Advertisements

எச்சரிக்கை அறிகுறி – ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

எச்சரிக்கை அறிகுறி – ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியா சமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைக ளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வா ய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்க ப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

உலகம் முழுக்க இதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகு ந்த காரணிகள் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இரு க்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவதுபோல இல்லாமல் இருக்கலா ம். ஒரு பெண்ணுக்கு இதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரி ந்திருப்பதும், ஆண்களைபோல அல்லாத அறிகுறிகள் வரலாம்  என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

அறிகுறிகள் என்னென்ன?

இதயநோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்க ளால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறி குறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப்படியான வேலை செய்வ தால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்ப ட்டால் உடனே இதயநோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.

புகைப்பிடிக்கும் பெண்கள்

இதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இதயநோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்க ள் தடுப்புநடவடிக்கையாக இதயப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

புகைபிடிக்கும் பெண்கள் (Smoking Women) மற்றும் கருத்தடை மாத்திரை (Contraceptive Pill) பயன்படுத்துபவர்கள் இதயம் பாதி க்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack), மூளை (Brain) வாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இரு க்கிறது. இந்த அபாயம் 35வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.

உடல் எடையை கவனியுங்கள்

மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடு வதால் மோசமான இதய நோய்கள் (Heart Diseases) வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது (Body Weight Maintained), சத்தான உணவு (Healthy foods) உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு (Heart Attack) போன்ற இதயநோய்கள்  (Heart Diseases) ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்து வர்கள்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெ ளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.

ஊட்டச்சத்துணவுகள்

ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்புள்ள புரத (Protein)வகை உணவுகள்கூட இதய பாதிப்பு களைக் குறைக்கின்றன.

பாலிஅன்சாச்சுரேட் வகைகொழுப்பில் வருகிற ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலம் உங்கள் இதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இதய துடிப்பை சரி செய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அட ங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்க ள் அறிவுறுத்தி யுள்ளனர். பெண்களுக்கு இதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போது ம் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

=> படித்த முன்னெச்சரிக்கை தகவல்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: