Advertisements

தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால்

தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால்

தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால்

பெண்களின் உடல் அழகு மேம்பட பல்வகை இயற்கை சார்ந்த உணவுகள் நிறைய

உண்டு. அந்த வரிசையில் இந்த தினை-க்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. இப்போது தினையில் கேசரி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தினை கேசரி (Millet Kesari) செய்ய தேவையானவை:

தினை (Millet) – அரை கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உலர் திராட்சை
முந்திரி தலா – 10
கேசரி கலர் – 1 சிட்டிகை

செய்முறை:

வாணலியில் நெய்விட்டுச்சூடாக்கி, உலர் திராட்சை, முந்திரியை வறுத்துத் தனியா க வைக்கவும். அதே நெய்யில் தினையை வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸி யில் ரவை போல் அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, தினை ரவையைச்சேர்த்து வேகவிடவும் . வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும் (இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும்). இறுகியதும், ஏலக்கா ய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

பலன்கள்:

தினை கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிற து. தினையில் நிறைந்துள்ள புரதச்சத்து உடலை வலுவாக்கும். வாயுக் கோளாறைப் போக்கும். பசியை உண்டாக்கும். மற்ற தானியங்களை விட தினையில் இரும்புச்சத்து அதிகம்

இந்த தினை கேசரியை ஆண்களும் சாப்பிடலாம்.

=> லதா ராம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: