Advertisements

30 நாளில் அரசியல் – இயக்குநர் கே. பாக்கியராஜ் அதிரடி அறிவிப்பு

30 நாளில் அரசியல் – இயக்குநர் கே. பாக்கியராஜ் (K. Bakiyaraj) அதிரடி அறிவிப்பு

30 நாளில் அரசியல் – இயக்குநர் கே. பாக்கியராஜ் (K. Bakiyaraj) அதிரடி அறிவிப்பு

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின்

உடல்நலக் குறைபாடு ஆகியவற்றால் வெற்றிடம் உருவாகியிரு க்கிறது என்று அர சியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில், அதிமுக இரண்டாக உடைந்தது. பிறகு எடப்பாடி அணி யும் ஓபிஎஸ் அணியும் சேர்ந்தது. தினகரன் விலக்கி வைக்கப்ப ட்டார்.

இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக அறிவிக்கப்ப ட்டு தேர்தலும் நடைபெற்றது. இதில் சுயேச்சையாக, குக்கர் சின்ன த்தில் நின்ற டிடி வி தினகரன் வெற்றி பெற்றார்.

இதனிடையே கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரு வது குறித்து வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர். ஆர்கே நகர் தேர்தலில் திடீரென்று நடிகர் விஷால் போட்டியிட்டார். ஆனால் அவரின் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜி ஆருக்கு மிகவும் பிரிய மாகவும் நெருக்கமாகவும் இருந்த வர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தமிழகம் முழுவதும் சென்று பாக்யரா ஜ், அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தார்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர், அவ ரே தனிக்கட்சி தொடங்கினார். நீண்டகாலத்துக்குப் பிறகு திமுக வில் சேர்ந்து அந்தக் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார்.

இப்போது ‘நான் அரசியலுக்கு நேரடியாக வர முடிவு செய்து விட்டேன்’ என்று கூறியு ள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ” அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெரு ங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலா ம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை.

கிட்டத்தட்ட நேரடி அரசியல்குறித்து முடிவுஎடுக்கும் வாய்ப்பு வ ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் ( 30 நாளில்)  முடிவைச்சொல்லுவேன். யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்று தெரிவித்தார் பாக்யராஜ்.

=> இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: