Advertisements

அரிய தகவல் – பெண்ணின் புருவ(ம்)த்திற்கும் அவளது கணவரின் உடல்நல‌த்திற்குமுள்ள‍ ஆன்மீக தொடர்பு

அரிய தகவல் – பெண்ணின் புருவ(ம்)த்திற்கும் அவளது கணவரின் உடல்நல‌த்திற்குமுள்ள‍ ஆன்மீக தொடர்பு

அரிய தகவல் – பெண்ணின் புருவ(ம்)த்திற்கும் அவளது கணவரின் உடல்நல‌த்திற்கு முள்ள‍ ஆன்மீக தொடர்பு

பெண்களின் கண்களுக்கு அழகு சேர்ப்ப‍து புருவம்தான் அந்த புருவத்தை இன்றைய

மங்கையர்கள் பலர் திருத்திக் கொள்வது அதாவது ஐப்ரோ த்ரெட்டிங் (Eyebrows Threading) செய்து கொள்வது சகஜமாகி வருகிறது. பெண்களின் புருவத்திற்கும் அவ ர்களின் கணவன்மார்களின் உடல்நலத்திற்குமுள்ள‍ மிக நெருங்கிய தொடர்பினை கீழே காணவிருக்கிறீர்கள்.

ஆண்களுக்கு மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன் : பெண்களுக்கு கணவனை க்குறிக்கும் கிரகம் செவ்வாய். எனவே கணவர் நலமாகவும் வளமாகவும், நீண்ட ஆயுளோடும் வாழ செவ்வாய் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து செய்தாலேபோது ம் , நீங்கள் நினைத்தது நடக்கும்.

முதலில் செவ்வாயின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்,

செவ்வாய்:—

நிறம் — அடர் சிவப்பு ( மெரூன்)

குணம் —ராஜஸம்( கோப குணம்)

மலர்——-செண்பகம்

ரத்தினம்—- பவளம்

தானியம்——- துவரை( துவரம் பருப்பு)

பெண்கள் தங்கள் நெற்றியில் இடும் குங்குமம் -சிவப்பு

அந்தக் காலத்திலும், தற்போதும் பெண்கள் தாலியில் பவளமணிகளை கோர்த்துக் கொள்வது செவ்வாய் என்னும் கணவருக்காகத்தான், சிவப்பு நிற மலர்கள் சூடி க்கொள்வதும், செவ்வாயின் ஆளுமையே! மல்லிகையைதானே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என கேட்கலாம் மல்லிகையின் மணம் சுக்கிரன் சம்பந்தப்பட்டது, துவரை நாம் அதிகமாக உபயோகப்படுத்தும் உணவு என்பது நம் எல்லோரும் உண ர்ந்திருப்பீர்கள்.

பொதுவாக நமது உடலில் பஞ்சபூதங்களும் அடக்கம், நவகிரகங்களும் அடக்கம்,

சூரியன்- உடலில் உள்ள எலும்பு, முதுகெலும்பு, இதயம், வலதுகண் இவற்றைக் குறிக்கும்.

சந்திரன்- உடலில் உள்ள ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். இங்கே கவனிக்கவும்… ரத்தம் அல்ல, ரத்த ஓட்டம்.

மனம், எண்ணம், நீர்ச்சத்து, இடது கண் ஆகியவை ஆகும்.

புதன்- தோல்( skin), பச்சை நரம்புகள்,( veins)

குரு— மூளை, வயிறு

சுக்கிரன்- உடலில் உள்ள சுரப்பிகள், கணையம், விந்து மற்றும் கருப்பை

சனி- ஜீரண உறுப்புகள், முதுகு, மூட்டுக்கள்

ராகு- நவ துவாரங்கள், ( பிளந்த அமைப்புகள்)

கேது- குடல், ஆசனவாய்,

செவ்வாய்— ரத்தம், ரத்தம் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜை, பற்கள், நகம், புருவம் …

இதில் பெண்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன தெரியுமா?

உங்கள் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

நகத்தில் அழுக்கு சேராமலும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் புருவத்தை அழகு படுத்துகிறேன் என்று ஐப்ரோ எனும் திரெட்டிங் என்கிற சீர்படுத்துவதைச் செய்யாதீர்கள். நீங்கள் அப்படி செய்பவர் எனி ல், நன்றாக கவனியுங்கள்… நீங்கள் புருவத்தை சீர் செய்யும் போதெல்லாம் உங்கள் கணவருக்கு ஒன்று உடல்நலம் கெட்டு போகும் அல்லது ஒரு புதிய பிரச்சினை வந்து சேரும்.

நான் சொல்வது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் இதுவே உண்மை, நிதானமாக யோசித்துப்பாருங்கள்… அல்லது சோதித்துப் பாருங்கள், “ஆம் உண்மை தான் எல்லாம்” இல்லை “தவறு “என்றாலும் உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள், நான் பல ஆய்வுகளைச் செய்த பின்னரே இந்தத் தொடர் எழுத ஆயத்தமானேன்.

இன்று மணவாழ்வில் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பலருக்கும், குறிப்பாக பெண்களுக்கு மேலே சொன்ன ’பல்,நகம்,புருவம்’ இந்த மூன்றையும் சரி செய்யச் சொன்னேன், நிறைய மாற்றங்களை கண்டதாகச் சொன்னவர்கள் ஏராளம். இந்த பரிகாரமுறைகளைச் செய்யுங்கள். நல்ல நல்ல மாற்றங்களை உணருவீர்கள். மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

=> ஜோதிடர் ஜெயம் சரவணன், இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

One Response

  1. Hi, migavum payanulla katturai, ella pengalum kattayam pinpattravendum avasiam.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: