங்கள் மற்றும் உணவு பதார்தங்கலை சாப்பிடும் போது கபம் அளவை அதிகரிக்க செய்து உடலில் தேவைக்கு அதிகமான ஈரபதத்தை உண்டாக்கும். இது ஒருவகையான நீர் கோர்வை என்றும் கூறலாம்.

கபத்தின் அறிகுறிகள்:-

கபம் அதிகமானால் உடலில் ஏற்ப்படும் மாற்றம் வாயில் ஒரு இனிப்பு சுவை, வெளி றிய தோல், உடலின் குளிர்ச்சி, அரிப்பு உணர்வு, உடல்கழிவுகள் அல்லது மலத்தின் ஒட்டும் தன்மை (மல விஷயம், சிறுநீர், வியர்வை) வீக்கம், நெரிசல், புரையழற்சி, குளிர், வாய் மற்றும் கண்களில் இருந்து அதிக சளி சுரப்பு, மெதுவான உணர்ச்சி பதி ல்கள், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, தொண்டைப்புண், இருமல், நீரிழி மற்றும் திரவம் தங்குதல்.

கபம் அதிகமானால் மனதளவில் தோன்றும் அறிகுறிகள்

மனதில் சோர்வு, எந்த வகையான வேலையிலும் அக்கறையின்மை, மன அழுத்தம்.

கபம் அதிகமானால் மனதளவில் தோன்றும் நடத்தையின் அறிகுறிகள்

சோம்பல், அதிகம் தூங்குதல், அயர்வு,தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம், மெதுவான இயக்கங்கள், பேராசை.

கபம் உள்ள பகுதிகள்

கபம் அதிகமாக தங்கியிருக்கும் இடங்கள் தலை முதல் இருதயம் வரையுள்ள பகுதி ஆகும்.

கபத்தின் உச்ச கட்ட தாக்கம் மரணம்

நுரையீரலில் நீர் சேர்வதால் அது கபமாக மாறும். நுரையீரல் பைகளை கபம் அடை த்துக் கொண்டால் மூச்சு விடுவதில் சிரமம். மூச்சு உள்வாங்க்கி விடுவதில் பிரச்சி னை என்றால் இதயத்தின் செயல்பாடுகள் வேகமாக குறையும். இதயத்தின் செய ல்பாடு குறைந்தால் சிறுநீரகத்தில் அதாவது கிட்னியில் தாக்கம் ஏற்படும். கிட்னியி ல் தாக்கம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் மோசமாகும். பிறகு உடம்பு முழுக்க வலியை ஏற்படுத்தி பிறகு ஜீரம் வரும். கபம் என்பது ஓரிரு நாளில் உச்சக் கட்டத்தை தொட்டு சட்டென்று மூச்சுத் திணறி மரணம் ஏற்படும்.

கபம் அதிகம் தாக்கக் கூடியவர்கள்

சற்று குள்ளமான குண்டான உருவ அமைப்பினை உடையவர்களுக்கு கபம் அதிகரி த்த நிலையிலேயே காணப்படும் இவர்களுக்கு சுரப்பிகள் அதிகமாக சுரக்கும் நிலை யும், அடிக்கடி சளித் தொல்லையும் ஏற்படும் மற்றும் நீர் அதிகமாக வெளியேறும் நிலையும் வீக்கமும் ஏற்படும்.

கபத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்

பால்,
இனிப்புகள்,
நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட்

என இவையெல்லாம் கபம் வளர்க்கும் உணவுகள் ஆகும்.

கபத்தை கட்டு படுத்தும் மூலிகைகள்

மிளகு,
சுக்கு,
திப்பிலி,
ஆடாதொடை,
துளசி,
கற்பூரவல்லி,
தூதுவளை

-என்பவை கபத்தை குறைக்க உதவும். இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீ ஸ்பூனளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும் இது கபம் எனப்படும் சிலேத்தும த்தை சமன்செய்யும். வெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்

உடலில் கபத்தின் முக்கிய பணி

இருதயத்துக்கு ஆதாரமாகவும், வயிற்றில் இருந்து கொண்டு ஆகாரம் ஜீரணம் ஆவ தற்கு தகுதியாக அதை நெகிழச் செய்தும், நாக்கிற்கு ருசி பார்க்கும் சக்தியைக் கொ டுத்தும், தலையில் இருந்து கொண்டு கண்களைக் குளிரச் செய்தும் உதவுகின்றது. எலும்புகள் சேரும் இடத்தில் அவற்றிற்கு ஆதாரமாகவும், அசைவுக்கு உதவியாக எண்ணெய் போன்று ஈரத்தன்மை கொடுத்தும், தோலை ஈரபதமாக வைத்திருக்க உதவுகிறது, ஆண்மையை அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உத வுகிறது, காயங்களை விரைந்து ஆற்றுவதில் பங்கு வகிக்கிறது, கபத்தின் அளவில மாற்றம் ஏற்படும் போதுதான் ஆபத்தாகிறது.

கபம் உருகி வெளியேற சித்த மருத்துவம்

தலையிலும் மார்பிலும் தங்கியிருக்கும் கபம் உட்புறங்களில் அடைத்துக் கொள்வ தால் மூச்சு விடுவதற்குக் கஷ்டமான நிலை உருவாகிறது. அதை வெளியேற்றுவத ற்கு உடல் தும்மலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் உறைந்த கபம் வெளியேறாமலி ருப்பதால் மூச்சுவிடும்போது விசில் சத்தமும் படபடப்பும் ஏற்படுகிறது.

உறைந்த கபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை மருந்துகளைப் பொடித்து சூரணம் செய்து தேன் குழைத்துச் சாப்பிட்டால், கபம் உருகி வெளியேறி விடும். அதற்கான சில மூலிகைகளும் அதன் தயாரிப்பு முறையும் –

பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலரிசி, இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ, ஜாதிக்காய், விலாமிச்சைவேர், சுக்கு, கருஞ்சீரகம், காரகில், மூங்கிலுப்பு, ஜடாமாஞ்சி, அல்லி க்கிழங்கு, திப்பிலி, சந்தனம், அஸôரூன், வெட்டிவேர், வால்மிளகு ஆகிய இந்த பதினெட்டு மருந்துகளும் வகைக்கு 10 கிராம், சீனா கல்கண்டு அல்லது சர்க்கரை 90 கிராம், இவற்றில் பச்சைக்கற்பூரத்தையும் கல்கண்டையும் தவிர மற்றவற்றைத் தனியே இடித்து மெல்லிய கண்ணுள்ள சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பிறகு அந்தத் தூளில் பச்சைக்கற்பூரத்தைத் தூளாக்கி சேர்த்து கல்வத்திலிட்டு அரைத்து எ ல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பிறகு கல்கண்டுத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும். பச்சைக்கற்பூரத்திற்குப் பதிலாக சிலர் நாட்டு கட்டிச் சூடத்தைச் சேர்த்துக்கொள்வது வழக்கம்.

பெரியவர்கள் 1/2 – 1 ஸ்பூன் அளவு எடுத்தால் சூரணத்தின் அளவைவிட ஒரு மடங்கு கூடுதலாகத் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம். குழந்தைகள் 1 சிட்டிகை முதல் கால் டீ ஸ்பூன் வரை சூரணம் சாப்பிடலாம். அவர்க ளுக்கும் தேன் ஒரு மடங்கு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மழை, பனி நாட்களில் ஏற்படும் சளி உபாதை, நீர்க் கோர்வை, தொண்டைக் கமறல், மார்புச் சளி, இருமல், இடுப்புப்பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, அஜீரணமான மலப்போக்கு, வாயில் ருசியின்மை, குடல் வலுவிழந்து அடிக்கடி மலம் கட்டியும் இளகியும் மாறி மாறிப் போவது முதலியவற்றுக்கு நல்லது. மூலநோய் வறண்டு வலி கொடுத்தால் இதைச் சாப்பிட்டால் வலி குறையும். சளி வெளியேறாமல் வறண்டு விலாப்புறம் முதுகு, மார்பு, தலை முதலிய இடங்களில் வலியுடன் இருமலுமிருந்தால் நெய் அல்லது பாலுடன் சாப்பிட நல்லது. இந்த சூரணத்திற்குக் “கர்பூராதி சூரணம்’ என்றும் பெயருண்டு. ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

ரேவல் சீனிக்கிழங்கு 100 கிராம், வேப்பம்விதை 40 கிராம், சதகுப்பை 20 கிராம், சோம்பு 20 கிராம், கருஞ்சீரகம் 20 கிராம். இந்தச் சரக்குகளை வெயிலில் நன்கு காய வைத்து ஒன்றாக இடித்து சூரணம் செய்து சிறு கண் சல்லடையில் சலித்து சீசாவில் பத்திரப்படுத்தவும். தலையில் நீர்க்கோர்வையினால் ஏற்படும் தலைவலி, நீர்முட்ட ல், கண்ணீர் கசிதல், சளியினால் காய்ச்சல் முதலிய நிலைகளில் 1-2 டீ ஸ்பூன் சூர ணத்தைத் தண்ணீருடன் கலந்து இரும்பு அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரண்டி யிலிட்டு இளந்தீயில் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப்பொட்டு, நெற்றியிலும் தோல் மூடும்படியான கனத்திற்குப் பற்றுப் போடவும். ஒரு நாளில் இரண்டு முறை போடலாம். மண்டை நீரை வற்ற வைத்து வேதனையைக் குறைத்து விடும்.

மாப்பண்டங்கள், புதுஅரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பலகாரம், ஐஸ் கலந்த பான ங்கள், ஐஸ்கிரீம், தயிர், புலால், குளிர்ந்த தண்ணீர், குளிர்ந்த காற்றில் பயணம், ஜன நெருக்கடியிலும், நீர்த்தேக்கமுள்ள பகுதியில் வசிப்பது, பகலில் படுத்து உறங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும்.

=> சித்தார்த்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: